சூரா 101: அதிர்ச்சியூட்டுவது (அல்-காரியஹ்)

[101:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[101:1] அதிர்ச்சியூட்டுவது.
[101:2] எத்தகையதோர் அதிர்ச்சியூட்டுவது!
[101:3] அதிர்ச்சியூட்டுவது என்றால் என்ன என்று உம்மிடம் ஏதேனும் எண்ணம் உள்ளதா?
[101:4] அதுதான் பட்டாம்பூச்சிகளின் கூட்டங்களைப் போல் மனிதர்கள் வெளிவருகின்ற நாளாகும்.
[101:5] மலைகள் கழிக்கப்பட்ட கம்பளி இழைச் சுருள்கள் போல் ஆகிவிடும்.
[101:6] எவருடைய எடைகள் கனமாக இருக்கின்றதோ அவரைப் பொறுத்தவரை.
[101:7] அவர் மகிழ்ச்சியானதொரு (நிரந்தர) வாழ்வு நடத்துவார்.
[101:8] எவனுடைய எடைகள் இலேசாக இருக்கின்றதோ அவனைப் பொறுத்த வரை.
[101:9] அவனுடைய விதி மிகவும் கீழானதாகும்.
[101:10] அது என்னவென்று உமக்குத் தெரியுமா?
[101:11] கொழுந்து விட்டெரிகின்ற நரகநெருப்பு.