சூரா 108: அருட்கொடை (அல்-கவ்தர்)

[108:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[108:1] பல அருட்கொடை கொண்டு உமக்கு நாம் அருள் பாலித்து இருக்கின்றோம்.
[108:2] ஆகையால், நீர் உம்முடைய இரட்சகரை தொழவும் (ஸலாத்), மேலும் தர்மம் கொடுக் கவும் வேண்டும்.
[108:3] உம்முடைய எதிரிதான் நஷ்டப்பட்டவனாக இருப்பான்.