சூரா 104: புறங்கூறுபவன் (அல்-ஹுமஜஹ்)

[104:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[104:1] புறங்கூறுபவன், அவதூறு கூறுபவன் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
[104:2] அவன் பணத்தைப் பதுக்கி வைத்துக் கொண்டும் மேலும் அதனை எண்ணிக் கொண்டும் இருக்கின்றான்.
[104:3] அவனுடைய பணம் அவனை இறப்பற்ற வனாக்கி விடும் என்பதைப் போல்.
[104:4] ஒருபோதும் இல்லை; அழிக்கக் கூடியதன் உள்ளே அவன் வீசியெறியப்படுவான்.
[104:5] அழிக்கக் கூடியது என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?
[104:6] கடவுள்-ன் கொழுந்து விட்டெரிகின்ற நரக நெருப்பு.
[104:7] அது அவர்களை உள்ளும் புறமும் எரிக்கின்றது.
[104:8] அவர்கள் அதனுள் அடைக்கப்படுவார்கள்.
[104:9] நீண்டிருக்கின்ற தூண்களில்.