சூரா 102: பதுக்கி வைத்தல் (அல்-தகாஸுர்)

[102:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[102:1] பதுக்கி வைத்தலில் தொடர்ந்து மூழ்கியவர் களாக நீங்கள் இருக்கின்றீர்கள்.
[102:2] நீங்கள் சமாதிகளுக்குச் செல்லும் வரை.
[102:3] உண்மையில், நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
[102:4] மிகவும் நிச்சயமாக, நீங்கள் கண்டு கொள்வீர்கள்.
[102:5] நீங்கள் மட்டும் உறுதியாகக் கண்டு கொள்ள இயலுமேயானால்.
[102:6] நீங்கள் நரகத்தைக் கற்பனையில் காண்பீர்கள்.
[102:7] பின்னர் நீங்கள் நிஜக் கண்ணால் அதனைக் காண்பீர்கள்.
[102:8] பின்னர் நீங்கள் மகிழ்ந்தனுபவித்த அருட் கொடைகளைப்பற்றி, அந்நாளில், விசாரிக்கப் படுவீர்கள்.