சூரா 106: குறைஷ் (குறைஷிக் குலம்)

[106:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[106:1] குறைஷிகளால் இது போற்றப்பட வேண்டும்.
[106:2] குளிர்காலம் மற்றும் கோடை காலத்தின் வியாபாரக் கூட்டங்களை அவர்கள் போற்றும் விதமாக.
[106:3] இந்தப் புனிதமான இடத்தின் இரட்சகரை அவர்கள் வழிபட வேண்டும்.
[106:4] ஏனெனில் அவர்தான் பசிக்குப் பின்னர் அவர் களுக்கு உணவளித்தவர், மேலும் அச்சத்திற்குப் பின்னர் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கியவர்.