சூரா 107: தர்மம் (அல்-மா‘ஊன்)

[107:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[107:1] மெய்யாகவே விசுவாசத்தை ஏற்க மறுப்பவன் யாரென நீர் அறிவீரா?
[107:2] அநாதைகளைத் தவறாக நடத்துகின்றானே அவன்தான்.
[107:3] மேலும் ஏழைகளுக்கு உணவளிப்பதை அவன் ஆதரிப்பதுமில்லை.
[107:4] மேலும் தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப்பிடிப்பவர்களுக்குக் கேடுதான்-
[107:5] தங்களுடைய தொழுகைகளில் முற்றிலும் கவனமற்றவர்களாக இருக்கின்றவர்கள்.
[107:6] அவர்கள் காட்டிக் கொள்ள மட்டுமே செய்கின்றனர்.
[107:7] மேலும் அவர்கள் தர்மத்தைத் தடுக்கின்றனர்.