சூரா 105: யானை (அல்-ஃபீல்)

[105:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[105:1] யானைக் கூட்டத்தாரை, உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்திருக் கின்றீரா?
[105:2] அவர்களுடைய சூழ்ச்சிகள் திருப்பித்தாக்கும் படி அவர் செய்யவில்லையா?
[105:3] பறவைகளின் கூட்டங்களை அவர்கள் மீது அவர் அனுப்பினார்.
[105:4] அவை கடினமான கற்களை அவர்கள் மீது பொழிந்தன.
[105:5] மெல்லப்பட்டு விட்ட வைக்கோலைப் போன்று அவர்களை அவர் ஆக்கிவிட்டார்.