குர்ஆன்
ஹதீஸ் & இஸ்லாம்
ஆங்கிலத்தில் ஆக்கம் :
ரஷாத் கலீஃபா Phd.,
இமாம், மஸ்ஜித் டுக்ஸன்,
அரிஸோனா, U.S.A.

 

 

 

 

 

 

 

 

 

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள குர்ஆன் வசனங்களில் “அல்லாஹ்” என்ற சொல் இடம் பெறும் இடங்களில் “கடவுள்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்ராஹிம், இஸ்மாயில், ஈஸா மற்றும் நபி ஆகிய பெயர்கள் முறையே ஆப்ரஹாம், இஸ்மவேல், இயேசு மற்றும் வேதம் வழங்கப்பட்டவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ளவும்.

மனித சமுதாயம் முழுவதற்குமான வழிகாட்டியாகவும், வாழ்க்கைத் திட்டமாகவும் மேலும் இறுதி வேதமாகவும் குர்ஆன் இருப்பதால், அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த பொருள் மாறுபாடும் இல்லை என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும்.

முன்னுரை

12 ஆண்டுகளுக்கும் மேலாக கணினியைப் பயன்படுத்தி குர்ஆனை ஆராய்ச்சி செய்த பிறகு, குர்ஆன் உண்மையிலேயே கடவுளின் தவறிழைக்காத வார்த்தை என்பதை நிரூபிக்கும் கண்கூடான சான்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. மேலும் இந்த கண்டுபிடிப்பு குறித்த தொகுப்புகள் அச்சிடப்பட்டு, இலட்சக்கணக் கானவர்களால் விநியோகிக்கப்பட்டது. மிகவும் ஊக்கமூட்டுகின்ற மேலும் மிகவும் எளிமையாக இந்த கண்டுபிடிப்புடன் சேர்ந்து என்னைப் பற்றிய நன்மதிப்பும் அதிகமானது.

 

தொடர்ச்சியான இந்த ஆராய்ச்சியானது, மிகவும் பிரபலமான “ஹதீஸ்  & சுன்னத்” ஆகியவை முஹம்மது நபியுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவை, மேலும் அவற்றைப் பின்பற்றுவது அல்லாஹ்விற்கும் மேலும் அவருடைய இறுதி நபிக்கும் பகிரங்கமாக கீழ்படிய மறுக்கும் நிலை (குர் ஆன் 6:112 & 25:31) என்கின்ற ஒரு திடுக்கிடும் உண்மையை  அப்போது வெளிப்படுத்தியது. இந்த கண்டு பிடிப்பானது எல்லா இடங்களிலும் உள்ள முஸ்லிம்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்தது. அதன் விளைவாக, என்னைப் பற்றிய நன்மதிப்பும் மேலும் குர்ஆன் உடைய அற்புதத்தின் நன்மதிப்பும் கூட தலைகீழாக மாறியது. எந்த அளவிற்கென்றால், என்னுடைய உயிருக்கும் நற்பெயருக்கும் ஆபத்து விளைவிக்கும் அளவிற்கு தலைகீழாக மாறியது. இப்பொழுது வெளிப்பட்டுள்ளபடி “ஹதீஸ் & சுன்னத்” ஆகியவை சைத்தானிய புதுமைகள் என்று முஸ்லிம்களிடம் கூறுவது, கிறிஸ்தவர்களிடம் இயேசு கடவுளின் மகன் அல்ல என்று கூறுவதைப் போன்றதாகும்.

 
கண்கூடான சான்றின் மூலம் ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவை சைத்தானிய புதுமைகள் என்று அடையாளம் காட்டப்படுவதால் சுயமாக நன்கு சிந்திக்கக் கூடிய மக்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். இத்தகைய மக்களுக்காக, மீட்சி பற்றிய முற்றிலும் புதியதோர் கருத்து மேலும் பெரும்பாலான முஸ்லிம்கள் சைத்தானுடைய சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிட்டனர் என்பது குறித்த முழுமையான விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இதன் அறிவிப்புகள் இருக்கின்றன.  

ஆகஸ்ட் 19, 1982                                                                                                                                                                                                                           ரஷாத் கலீஃபா

தூதருக்கு கீழ்படியாது மீட்சி கிடையாது

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ  

قُلْ اطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَفِرِينَ  

“நீங்கள் கடவுள்-ஐ நேசிப்பீர்களானால், நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டும்” என்று (முஹம்மதே) பிரகடனம் செய்வீராக. அப்போது கடவுள் உங்களை நேசிப்பார், உங்கள் பாவங்களை மன்னிப்பார்.  கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.


“நீங்கள்   கடவுள்-க்கும் தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அவர்கள் திரும்பி விட்டால், நம்ப மறுப்பவர்களைக்   கடவுள் நேசிப்பதில்லை.

அல் -குர்ஆன் 3:31-32அல்

 وَأَقِيمُوا الصَّلَوةَ وَءاتُوا الزَّكَوةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ  

நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக்  (ஜகாத்) கொடுத்துவரவும், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.

அல்-குர்ஆன் 24:56

 إِلَّا بَلَغًا مِنْ اللَّهِ وَرِسَلَتِهِ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَلِدِينَ فِيهَا أَبَدًا  

“நான் கடவுள்-ன் பிரகடனங்களையும் தூதுச் செய்திகளையும் அறிவிக்கின்றேன்”. கடவுள் மற்றும் அவருடைய தூதருக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் நரகத்தின் நெருப்பிற்கு உள்ளாகின்றனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

அல்-குர்ஆன் 72:23

“அல்லாஹ்வைத் தவிர எதனையும் நீங்கள் வழிபட வேண்டாம்” என்ற ஒரே செய்தியைத் தான் தூதர்கள் அனைவரும் ஒப்படைத்ததால் அவர்களுக்கு கீழ்படியாமை, நம்பிக்கையின்மையை அல்லது இணைத்தெய்வ வழிபாட்டை உருவாக்குகின்றது.
அல்லாஹ்வின் செய்திகளை ஒப்படைக்கும் பொழுது, தூதர்கள் தாங்களாகவே சுயமாக முயற்சித்து பேசுவதில்லை

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு  தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

(உபாகமத்தில் மோஸஸ் 18:15)

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்வார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

(உபாகமத்தில் மோஸஸ் 18:18-19)

நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

(யோவானின் சுவிஷேசம் 14:10)

சத்தியஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர்தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

(யோவானின் சுவிஷேசம் 16:13)

தூதருக்கு கீழ்படிவது கடவுளுக்கு கீழ்படிவது ஆகும் (குர்ஆன் 4:80)

“மேலும் அவர் (முஹம்மது) தன் சொந்த முயற்சியின்படி பேசுவதில்லை”.

அல்-குர்ஆன் 53:3

குர்ஆனை மட்டுமே முஹம்மது எடுத்துரைத்தார்

وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنْ الْكِتَبِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنْ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ لِيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُمْ بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ

وَأَنْ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ وَاحْذَرْهُمْ أَنْ يَفْتِنُوكَ عَنْ بَعْضِ مَا أَنزَلَ اللَّهُ إِلَيْكَ فَإِنْ تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَنْ يُصِيبَهُمْ بِبَعْضِ ذُنُوبِهِمْ وَإِنَّ كَثِيرًا مِنْ النَّاسِ لَفَاسِقُونَ

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنْ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

அதன்பிறகு நாம் உமக்கு, சத்தியம் நிறைந்ததாகவும், முந்தைய வேதங்களை உறுதிபடுத்துவதாகவும், மேலும் அந்த வேதங்களை ரத்து செய்து விட்டு அவற்றிற்குப் பதிலாகவும், இந்த வேதத்தை நாம் உமக்கு வெளிப்படுத்தினோம்.  கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு (இந்த புத்தகத்திற்கு) ஏற்ப நீங்கள் அவர்களுக்கிடையே தீர்ப்பு செய்ய வேண்டும். மேலும் உங்களிடம் வந்திருக்கக்கூடிய சத்தியத்திற்கு அவர்கள் முரண்பட்டால் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர்கள். ..
நீங்கள், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு (இந்த புத்தகத்திற்கு) ஏற்பத் தீர்ப்புச் செய்யுங்கள். அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர்கள். மேலும் அவர்கள் (இந்த புத்தகத்திற்கு) கடவுள்-ன் சில வெளிப்பாடுகளை விட்டும் உங்களைத் திருப்பி விடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள். ..அவர்கள் அறியாமைக் காலத்தின் சட்டங்களை ஆதரிக்க நாடுகின்றார்களா? உறுதியை அடைந்து விட்டவர்களுக்கு  கடவுள்-உடைய சட்டத்தைவிட யாருடைய சட்டம் சிறந்தது?

அல்-குர்ஆன் 5:48-50

குர் ஆனைத் தவிர வேறு எந்த மார்க்க விளக்கங்களை கூறுவதை விட்டும் முஹம்மது தடுக்கப்பட்டிருந்தார

ِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَا تُؤْمِنُونَ

وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

تَنزِيلٌ مِنْ رَبِّ الْعَلَمِينَ

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْأَقَاوِيلِ

لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ

فَمَا مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَجِزِينَ

இது கண்ணியமானதொரு தூதரின் கூற்றாகும்.
ஒரு கவிஞனின் கூற்றல்ல; அரிதாகவே நீங்கள்  நம்பிக்கை கொள்கின்றீர்கள்.
அன்றி ஒரு குறி சொல்பவனின் கூற்றுமல்ல; அரிதாகவே நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றீர்கள்.
பிரபஞ்சத்தின்  இரட்சகரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.
வேறு எந்தப் போதனைகளையும் அவர் கூறியிருப்பாராயின்.
நாம் அவரைத் தண்டித்திருப்போம்.
வெளிப்பாடுகளை நாம் அவருக்கு நிறுத்தியிருப்போம்.
உங்களில் எவரும் அவருக்கு உதவி செய்திருக்க இயலாது.

அல்-குர்ஆன் 69:40-47

குர் ஆனைத் தவிர வேறு எந்த மார்க்க உபதேசங்களை கூறுவதை விட்டும் முஹம்மது தடுக்கப்பட்டிருந்தார் என்பதை மிகத் தெளிவான இந்த வசனங்கள் நமக்கு கற்பிக்கின்றன. அரபி மூலத்தின் வலிமையை முழுவதுமாக பிற மொழிகளில் மொழியாக்கம் செய்ய இயலாது. ஆயினும் குர்ஆன், முழுக்குர்ஆன் மேலும் வேறெதுவும் இல்லாது குர்ஆனை மட்டும் ஒப்படைப்பதே நபியுடைய ஒரே பணியாக இருந்தது என்பதை ஆற்றல் மிக்க அந்த சொற்றொடர்கள் எவ்வித சந்தேகமும் இல்லாது விளக்குகின்றன.

குர்ஆனை விட்டு ஒருபோதும் விலகக் கூடாது என்று முஹம்மதிற்கு கட்டளையிடப்பட்டிருந்தது. அதாவது விலகினால் கடுமையான தண்டனை

وَإِنْ كَادُوا لَيَفْتِنُونَكَ عَنْ الَّذِي أَوْحَيْنَا إِلَيك لِتَفْتَرِي عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا

وَلَوْلَا أَنْ ثَبَّتْنَكَ لَقَدْ كِدْتَ تَرْكَنُ إِلَيْهِمْ شىءا قَلِيلًا

إِذًا لَأَذَقْنَكَ ضِعْفَ الْحَيَوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيرًا

(முஹம்மதே) நாம் உமக்குக் கொடுத்த வெளிப்பாடுகளை விட்டு அவர்கள் உம்மைக் கிட்டத்தட்டத் திருப்பி விட்டனர். உம்மை ஒரு நண்பராகக் கருதிக் கொள்வதற்காக, வேறு எதையாவது நீர் இட்டுக் கட்டிக் கூற வேண்டுமென்று அவர்கள் விரும்பினர்.

உம்மை நாம் பலப்படுத்தி இருக்காவிட்டால், நீர் கிட்டத்தட்ட சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்திருப்பீர். 

அதனை நீர் செய்திருந்தால், இந்த வாழ்விலும், மேலும் மரணத்திற்குப் பின்னரும் உமது தண்டனையை நாம் இருமடங்காக ஆக்கியிருப்போம், மேலும் நமக்கெதிராக உமக்கு உதவி செய்ய எவர் ஒருவரையும் நீர் கண்டிருக்க மாட்டீர்.

அல்-குர்ஆன் 17:73-75

 

நமக்கு முன் மாதிரியை ஏற்படுத்தும் விதத்தில், அவருக்கு கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் வெளிப்பாடுகளை (வஹியை) உறுதியாகப் பற்றிக் கொள்ளும்படி நபிக்கு கட்டளையிடப்பட்டது,  (பக்கம் 4) குறிப்பாக அது குர்ஆன்தான் என்று  5:48-50ல் அடையாளம் காட்டப்படுகின்றது.       
 

குர்ஆனை விட்டு மிகச்சிறிய அளவில் விலகுவதும் கடும் தண்டனைக்கு உள்ளாக்குகின்றது (மேலேயுள்ள வசனம் 75ஐப் பார்க்கவும்).

மிகச்சிறிய மாற்றம் கூட செய்யாமல் மேலும் ஒரு போதும் எந்த ஒன்றையும் “இட்டுக்கட்டாமல்”,

குர் ஆனை மட்டுமே ஒப்படைக்கும் படி முஹம்மது கட்டளையிடப்பட்டிருந்தார்.

وَإذَا تُتْلَى عَلَيْهِمْ ءايَتُنَا بَيِّنَتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْءانٍ غَيْرِ هَذَا أوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أنْ أبَدِّلَهُ مِنْ تِلْقَائ نَفْسِي إنْ أتَّبِعُ إلَّا مَا يُوحَى إلَيَّ إنِّي أخَافُ إنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

 

قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أدْرَكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِنْ قَبْلِهِ أفَلَا تَعْقِلُونَ

 

فَمَنْ أظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أوْ كَذَّبَ بءايَتِهِ إنَّهُ لَا يُفْلِحُ الْمُجْرِمُونَ

 

وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أتُنَبِّءونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَوَتِ وَلَا فِي الْأرْضِ سُبْحنَهُ وَتَعلَى عَمَّا يُشْرِكُونَ

நம்முடைய வெளிப்பாடுகள் அவர்களிடம் ஓதிக்காட்டப் படும்போது, நம்முடைய சந்திப்பை எதிர்பார்க்காதிருப்பவர்கள், “இது அல்லாத ஒரு *குர்ஆனைக் கொண்டு வாரும், அல்லது இதனை மாற்றி விடும்!” என்று கூறுகின்றார்கள். “நானே சுயமாக இதனை மாற்றிவிட எனக்குச் சாத்திய மில்லை. எனக்கு வெளிப்படுத்தப் பட்டவற்றை  மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். என் இரட்சகருக்கு நான் கீழ்ப்படியாவிட்டால், அச்சமூட்டும் ஒரு நாளின் தண்டனைக்கு நான் அஞ்சுகின்றேன்” என்று (முஹம்மதே) கூறுவீராக...
 

கடவுள்-ஐப்பற்றிப் பொய்களை இட்டுக்கட்டும் ஒருவனை விட, அல்லது அவருடைய வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவனை விடப் பெரிய பாவி யார்? மிக உறுதியாக, வரம்பு மீறுபவர்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டார்கள்.
 

கடவுள்-உடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள், “இவர்கள் கடவுள்-இடம் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள்!” என்று கூறுகின்றார்கள்... இணை தெய்வ வழிபாடு இத்ததையதே ஆகும்.

அல்-குர்ஆன் 10:15-18

ஒரே கடவுள் / ஒரே மூல ஆதாரம்

குர்ஆன் , குறிப்பாக குர்ஆன் மட்டுமே மார்க்க உபதேசங்களின் ஒரே மூல ஆதாரமாக இருக்க வேண்டும்  என்று எல்லாம் வல்ல நம்முடைய படைப்பாளர் கட்டளையிடுகின்றார்.

 

இன்னும் கூடுதலாக, மார்க்க வழிகாட்டுதலுக்காக வேறு எந்த ஆதாரங்களையும் ஏற்றுக் கொள்வது அல்லாஹ்வுடன் மற்ற தெய்வங்களை ஏற்படுத்துவதற்குச் சமமாகும் என்றும் நமக்கு கூறப்பட்டுள்ளது.

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلْ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ

(முஹம்மதே) “யாருடைய சாட்சியம் மிகப்பெரியது?” என்று கேட்பீராக. “கடவுள்-உடையது” என்று கூறுவீராக. இந்த குர்ஆன் உங்களுக்கும்  மேலும் யாரை எல்லாம் சென்றடைகின்றதோ அவர்களுக்கும் உபதேசிப்பதற்காக உள்ளுணர்வு மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு  எனக்கும், உங்களுக்கும் இடையில் அவரே சாட்சியாக உள்ளார்.  (குர்ஆனுடன் மற்ற ஆதாரங்களை ஆதரிப்பதன் மூலம்) நிச்சயமாக,   கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வங்கள் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறுகின்றீர்கள். “நீங்கள் கூறுவது போல் நான் சாட்சி கூறமாட்டேன், ஒரே ஒரு கடவுள் தான் இருக்கின்றார், மேலும் நான் உங்களுடைய இணைவைப்பைக் கைவிட்டு விட்டேன்” என்று கூறுவீராக.

அல்-குர்ஆன் 6:19

 

சூரா 6-ன் 19-வது வசனமான, ஆழ்ந்த கருத்தையுடைய இந்த வசனம், குர்ஆனுடன் வேறு எந்த ஆதாரங்களையும் ஆதரிப்பதை விட்டும் அல்லது பின்பற்றுவதை விட்டும் நம்பிக்கையாளர்களை தடுப்பதுடன் மேலும் இவ்வாறு செய்வது அல்லாஹ் உடன் மற்ற தெய்வங்களை ஏற்படுத்துவதற்குச் சமமாகும் என்றும் கூறுகின்றது.

ஒரே கடவுள் / ஒரே மூல ஆதாரம்

குர்ஆன், முழுக்குர்ஆன் மேலும் வேறெதுவுமில்லாது குர்ஆனை மட்டுமே உறுதியாகக் பின்பற்றும்படி மிகவும் கண்டிப்பான முறையிலும் மேலும் நமக்கு புரிகின்ற வகையிலும் கட்டளை இடப்பட்டுள்ளது.


மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரமாக குர்ஆனை உறுதியாக பின்பற்றும்படி, மீண்டும் மீண்டும் நாம் கட்டளையிடப்படுகின்றோம்.


குர்ஆனுடன் வேறு எந்த ஆதாரத்தையும் பின்பற்றுவது அல்லாஹ்வுடன் மற்ற தெய்வங்களை ஏற்படுத்துவதற்குச் சமமாகும் என்று, மீண்டும் மீண்டும் நாம் நினைவூட்டப்படுகின்றோம்.


17-வது சூராவின் 22-லிருந்து 38 வரையிலுள்ள வசனங்கள், குர்ஆனில் உள்ள மிக முக்கியமான கட்டளைகள் சிலவற்றை எடுத்துக் கூறுகின்றன. இந்த வசனங்களைத் தொடர்ந்து அடுத்ததாக கீழே காட்டப்பட்டுள்ள வசனத்தை நாம் காண்கின்றோம்.

ذَلِكَ مِمَّا أَوْحَى إِلَيْكَ رَبُّكَ مِنْ الْحِكْمَةِ وَلَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَهًا ءاخَرَ فَتُلْقَى فِي جَهَنَّمَ مَلُومًا مَدْحُورًا

(இந்த குர்ஆனில்) இது உமது இரட்சகர் உமக்கு உள்ளுணர்வூட்டிய ஞானத்தில் சில ஆகும். நிந்திக்கப்பட்டவராகவும் மேலும் தோற்கடிக்கப்பட்டவராகவும், ஜஹன்னாவை நீர் அடைந்துவிடாதிருக்கும் பொருட்டு, (குர்ஆனுடன் வேறு எந்த ஆதாரத்தையும் பின்பற்றுவதன் மூலம்) கடவுள்-உடன் மற்றொரு தெய்வத்தை நீர் அமைத்துக் கொள்ள வேண்டாம்.

அல்-குர்ஆன் 17:39

இவை அனைத்தும் தெளிவான கட்டளைகளாகவும் மேலும் வெளிப்படையான கடுமையான தடை உத்தரவுகளாகவும் இருக்கும் நிலையில் ஹதீஸ் & சுன்னத்தை பின்பற்றுபவர்கள் குர்ஆன் மட்டும் என்பதை உறுதியாக பின்பற்றத்தவறுவது ஏன்? பதிலை கீழே பார்க்கவும்.

.குர்ஆன்: ஓர் அசாதாரணமான புத்தகம்

புத்தகம்தெளிவான கட்டளைகள் இருந்த போதிலும், ஹதீஸ் & சுன்னத்தை பின்பற்றுபவர்கள் குர்ஆன் மட்டும் என்பதை உறுதியாக பின்பற்ற தவறுவது ஏன்?
 

10-வது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள கட்டளையைத் தொடர்ந்து, இதற்கான பதில் அதே சூராவில் வழங்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களும், மேலும் குர்ஆனை மட்டுமே உறுதியாக பின்பற்ற வேண்டும் என்ற அவருடைய கட்டளையின் மீது கவனம் செலுத்த மறுப்பவர்களும் வேண்டுமென்றே குர்ஆனை விட்டு விலக்கிவைக்கப் படுகின்றனர் என்பதை சூரா 17-ன் 45 மற்றும் 46வது வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன. மிக முக்கியமான இந்த இரண்டு வசனங்களும் கீழே காட்டப்பட்டுள்ளன.

وَإِذَا قَرَأْتَ الْقُرْءانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْاءخِرَةِ حِجَابًا مَسْتُورًا

 

وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي ءاذَانِهِمْ وَقْرًاوَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْءانِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَرِهِمْ نُفُورًا

நீர் குர்ஆனை படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை   கொள்ளாதோருக்கும்   இடையில் காணமுடியாததொரு தடையை நாம் அமைத்து விடுகின்றோம்.

 

அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதை விட்டுத் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும் பயன்படுத்தி, உமது இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் வெருண்டோடி விடுகின்றனர்.

அல்-குர்ஆன் 17:45-46

இதற்கு மேல் நாம் என்ன கூறமுடியும் ? ?

நீங்கள் அல்லாஹ்வை நம்புகின்றீர்களா அல்லது இல்லையா?

குர்ஆன் முழுமையானதாக மிகச்சரியானதாக & முற்றிலும் விவரிக்கப்பட்டதாக இருக்கின்றது, மேலும் நீங்கள் எந்த ஆதாரத்தையும் தேட வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகின்றார்.

 مَا فَرَّطْنَا فِي الْكِتَبِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ

 

وَالَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا صُمٌّ وَبُكْمٌ فِي الظُّلُمَاتِ مَنْ يَشَأْ اللَّهُ يُضْلِلْهُ وَمَنْ يَشَأْ يَجْعَلْهُ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ

இந்தப் புத்தகத்தில் ** நாம் எதையும் விட்டுவிடவில்லை, பின்னர்  அனைத்துப் படைப்பினங்களும், அவற்றின் இரட்சகரிடத்தில்  (தீர்ப்பிற்காக) ஒன்று திரட்டப்படும்.

நம்முடைய சான்றுகளை மறுப்பவர்கள் முழு இருட்டில் உள்ள செவிடர்களும், ஊமைகளும், ஆவார்கள்.   கடவுள் தான் நாடுவோரை வழி கேட்டிற்கு அனுப்புகின்றார், மேலும் தான் நாடுவோரை நேரான  பாதையில் அழைத்துச் செல்கின்றார்.

அல்-குர்ஆன் 6:38-39

أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَبَ مُفَصَّلًا

அவர் இந்த புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்டதாக வெளிப்படுத்தியிருக்கும் போது, கடவுள்-ஐத் தவிர வேறொன்றை சட்ட ஆதாரமாக நான் தேடுவேனா?

அல்-குர்ஆன் 6:114

وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا

“உங்கள் இரட்சகருடைய வார்த்தை சத்தியத்தாலும், நீதத்தாலும் முழுமை பெற்று விட்டது.”

அல்-குர்ஆன் 6:115

அல்லாஹ்வை நம்ப மறுப்பதின் விளைவு

பக்கம் 13-ல் காட்டியுள்ளபடி, குர்ஆன் முழுமையானதாக மிகச்சரியானதாக மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டதாக இருக்கின்றது என்று அல்லாஹ் கூறுகின்றார்.

 

மார்க்க வழிகாட்டுதலுக்கு ஆதாரமாக குர்ஆனைத் தவிர வேறு எதனையும் நீங்கள் பின்பற்ற வேண்டாம் என்கின்ற அவருடைய கட்டளைகள் தெளிவானதாகவும் மேலும் கண்டிப்பானதாகவும் இருக்கின்றன (பக்கங்கள் 9 & 10-ஜப் பார்க்கவும்)


ஏற்படுகின்ற பின்விளைவுகளை விருப்பத்துடன் (அல்லது விருப்பமின்றி) ஏற்றுக் கொள்வதற்கு நீங்கள் சம்மதிக்கின்றீர்கள் என்னும் நிபந்தனையின் பேரில், அல்லாஹ்வை நம்புவதென்றோ அல்லது அவருடைய கூற்றுக்களை ஏற்க மறுத்து, மேலும் அவருடைய கட்டளைகளை புறக்கணிப்பதென்றோ முடிவெடுப்பதற்கான முழுமையான சுதந்திரத்தை இப்பொழுது நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள்.

 

அல்லாஹ்வை நம்பமறுப்பது, மிகக்கடுமையான குற்றம் என்பதை சந்தேகமின்றி நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்கள். அது எவ்வளவு ஆபத்தானது என்பதை சூரா 7-ன் வசனம் 40-ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

انَّ الَّذِينَ كَذَّبُوا بِءايَتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لَا تُفَتَّحُ لَهُمْ ابْوَبُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ

நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரித்து மேலும் அவற்றை ஆதரிப்பதை விட்டும் மிக ஆணவம் கொண்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் ஒருபோதும் திறக்கப் படமாட்டாது, அன்றியும் ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சுவனத்தினுள் நுழைய முடியாது. நாம் குற்றவாளிகளை இவ்வாறே பழி தீர்க்கின்றோம்.

அல்-குர்ஆன் 7:40
இவ்விதமாக அல்லாஹ்வை நம்ப மறுப்பவர்கள் சுவனத்தில் நுழைவதென்பது இயலாததொரு காரியமாகும்.

தெய்வீக வெளிப்பாடுகளின்

முக்கியமான அளவுகோல்

“ஹதீஸ் & சுன்னத்” ஆகியவை தெய்வீக வெளிப்பாடுகள் என்று மக்களில் சிலர் வாதிடுகின்றனர். மிகத்தெளிவாக, தெய்வீக வெளிப்பாடுகளுக்குரிய அளவுகோலானது “அவை முழுமையாக பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்”, என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். நபியின் “ஹதீஸ் & சுன்னத்”  என்றழைக்கப்படுபவை மிகப் பெரிய அளவில் சிதைக்கப்பட்டிருப்பதால், அவை தெய்வீக வெளிப்பாடுகள் (வஹி) என்பதற்கான அளவுகோலுக்கு ஒருபோதும் பொருந்தாது. ஹதீஸ்களில் மிகப்பெரும்பாலானவை பொய்யாக இட்டுக்கட்டப்பட்டவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாக இருக்கின்றது.
انَّا نَحْنُ نَزَّلنَا الذِّكْر وَانَّا لهُ لحَفِظُونَ

நிச்சயமாக,   நாம்   தான்    இந்நினைவூட்டலை வெளிப்படுத்தினோம், மேலும், நிச்சயமாக, நாம் இதனைப் பாதுகாப்போம்*.

அல்-குர்ஆன் 15:9

وَإِنَّهُ لَكِتَبٌ عَزِيزٌ

 

لَا يَأْتِيهِ الْبَطِلُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِ تَنزِيلٌ مِنْ حَكِيمٍ حَمِيدٍ

குர்ஆனின் சான்றை*, அது அவர்களிடம் வந்த பொழுது, ஏற்றுக் கொள்ள மறுத்தவர்கள், கண்ணியமானதொரு புத்தகத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களாகி விட்டனர்.
கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ எந்தப் பொய்மையும் அதில் நுழைந்திட முடியாது;* ஞானம் மிக்கவர், புகழுக்குரியவரிடமிருந்து வந்த ஒரு வெளிப்பாடு.

அல்-குர்ஆன் 41:41-42

ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவை தெய்வீக வெளிப்பாடுகள் (வஹி) என்று அவர்கள் உரிமை கோரும் போதே அவர்களுடைய இறை நிந்தனை வெளிப்படையாகத் தெரிகின்றது. சர்வ வல்லமையுடைய அல்லாஹ், தான் வெளிப்படுத்தியவற்றை பாதுகாக்கும் திறன் உடையவர் என்பதை அவர்கள் உணரவில்லையா?

ஹதீஸ் & சுன்னத் = 100% கற்பனை

கற்பனைகுர்ஆன் முற்றிலும் விவரிக்கப்பட்டதாக இருக்கின்றது என்றும் & ஒரே ஆதாரமாக இருக்க வேண்டுமென்றும் அல்லாஹ் பிரகடனம் செய்கின்ற போதிலும் பெரும்பாலான முஸ்லிம்கள் ஹதீஸ் & சுன்னத் என்று அழைக்கப்படும் கற்பனைகளை பின்பற்றும் படி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

            குர்ஆன் உண்மையானதாகவும் மேலும் மாற்றவே முடியாத அல்லாஹ்வின் வார்த்தையாகவும் இருக்கின்றது (குர்ஆன்: “விஷுவல் பிரசென்டேஷன் ஆஃப்த மிரகிள்” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்)  என்பது கண்கூடான சான்றின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்ற அதே சமயம் ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவை கற்பனை என்று ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

أَفَغَيْرَ اللَّهِ أَبْتَغِي حَكَمًا وَهُوَ الَّذِي أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَبَ مُفَصَّلًا وَالَّذِينَ آتَيْنَاهُمْ الْكِتَبَ يَعْلَمُونَ أَنَّهُ مُنَزَّلٌ مِنْ رَبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُونَنَّ مِنْ الْمُمْتَرِينَ

 

وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

 

وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

அவர் இந்த புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்டதாக வெளிப்படுத்தியிருக்கும் போது,  கடவுள் -ஐத் தவிர வேறொன்றை சட்ட ஆதாரமாக நான் தேடுவேனா?.....


உங்கள் இரட்சகருடைய வார்த்தை சத்தியத்தாலும், நீதத்தாலும் முழுமை பெற்று விட்டது. அவருடைய வார்த்தைகளை, எதுவும் மாற்ற முடியாது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.


பூமியிலுள்ள பெரும்பான்மையினருக்கு நீர் கீழ்ப்படிந்தால், அவர்கள் உம்மைக் கடவுள்- உடைய பாதையை விட்டும் திருப்பி விடுவார்கள். அவர்கள் யூகத்தை மட்டுமே பின்பற்றுகின்றார்கள்; அவர்கள் அனுமானம் மட்டுமே செய்கின்றார்கள்.

அல்-குர்ஆன் 6:114-116

 

إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنْفُسُ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمْ الْهُدَى

அவர்களுடைய இரட்சகரிடமிருந்து இதில், அவர்களுக்கு சத்திய வழிகாட்டல் வந்துள்ளபொழுது, அவர்கள் கற்பனைகளையும் மேலும் சுய விருப்பங்களையும் பின்பற்றுகின்றனர்.

அல்-குர்ஆன் 53:23

தூதருக்கு கீழ்படிவது நிபந்தனைக்குட்பட்டது

தூதருக்கு கீழ்படிவது குர்ஆனிய வெளிப்பாடுகளை (வஹி) பின்பற்றுவதன் மூலம் தான் முழுமையடைகின்றது.

தூதருக்கு கீழ்படிவது குர்ஆனை, முழுக்குர்ஆனை, மேலும் வேறு எதுவுமில்லாது குர்ஆனை மட்டுமே உறுதியாகக் கடைபிடிப்பதில் தான் இருக்கின்றது.

கீழ்படிவதற்கான நிபந்தனை என்னவென்றால் தூதரின் மூலமாக மிகச்சரியாக அல்லாஹ்வை ஆதாரமாக கொள்வதே தவிர, தவறுகளுக்குட்பட்ட மனிதராகிய அந்த தூதரை அல்ல.

 

கீழேயுள்ள வசனத்தில் காட்டியுள்ளபடி ஒரு மனிதர் என்ற முறையில் தூதருக்கு, அவர் சரியான பாதையில் இருந்தால் மட்டுமே கீழ்படிய வேண்டும்.

يَايُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْءا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَدَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَنٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

வேதம் வழங்கப்பட்டவரே, (நம்ப மறுப்பவர்களைக் கைவிட்டு விட்டவர்களான) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் புகலிடம் தேடுவதற்காக வந்து, அவர்கள் கடவுள்-உடன் எந்த இணைத் தெய்வங்களையும் அமைத்துக் கொள்ள மாட்டோம், அன்றி திருடமாட்டோம், அன்றி விபச்சாரம் செய்ய  மாட்டோம், அன்றி தங்களுடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டோம், அன்றி பொய்மை எதனையும் இட்டுக்கட்ட மாட்டோம், அன்றி உம்முடைய நன்னெறியான கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாதிருக்கமாட்டோம் என்று உம்மிடம் உறுதிமொழி அளித்தால், நீர் அவர்களுடைய உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளவும், மேலும் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கும்படிக் கடவுள்-ஐப் பிரார்த்திக்கவும் வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

அல்-குர்ஆன் 60:12

இவ்விதமாக மனிதராகிய முஹம்மது, தூதராகிய முஹம்மதைப் போன்றவரல்ல. அவர் சரியான பாதையில் இருந்தால் மட்டுமே அவருக்கு கீழ்படிய வேண்டும் என்ற நிபந்தனை தெளிவானதாக இருக்கின்றது.
தூதருக்கு கீழ்படிவது நிபந்தனைக்குட்பட்டது.
மூல ஆதாரமாக அல்லாஹ் இருக்கும் போது தான் கீழ்படிதல் முழுமை அடைகின்றது. அதே சமயம் தூதருடைய சொந்த கருத்து அவருக்கும், அவருடைய சொந்த கருத்துக்களை பின்பற்றுபவர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் என்று குர்ஆன் வலியுறுத்திக் கூறுகின்றது.

مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنْ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ وَأَرْسَلْنَكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَى بِاللَّهِ شَهِيدًا

 

مَنْ يُطِعْ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَكَ عَلَيْهِمْ حَفِيظًا

(முஹம்மதே) உங்களுக்கு நிகழும் நல்லது எதுவும் கடவுள்- இடமிருந்து வருகின்றது, மேலும் உங்களுக்கு நிகழும் கெட்டது எதுவும் உங்களிடமிருந்தே வருகின்றது. நாம் உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பியுள்ளோம்,* மேலும் சாட்சியாளராக இருக்க கடவுள் போதுமானவர்.
எவரொருவர் தூதருக்கு கீழ்படிகின்றாரோ, அவர் கடவுள்-க்கு கீழ்படிகின்றார். திரும்பி விடுகின்றவர்களைப் பொறுத்தவரை நாம் உம்மை அவர்களுக்கு பாதுகாவலராக அனுப்பவில்லை.
அல்-குர்ஆன் 4:79-80

 

இவ்விதமாக முஹம்மதுடைய சொந்தக் கருத்து கெட்டதாக இருக்கலாம். மேலும் கெட்ட நிகழ்வுகள் நிகழ்வதற்கு காரணமாகலாம். மற்றொருபுறம் தூதராகிய முஹம்மது, அல்லாஹ்வின் வார்த்தைகளை அதாவது குர்ஆனை கூறுகின்றார் என்றால் அதற்கு முழுமையாக கீழ்படிந்தாக வேண்டும். ஏனெனில் எவரொருவர் தூதுருக்கு கீழ்படிகின்றாறோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தவர் ஆவார். மேலும் நாம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்குத் தான் கீழ்படிய வேண்டும். மனிதர்களின் கட்டளைகளுக்கு அல்ல.

தூதருக்கு கீழ்படிவது நிபந்தனைக்குட்பட்டது

ஒரு தூதராக முஹம்மது என்ன கூறினாரோ, அதற்கு நாம் கட்டாயம் கீழ்படிந்தாக வேண்டும். மேலும் ஒரு மனிதராக அவர் என்ன கூறினாரோ அதற்கு கீழ்படிய வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு பல உதாரணங்களை குர்ஆன் வழங்குகின்றது. ஒரு தூதராக அவர் குர்ஆனை, வேறு எதுவும் இன்றி குர்ஆனை மட்டுமே கூறினார். இன்னும் கூடுதலாக ஒரு மனிதராக முஹம்மது உண்மையில், அலட்சியம் செய்யமுடியாத தவறுகளை செய்தார் என்று குர்ஆன் போதிக்கின்றது. இவ்விதமாக கீழே காட்டப்பட்டுள்ள வசனத்தில் ஒரு மனிதர் தன்னுடைய வளர்ப்பு மகனால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியை திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்றதொரு சட்டத்தை நிலைநிறுத்த அல்லாஹ் விரும்பியதை நாம் காண்கின்றோம். முஹம்மது நமக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர். ஆயினும் இது அரேபியாவின் பரம்பரை வழக்கங்களுக்கு எதிரானதாக இருந்தது, மேலும் நபி, உண்மையில் அல்லாஹ்விற்கு அஞ்சுவதற்கு பதிலாக மக்களுக்கு அஞ்சினார்.

 

وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَكَهَا لِكَيْ لَا يَكُونَ عَلَى الْمُؤْمِنِينَ حَرَجٌ فِي أَزْوَجِ أَدْعِيَائِهِمْ إِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا وَكَانَ أَمْرُ اللَّهِ مَفْعُولًا
.”கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்டு மேலும் உம்மால் அரவணைக்கப்பட்ட ஒருவரிடம் நீர் “உம்முடைய மனைவியைத் தக்கவைத்துக் கொள்வீராக மேலும் கடவுள்-ஐ அஞ்சிக்கொள்வீராக” என்று கூறியதை நினைவு கூர்வீராக, மேலும் கடவுள் அறிவிக்க நாடியதை உமக்குள்ளேயே நீர் மறைத்துக் கொண்டீர். இவ்விதமாக, கடவுள்-ஐ மட்டுமே அஞ்ச வேண்டியவராக நீர் இருக்கும் பொழுது, நீர் மக்களுக்கு அஞ்சினீர். ஒரு மனிதன் தன்னுடைய தத்துப்பிள்ளையின் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவியை மணந்து கொள்ளலாம் என்ற முன்மாதிரியை நிலைநாட்டுவதற்காக, ஜைது (முஹம்மதுடைய தத்துப் பிள்ளை) தன்னுடைய மனைவியை விட்டு முழுமையாக நீங்கிக் கொண்டு விட்ட பின்னர், அவளை நாம் உமக்கு மணம் செய்வித்தோம். கடவுள்-ன் கட்டளைகள் செய்துமுடிக்கப்படவேண்டும்.
அல்-குர்ஆன் 33:37
தூதருக்கு கீழ்படிவது நிபந்தனைக்குட்பட்டது
நாம் முஹம்மதிற்கு அவருடைய குர்அனிய கூற்றுக்களுக்கு மட்டுமே கீழ்படிய வேண்டும், மேலும் அவருடைய தனிப்பட்ட கூற்றுக்களுக்கோ அல்லது தனிப்பட்ட நடத்தைகளுக்கோ கீழ்படியக் கூடாது என்ற உண்மையை ஒரு முழுசூரா விளக்கமாக கூறுகின்றது. இது ஹதீஸ் மற்றும் சுன்னத் என்று அழைக்கப்படுபவை சட்டப்பூர்வமான மார்க்க வழி காட்டுதல்களாக இருப்பதற்கு தகுதி அற்றவை என்று தீர்ப்பு அளிக்கின்றது.

 

அந்த சூரா “அபஸா = அவர் முகம் சுளித்தார்” என்ற பெயரை தலைப்பாக கொண்ட சூரா ஆகும். மேலும் அது முஹம்மது பார்வையற்ற ஒரு ஏழை மனிதரை புறக்கணித்துவிட்டு, ஒரு பணக்கார மனிதரிடம் தனது முழு கவனத்தையும் செலுத்திய ஒரு நிகழ்ச்சியை விவரிக்கின்றது.

 

عَبَسَ وَتَوَلَّى

َنْ جَاءَهُ الْأَعْمَى

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّى

أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَى

أَمَّا مَنْ اسْتَغْنَى

فَأَنْتَ لَهُ تَصَدَّى

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّى

وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَى

وَهُوَ يَخْشَى

فَأَنْتَ عَنْهُ تَلَهَّى

كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ

فَمَنْ شَاءَ ذَكَرَهُ

அவர் (முஹம்மது) முகம் சுளித்தார் மேலும் திரும்பிச் சென்று விட்டார்.
பார்வையற்ற அந்த மனிதர் அவரிடம் வந்த பொழுது.
உமக்கு எப்படித் தெரியும்? அவர் தன்னையே தூய்மைப்படுத்திக் கொள்ளக் கூடும்.
அல்லது அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடும், மேலும் தூதுச் செய்தியிலிருந்து பயன் பெறக் கூடும்.
செல்வந்தனான அம்மனிதனைப் பொறுத்த வரை.
(முஹம்மதே) உம்முடைய கவனத்தை நீர் அவனிடம் செலுத்தினீர்.
அவனுடைய மீட்சிக்கு உம்மால் உத்தரவாதம் அளிக்க இயலாத போதிலும்.
ஆர்வத்துடன் உம்மிடம் வந்த அந்த ஒருவர்.
மேலும் மெய்யாகவே பயபக்தியுடையவர்.
அவரை நீர் அசட்டை செய்தீர்.
உண்மையில், இது ஒரு நினைவூட்டலாகும்.
விரும்புகின்ற எவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்-குர்ஆன் 80:1-12

முஹம்மதை இணை தெய்வ வழிபாடு செய்தல்

குர்ஆன் முழுமையானது, மிகச்சரியனது & மார்க்க வழிகாட்டுதலுக்கான ஒரே ஆதாரமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ்வால் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டும், அல்லாஹ்வை நம்பமறுத்து, ஹதீஸ் & சுன்னத் எனப்படும் கற்பனைகளை பின்பற்றுவது முஹம்மதை அவருடைய விருப்பத்திற்கெதிராக தெய்வமாக ஆக்குகின்ற செயலாகும்.

قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنفَدَ كَلِمَتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا

قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَحِدٌ فَمَنْ كَانَ يَرْجُوا لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَلِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا

“பெருங்கடலே என் இரட்சகரின் வார்த்தைகளுக்கு மையாக ஆனபோதிலும், என் இரட்சகரின் வார்த்தைகள் தீர்ந்துபோகும் முன்னர் பெருங்கடல் தீர்ந்து போகும், மையை நாம் இருமடங்கு வழங்கினாலும் சரியே” என்று (முஹம்மதே) கூறுவீராக.
“உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டிருக்கும் நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. தங்கள் இரட்சகரைச் சந்திப்பதை எதிர்ப்பார்த்திருப்பவர்கள் நன்னெறியான காரியங்களைச் செய்யவும், மேலும் தனது இரட்சகருடன் வேறு தெய்வம் எதனையும் ஒருபோதும் வழிபடாதிருக்கவும் வேண்டும்” என்று (முஹம்மதே) கூறுவீராக.

அல்-குர்ஆன் 18:109-110
அல்லாஹ் வார்த்தைகள் பற்றாக் குறையால் பாதிக்கப்படுவதில்லை. அதாவது இந்த குர்ஆனில் நமக்கு தேவையான அனைத்து வார்த்தைகளையும் அவர் நமக்கு வழங்கியுள்ளார். மேலும் முஹம்மதுடைய வார்த்தைகளையோ, அல்லது வேறெவருடைய வார்த்தைகளையோ நாம் தேடக்கூடாது, மேலும் முஹம்மதும் மற்ற மனிதர்களைப் போன்ற மனிதரே ஆவார், அவரை இணைதெய்வ வழிபாடு செய்தல் கூடாது போன்ற விவரங்களை இந்த வசனங்கள் தெளிவாக நமக்கு அறிவிக்கின்றன. (வசன முடிவில் பார்க்கவும்)

குர்ஆன்; நீங்கள் முஹம்மதை

இணைதெய்வ வழிபாடு செய்ய வேண்டாம்
முஹம்மது நபி “உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை” என்று விவரிக்கின்ற வசனங்கள் இரண்டு மட்டுமே குர்ஆனில் உள்ளன. அந்த இரண்டு வசனங்களுமே அவற்றின் முடிவில் இணைத்தெய்வ வழிபாட்டை தடுக்கின்றன என்பது தற்செயலானதா ??  முதல் வசனம் முந்தைய பக்கத்தில் காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது வசனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَحِدٌ فَاسْتَقِيمُوا إِلَيْهِ وَاسْتَغْفِرُوهُ وَوَيْلٌ لِلْمُشْرِكِينَ

(முஹம்மதே) கூறுவீராக, “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என்று உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ள  நான், உங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை. நீங்கள் அவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக்கவும், மேலும் அவருடைய மன்னிப்பைக் கேட்கவும் வேண்டும். இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு கேடுதான்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் தங்கள் இரட்சகரை, குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது முற்றிலும் விவரிக்கப்பட்டது மேலும் மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரமாக இருக்க வேண்டும் என்கின்ற அவருடைய கூற்றுகளில் நம்பிக்கை கொள்கின்றனர். இணைதெய்வ வழிபாடு செய்பவர்கள் மட்டுமே, குர்ஆன் அல்லாத மற்றதை தேடுவார்கள். “ஹதீஸ் & சுன்னத்” ஆகியவற்றை பின்பற்றுவது முஹம்மது நபியை அவருடைய விருபத்திற்கெதிராக இணை தெய்வ வழிபாடு செய்வதாகும்.
குர்ஆனை தவறாக பயன்படுத்துதல்
إِنَّ اللَّهَ وَمَلَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَأيُّهَا الَّذِينَ ءامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

வேதம் வழங்கப்பட்டவருடைய  வாழ்க்கைக் காலத்தில்*

கடவுள்-ம் அவருடைய வானவர்களும், வேதம் வழங்கப்பட்டவருக்கு உதவியும்  மற்றும் ஆதரவும் அளிக்கின்றனர். நம்பிக்கை கொண் டோரே, நீங்கள் அவருக்கு உதவியும்  மற்றும் ஆதரவும் அளிக்க வேண்டும், மேலும் எவ்வாறு  அவர் மதிக்கப்பட வேண்டுமோ அவ்வாறு அவரை மதிக்கவும் வேண்டும்.*

அல்-குர்ஆன் 33:56

முழு குர் ஆனிலும் அதிக அளவில், மிகவும் தவறாக பயன்படுத்தப்பட்ட வசனமாக இது இருக்கின்றது. அல்லாஹ்வை பெருமை படுத்துவதற்குப் பதிலாக, சைத்தானிய சிதைவுகள், அறிவீனம் மற்றும் இணைதெய்வ வழிபாடு ஆகியவை மூலமாக கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நபியை அவருடைய விருப்பத்திற்கு எதிராக பெருமைபடுத்துவதற்கு இந்த வசனம் காரணமாகின்றது. குறிப்பிட்ட இந்த வசனத்தின் புகழ்ச்சிகளை இரவும் பகலும் பாடுகின்ற மக்கள், வெளிப்படையாக இரண்டு உண்மைகளை அறியாதவர்களாக இருக்கின்றனர். 1 நபி = வேதம் வழங்கப்பட்டவர் = 00 என்கின்ற இந்த வார்த்தையானது முஹம்மது நபியைக் குறிக்கும் பொழுதெல்லாம் அவர் உயிரோடு இருந்த காலத்தில் அவரைப் பற்றி குறிப்பிடுகின்றதே தவிர அவருடைய மரணத்திற்கு பின்னர் அல்ல.

2. இதே சூராவில் இந்த வசனத்திற்கு 13 வசனங்கள் முன்னதாக அல்லாஹ்வும் அவருடைய வானவர்களும் அதே மரியாதையை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் செய்வதை நாம் காண்கின்றோம்.

هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَئِكَتُهُ لِيُخْرِجَكُمْ مِنْ الظُّلُمَتِ إِلَى النُّورِ
அவர் தான் தன்னுடைய வானவர்களுடன் சேர்ந்து, உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழிநடத்துவதற்காக, உங்களுக்கு உதவுகின்றார். நம்பிக்கையாளர்களின் பால் அவர் மிக்க கருணையாளராக இருக்கின்றார்.
அல்-குர்ஆன் 33:43

குர்ஆனை தவறாக பயன்படுத்துதல்

சூரா 9-ன் வசனம் 103, “ஸல்லூ மற்றும் யுஸல்லி" ஆகிய வார்த்தைகளின் அர்த்தத்தை தெளிவு படுத்துகின்றது. சூரா 33-ன் வசனம் 56-ல் நபிக்கு "யுஸல்லி" செய்யும்படி நம்பிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்ட அதே விதமாக நம்பிக்கையாளர்களுக்கு “யுஸல்லீ” செய்யும் படி நபிக்கு இந்த வசனத்தில் கட்டளையிடப்படுகின்றது (பக்கம் 26ஐ பார்க்கவும்).
خُذْ مِنْ أَمْوَلِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَوتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
).(முஹம்மதே) அவர்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், மேலும் அவர்களைப் புனிதப்படுத்துவதற்காகவும், அவர்களுடைய செல்வத்திலிருந்து ஒரு தர்மத்தை ஏற்றுக்கொள்வீராக. மேலும் அவர்களை ஊக்கப்படுத்துவீராக, (ஸ்ஸல்லீ அலய்ஹிம்) ஏனெனில் உமது ஊக்கம் அவர்களுக்கு மறுவுறுதியைத் தரும். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
அல்-குர்ஆன் 9:103

இவ்விதமாக, இந்த சொற்றொடரின் உண்மையான அர்த்தம் “உற்சாகமூட்டுங்கள்” என்பதே தவிர, குர்ஆனை தவறாக பயன்படுத்துபவர்கள் குறிப்பிடுவதைப் போல “இரவும், பகலும் புகழ்ந்திடுங்கள்” என்பதல்ல.

 

சுருக்கம்

 

1.அல்லாஹ்வும் மேலும்அவருடைய மலக்குகளும் நம்பிக்கையாளர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியினுள் வழி நடத்துவதற்காக உதவுகின்றனர்  ஸ33:43].
2. அல்லாஹ்வும் மேலும் அவருடைய மலக்குகளும் நபிக்கு, அவருடைய வாழ்நாளின் பொழுது நேரான பாதையின் மீது அவர் நிலைத்திருப்பதற்கு உதவுகின்றனர் ஸ33:56].

3.நபி வாழ்ந்த காலத்தில் அவருக்கு ஆதரவு அளிக்கும்படி நம்பிக்கையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர் (33:56) மேலும், நபியும் நம்பிக்கையாளர்களுக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார் ஸ9:103].
குர்ஆனை தவறாக பயன்படுத்துதல்
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ الْاءخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
பயன்படுத்துதல்உங்களில், கடவுள்-ஐயும் இறுதி நாளையும் தேடுபவர்களுக்கும், மேலும் இடையறாது கடவுள்-ஐப் பற்றி நினைப்பவர்களுக்கும் கடவுள்-ன் தூதர் நல்லதொரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.
அல்-குர்ஆன் 33:21

முஹம்மதை இணைதெய்வ வழிபாடு செய்வதற்கான ஒரு சிறப்பு அந்தஸ்தினை கோருவதற்கும் மேலும் நபியுடைய சுன்னத் (வழி வழிச் செய்தி) தேவை என்று மக்களை நம்பும்படி செய்வதற்கும் சைத்தான் இந்த வசனத்தை பயன்படுத்தி விட்டான்.


முஹம்மது நபி நமக்கு சிறந்த முன்மாதிரி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும் குர்ஆனை, வேறெதுவும் இல்லாது, குர்ஆனை மட்டுமே உறுதியாக கடைபிடிப்பதில் தான் அவருடைய முன் மாதிரி அமைந்திருக்கின்றது.

 

சந்தேகத்திற்கிடமின்றி, வார்த்தைக்கு வார்த்தை இதே வார்த்தைகளால் தான் இப்ராஹிம் குர்ஆனில் விவரிக்கப்படுகின்றார் என்ற உண்மையை சைத்தானின் வலையில் விழுந்தவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர்:

قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَهِيمَ وَالَّذِينَ مَعَهُ

لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُوا اللَّهَ وَالْيَوْمَ الاءخِرَ وَمَن يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

ஆப்ரஹாம் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மூலம் உங்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அமைக்கப் பட்டுள்ளது... கடவுள் மற்றும் இறுதி நாளைத் தேடுபவர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணம் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
அல்-குர்ஆன் 60:4,6

6அல்லாஹ் முஹம்மதை வெறுக்கின்றாரா???

நிச்சயமாக இல்லை. ஆனால் குர்ஆனில் முஹம்மதைப் பற்றி அல்லாஹ் கூறுகின்ற செய்திகளை நீங்கள் கூறும்பொழுது முஹம்மதை வெறுப்பதாக உங்கள் மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

இதைப் போலவே இயேசு ஒரு மனிதரும் மேலும் அல்லாஹ்வுடைய தூதருமாவார் என்று கிறிஸ்தவர்களிடம் நீங்கள் கூறும் பொழுது அவர்கள் இயேசுவை வெறுப்பதாக உங்கள் மீது குற்றம் சாட்டுவர்.

முஹம்மதால் எவரொருவரையும் வழிநடத்த இயலாது. (28:56)

إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ
(முஹம்மதே) நீர் நேசிப்பவர்களை எல்லாம் உம்மால் வழிநடத்த முடியாது. கடவுள் - ஒருவர் மட்டுமே அவருடைய நாட்டத்திற்கிணங்கவும் மேலும் அவருடைய அறிவிற் கிணங்கவும், வழிகாட்டலுக்குத் தகுதியுடையவர்களை வழி நடத்துகின்றவர்.
அல்-குர்ஆன் 28:56

எந்தவொரு மாற்றமோ, கூட்டலோ குறைத்தலோ, அல்லது விளக்கமோ இல்லாது குர்ஆனை ஒப்படைப்பது தான் நபியுடைய ஒரே பணியாக இருந்தது.

பக்கங்கள் 37 லிருந்து 45 வரை பார்க்கவும்

முஹம்மது மீதான உண்மையான அன்பு

இயேசுவை உண்மையாக நேசிப்பது என்பது, அவரை ஒரு மனிதராக மேலும் அல்லாஹ்வின் ஒரு தூதராக அடையாளம் காண்பதேயாகும். கிறிஸ்தவர்கள் இயேசுவை மிகவும் அதிகமாக நேசிக்கின்றனர், ஆயினும் தீர்ப்பு நாளில் அவர்களை, அவர் கைவிடுகின்றார் (மத்தேயு 7:23 மற்றும் குர் ஆன் 5:116).

         

முஹம்மதை உண்மையாக நேசிப்பதென்பது அவரை ஒரு மனிதராக அடையாளம் கண்டும் மேலும் அவருடைய போதனைகளை பின்பற்றுவது, அதாவது குர்ஆனை, வேறெதுவுமில்லாது குர்ஆனை மட்டுமே உறுதியாக பின்பற்றுவதாகும், “ஹதிஸ் & சுன்னத்தை” பின்பற்றுபவர்கள் முஹம்மதுடைய எதிரிகளென அழைக்கப் படுகின்றனர். மேலும் நாம் கீழே காண்கின்றபடி, தீர்ப்புநாளில் அவர்களை முஹம்மது கைவிடுகின்றார்.

وَقَالَ الرَّسُولُ يَرَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْءانَ مَهْجُورًا

وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنْ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا

.(தீர்ப்பு நாள் அன்று) தூதர்*, “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனை கைவிட்டு விட்டார்கள்” என்று கூறுவார்.


வேதம்வழங்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதிகளையும் நாம் அமைக் கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர்.

அல்-குர்ஆன் 25:30-31

மேலேயுள்ள 31-வது வசனத்திற்கும் மேலும் பிரத்யேகமாக “ஹதீஸை” பற்றி விவரிக்கும் சூரா 6-ன் 112-வது வசனத்திற்கும் இடையிலுள்ள வார்த்தைக்கு வார்த்தை ஒற்றுமையை தயவு செய்து கவனிக்கவும்.

 

அல்லாஹ்தான் உங்களைப் படைத்தவர்; அல்லாஹ் தான் உங்களுக்கு வழங்குபவர்; அல்லாஹ் தான் உங்களுடைய வாழ்வை முடிவடையச் செய்கின்றவர்; அல்லாஹ் தான் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவர்; அல்லாஹ் தான் கணக்கு கேட்பதற்காக உங்களை அழைக்கின்றவர். இவைகளில் எந்த ஒன்றையும் முஹம்மது செய்வதில்லை (30:40ஐப் பார்க்கவும்).

முஹம்மது எதிர்காலத்தை அறிந்தவர் அல்ல

قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنْ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ
“மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவர் அல்ல. எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். நான் ஆழ்ந்ததொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று (முஹம்மதே) கூறுவீராக.
அல்-குர்ஆன் 46:9
قُلْ لَا امْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا الَّا مَا شَاء اللَّهُ وَلَوْ كُنتُ اعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنْ الْخَيْرِ وَمَا مَسَّنِي السُّوءُ انْ انَا الَّا نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُونَ
“எனக்கே நன்மை செய்து கொள்ளவோ, அல்லது எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, என்னிடத்தில் எந்த சக்தியும் இல்லை. கடவுள் என்ன நாடுகின்றாரோ அதுவே எனக்கு நிகழும். (எனக்கு எதிர்காலம் தெரியாது) எதிர்காலத்தை நான் அறிந்திருந்தால், நான் என்னுடைய செல்வத்தைப் பெருக்கியிருப்பேன், மேலும் எந்தத் தீங்கும் என்னைத் தீண்டியிராது. நான் ஓர் எச்சரிப்பவரும், மேலும் நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டவருமே தவிர வேறில்லை” என்று (முஹம்மதே) கூறுவீராக.
அல்-குர்ஆன் 7:188

முஹம்மது எதிர்காலத்தை அறிந்தவர் அல்ல

ஆயினும் நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் எதிர்கால நிகழ்வுகளை விவரிக்கின்றன, அவற்றிற்கும் குர்ஆனிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அவை சொந்த யூகங்களையே எடுத்துக் கூறுகின்றன.

------------------------------------------------------------------------

மிகவும் பிரபலமான ஹதீஸ்களில் ஒன்று கீழே காட்டப்பட்டுள்ளது.

நீங்கள் என்னுடைய சுன்னத்தையும் (வழி வழிச் செய்தி) மேலும் எனக்குப் பின்னர் வர இருக்கின்ற வழிகாட்டப்பட்ட கலீஃபாக்களின் (அல்-குலஃபா ‘அல்-ராஷிதீன்) சுன்னத்தையும் உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.  

 

“அல்-குலஃபா ‘அல்-ராஷிதீன்’                          ” என்கின்ற இந்த சொற்றொடரானது நபிக்கு பின்னால் 200 ஆண்டுகள் வரையிலும் அரேபிய  இலக்கியங்களில் காணப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். இது ஒரு நவீன சொற்றொடராகும்.


தன்னைத் தொடர்ந்து “குலஃபாக்கள்” இருப்பார்கள் என்பதை நபி எவ்வாறு அறிந்தார், மேலும் அவர்கள் “அல்குலஃபா ‘அல்ராஷிதீன்” என்று அழைக்கப்படுவார்கள் என்பதை அவர் எவ்வாறு அறிந்தார்?

-----------------------------------------------------------------------------

“அல்குலஃபா ‘அல்-ராஷிதீன்” என்ற சொற்றொடரானது குறிப்பாக அபுபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகிய நான்கு கலீஃபாக்களையே குறிக்கின்றது இது நபிக்கு பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் வரையிலும் அறியப்படாததாகவே இருந்தது.

பரிந்துரை எனும் கட்டுக்கதை

பரிந்துரை என்பது, மக்களை ஏமாற்றி அவர்களை தங்களுடைய நபிமார்கள் மற்றும் / அல்லது மகான்களை இணைதெய்வ வழிபாடு செய்பவர்களாக ஆக்குவதற்கு சைத்தானால் பயன்படுத்தப்படும் மிகவும் திறன் வாய்ந்த யுக்திகளில் ஒன்றாகும்.

 

தீர்ப்பு நாளில் பரிந்துரை கிடையாது என்று குர்ஆன் மீண்டும் மீண்டும் கூறுகின்ற போதிலும் “முஹம்மது நபியை அவருடைய விருப்பத்திற்கு எதிராக இணைதெய்வ வழிபாடு செய்பவர்களாக “ஹதீஸ் & சுன்னத்” மூலம் பெரும்பாலான முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர். மேலும் பரிந்துரை (ஸஃபாத்) என்னும் கருத்தை கண்டு பிடித்துக் கொண்டனர்.
انفِقُوا مِمَّا رَزَقْنَكُمْ مِنْ قَبْلِ انْ يَاْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَعَةٌ وَالْكَفِرُونَ هُمْ الظَّلِمُونَ
நம்பிக்கை கொண்டோரே, எந்தக் கொடுக்கல் வாங்கலும், உறவுமுறை சலுகைகளும், பரிந்துரையும் இல்லாத அந்த நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியவற்றில் இருந்து நீங்கள் தர்மம் கொடுக்க வேண்டும். நம்ப மறுப்பவர்கள் தான் அநியாயக்காரர்கள்.
அல்-குர்ஆன் 2:254
يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنْ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ
நபிமார்கள் கடவுள்-ன் கட்டளைகளை மட்டுமே பின்பற்றுகின்றனர் அவர்களுடைய எதிர்காலத்தையும் மேலும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டவர்களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே* கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.
அல்-குர்ஆன் 21:28

முஹம்மதை தெய்வமாக்குதல்

பரிந்துரை எனும் கட்டுக்கதை

முஹம்மது எவரொருவருக்கும் நன்மை செய்வதற்கோ அல்லது தீங்கிழைப்பதற்கோ சக்தியற்றவர் (பக்கம் 34 & பக்கம் 39 ஐப் பார்க்கவும்) என்ற குர்ஆனின் வலியுறுத்தல்கள் மீண்டும் மீண்டும் இருந்த போதிலும் பரிந்துரை என்னும் கருத்தின் மூலமாக ஏராளமான மக்களை ஏமாற்றுவதில் சைத்தான் வெற்றியடைந்து விட்டான். உண்மையிலேயே முஹம்மது தங்களை நரகிலிருந்து வெளியேற்றி சுவனத்தினுள் பிரவேசிக்கச் செய்வார் என்று தன்னால் ஏமாற்றப்பட்டவர்களை நம்பும்படி சைத்தான் செய்து விட்டான்!

 

தங்களை “முஸ்லிம்கள்” என்று அழைத்துக் கொள்பவர்களில் பெரும்பாலோர் பரிந்துரை என்கின்ற இந்த கருத்தை எண்ணற்ற மகான்கள் மற்றும் / அல்லது இமாம்களை இணைத்துக் கொள்வதற்காகவும் நீட்டித்துக் கொள்கின்றனர்.
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَؤُنَا عِنْدَ اللَّهِ قُلْ أتُنَبِّءونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَوَتِ وَلَا فِي الْأرْضِ سُبْحنَهُ وَتَعلَى عَمَّا يُشْرِكُونَ
கடவுள்-உடன் தங்களுக்குத் தீங்கிழைக்கவோ அல்லது பயனளிக்கவோ சக்தியற்ற இணைத் தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர், மேலும் அவர்கள், “இவர்கள் கடவுள்-இடம் எங்களுக்கு பரிந்துரை செய்பவர்கள்!” என்று கூறுகின்றார்கள். “வானங்களிலோ அல்லது பூமியிலோ, கடவுள் அறியாத சிலவற்றை அவருக்கு நீங்கள் அறிவிக்கின்றீர்களா?”என்று கூறுவீராக. அவர் துதிப்பிற்குரியவர். பங்குதாரர்கள் தேவைப் படுவதை விட்டும், அவர் மிகவும் உயர்வானவர்.
அல்-குர்ஆன் 10:18

முஹம்மதை தெய்வமாக்குதல்

முஹம்மது பரிந்துரைப்பவர் எனும் கட்டுக்கதை

பரிந்துரையின் கருத்தானது, மனிதர்கள் சார்பாக பரிந்து பேசும் சில பங்காளிகளை, அல்லாஹ், தன்னுடன் கொண்டிருக்கின்றார் என்கின்ற பொருளைத் தருகின்றது.

ஆகையால், பரிந்துரை என்பது இணை தெய்வ வழிபாடாக இருக்கின்றது, மேலும் எவருக்கேனும் முஹம்மது பரிந்துரை செய்வார் என்று நம்புபவர்கள், அந்த நபியை அவருடைய விருப்பத்திற்கு எதிராக இணை தெய்வ வழிபாடு செய்பவர்கள் ஆவர். முஹம்மதுடைய பரிந்துரையானது ஹதீஸ் & சுன்னத் எனப்படும் சைத்தானிய  புதுமைகளில் சாதாரணமாகக் காணப்படுகின்றது.

பரிந்துரையை இணைதெய்வ வழிபாடு என்று குர்ஆன் தெளிவாக அடையாளம் காட்டுகின்றது. மேலும் ஒரு மகத்தான அளவுகோலையும் அறிவிக்கின்றது; அது பரிந்துரையின் மீது நம்பிக்கை கொள்பவர்களால் அல்லாஹ் மட்டும் என்பதைக் குறித்து பேச இயலாது ; அவர்களுக்கு தங்களுடைய இணை தெய்வங்களையும் சேர்த்தே குறிப்பிட்டாக வேண்டும்.   

وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْاءخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِنْ دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ
கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும்போது, அவர்கள் திருப்தி அடைகின்றனர்.*
அல்-குர்ஆன் 39:45

கணக்கு கேட்பதற்காக முஹம்மது உங்களை அழைக்க மாட்டார்

فَانَّما عَليْكَ البَلغُ وَعَليْنَا الحِسَابُ

(முஹம்மதே) உமது ஒரே பணி (தூதுச் செய்தியை) ஒப்படைப்பது மட்டுமே. அவர்களைக் கணக்குக் கேட்க அழைக்கப் போவது நாம் தான்.

அல்-குர்ஆன் 13:40

முஹம்மதால் உங்களுக்கு நன்மையோ அல்லது

உங்களுக்கு தீமையோ செய்ய இயலாது.

قُلْ لَا امْلِكُ لِنَفْسِي ضَرًّا وَلَا نَفْعًا

(முஹம்மதே) “எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, அல்லது எனக்கே நன்மை செய்து கொள்ளவோ நான் எந்தச் சக்தியும் பெற்றிருக்கவில்லை” என்று கூறுவீராக.

அல்-குர்ஆன் 10:49

قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا

“உங்களுக்குத் தீங்கிழைக்கவோ, அன்றி உங்களை வழி நடத்தவோ எந்தச் சக்தியையும் நான் பெற்றிருக்கவில்லை,” என்று (முஹம்மதே) கூறுவீராக.

அல்-குர்ஆன் 72:21

இவ்விதமாக, நபி உங்களை சுவனத்தில் போடவும் மாட்டார், அன்றி உங்களை நரகிலிருந்து வெளியேற்றவும் மாட்டார். அன்றி கணக்கு கேட்பதற்காக உங்களை தனக்கு முன்பாக அழைக்கவும் மாட்டார், அன்றி அவரால் உங்களுக்கு நன்மை செய்யவோ அன்றி உங்களுக்கு தீமை செய்யவோ இயலாது. அவருடைய ஒரே இறைப்பணி குர்ஆனை & வேறெதுவும் இல்லாது குர்ஆனை மட்டுமே ஒப்படைப்பதாக இருந்தது. குர்ஆனை மட்டுமே பின்பற்றுவதும், மேலும் அவர் மீது இட்டுக் கட்டப்பட்டுள்ள கற்பனைகளை நிராகரிப்பதுமே, அவரை நேசிப்பதும் மேலும் கண்ணியப்படுத்துவதும் ஆகும்.

ஒவ்வொரு தூதரின் பணி

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வழிபட

வேண்டாம் என்பதே

அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வழிபட வேண்டாம் என்பதே  தாங்கள் இணை தெய்வ வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று இயேசுவோ அன்றி முஹம்மதோ விரும்புவதில்லை. அல்லாஹ்வை மட்டும் வழிபடுவதை உபதேசிப்பதே அவர்களுடைய ஒரே பணியாக இருந்தது.

وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَسُولٍ إِلَّا نُوحِي إِلَيْهِ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدُون

وَقَالُوا اتَّخَذَ الرَّحْمَنُ وَلَدًا سُبْحَنَهُ بَلْ عِبَادٌ مُكْرَمُونَ

لَا يَسْبِقُونَهُ بِالْقَوْلِ وَهُمْ بِأَمْرِهِ يَعْمَلُونَ

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنْ ارْتَضَى وَهُمْ مِنْ خَشْيَتِهِ مُشْفِقُونَ

وَمَنْ يَقُلْ مِنْهُمْ إِنِّي إِلَهٌ مِنْ دُونِهِ فَذَلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ كَذَلِكَ نَجْزِي الظَّلِمِينَ

நாம் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் : “என்னைத்தவிர தெய்வம் இல்லை; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்” என்ற உள்ளுணர்வுடனே தவிர அனுப்பியதில்லை.


இருப்பினும், அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கின்றார்!” என்று கூறினார்கள். துதிப்பு அவருக்குரியவை. அனைத்து (தூதர்களும்) (அவருடைய) கண்ணியமான அடியார்களே ஆவர்.


அவர்கள் ஒருபோதும் சுயமாகப் பேச மாட்டார்கள், மேலும் தங்கள் இரட்சகரின் கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவார்கள்.


அவர்களுடைய எதிர்காலத்தையும் மேலும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டவர்களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே* கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.


அவருடன் ஒரு தெய்வமாக இருப்பதாக அவர்களில் எவரேனும் ஒருவர் கூறினால் நாம் நரகத்தைக் கொண்டு அவருக்குக் கூலி கொடுப்போம்; இவ்விதமாகவே தீயவர்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.

அல்-குர்ஆன் 21:25-29

நபியுடைய ஒரே பணி : குர்ஆனை ஒப்படைப்பதே

குர்ஆனை ஒப்படைப்பது தவிர வேறு எந்தப் பணியும் முஹம்மதிற்கு இருக்கவில்லை என்பதை அழுத்தமாகக் கூறுவதற்காக குர்ஆன் “இரண்டு எதிர்மறை”களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றது.
 إِنْ عَلَيْكَ إِلَّا الْبَلَغُ

உம்முடைய ஒரே இறைப்பணி தூதுச்செய்தியை  (குர்ஆனை) ஒப்படைப்பதேயாகும்.

அல்-குர்ஆன் 42:48

فَانَّما عَليْكَ البَلغُ وَعَليْنَا الحِسَابُ

உமது ஒரே பணி (தூதுச் செய்தியை) (குர்ஆனை) ஒப்படைப்பது மட்டுமே.

அல்-குர்ஆன் 13:40

مَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ وَاللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ

 

قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

தூதரின் ஒரே கடமை செய்தியை (குர்ஆனை) ஒப்படைப்பதே, மேலும் நீங்கள் வெளிப்படுத்தும் அனைத் தையும், நீங்கள் மறைக்கும் அனைத்தையும்   கடவுள் அறிகின்றார்.


பிரகடனம் செய்வீராக: “கெட்டவை அபரிமிதமாக இருப்பது உங்களைக் கவர்ந்தபோதிலும், கெட்டவையும், நல்லவையும் சமமாகாது. அறிவுக் கூர்மை உடையோரே, (நீங்கள் சிறுபான்மையினராக இருந்தாலும்) நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு, கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

அல்-குர்ஆன் 5:99-100

துர்பாக்கியமாக, மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரம் குர்ஆன் தான் என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்கள் தான் நம்பிக்கை கொண்டவர்களை விட மிகவும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். (16:35,82; 24:54; 29:18; 36:17; & 64:12 ஐயும் பார்க்கவும்).

முஹம்மது குர்ஆனை விளக்கவோ பொருள் கூறவோ

அல்லது எதிர்பார்க்கவோ கூடாது; அப்படியே

ஒப்படைப்பதும் & பின்பற்றுவதுமே,

குர்ஆனை விளக்குவதற்கு ஹதீஸ் & சுன்னத் தேவையாக இருக்கின்றது என்ற கோரிக்கையை ஹதீஸ் & சுன்னத் ஆதரிக்கின்றது.
ஆயினும், குர்ஆனின் ஆசிரியர் அல்லாஹ் என்றும் நம்பிக்கையாளர்களின் தாய்மொழிக்கு அப்பாற்பட்டு அவர்களுடைய இதயங்களில் குர்ஆனை அல்லாஹ் பதிய வைப்பார் என்றும், மேலும் முஹம்மது குர்ஆனை விளக்க மாட்டார் என்றும், குர்ஆன் போதிக்கின்றது. ஆவணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

الرَّحْمَنُ

عَلَّمَ الْقُرْءانَ

அல்-குர்ஆன் 55:1-2

 ءأَعْجَمِيٌّ وَعَرَبِيٌّ قُلْ هُوَ لِلَّذِينَ ءامَنُوا هُدًى وَشِفَاءٌ وَالَّذِينَ لَا يُؤْمِنُونَ فِي ءاذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى أُوْلَئِكَ يُنَادَوْنَ مِنْ مَكَانٍ بَعِيدٍ

அரபி மொழி அல்லாத குர்ஆனாக நாம் இதனை ஆக்கியிருப்போமாயின், அவர்கள், “ஏன் அந்த மொழியில் இது இறங்கி வந்தது?” என்று கூறியிருப்பார்கள்.  அது அரபி மொழியோ அல்லது அரபி மொழி அல்லாததோ,
“நம்பிக்கை கொண்டவர்களுக்கு, இது ஒரு வழிகாட்டலும்  மேலும் நிவாரணமும் ஆகும். நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு மிகத் தொலைவிலிருந்து சொற்பொழிவாற்றுவது போன்று, இதன் பால் அவர்கள் செவிடர்களாகவும் மற்றும் குருடர்களாகவும்  இருப்பார்கள்” என்று கூறுவீராக.

அல்-குர்ஆன் 41:44

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

ِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْءانَهُ

فَإِذَا قَرَأْنَهُ فَاتَّبِعْ قُرْءانَهُ

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

(முஹம்மதே) அதனை விரைவுபடுத்துவதற்காக உமது நாவை அசைக்காதீர்.
அதனைக் குர்ஆனாக ஒன்று சேர்க்க இருப்பது நாம்தான்.
நாம் அதனை ஓதிக்காட்டியவுடன், அத்தகைய குர்ஆனை நீர் பின்பற்ற வேண்டும்.
பின்னர் அதனை விளக்கிக்கூற இருப்பதும் நாமேதான்.

அல்-குர்ஆன் 75:16-19

ஹதீஸ் & சுன்னத்தை பின்பற்றுபவர்கள்
தங்களுடைய சொந்த போதனைகளையே

பின்பற்றுவதில்லை

ஹதீஸ் புத்தகங்களில் மிகவும் அதிகாரப்பூர்வமான முஸ்லிம் & இப்னு ஹம்பல் எனப்படுபவை, குர்ஆனைத்தவிர தன்னிடமிருந்து வேறு எதனையும் எவர் ஒருவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று நபி கட்டளையிட்டதாக தெரிவிக்கின்றது.

கீழே காட்டப்பட்டுள்ளது அந்த ஹதீஸின் அரபி மூலமாகும்.

“அபிசயித் அல் - குத்ரி - அவருடன் அல்லாஹ் பொருந்தி கொள்வாராக - அறிவிக்கின்றார், அல்லாஹ்வின் தூதர் - அல்லாஹ் அவரை மேன்மைப்படுத்துவாராக & அவருக்கு அமைதியை வழங்குவாராக - கூறினார், ‘என்னிடமிருந்து குர்ஆனைத்தவிர வேறு எதையும் எழுதாதீர்கள், எவரேனும் குர்ஆன் அல்லாத வேறு எதையேனும் எழுதி இருந்தால் அதை அழித்துவிட வேண்டும்”!!!

           

இவ்விதமாக, அவர்களுடைய சொந்த போதனைகளுக்கிணங்க,

அவர்களே நபிக்கு கீழ்படிவதில்லை

நம்பமுடியாத உண்மை
தங்களுடைய சொந்த போதனைகளை அவர்களே

பின்பற்றுவதில்லை

ஹதீஸின் மிகவும் “அதிகாரப்பூர்வமான” ஆதாரங்களின் படி நபி தன்னிடமிருந்து குர்ஆனை மட்டுமே எழுதுவது குறித்த அவருடைய மனதை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை.

 

(வெளிப்பாடுகளை (வஹி) எழுதுபவரும், நபிக்கு மிகவும் நெருக்கமானவருமான) ஜயித் இப்னு தாபித், (நபி மரணமடைந்து 30க்கும் அதிகமான ஆண்டுகள் கழித்து) கலீஃபா மூஆவியாவை சந்தித்து அவரிடம் நபியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். மூ’ஆவியா அந்த நிகழ்ச்சியை விரும்பியவராக அதை எழுதிக் கொள்ளுமாறு ஒருவரிடம் கட்டளையிட்டார். ஆனால் ஜயித், “அல்லாஹ்வின் தூதர் அவருடைய ஹதீஸ் எதையும் ஒரு போதும் எழுதக் கூடாது” என்று எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார் என்று கூறினார். (இப்னு ஹன்பல் மூலம் அறிவிக்கப்பட்டது)

தாங்களாக இட்டுக்கட்டிக் கொண்ட இணைக்கும்

அவர்கள் கீழ்படிவதில்லை !!

குர்ஆன்: தாங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும்

தங்களால் காணுகின்றதொரு “புத்தகத்தை”

அவர்கள் வைத்திருக்கின்றனரா?

முந்தைய பக்கத்தில் காட்டப்பட்டுள்ள ஹதீஸைக் கொண்டு ஹதீஸ் & சுன்னத்தைப் பின்பற்றுபவர்களை நீங்கள் எதிர்கொள்ளும் போது, இத்தகைய ஹதீஸ் இருப்பதை அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். தங்களுடைய சொந்த போதனைகளை பின்பற்ற தாங்களே தவறிவிட்டதை, தன்னுடைய ஹதீஸ்களை எழுதிக் கொள்ளும்படி நபி கட்டளையிட்டதாக சொல்லும் “நம்பகமான” ஹதீஸ்களும் சம அளவில் உள்ளன என்ற செய்தியின் மூலம் விளக்குவார்கள்!!

 

இத்தகைய மனிதர்களை “குற்றவாளிகள்” என்று குர்ஆன் விவரிக்கின்றது, மேலும் “தாங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும், தங்களால் காண முடிகின்றதொரு ‘புத்தகத்தை’ அவர்கள் வைத்திருக்கின்றனரா???” என்றும் கேட்கின்றது.

أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

أَمْ لَكُمْ كِتَبٌ فِيهِ تَدْرُسُونَ

إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

அடிபணிந்தவர்களைக் குற்றவாளிகளைப் போல் நாம் நடத்துவோமா?
உங்களுடைய நியாயத்தில் என்ன கோளாறு?
நீங்கள் பின்பற்றுவதற்கு வேறொரு புத்தகம் இருக்கின்றதா?
அதில், நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் நீங்கள் காண்கின்றீர்களா?

அல்-குர்ஆன் 68:35-38

“நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் உங்களால் காண முடிகின்றதொரு புத்தகமாக” என்கின்ற இந்த குர்ஆனிய விளக்கம் ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவற்றின் கற்பனையான மற்றும் முரண்பாடான இயல்பானது எல்லோராலும் அறியப்பட்டதாக இருக்கின்றது.

அவர்களுக்கு மிகவும் பிடித்தமான கேள்வி

“(அல்லாஹ் கூறுகின்றபடி) குர்ஆன் முழுமையானது மற்றும் முற்றிலும் விவரிக்கப்பட்டது என்றால், தொடர்புத் தொழுகைகளின் விவரங்களை நாம் எங்கே காண முடியும்?”

---------------------------------------------------------------------------------------------------------------------------

பிரபலமான இந்த கேள்வி, குர்ஆனைக் குறித்த அவர்களுடைய ஒட்டு மொத்த அறியாமையையும் மேலும் குர்ஆன் “முழுமையானதாகவும்”, “முற்றிலும் விவரிக்கப்பட்டதாகவும்” இருக்கின்றது என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்ற தன்னுடைய கூற்றில் கடவுள் தவறானவராக இருக்கின்றார் என்று நிரூபிக்க, முற்றிலும் உணராத நிலையில் அவர்கள் செய்கின்ற முயற்சியையும் வெளிப்படுத்துகின்றது.

---------------------------------------------------------------------------------------------------------------------------

ஏனெனில் இன்றைய தினம் நடைமுறையில் இருக்கும் இஸ்லாத்தின் ஸ்தாபகர் இப்ராஹிம் என்று குர்ஆன் மிக உறுதியாக போதிக்கின்றது. அவ்வாறெனில், முஸ்லிம்களாகிய நம்முடைய அன்றாட வாழ்விற்கு தன்னுடைய பங்களிப்பாக இப்ராஹிம் செய்தது என்ன?            

---------------------------------------------------------------------------------------------------------------------------

இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் (ஸலாத், ஜகாத், நோன்பு & ஹஜ்) இப்ராஹிமிடமிருந்து தலைமுறைக்கு பின் தலைமுறையாக நம்மிடம் வந்தன என்று குர் ஆன் போதிக்கின்றது.

---------------------------------------------------------------------------------------------------------------------------

இவ்விதமாக, இன்றைய தினம் நடைமுறையில் இருக்கும் இஸ்லாம். அதன் இறுதி வடிவில் இரண்டு விஷயங்களை அடைப்படையாக கொண்டுள்ளது.

(1) முஹம்மது மூலமாக கொடுக்கப்பட்ட “குர்ஆன்”, மேலும்
(2) இப்ராஹிம் மூலமாக கொடுக்கப்பட்ட “மார்க்க வழிபாட்டு முறைகள்”        

---------------------------------------------------------------------------------------------------------------------------

இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் முஹம்மதிற்கு முந்தியே இருந்தன.

---------------------------------------------------------------------------------------------------------------------------

முஹம்மதுடைய ஒரே பணி குர்ஆனை ஒப்படைப்பதாகவே இருந்தது (பக்கம் 39-44ஐப் பார்க்கவும்)

இப்ராஹிம் : இஸ்லாத்தின் ஸ்தாபகர்

இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகளை முதன் முதலில் பெற்றவரும், மேலும் “முஸ்லிம்” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவரும் இப்ராஹிம் ஆவார் (2:131ஐப் பார்க்கவும்).

 

وَجَهِدُوا فِي اللَّهِ حَقَّ جِهَادِهِ هُوَ اجْتَبَكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ مِلَّةَ أَبِيكُمْ إِبْرَهِيمَ هُوَ سَمَّكُمْ الْمُسْلِمينَ مِنْ قَبْلُ وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ فَأَقِيمُوا الصَّلَوةَ وَءاتُوا الزَّكَوةَ وَاعْتَصِمُوا بِاللَّهِ هُوَ مَوْلَكُمْ فَنِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ

நீங்கள் கடவுள்-ன் நிமித்தம் பாடுபட வேண்டியவாறு அவருக்காக நீங்கள் பாடுபட வேண்டும். அவர் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார் மேலும் உங்கள் தந்தை ஆப்ரஹாமின் மார்க்கமாகிய-உங்கள்  மார்க்கத்தைப் பின்பற்றுவதில் உங்கள் மீது எந்தச் சிரமத்தையும் அவர் வைக்கவில்லை. அவர்தான் துவக்கத்தில் உங்களுக்கு “அடிபணிந்தோர்” எனப் பெயரிட்டார். இவ்விதமாக, தூதர்  உங்களுக்கிடையில் ஒரு சாட்சியாகப் பணியாற்றிட வேண்டும், மேலும் நீங்கள் மக்களுக்கிடையில் சாட்சிகளாக பணியாற்றிட வேண்டும்.  ஆகையால், நீங்கள்  தொடர்புத் தொழுகைகளைக் (ஸலாத்) கடைப் பிடிக்கவும் மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்)  கொடுத்து வரவும், மேலும் கடவுள்-ஐப் பலமாகப் பற்றிக் கொள்ளவும் வேண்டும்; அவர்தான் உங்கள் இரட்சகர், மிகச்சிறந்த இரட்சகர், மேலும் மிகச்சிறந்த ஆதரவாளர்.

அல்-குர்ஆன் 22:78

 

இவ்விதமான, இஸ்லாத்தின் ஸ்தாபகர் இப்ராஹிம் என்றால், நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கைக்கு எதையேனும் அவர் கொடுத்திருக்கின்றாரா?

---------------------------------------------------------------------------------------------------------------------------

அதற்கான பதில்: “ஆம்; மார்க்க வழிபாட்டு முறைகளை (ஸலாத்,ஜகாத், நோன்பு, & ஹஜ்) அவர் கொடுத்திருக்கின்றார்.

இஸ்லாம் இப்ராஹிமின் மார்க்கமாக இருக்கின்றது.
முஹம்மதுடைய பணி, ஒரே பணி, குர்ஆனை ஒப்படைப்பதாக இருந்த அதே சமயம், மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் இப்ராஹிம் மூலமாகவே வந்தது.
وَقَالُوا كُونُوا هُودًا اوْ نَصَرَى تَهْتَدُوا قُلْ بَلْ مِلَّةَ اِبْرَهِمَ حَنِيفًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ

அவர்கள், “நீங்கள் வழிகாட்டப்பட வேண்டுமென்றால் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோ இருக்க வேண்டும்.” என்று கூறினார்கள். “நாங்கள் ஆப்ரஹாமின் மார்க்கத்தையே பின்பற்றுகின்றோம்-ஏகத்துவம்-அவர் ஒருபோதும் இணை தெய்வ வழிபாடு செய்தவராக இருக்கவில்லை” என்று கூறுவீராக.

அல்-குர்ஆன் 2:135

مَا كَانَ اِبْرَهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ

اِنَّ اوْلَى النَّاسِ بِابْرَهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ ءامَنُوا وَاللَّهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ

ஆப்ரஹாம் யூதராகவோ, அன்றி கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. அவர் ஒரு அடிபணிந்த ஏகத்துவ வாதியாகவே இருந்தார். அவர் ஒருபோதும் இணைவழிபாடு செய்பவராக இருந்ததில்லை.

 

ஆப்ரஹாமிடத்தில் மிகவும் மதிப்பிற்குரியவர்கள் அவரைப் பின்பற்றியோரும், இந்த வேதம் வழங்கப்பட்டவரும், (முஹம்மது), நம்பிக்கை கொண்டோருமே ஆவர்.   கடவுள் தான் நம்பிக்கையாளர்களின் இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார்.

அல்-குர்ஆன் 3:67-68

முஹம்மது இப்ராஹிமை பின்பற்றுகின்ற

ஒருவராக இருந்தார்
ثُمَّ أَوْحَيْنَا إِلَيْكَ أَنْ اتَّبِعْ مِلَّةَ إِبْرَهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ

பின்னர் நாம் (முஹம்மதே) உமக்கு ஏகத்துவ வாதியான, ஆப்ரஹாமின்* மார்க்கத்தைப் பின்பற்றும்படி உள்ளுணர் வூட்டினோம்; அவர் ஒரு போதும் இணைத்தெய்வங்களை வழி பட்டவராக இருந்ததில்லை.

அல்-குர்ஆன் 16:123

நியாயப்படி, இப்ராஹிமைப் பின்பற்றுகின்ற ஒருவராக முஹம்மது இருந்தார் என்றால், மேலும் முஹம்மதைப் பின்பற்றுகின்றவர்களாக நாம் இருக்கின்றோம் என்றால், அப்போது இப்ராஹிமைப் பின்பற்று கின்றவர்களாகத்தான் நாம் இருக்கின்றோம். இப்ராஹிமிடமிருந்து நாம் எதனைக் கற்றுக் கொண்டோம்???

நாம், இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தையும் இப்ராஹிமிடமிருந்தே கற்றுக் கொண்டோம் என்று குர்ஆன் போதிக்கின்றது. இதில் ஸலாத், ஜகாத், நோன்பு மற்றும் ஹஜ் ஆகியவை அடங்கும்.

ஆகையால், இஸ்லாம் இரண்டு விஷயங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

1. முஹம்மது மூலமாக : குர்ஆன்

2. இப்ராஹிம் வழியாக : மார்க்க வழிபாட்டு முறைகள்

முஹம்மதுடைய எதிரிகளாலும்

ஸலாத் கடைபிடிக்கப்பட்டது

முஹம்மதுடைய காலத்திற்கு முன்பும், மேலும் அவர் வாழ்ந்த காலத்திலும், முழு அரேபிய சமுதாயமும் இப்ராஹிமின் மார்க்கத்தை பின்பற்றியது. இவ்விதமாக, அபுலஹப், அபுஜஹ்ல் மற்றும் குரைஷி இனத்தைச் சேர்ந்த இணைத் தெய்வ வழிபாடு செய்தவர்களும் ஒரே ஒரு விதிவிலக்காக இப்ராஹிமின் பாத்திஹாவிற்காக குர்ஆனிய பாத்திஹாவை மாற்றியது தவிர மிகச் சரியாக, நாம் இன்று செய்வது போலவே ஐந்து வேளை தொடர்புத் தொழுகைகளையும் கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர்.

وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ

وَمَا لَهُمْ أَلَّا يُعَذِّبَهُمْ اللَّهُ وَهُمْ يَصُدُّونَ عَنْ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوا أَوْلِيَاءَهُ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَيْتِ إِلَّا مُكَاءً وَتَصْدِيَةً فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ

அவர்கள் மத்தியில் (முஹம்மதே) நீர் இருக்கும் போது   கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை; அவர்கள் மன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் நிலையில்   கடவுள் அவர்களைத் தண்டிப்பவராக இல்லை.

புனித மஸ்ஜிதின் பொறுப்பாளர்களாக அவர்கள் இல்லாத போதும், அதை விட்டும் மற்றவர்களைத் தடுத்துக் கொண்டிருப்பதனால்,  கடவுள்-ன் தண்டனைக்கு அவர்கள் தகுதியானவர்களாகி விட்டார்கள் அல்லவா? நன்னெறியாளர்களே அதன் உண்மையான பொறுப்பாளர்கள் ஆவார்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்.

(கஃபா) ஆலயத்தில் அவர்களின் தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) எல்லாம் பரிகாசம் செய்வதும், மேலும் மக்களை (நெருக்கடி செய்து வெளியில்) விரட்டும் ஒரு வழிமுறையாகவும் இருந்ததேயன்றி அதிகமாக எதுவுமில்லை.  ஆகையால்,
உங்களின் நம்பிக்கையின்மைக்கான தண்டனையை அனுபவியுங்கள்.

அல்-குர்ஆன் 8:33-35

முஹம்மதிற்கு முன்பே புனித மாதங்கள்

கடைபிடிக்கப்பட்டன

முஹம்மதுடைய காலத்திற்கு முன்பிருந்தே இஸ்லாத்தில் உள்ள நான்கு புனித மாதங்களும் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இது, இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் முஹம்மது நபியால் ஆரம்பிக்கப்பட்டதோ அல்லது கற்பிக்கப்பட்டதோ இல்லை என்பதை மேலும் நிரூபிக்கின்றது. அவருடைய ஒரே பணியாக குர்ஆனை ஒப்படைப்பது மட்டுமே இருந்தது.

إِنَّ عدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَبِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَوَتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

 

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِءوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَلِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَفِرِينَ

கடவுள்-ஐப் பொறுத்தவரை, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு* ஆகும். வானங்கள் மற்றும் பூமியை அவர் படைத்த நாள் முதல், இதுவே  கடவுள்-ன் சட்டமாக இருந்து வந்துள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே முழுமையான மார்க்கமாகும்; புனித மாதங்களின் போது (சண்டையிடுவதன் மூலம்) உங்கள் ஆன்மாக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. ஆயினும், அவர்கள் உங்களுக்கெதிராக முழுமையான போரை அறிவித்தால், (புனித மாதங்களின் போது கூட) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கெதிராக முழுமையான போரை நீங்களும் அறிவிக்கலாம், மேலும்   கடவுள் நன்னெறியாளர்களின் பக்கம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

புனித மாதங்களை மாற்றிக் கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளம் ஆகும்; நம்பமறுத்தவர்களின் வழிகேட்டை அது அதிகமாக்குகின்றது. கடவுள் - ஆல் புனிதமாக்கி வைக்கப்பட்ட மாதங்களின் எண்ணிக்கையை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, அவர்கள் புனிதமாதங்களையும் வழக்கமான மாதங்களையும் மாற்றிக் கொள்கின்றனர்.   கடவுள் புனிதமாக்கியதை இவ்வாறு அவர்கள் மீறுகின்றார்கள். அவர்களின் தீமையான காரியங்கள் அவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன.கடவுள் நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.

அல்-குர்ஆன் 9:36-37

            இன்றைய இணைதெய்வ வழிபாடு செய்பவர்களும், குரைஷிய இணை தெய்வ வழிபாடு செய்பவர்களும் எதிரெதிரில் இன்றைய தினம், கோடிக்கணக்கான “முஸ்லிம்களால்” செயல்படுத்தப்படும் இணைத்தெய்வ வழிபாட்டின் ஒரு வகையானது, முஹம்மதிற்கு முந்தைய குரைஷிகளால் செயல்படுத்தப்பட்ட இணைத் தெய்வ வழிபாட்டைப் போன்றதாகவே இருக்கின்றது.

            எகிப்து, ஈரான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான “முஸ்லிம்கள்” தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு செல்கின்றனர். அவர்களுடைய தொடர்பு தொழுகைகள் நிச்சயமாக கடவுளுக்கு உரியதாக இருக்கின்றது. தங்களுடைய தொடர்பு தொழுகையை முடித்த பிறகு, அவர்கள் புனிதர்களின் சமாதிகளுக்கு சென்று, ஆரோக்கியத்திற்காகவும், செல்வத்திற்காகவும், மற்றும் குழந்தைகளுக் காகவும் அவர்களிடம் கேட்கின்றனர்.

            மிகச்சரியாக, நாம் இப்பொழுது செய்வது போலவே, ஐந்து வேளை   தொடர்புத் தொழுகைகளையும் குரைஷிய இணை தெய்வ வழிபாடு செய்தவர்களும் கடைபிடித்தனர். ஆனால் அவர்களும் ஆரோக்கியத்தை, செல்வத்தை மற்றும் குழந்தைகளை கேட்பதற்காக தங்களுடைய இணை தெய்வங்களான அல்லாத், அல்-உஸ்ஸாஹ், மனாத் போன்றவைகளிடம் செல்பவர்களாக இருந்தனர்.

     இவ்விதமாக, இன்றைய தினம் கோடிக்கணக்கான முஸ்லிம்களால் செயல்படுத்தப்படும் வெளிப்படையான இணை தெய்வ வழிபாடானது முஹம்மதிற்கு முன்பும், மேலும் அவருடைய காலத்திலும் குரைஷியர்கள் செய்த இணை தெய்வ வழிபாட்டிற்கு எல்லா வகையிலும் ஒத்ததாகவே இருக்கின்றது; இணை தெய்வங்கள் மட்டுமே மாறுபடுகின்றன.

           யூத மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினரைத் தவிர, முஹம்மதுடைய தூதுப் பணிக்கு முந்தைய அரேபிய சமுதாயம், இப்ராஹிமின் மார்க்கத்தையே பின்பற்றியது. அவர்கள் இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தையும் கடைபிடித்தனர். அவர்களுடைய தொடர்புத் தொழுகைகள் நம்முடைய தொடர்புத் தொழுகைகள் போன்றே இருந்தன, ஆனால் அவர்கள் இணை தெய்வ வழிபாட்டையும் சேர்த்து செயல்படுத்தினர். இன்றைக்கு பெரும்பாலான “முஸ்லிம்கள்” நபியை, அவருடைய விருப்பத்திற்கு எதிராக இணை தெய்வ வழிபாடு செய்வதன் மூலமும், தங்களுடைய மகான்கள் மற்றும் புனிதர்கள் அல்லது இமாம்கள் ஆகியோரை இணை தெய்வ வழிபாடு செய்வதன் மூலமும், மேலும் குர்ஆனுடன் மற்ற ஆதாரங்களை பின்பற்றுவதன் மூலமும் இணை தெய்வ வழிபாட்டை செயல்படுத்துகின்றனர்.  

“நீங்கள் ஸலாத்தை கடைபிடிப்பதை தொடர்ந்திட வேண்டும்”

இந்த கட்டளையானது குர்ஆனிய வெளிப்பாடுகள் வெளிப்படத் துவங்கி சில வாரங்களுக்குள் பிறப்பிக்கப்பட்டது.

 

ஏற்கனவே அறியப்படாத ஒன்றை கடைப்பிடிக்கும்படியான ஒரு கட்டளையை அல்லாஹ் வெளியிட்டிருப்பார் என்பது அறிவிற்கு பொருத்தமாக இருக்கின்றதா???
 وَأَقِيمُوا الصَّلَوةَ وَءاتُوا الزَّكَوةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

மேலும்  தொடர்புத் தொழுகைகளை  (ஸலாத்) கடைப் பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் நன்னெறியெனும் ஒரு கடனைக் கடவுள்-க்கு கடனளிக்கவும் வேண்டும். உங்களுடைய ஆன்மாக்களுக்காக நீங்கள் முற்படுத்தி அனுப்பி வைக்கின்ற நல்லது எதுவாயினும், அதனை மிகச் சிறந்ததாகவும் தாராளமாக வெகுமதியளிக் கப்பட்டதாகவும் கடவுள்-இடம் நீங்கள் காண்பீர்கள். மேலும் பாவமன்னிப்பிற்காக கடவுள்-இடம் இறைஞ்சிப் பிரார்த்தியுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

அல்-குர்ஆன் 73:20

 

“ஸலாத்” எனும் வார்த்தை மிகவும் பிரத்யேகமானதாகவும் மேலும் ஒரே ஒரு விஷயத்தை குறிப்பதாகவும் இருக்கின்றது. அதாவது, குனிதலையும், சிரம் பணிதலையும் உள்ளடக்கிய பிரத்யேகமான வழிபாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுதலைக் குறிப்பிடுகின்றது. குர்ஆன் முழுவதிலும், யுகங்கள் முழுவதிலும் மேலும் எந்த நபி, தூதர் போன்றோரின் வழிபாட்டு முறைகளிலும் இதுவே உண்மையாக இருக்கின்றது.

இஸ்லாத்திலுள்ள மார்க்க வழிபாட்டு முறைகள்

அனைத்தும் (ஸலாத் ஜகாத் நோன்பு ஹஜ்)

இப்ராஹிம் மூலமாகவே நமக்கு வந்தது         
2:128ல் இப்ராஹிமும், இஸ்மாயிலும் “இஸ்லாத்தின் மார்க்க வழிபாட்டு முறைகளை” தங்களுக்கு கற்றுத்தருமாறு அல்லாஹ்வை இறைஞ்சி பிரார்த்திப்பதை நாம் காண்கின்றோம்

 

وَاِذْ يَرْفَعُ اِبْرَهِمُ الْقَوَاعِدَ مِنْ الْبَيْتِ وَاِسْمَعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ انْتَ السَّمِيعُ الْعَلِيمُ

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا اُمَّةً مُسْلِمَةً لَكَ وَارِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا اِنَّكَ انْتَ التَّوَّابُ الرَّحِيمُ

(கஃபா) புண்ணியஸ்தலத்தின் அஸ்திவாரங்களை உயர்த்திய படியே, ஆப்ரஹாம் இஸ்மவேலுடன் இணைந்து (அவர்கள் பிரார்த்தித்தனர்): “எங்கள் இரட்சகரே, எங்களிடமிருந்து இதனை ஏற்றுக்கொள்வீராக நீர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.


“எங்கள் இரட்சகரே, உம்மிடம் அடிபணிந்தவர்களாக எங்களை ஆக்குவீராக, மேலும் எங்களுடைய சந்ததியிலிருந்தும், உமக்கு அடிபணிந்தவர்களின் ஒரு சமூகம் இருக்கும்படி செய்வீராக. எங்கள் மார்க்கச் சடங்குகளை எங்களுக்கு கற்றுத் தருவீராக. மேலும் எங்களை மீட்டுக்கொள்வீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.

அல்-குர்ஆன் 2:127-128

இப்ராஹிம் : பிரத்யேகமான மார்க்க வழிபாட்டு

முறைகளை முதலாவதாக (இறுதியாகவும்) பெற்றவர்

இப்ராஹிமிற்கு முந்தைய நபிமார்களுக்கும், தூதர்களுக்கும் எந்த மார்க்க வழிபாட்டு முறைகளும் வழங்கப்பட்டிருக்கவில்லை. மனித சமுதாயம் மிகவும் பழமையானதாக இருந்த காலம் அது. கடவுள் மட்டும் என்பதில் கொள்கின்ற நம்பிக்கை மட்டுமே மீட்சிக்கு தேவையான அனைத்துமாக இருந்தது. உதாரணத்திற்கு “நூஹ்” என்ற தலைப்பையுடைய சூரா 71ஐப் பார்க்கவும். இவ்விதமாக, குர்ஆனில் காணப்படுகின்ற மார்க்க வழிபாட்டு முறைகள் இப்ராஹிமிற்கு பிந்தியதே தவிர ஒருபோதும் அவருக்கு முந்தியது அல்ல.
وَاقِيمُوا الصَّلَوةَ وَ ءاتُوا الزَّكَوةَ وَارْكَعُوا مَعَ الرَّكِعِينَ

(இஸ்ராயிலின் சந்ததியினரே) நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்க வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சேர்ந்து குனிந்து வழிபட வேண்டும்.

அல்-குர்ஆன் 2:43

وَاِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَامْنًا وَاتَّخِذُوا مِنْ مَقَامِ اِبْرَهِمَ مُصَلًّى وَعَهِدْنَا اِلَى اِبْرَهِمَ وَاِسْمَعِيلَ انْ طَهِّرَا بَيْتِي

لِلطَّائِفِينَ وَالْعَكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

நாம் புண்ணிய ஸ்தலமாகிய (கஃபாவை) மக்களுக்காக ஒரு கூடுமிடமாகவும் மேலும் ஒரு பாதுகாப்பான புகலிடமாகவும் ஆக்கினோம். நீங்கள் ஆப்ரஹாமின் புண்ணிய ஸ்தலத்தை ஒரு வழிபாட்டு ஸ்தலமாக உபயோகிக்கலாம்.  நாம் ஆப்ரஹாம் மற்றும் இஸ்மவேலிடம் என்னுடைய வீட்டை நீங்கள் அங்கு வருபவர்களுக்காகவும், அங்கு வசிப்பவர்களுக்காகவும், மேலும் குனிபவர்கள் மற்றும் சிரம்பணிபவர்களுக்காகவும் சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டோம்.

அல்-குர்ஆன் 2:125

ஸலாத் தொழுகைகள் முஹம்மதிற்கு முன்னரே

கடைபிடிக்கப்பட்டது

ஆயினும் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஸலாத் தொழுகைகளை “தொலைத்தனர்”.
يَمَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّكِعِينَ

.“மேரியே, உம்முடைய இரட்சகருக்கு நீர் அடிபணிய வேண்டும், மேலும் குனிந்து வழிபடுவோருடன் சிரம்பணிந்தும், குனிந்தும் வழிபட வேண்டும்.”

அல்-குர்ஆன் 3:43

وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَنِي بِالصَّلَوَةِ وَالزَّكَوَةِ مَا دُمْتُ حَيًّا

“நான் செல்லுமிடமெல்லாம் அருள்பாலிக்கப்பட்டவராக என்னை அவர் ஆக்கியுள்ளார், மேலும் நான் வாழும் காலமெல்லாம் என்னைத் தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) நிறைவேற்றக் கட்டளையிட்டுள்ளார் (என்று இயேசு கூறினார்).

அல்-குர்ஆன் 19:31

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَوةَ وَاتَّبَعُوا الشَّهَوَتِ

அவர்களுக்குப் பின்னர், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொலைத்து விட்ட, மேலும் தங்களுடைய காம இச்சையைப் பின்பற்றிய தலைமுறையினரை அவர் மாற்றியமைத்தார். அதன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்.

அல்-குர்ஆன் 19:59

யூதர்கள், அதாவது சமேரியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையில் ஸலாத் தொழுகைகளின் மிச்சமீதங்கள் உள்ளன (ரஷ்யன் ஆர்தோடக்ஸ் சர்ச்). சமேரிய யூதர்கள் தால்மூதில் உள்ள மனிதர்களால் இயற்றப்பட்ட கட்டளைகளை பகிரங்கமாக கண்டனம் செய்து விட்டு, மேலும் அல்லாஹ்வின் வார்த்தையை மட்டும், அதாவது தவ்ராத்தை மட்டும் பற்றிக் கொள்வதென தீர்மானித்தது கவனிக்கத் தக்கதாக இருக்கின்றது (“தி மித் ஆஃப் காட் இன்கார்னேட்”

ஸலாத் & ஜகாத் இப்ராஹிம் வழியாகவே  நமக்கு வந்தது

(“*6:19, 38 & 114ல் கூறப்பட்டுள்ளபடி) குர்ஆன் முழுமையானது மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது என்றால் ஸலாத் மற்றும் ஜகாத்தின் விவரங்களை நாம் எங்கே காண்பது?” என்று கேட்பதன் மூலம், அல்லாஹ்வை நம்ப மறுப்பவர்கள் குர்ஆனிற்கு சவால் விடுபவர்களாக இருக்கின்றனர். தெள்ளத் தெளிவாக குர்ஆனை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இத்தகைய மனிதர்களுக்காக (18:57ஐப் பார்க்கவும்) பின்வரும் குர்ஆனிய உண்மையை நாங்கள் வழங்குகின்றோம்:

وَوَهَبْنَا لَهُ إِسْحَقَ وَيَعْقُوبَ نَافِلَةً وَكُلًّا جَعَلْنَا صَلِحِينَ

وَجَعَلْنَهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَتِ وَإِقَامَ الصَّلَوةِ وَإِيتَاءَ الزَّكَوةِ وَكَانُوا لَنَا عَبِدِينَ

“மேலும் ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் ஒரு பரிசாக நாம் அவருக்கு (ஆப்ரஹாம்) அளித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நன்னெறியாளர்களாக நாம் ஆக்கினோம்.


நம்முடைய கட்டளைகளுக்கேற்ப வழிநடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்னெறியான செயல்கள் செய்வது எப்படி என்பதையும், தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும்  கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக்  கற்றுக் கொடுத்தோம்.

அல்-குர்ஆன் 21:72-73        

துர்பாக்கியமாக, குர்ஆன் முழுமையானது அல்ல என்று நிரூபிப்பதற்காக தொடர்ந்து முயன்று வருபவர்களால் தெளிவான இந்த குர்ஆனிய உண்மையை அணுக முடிவதில்லை.

 

முதலில், அவர்கள் குர்ஆன் முழுமையானது, மிகச் சரியானது மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது என்பதை கபடமின்றி, உறுதியாக நம்ப வேண்டும், அவர்கள் தங்களுடைய இரட்சகரை நம்ப வேண்டும். இந்த உறுதியான நம்பிக்கையை அவர்கள் அடைந்து விட்டால், அவர்களுடைய இதயங்களை சுற்றிலுமுள்ள கவசங்கள் நீக்கப்படும், அவர்களுடைய காதுகளிலிருந்து செவிட்டுத்தனம் நீக்கப்படும், பின்னர் அவர்கள் குர்ஆனிய உண்மையை உணரும் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

நோன்பு இப்ராஹிம் வழியாகவே நமக்கு வந்தது

(பின்னர் குர்ஆனில், அதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது)

اُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ اِلَى نِسَايْكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَانْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللَّهُ انَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ انفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالءنَ بَشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمْ الْخَيْطُ الْابْيَضُ مِنْ الْخَيْطِ الْاسْوَدِ مِنْ الْفَجْرِ ثُمَّ اتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ وَلَا تُبَشِرُوهُنَّ وَانْتُمْ عَكِفُونَ فِي الْمَسَجِد¯ِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ ءايَتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ

நோன்பு கால இரவுகளின் போது உங்கள் மனைவியருடன் தாம்பத்ய உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் படுகின்றது. அவர்கள் உங்களின் இரகசியங்களைப் பேணிக்காப்பவர்கள், நீங்கள் அவர்களின் இரகசியங்களை பேணிக்காப்பவர்கள். (இரவு நேரங்களில் தாம்பத்ய உறவு கொள்வதன் மூலம்) நீங்கள் உங்களின் ஆன்மாக்களுக்கு துரோகமிழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்பதைக்   கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவர் உங்களை மீட்டுக் கொண்டார், மேலும் உங்களைப் பொறுத்துக் கொண்டார். இனிமேல்  கடவுள் உங்களுக்கு அனுமதித்ததைத் தேடியவர்களாக, நீங்கள் அவர்களுடன் தாம்பத்ய உறவு கொள்ளலாம்....

அல்-குர்ஆன் 2:187ன் ஒரு பகுதி

 

ஆகையால், முஹம்மதிற்கு முன்பே, இப்ராஹிமின் மார்க்கத்திற்கு (இஸ்லாம்) இணங்க நோன்பு கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பதை இந்த வசனம் நமக்கு தெளிவாக அறிவிக்கின்றது.

துவக்கத்தில் இப்ராஹிம் மூலமாக நோன்பு கட்டளையிடப்பட்ட போது, நோன்பு வைக்கின்ற ரமலான் மாதம் முழுவதும் இரவிலும், பகலிலும் தாம்பத்ய உறவு தடை செய்யப்பட்டிருந்தது.

(ஹஜ்) இப்ராஹிம் வழியாகவே நமக்கு வந்தது                 

இந்த வசனம் ஸலாத் தொழுகையின் வழிமுறையையும் (குனிதல் & சிரம் பணிதல்) காட்டுவதை தயவு செய்து கவனிக்கவும் :

وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَهِيمَ مَكَانَ الْبَيْتِ أَنْ لَا تُشْرِكْ بِي شَيْءا وَطَهِّرْ بَيْتِي لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ

 

وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ

புனிதப்பள்ளியை நிர்மாணிக்க ஆப்ரஹாமை நாம் நியமித்தோம்: “ என்னுடன் வேறு எந்தத் தெய்வத்தையும் நீர் இணையாக வழிபட வேண்டாம், என்னுடைய புனிதப் பள்ளியை, அதனைத் தரிசிக்க வருவோருக்காகவும், அதன் அருகில் வசிப்போருக்காகவும், மேலும் குனிவோர் மற்றும் சிரம் பணிவோருக்காகவும் தூய்மைப்படுத்துவீராக.
“மேலும் மக்கள் ஹஜ் புனிதயாத்திரை* மேற் கொள்ளவேண்டுமெனப் பிரகடனம்செய்வீராக.  அவர்கள் உம்மிடம் நடந்தவர்களாக அல்லது களைத்துப்போன பல்வேறு (போக்குவரத்து சாதனங்கள் மீது) சவாரி செய்தவர்களாக  வருவார்கள். மிகத் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து அவர்கள் வருவார்கள்.”

அல்-குர்ஆன் 22:26-27

இவ்விதமாக, இஸ்லாத்திலுள்ள மார்க்க வழிபாட்டு முறைகள் அனைத்தும் (ஸலாத், ஜகாத், நோன்பு & ஹஜ்) இப்ராஹிம் வழியாகவே நமக்கு வந்தன என்று குர்ஆன் தெளிவாகப் போதிக்கின்றது.

ஸலாத், ஜகாத், நோன்பு & ஹஜ் ஆகியவற்றை எவ்வாறு செய்வது என்பதை இப்ராஹிமிற்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததாக குர்ஆன் போதிக்கின்றது, பின்னர் இந்தப் பயிற்சிகளை தன்னுடைய பிள்ளைகளுக்கு இப்ராஹிம் கற்றுக் கொடுத்தார், மேலும் இவ்வாறே தலைமுறை தலைமுறையாக கற்பிக்கப்பட்டுவருகின்றது.

ஆயினும் அவர்கள் பிடிவாதமாயிருக்கின்றார்கள்

கடவுளை நம்பாதவர்களிடம், இந்த குர்ஆனிய சான்றுகள் அனைத்தையும் காட்டிய பிறகும் கூட அவர்கள், தங்களுடைய பாதைகளையே வலியுறுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள். இவை அனைத்திற்கு பிறகும் அவர்கள் “ஸலாத் தொழுகைகளின் விபரங்கள் குர்ஆனில் எங்கே உள்ளது?” என்று உங்களிடம் கேட்டால் அதிர்ச்சி அடையாதீர்கள்.

தங்களைப் படைத்தவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுகின்ற, “குர்ஆன் முழுமையானது” என்ற அவருடைய கூற்றுகளின் மீது நம்பிக்கை கொள்ளாதவரை, அவர்களால் குர்ஆனிய உண்மையை ஒரு போதும் காண இயலாது. இது ஆதாரத்துடன் கீழே காட்டப்பட்டுள்ளது.

குர் ஆனை நம்ப மறுப்பதன் விளைவுகள்
குர்ஆனை பார்ப்பதை விட்டும், கேட்பதை விட்டும், அல்லது புரிந்து கொள்வதைவிட்டும் விலக்கி வைக்கப்படுதல். இவ்விதமாக, வழிகாட்டுதல் சாத்தியமற்றதாகி விடுகின்றது.
وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِءايَتِ رَبِّهِ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِيَ مَا قَدَّمَتْ يَدَاهُ إِنَّا جَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي ءاذَانِهِمْ وَقْرًا وَإِنْ تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَنْ يَهْتَدُوا إِذًا أَبَدًا

தங்கள் இரட்சகரின் சான்றுகளால் நினைவூட்டப்பட்டு, பின்னர் தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ளாது, அவற்றைப் புறக்கணிப்பவர்களை விட மிகத் தீயவர்கள் யார்? அதன் விளைவாக, இதனை (இந்தக் குர்ஆனை) புரிந்து கொள்வதை விட்டும் அவர்களை தடுப்பதற்காக அவர்களுடைய இதயங்களின் மீது கவசங்களையும், மேலும் அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். இதனால், அவர்களை வழிநடத்துவதற்காக நீர் என்ன செய்கின்றீர் என்பது பொருட்டல்ல, அவர்கள் ஒருபோதும் எக்காலத்திலும் வழி நடத்தப்படமாட்டார்கள்.

அல்-குர்ஆன் 18:57

வாழ்க்கையின் இரண்டு துர்பாக்கியமான உண்மைகள்

(1) மனிதர்களில் பெரும்பாலோர் நம்ப மறுப்பவர்களாக இருக்கின்றனர்.

(2) நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் நரகத்திற்கு செல்பவர்களாக இருக்கின்றனர்

وَمَا اكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِينَ

இருக்கின்றனர்மனிதர்களில் பெரும்பாலோர், நீர் என்ன செய்த போதிலும் சரியே, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

அல்-குர்ஆன் 12:103

وَمَا يُؤْمِنُ اكْثَرُهُمْ بِاللَّهِ اِلَّا وَهُمْ مُشْرِكُونَ

கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பாலோர், இணை வழிபாட்டைச் செயல்படுத்திய வண்ணமே அன்றி அதைச் செய்வதில்லை.

அல்-குர்ஆன் 12:106

இவ்விதமாக, நீங்கள் பெரும்பான்மையினருடன் இருந்தால், நீங்கள் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கின்றீர்கள்.


நம்பிக்கை கொண்டவர்களில் பெரும்பான்மையினருடன் நீங்கள் இருந்தாலும் கூட அப்போதும் நீங்கள் மிகப் பெரிய ஆபத்தில் தான் இருக்கின்றீர்கள்.

 

அல்லாஹ்வை மட்டும் வழிபடுபவர்கள் மிகவும் அரிதானவர் களாகவும், மேலும் பெரும் பாக்கியம் பெற்ற பிரிவினராகவும் இருக்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினரிலும் சிறுபான்மையினராக இருக்கின்றனர்.

பிரச்சினை என்னவென்றால்; அவர்கள் தங்களை

நன்னெறியாளர்கள் என எண்ணுகின்றனர்

وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَنًا فَهُوَ لَهُ قَرِينٌ

 

وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنْ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ

எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*


அத்தகைய கூட்டாளிகள் அவர்களை பாதையிலிருந்து   திசை திருப்பி விடுவார்கள், இருப்பினும் அவர்கள் வழிகாட்டப்பட்டவர் களாகவே இருக்கின்றனரென நம்பும்படி செய்து விடுவார்கள்.

அல்-குர்ஆன் 43:36-37

قُلْ امَرَ رَبِّي بِالْقِسْطِ وَاقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَاكُمْ تَعُودُونَ

فَرِيقًا هَدَى وَفَرِيقًا حَقَّ عَلَيْهِمْ الضَّلَلَةُ انَّهُمْ اتَّخَذُوا الشَّيَطِينَ اوْلِيَاء مِنْ دُونِ اللَّهِ وَيَحْسَبُونَ انَّهُمْ مُهْتَدُونَ

“என் இரட்சகர் நீதத்தையும், மேலும் ஒவ்வொரு வழிபாட்டுத்தலத்திலும் அவருக்கு மட்டும் அர்ப்பணித் தவர்களாக நிற்பதையுமே ஆதரிக்கின்றார். நீங்கள் உங்களுடைய வழிபாட்டைப் பரிபூரணமாக அவருக்கு மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும். உங்களை அவர் துவக்கிய வண்ணமே, நீங்கள் இறுதியில் அவரிடம் திரும்பிச் செல்வீர்கள்”  என்று கூறுவீராக.


சிலரை அவர் வழிநடத்தினார், அதே சமயம் மற்றவர்களை வழிதவறும்படிச் செய்தார். அவர்கள்  கடவுள்-ஐ விடுத்து, சாத்தான்களைத் தங்கள் எஜமானர்களாக எடுத்துக் கொண்டனர், இருப்பினும் தாங்கள் வழிநடத்தப்பட்டதாகவே அவர்கள் நம்புகின்றனர்.

அல்-குர்ஆன் 7:29-30

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَلًا

الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَوةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا

கூறுவீராக, “மோசமான நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்குக் கூறட்டுமா?


“இந்த வாழ்வில் எவர்களுடைய காரியங்கள் முற்றிலும் வழிதவறியதாக இருந்தபோதிலும், தாங்கள் நல்ல காரியங்கள் செய்வதாகவே எண்ணிக் கொண்டிருக்கின்றார்களே அவர்கள் தான்.”

அல்-குர்ஆன் 18:103-104

தங்களுடைய இணை தெய்வ வழிபாட்டை

அறியாதிருக்கின்றனர்.

“நம்பிக்கையாளர்களில்” பெரும்பாலோர் இணை தெய்வ வழிபாட்டில், அதனை உணராமலேயே விழுகின்றனர்; தாங்கள் இணை தெய்வ வழிபாடு செய்பவர்கள் என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ نَقُولُ لِلَّذِينَ أَشْرَكُوا أَيْنَ شُرَكَاؤُكُمْ الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ

ثُمَّ لَمْ تَكُنْ فِتْنَتُهُمْ إِلَّا أَنْ قَالُوا وَاللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ

انظُرْ كَيْفَ كَذَبُوا عَلَى أَنفُسِهِمْ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ

நாம், அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் அந்த (தீர்ப்பு நாளில்) நாளில், “ “நீங்கள் உருவாக்கிய இணைத் தெய்வங்கள் எங்கே?” என்று இணைவைத்து வணங்குபவர்களிடம் நாம் கேட்போம்.
அவர்களுடைய விபரீதமான பதில்,” எங்கள் இரட்சகராகிய   கடவுள்-ன் மீது ஆணையாக நாங்கள் இணைவைத்து வழிபடுபவர்களாக* ஒரு போதும் இருந்ததில்லை” என்பதாகத்தான் இருக்கும்.
அவர்கள் எவ்வாறு தங்களிடமே பொய் கூறிக்கொண்டார்கள் என்பதையும் மேலும் எவ்வாறு அவர்கள் கண்டுபிடித்த இணை தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விடுகின்றன என்பதையும் கவனியுங்கள்.

அல்-குர்ஆன் 6:22-24

இவ்விதமாக, தாங்கள் இணை தெய்வ வழிபாடு செய்கின்றோம் என்பதை அறியாமலேயே இணைதெய்வ வழிபாடு செய்கின்ற மனிதர்களும் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்க முடியுமா? அவர்களில் ஒருவராக நீங்கள் இல்லை என்பதை எவ்வாறு நீங்கள் அறிவீர்கள்? நீங்கள் ஒரு இணை தெய்வ வழிபாடு செய்பவர் அல்ல என்பதை ஆராய்ந்து அறிந்திட இதுதான் உங்களுக்கான ஒரே வாய்ப்பாக இருக்கின்றது.


நீங்கள் ஒரு இணை தெய்வ வழிபாடு செய்பவர் அல்ல என்பதை எவ்வாறு நீங்கள் ஆராய்ந்து அறிந்திட இயலும்?

இதற்கான பதில் பக்கம் 70-ல் உள்ளது.

 

ஹதீஸ் மற்றும் சுன்னத்தின் முக்கியத்துவம்

 

போலியான முஸ்லிமிடமிருந்து உண்மையான முஸ்லிமை அடையாளம் காணுவதற்கு அவசியமான சோதனையை “ஹதீஸ் & சுன்னத்” அமைக்கின்றது என்று குர்ஆன் போதிக்கின்றது.


உண்மையான முஸ்லிம் அல்லாஹ்வை, குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது, மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது (6:19, 38 & 114) என்கின்ற அவருடைய கூற்றுகளில் நம்புகின்றார். அதன் விளைவாக, மார்க்க வழிகாட்டுதலுக்காக வேறு எந்த ஆதாரத்தையும் அந்த உண்மையான முஸ்லிம் ஏற்கமாட்டார்.

 

போலியான முஸ்லிமைப் பொறுத்தவரை, ஆணோ அல்லது பெண்ணோ “ஹதீஸ் & சுன்னத்தின்” பால் ஈர்க்கப்பட்டவராக இருப்பார், மேலும் நம்பிக்கையை கூறிக் கொண்டும் அதே சமயம் இதயத்திற்குள் மறுத்துக் கொண்டும் இருப்பவர்கள் இவ்விதமாக ஒரு நயவஞ்சகராக வெளிப்படுத்தப்படுகின்றார் (16:22ஐப் பார்க்கவும்).

وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ

 

وَلِتَصْغَى إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ

நாம் ஒவ்வொரு வேதம் வழங்கப்பட்டவரின் எதிரிகளையும் - மனிதர்களில் மற்றும் ஜின்களில் உள்ள சாத்தான்களை-ஏமாற்றிக் கொள்ளும் பொருட்டு, ஒருவருக்கொருவர் அலங்காரமான வார்த்தைகளால் ஊக்கம் அளித்துக் கொள்ள அனுமதித்தோம். உங்களுடைய இரட்சகர் நாடியிருந்தால், அவர்கள் இதனைச் செய்திருக்க மாட்டார்கள். (ஆனால் இது தான் கடவுளின் நாட்டமாக இருக்கின்றது).


இது மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் மனங்கள் இத்தகைய இட்டுக்கட்டல்களில் கவனம் செலுத்தி மேலும் அவைகளை ஏற்றுக் கொண்டு இன்னும் இவ்விதமாக அவர்களு டைய உண்மையான திடநம்பிக்கைகளை* வெளிப்படுத் துவதற்காகவே ஆகும்.

அல்-குர்ஆன் 6:112-113

குர்ஆனைக் கொண்டு நீங்கள் திருப்தி அடைகின்றீர்களா? நீங்கள் அல்லாஹ்வை நம்புகின்றீர்களா? அல்லது, குர்ஆன் முழுமையானதாக இல்லை என்று நீங்கள் உணர்கின்றீர்களா; அதாவது மார்க்க வழிகாட்டுதலுக்கு கூடுதலான ஆதாரங்கள் உங்களுக்கு தேவைப்படுகின்றதா?

நம்பத்தக்கதொரு “ஹதீஸ்”

தீர்ப்பு நாளன்று முஹம்மது, அவருடைய எதிரிகளால் இட்டுக்கட்டப்பட்டவைகளுக்கு (ஹதீஸ் & சுன்னத்) ஆதரவாக, அவரைப் பின்பற்றியவர்கள், குர்ஆனை கைவிட்டு விட்டனர் என்று புகார் கூறுவதில் முதலாவதாக இருப்பார்.

وَقَالَ الرَّسُولُ يَرَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْءانَ مَهْجُورًا

وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنْ الْمُجْرِمِينَ وَكَفَى بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا

தூதர்*, “என் இரட்சகரே, என் சமூகத்தார் இந்தக் குர்ஆனைக் கைவிட்டு விட்டார்கள்” என்று கூறுவார்.
வேதம் வழங்கப்பட்டவர் ஒவ்வொருவருக்கும் எதிராக குற்றவாளிகளிலிருந்து விரோதிகளையும் நாம் அமைக் கின்றோம். ஒரு வழிகாட்டியாகவும், ஓர் எஜமானராகவும் உம்முடைய இரட்சகர் போதுமானவர் (அதாவது குர்ஆன் போதுமானதாக இருக்கின்றது).

அல்-குர்ஆன் 25:30-31

மேலே காட்டப்பட்டுள்ள 25:31ற்கும், முந்தைய பக்கத்தில் காட்டப்பட்டுள்ள 6:112ற்கும் இடையில் உள்ள வார்த்தைக்கு வார்த்தை ஒற்றுமையை கவனியுங்கள். இது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியுமா?

 

இவ்விதமாக, எவ்வாறு இயேசு, தன்னை கடவுளாக அல்லது கடவுளின் மகனாக கருதுகின்ற கிறிஸ்தவர்களைக் கொண்டு ஏமாற்றமடைவாரோ, அதே போல் முஹம்மதும் தன்னை அளவிற்கதிகமாக நேசிக்கின்றவர்களைக் கொண்டு ஏமாற்றமடைவார்.

குர்ஆன் : சட்டப்பூர்வமான ஒரே “ஹதீஸ்”

تِلْكَ ءايَتُ اللَّهِ نَتْلُوهَا عَلَيْكَ بِالْحَقِّ فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَ اللَّهِ وَءايَتِهِ يُؤْمِنُونَ

وَيْلٌ لِكُلِّ أَفَّاكٍ أَثِيمٍ

يَسْمَعُ ءايَتِ اللَّهِ تُتْلَى عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ

وَإِذَا عَلِمَ مِنْ ءايَتِنَا شَيْءا اتَّخَذَهَا هُزُوًا أُوْلَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ

مِنْ وَرَائِهِمْ جَهَنَّمُ وَلَا يُغْنِي عَنْهُمْ مَا كَسَبُوا شَيْءا وَلَا مَا اتَّخَذُوا مِنْ دُونِ اللَّهِ أَوْلِيَاءَ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ

هَذَا هُدًى وَالَّذِينَ كَفَرُوا بِءايَتِ رَبِّهِمْ لَهُمْ عَذَابٌ مِنْ رِجْزٍ أَلِيمٌ

இவை, நாம் உமக்கு எடுத்துரைக்கின்ற சத்தியம் நிறைந்த கடவுள்-ன் வெளிப்பாடுகளாகும். கடவுள்-க்கும் அவருடைய வெளிப்பாடுகளுக்கும் பின்னர் வேறு எந்த “ஹதீஸில்” அவர்கள் நம்பிக்கை கொள்கின்றனர்?


இட்டுக்கட்டுபவனான குற்றவாளி ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.


கடவுள்-ன் வெளிப்பாடுகள் அவனிடம் எடுத்துரைக்கப்படுவதைச் செவியேற்றும், பின்னர் அவற்றை அவன் ஒருபோதும் செவியேற்காதவனைப் போல, ஆணவத்துடன் தன் வழியில் பிடிவாதமாக இருக்கின்றவன். வலிநிறைந்ததொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.


நம்முடைய வெளிப்பாடுகளைக் குறித்து எதையேனும் அவன் அறிந்துகொள்ளும்போது,  அவன் அவற்றைப் பரிகசிக்கின்றான். இத்தகையோர் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டார்கள்.

ஜஹன்னா அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. அவர்களுடைய சம்பாத்தியங்களோ, அன்றிக் கடவுள்-உடன் அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களோ அவர்களுக்கு உதவாது. அவர்கள் பயங்கரமானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.


இது ஒரு வழிகாட்டி, மேலும் தங்கள் இரட்சகரின் இந்த வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்கள் தண்டித்தலுக்கும் மேலும் வலி நிறைந்ததொரு தண்டனைக்கும் உள்ளாகி விட்டனர்.

அல்-குர்ஆன் 45:6-11

நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புகின்றீர்களா? நீங்கள் குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது (6:19, 38 & 114) என்பதை நம்புகின்றீர்களா? அல்லது உங்களுக்கு குர்ஆனுடன் வேறு ஆதாரங்கள் தேவைப்படுகின்றதா?

பின்பற்றப்பட வேண்டிய ஒரே “ஹதீஸாக” குர்ஆன் இருக்கின்றது; மற்ற அனைத்து ஹதீஸ்களும் இறை நிந்தனையாகவும் மேலும் தவறாக வழிநடத்தக்கூடிய கற்பனைகளாகவும் இருக்கின்றன.

اللَّهُ نَزَّلَ أَحْسَنَ الْحَدِيثِ كِتَبًا مُتَشَبِهًا مَثَانِيَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَى ذِكْرِ اللَّهِ ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَنْ يَشَاءُ وَمَنْ يُضْلِلْ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ

கடவுள் இதில் மிகச்சிறந்த “ஹதீஸை” வெளிப்படுத்தியுள்ளார்; முரண்பாடுகளற்ற ஒரு புத்தகம், மேலும் (சுவனத்திற்கும் நரகத் திற்குமான) இரு வழிகளையும் சுட்டிக்காட்டுகின்றது. தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப்பவர்களின் தோல்கள் இதில்  கூறப்பட்டவற்றிலிருந்து  அஞ்சி ஒடுங்குகின்றன, பின்னர் அவர்களுடைய தோல்களும்  மற்றும் இதயங்களும் கடவுள்-ன் தூதுச் செய்திக்காக மென்மையாகிவிடுகின்றன. கடவுள்-ன் வழிகாட்டல் இத்தகையதாகும்; தான் நாடுகின்ற எவர் மீதும் அவர் அதனை அளிக்கின்றார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டவர்களைப் பொறுத்தவரை, எந்த ஒன்றும் அவர்களை வழிநடத்த முடியாது.

அல்-குர்ஆன் 39:23

وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا اُولَئكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ

وَاذَا تُتْلَى عَلَيْهِ ءايَتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَانْ لَمْ يَسْمَعْهَا كَانَّ فِي اُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ الِيمٍ

மனிதர்கள் மத்தியில், அடிப்படையற்ற ‘ஹதீஸ்களை’, விடாப்பிடியாகப் பின்பற்றுபவர்கள் இருக்கின்றனர், மேலும் இவ்விதமாக அறிவின்றி மற்றவர்களைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திருப்புகின்றனர், மேலும் அதனை வீணாகவும் எடுத்துக் கொள்கின்றனர். இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு இவர்கள் உள்ளாகி விட்டனர்.
மேலும் அவர்களில் ஒருவனுக்கு நமது வெளிப்பாடுகள் ஓதிக்காட்டப்படும் போது, அவற்றை அவன் ஒருபோதும் கேளாததைப் போலவும் அவனது காதுகள் செவிடானதைப் போலவும், ஆணவத்துடன் அவன் திரும்பிச் சென்று விடுகின்றான். வலிநிறைந்ததொரு தண்டனையை அவனுக்கு வாக்களிப்பீராக.

அல்-குர்ஆன் 31:6-7

கண்கூடான சான்று

குர்ஆன் முழுமையானது, மிகச்சரியானது, முற்றிலும் விவரிக்கப்பட்டது மேலும் மார்க்க வழிகாட்டுதலுக்கான ஒரே ஆதாரமாக இருக்க வேண்டியது என்று நம்பிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கின்ற தெளிவான குர்ஆனிய கூற்றுகளுடன், கூடுதலாக, மறுக்கவே முடியாத கண்கூடான சான்றைக் கொண்டு இந்த வெளிப்பாடுகளுக்கு (வசனங்களுக்கு) இன்னும் கூடுதலான ஆதரவை அளிக்க வேண்டும் என்பது சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தது.


குர்ஆனில் ஒவ்வொரு வார்த்தையும், உண்மையில் ஒவ்வொரு எழுத்தும் மிகவும் சிக்கலானதொரு எண்ணியல் குறியீட்டிற்கு இணங்க அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு கணித அற்புதம் குர்ஆனில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குறியீடு, குர்ஆனின் முதல் வாக்கியத்தில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையும், மேலும் குர்ஆன் மனிதத் தயாரிப்பு என்று கூறுபவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக 74:30ல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுமான, எண்(19)ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த கணித அற்புதமானது, குர்ஆன் ஒரு இறை வேதமாக இருக்கின்றது, மேலும் குர்ஆன் முழுமையாக பாதுகாக்கப்பட்டதாக இருக்கின்றது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றது. மேலும் விபரங்களுக்கு “குர்ஆன்: விஷீவல் ப்ரரெசன்டேஷன் ஆஃப் தி மிரகிள்” என்ற புத்தகத்தை தயவு செய்து பார்க்கவும்.மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரம் குர்ஆன்தான் என்பதற்கு ஆதரவளிக்கின்ற அந்த கண்கூடான சான்றானது, குர்ஆனின் கணித அற்புதத்துடன் பிணைக்கப்பட்ட நிலையில் இருக்கின்றது. அதுவும் கூட எண்(19)ஐ அடிப்படையாகக் கொண்டே உள்ளது. பக்கங்கள் 82-89 வரை இதற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.   

 

அந்த சான்றானது விளக்கிக் கூறுவதைக் காட்டிலும், மிகத் தெளிவாக காணக்கூடியதாக இருப்பதால், சுதந்திரமாக சிந்திக்கின்ற மனிதர்கள் அனைவரும் இதனை ஏற்றுக் கொள்வார்கள். நன்மை என்று நம்பி போலியான நம்பிக்கைகளில் சிக்கிக் கொண்டவர்கள் மட்டுமே,  குர்ஆனை நிராகரித்ததால் ஏற்பட்ட சாபத்தின் காரணமாக தெளிவான உண்மையை காணத்தவறி விடுவார்கள் (17:45 ஐப் பார்க்கவும்).


குர்ஆனின் அற்புதத்தை சுருக்கி கூறுகின்ற பின்வரும் நான்கு பக்கங்கள், குர்ஆன் : விஷீவல் ப்ரசென்டேஷன் ஆஃப்தி மிரகிள்” புத்தகத்தில் இருந்து மறுபதிப்பு ஆகும்.

குர்ஆன் : விஷீவல் ப்ரசென்டேஷன் ஆஃப்தி மிரகிள்
ஆக்கம் : ரஷாத் கலீஃபா, ஞா.னு.
இமாம், மஸ்ஜித் டுக்ஸன், அரிஸோனா

 

சுருக்கமும், தீர்மானங்களும்

 

இந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள குர்ஆனின் அற்புதம், மிகவும் எளிய நிலையிலிருந்து, மிகவும் சிக்கலான நிலை வரை விரிந்திருக்கின்றது. ஏனெனில் குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டது, இதன் மொழியானது மிகவும் எளிமையான நிலையிலிருந்து, மொழிப்புலமை மற்றும் இலக்கியத்திறன் ஆகியவற்றின் மிக உயர்வான நிலைவரை விரிந்திருக்கின்றது. இது, கல்வியின் அளவை பொருட்படுத்தாது, ஒவ்வொருவராலும் அடையக்கூடிய செய்தியைக் கொடுக்கின்றது. இதே நிலைதான் குர்ஆனுடைய அற்புதத்திலும் உள்ளது என்பதும் உண்மையாகும். இவ்விதமாக, அசாதாரணமான இந்த அற்புதத்தை நிறைவு செய்கின்ற கண்கூடான உண்மைகளை, எளிய உண்மைகள் மற்றும் சிக்கலான உண்மைகள் என பிரித்துக் கொள்ளலாம்.
எளிய உண்மைகள்

(1)        குர்ஆனின் முதல் வசனம் 19 எழுத்துக்களை கொண்டது.
(2)        குர்ஆன் 114 அல்லது 19ஒ6 அத்தியாயங்களை கொண்டது.
(3)        முதல் குர்ஆனிய வெளிப்பாடு (96:1-5) 19 வார்த்தைகளை கொண்டிருந்தது.
(4)        முதல் வெளிப்பாடு 76 அல்லது 19ஒ4 எழுத்துக்களை கொண்டது.
(5)        முதலில் வெளிப்படுத்தப்பட்ட அத்தியாயம் (அத் 96) 19 வசனங்களை கொண்டது.
(6)        குர்ஆனின் கடைசியிலிருந்து, 96வது அத்தியாயம் 19வது இடத்தில் உள்ளது.
(7)        முதலில் வெளிப்படுத்தப்பட்ட அத்தியாயம் 304 எழுத்துக்களை கொண்டது; 19ஒ16.
(8)        கடைசியாக வெளிப்படுத்தப்பட்ட அத்தியாயம் (அத். 110) 19 வார்த்தைகளை கொண்டது.
(9)        கடைசி வெளிப்பாட்டின் முதல் வசனம் 19 எழுத்துக்களை கொண்டது.
(10)      இரண்டாவது வெளிப்பாடு (68:1-9) 38 வார்த்தைகளை கொண்டிருந்தது; 19ஒ2
(11)      மூன்றாவது வெளிப்பாடு (73:1-10) 57 வார்த்தைகளை கொண்டிருந்தது; 19ஒ3
(12)      நான்காவது வெளிப்பாடு (74:1-30) தனக்குள் எண் 19ஐ கொண்டு வந்தது.
(13)      ஐந்தாவது வெளிப்பாடாகிய (அத்.1)ல், 74:30ன் எண்19ற்கு பின்னர் உடனடியாக 19 எழுத்துக்களையுடைய முதல் வசனம் வைக்கப்பட்டது.
(14)      முதல் வசனத்தின் முதல் வார்த்தை, குர்ஆனில் மிகச்சரியாக 19 முறை காணப்படுகின்றது.
(15)      முதல் வசனத்தின் இரண்டாவது வார்த்தை (அல்லாஹ்) 19ன் ஒரு பெருக்குத்தொகையாக 2698 முறை காணப்படுகின்றது, (19ஒ142). 
(16)      முதல் வசனத்தின் மூன்றாவது வார்த்தை (ரஹ்மான்) குர்ஆனில் 57 முறை குறிப்பிடப்பட்டுள்ளது (19ஒ3)
(17)      முதல் வசனத்தின் நான்காவது வார்த்தை (ரஹீம்) குர்ஆனில் 114 முறை குறிப்பிடப்பட்டுள்ளது (19ஒ6).
(18)      முதல் வசனத்தின் பெருக்கல் எண்களான (மேலேயுள்ள விஷயங்களான 14-17ஐ பார்க்கவும்) (1+142+3+6) ஆகியவற்றை கூட்டினால், கூட்டுத் தொகை 152 ஆகும். இதுவும் ஒரு 19ன் பெருக்குத் தொகையாகும் (19ஒ8).
(19)      முதல் வசனத்துடன் தொடர்புடைய வார்த்தைகளின் அடுத்தடுத்த வருகை ஒவ்வொன்றும், அதாவது 19, 2698, 57 & 114 ஆகியவை அல்லாஹ்வுடைய பெயர்களில் ஒன்றினுடைய எண்ணியல் மதிப்பிற்கு ஒத்திருக்கின்றது.
(20)      அறியப்பட்ட அல்லாஹ்வின் பெயர்கள் தொகுக்கப்பட்ட பட்டியல்கள் அனைத்தும் (400க்கும் அதிகமானவை) 19ஆல் வகுபடக்கூடிய எண்ணியல் மதிப்புகளையுடைய நான்கு பெயர்களை மட்டுமே உள்ளடக்கியதாக காணப்பட்டன. அந்த நான்கு பெயர்களும் மேலேயுள்ள எண் (19)ல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைகளின்படி வருகை தருகின்ற அதே நான்கு பெயர்களாகும்.
(21)      முதல் வசனமான பிஸ்மில்லாஹ், அத்தியாயம் 9ல் காணப்படவில்லை, ஆனால் அத்தியாயம் 27ன் வசனம் 30ல் ஈடு செய்யப்படுகின்றது. இது, இந்த முக்கியமான கூற்றின் நிகழ்வை 114 (19ஒ6) என்கிற பழைய நிலைக்கு கொண்டு வருகின்றது.
(22)      விடுபட்ட பிஸ்மில்லாஹ்விற்கும் (அத்தியாயம்9) மேலும் அந்த கூடுதல் பிஸ்மில்லாஹ்விற்கும் (அத்தியாயம் 27) இடையில் 19 அத்தியாயங்கள் உள்ளன.

சிக்கலான உண்மைகள்

(23) அத்தியாயம் 50, “க” (காஃப்)வை பெயராகவும், “க”வை தலைப்பெழுத்தாகவும் மேலும் 57 (57=19ஒ3) “க”வையும் கொண்டது.
(24)      “க”வை தலைப்பெழுத்தாகக் கொண்ட மற்றொரு அத்தியாயம், அத்தியாயம் 42 மட்டுமே, அதுவும் 57 (19ஒ3) “க”வையே கொண்டுள்ளது.

சிக்கலான உண்மைகள்

(25)      “க” எனும் இந்த எழுத்து “குர்ஆனை” குறிக்கின்றது. மேலும் “க” வை தலைப்பெழுத்தாகக் கொண்ட இந்த இரண்டு அத்தியாயங்களிலும் காணப்படுகின்ற “க” எழுத்துகளின் எண்ணிக்கை, குர்ஆனிலுள்ள மொத்த அத்தியாயங்களின் எண்ணிக்கைக்கு சமமாகும் (57+57=114).
(26)      (“க”வை தலைப்பாக கொண்ட) அத்தியாயம் 50ன் முதல் வசனம்  குர்ஆனை “மஜீத் = ஒளிமயமானது” என்று விவரிக்கின்றது. மேலும் மஜீத் என்ற வார்த்தையின் எண்ணியல் மதிப்பு, மிகச்சரியாக இந்த அத்தியாயத்தில் உள்ள ‘க’வின் எண்ணிக்கையான 57ஆகும்.
(27)      அத்தியாயம் 68, தலைப்பெழுத்தாக “நுவ்ன்”ஐயும் மேலும் தன்னுள் 133 அல்லது 19ஒ7 “நுவ்ன்” ஐயும் கொண்டுள்ளது.
(28)      அத்தியாயங்கள் 7, 19, & 38 ஆகியவை தலைப்பெழுத்தாக “ஸ“ (ஸாத்)வை கொண்டிருக்கின்றன, மேலும் இந்த எழுத்து, இந்த மூன்று அத்தியாயங்களிலும் மொத்தம் 152 அல்லது 19ஒ8 முறை காணப்படுகின்றது.
(29)      அத்தியாயம் 36, “ய” & “ஸீ” ஆகிய எழுத்துகளை தலைப்பெழுத் துகளாக கொண்டுள்ளது, மேலும் இந்த இரண்டு எழுத்துகளும், இந்த அத்தியாயத்தில் மொத்தம் 285 அல்லது 19ஒ15 முறை காணப்படுகின்றன.
சுருக்கமும், தீர்மானங்களும் (தொடர்கிறது) :
(30)      40ல் இருந்து 46 வரை உள்ள அத்தியாயங்கள் தலைப் பெழுத்துகளாக “ஹா” மற்றும் “ம”வை கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு எழுத்துகள், அந்த ஏழு அத்தியாயங்களிலும் மொத்தம் 2147 அல்லது 19ஒ113 முறை காணப்படுகின்றன.
(31)      அத்தியாயம் 42, “ஐ”, “ஸீ”, & “க” ஆகிய மூன்று தலைப்பெழுத்துகளைக் கொண்டு முற்சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அத்தியாயத்தில், இந்த மூன்று எழுத்துகளும் மொத்தம் 209 அல்லது 19ஒ11  முறை காணப்படுகின்றன.
(32)      அத்தியாயம் 19, “கா”, “ஹ”, “ய”, “ஐ” மற்றும் “ஸ” (காப், ஹா, ய, ஐன், ஸாத்) எனப்படும் ஐந்து எழுத்துக்களை தலைப்பெழுத்துகளாக கொண்டுள்ளது, மேலும் இந்த அத்தியாயத்தில், இந்த ஐந்து எழுத்துகளும் மொத்தம் 798 அல்லது 19ஒ42 முறை காணப்படுகின்றன.
(33)      குர்ஆனிய தலைப்பெழுத்துகளான “ஹ” “த.ஹ”, “த.ஸீ” மற்றும் “த.ஸீ.ம” ஆகிய இவைகள், தாம் இடம் பெற்றிருக்கின்ற 19, 20, 26, 27, & 28 ஆகிய  இந்த ஐந்து அத்தியாயங்களுக்குள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்ற ஒப்பற்றதொரு தொடர்பை உண்டாக்குகின்றன. அவை இடம்பெற்றிருக்கும் அந்த ஐந்து அத்தியாயங்களிலும் இந்த எழுத்துகள் மொத்தம் 1767 அல்லது 19ஒ93 முறை காணப்படுகின்றன.
(34)      அத்தியாயம் 2, “அ.ல.ம” என்ற எழுத்துகளை தலைப்பெழுத்துகளாகவும் மேலும் இந்த எழுத்துகளை 9899 (19ஒ521) முறையும் கொண்டுள்ளது.
(35)      அத்தியாயம் 3ம், “அ.ல.ம.” என்ற எழுத்துகளையே தலைப்பெழுத்துகளாக கொண்டுள்ளது, மேலும் இந்த எழுத்துகளை 5662 (19ஒ298) முறை கொண்டுள்ளது.
சுருக்கமும், தீர்மானங்களும் (தொடர்கிறது) :
(36)      அத்தியாயங்கள் 29, 30, 31 & 32 ஆகியவையும் “அ.ல.ம” என்ற எழுத்துகளையே தலைப்பெழுத்துகளாக கொண்டிருக்கின்றன, மேலும் இந்த எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை இவைகளில் முறையே 1672 (19ஒ88), 1254 (19ஒ66), 817 (19ஒ43) மற்றும் 570 (19ஒ30) ஆகும்.
(37)      அத்தியாயங்கள் 10 மற்றும் 11 ஆகியவை “அ.ல.ர” என்ற எழுத்துகளை தலைப்பெழுத்துகளாக கொண்டுள்ளன. மேலும் மிகச்சரியாக இந்த எழுத்துகள் இவை ஒவ்வொன்றிலும் ஒரே கூட்டுத்தொகையாக 2489 (19ஒ131) முறை காணப்படுகின்றன.
(38)      அத்தியாயங்கள் 12, 14 மற்றும் 15 ஆகியவையும் “அ.ல.ர” என்ற அந்த மூன்று எழுத்துகளையே தலைப்பெழுத்துகளாக கொண்டுள்ளன. இந்த அத்தியாயங்களில், இந்த மூன்று எழுத்துகளின் கூட்டுத் தொகை முறையே 2375 (19ஒ125), 1197 (19ஒ63), மற்றும் 912 (19ஒ48) ஆக இருக்கின்றன.

சிக்கலான உண்மைகள்

(39) அத்தியாயம் 13, நான்கு தலைப்பெழுத்துகளான “அ.ல.ம.ர” வைக்கொண்டு முற்சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த எழுத்துகளின் கூட்டுத் தொகையாக 1482 (19ஒ78)ஐ கொண்டுள்ளது.
(40)      அத்தியாயம் 7, “அ.ல.ம.ஸ“ என்ற எழுத்துகளை தலைப்பெழுத்துகளாக கொண்டுள்ளது. மேலும் இந்த அத்தியாயத்தில், இந்த நான்கு எழுத்துகளும் மொத்தம் 5320 அல்லது 19ஒ280 முறை காணப்படுகின்றன.
(41)      குர்ஆனிய தலைப்பெழுத்துகளின் எண்ணிக்கை 14 ஆகும். மேலும் இந்த தலைப்பெழுத்துகளை உருவாக்குவதில் பங்கு பெற்றிருக்கும் அகர வரிசை எழுத்துகளும் கூட 14 ஆகும். மேலும் தலைப்பெழுத்துகளை உடைய அத்தியாயங்களின் எண்ணிக்கை 29 ஆகும். இந்த எண்ணிக்கைகளை 14+14+29 நாம் கூட்டும்போது  நாம் காணுகின்ற கூட்டுத் தொகையானது 57 அல்லது 19ஒ3 ஆகும்.
(42)      குர்ஆனிய தலைப்பெழுத்துகள், “குர்ஆனின் அற்புதம்” என விவரிக்கப்படுகின்றன.

(43)      குர்ஆன் முழுவதும் பொதுவான வகு எண்ணாக, எண் (19) இருக்கின்றது, மேலும் இது அரபி வார்த்தை “ஒன்று = வாஹித்” என்பதன் எண்ணியல் மதிப்பாகும். இவ்விதமாக, குர்ஆனின் கருத்து மற்றும் அதன் அடிப்படைச் செய்தியான கடவுள் ஒருவரே என்பதை இந்த அற்புதம் வலியுறுத்துகின்றது.

 

தீர்மானம் :

இங்கே வழங்கப்பட்டுள்ள கண்கூடான சான்று,
(1)        குர்ஆனின் தெய்வீக ஆதாரத்தையும்,

(2)        குர்ஆனின் குறைபாடற்ற சீரியநிலையையும் மற்றும் பாதுகாக்கப்பட்ட நிலையையும் நிரூபிக்கின்றது.

 

குர்ஆன் : வழிகாட்டுதலுக்கான ஒரே ஆதாரம் (6:19)

வழிகாட்டுதலுக்கு வேறு எந்த ஆதாரங்களையும் ஏற்றுக் கொள்வது, அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்களை அமைப்பதாக ஆகும்; இணை தெய்வ வழிபாடு ஆகும்.

 

இந்த முக்கியமான கூற்று எண் 19 -ல் தான் நிகழ்கின்றது

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلْ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ

“யாருடைய சாட்சியம் மிகப்பெரியது?” என்று (முஹம்மதே) கேட்பீராக. “கடவுள்-உடையது” என்று கூறுவீராக. இந்த குர்ஆன்* உங்களுக்கும்  மேலும் யாரை எல்லாம் சென்றடைகின்றதோ அவர்களுக்கும் உபதேசிப்பதற்காக உள்ளுணர்வு மூலம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்கு  எனக்கும், உங்களுக்கும் இடையில் அவரே சாட்சியாக உள்ளார். (குர்ஆனுடன் மற்ற ஆதாரங்களை ஆதரிப்பதன் மூலம்) நிச்சயமாக, கடவுள்-ஐத் தவிர வேறு தெய்வங்கள்* இருப்பதாக நீங்கள் சாட்சி கூறுகின்றீர்கள். “நீங்கள் கூறுவது போல் நான் சாட்சி கூறமாட்டேன், ஒரே ஒரு  கடவுள் தான் இருக்கின்றார், மேலும் நான் உங்களுடைய இணைவைப்பைக் கைவிட்டு விட்டேன்” என்று கூறுவீராக.

அல்-குர்ஆன் 6:19

மிக முக்கியமான இந்த வசனம் நிகழ்ந்திருப்பதும் எண் 19 -ல் தான்

இந்த புத்தகத்தில் நாம் எதனையும் விட்டு விடவில்லை (குர்ஆன்)      

(6:38)

* இந்த வசனத்தின் அரபி மூலம் 19 எழுத்துகளைக் கொண்டுள்ளது.

*  இந்த வசனத்தின் எண் 38: அல்லது 19 x 2 ஆகும்.

مَا فَرَّطْنَا فِي الْكِتَبِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ

அல்-குர்ஆன் 6:38

அல்லாஹ் இந்த புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்

(6:114)

*          இந்த வசனத்தின் அரபி மூலம் 19 எழுத்துகளை கொண்டுள்ளது.
*          இந்த வசனத்தின் எண் 114 ; அல்லது 19 x 6 ஆகும்.

أَنزَلَ إِلَيْكُمْ الْكِتَبَ مُفَصَّلًا

அல்-குர்ஆன் 6:114

உங்கள் இரட்சகருடைய வார்த்தை (இந்த குர்ஆன்) சத்தியத்தாலும்            
நீதியாலும் முழுமை அடைந்ததாக இருக்கின்றது                                                                    

(6:115)

இந்த கூற்று அரபி மூலத்தில் 19 எழுத்துகளை கொண்டுள்ளது.

تَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا

அல்-குர்ஆன் 6:115

 

முஹம்மது குர்ஆனை அவசரமாக கூறுவதை விட்டும் தடுக்கப்பட்டார்

 

அதிகாரப்பூர்வமான அனுமதியின்றி குர்ஆனிய விஷயங்களை கூறக்கூடாது என்றும் மேலும் குர்ஆனை, அது வெளிப்படுத்தப்பட்டவுடன் உறுதியாக பற்றிக் கொள்ளவும் மேலும் அதனை பின்பற்றவும் வேண்டும் என்ற ஒரு கட்டளையை, அல்லாஹ்விடமிருந்து முஹம்மது நபி பெற்றிருந்தார்.
அத்தியாயம் 20ல் இந்த வசனத்தின் எண் 114 ஆகும்.

114 = 19 x 6

இந்த வசனத்தின் எண்ணும், குர்ஆனில் உள்ள சூராக்களின் மொத்த எண்ணிக்கையும் ஒரே எண்ணாக இருப்பது, தற்செயலான நிகழ்வாக இருக்க முடியுமா?

            அல்லாஹ்வும், அவருடைய தூதரும், குர்ஆனை, முழுக்குர்ஆனை, மேலும் வேறெதுவுமில்லாது குர்ஆனை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகின்றார்கள்.
وَلَا تَعْجَلْ بِالْقُرْءانِ مِنْ قَبْلِ أَنْ يُقْضَى إِلَيْكَ وَحْيُهُ وَقُلْ رَبِّ زِدْنِي عِلْمًا

முஹம்மது குர்ஆனை விளக்குவதை விட்டும் தடுக்கப்பட்டிருந்தார்

குர்ஆன், புரிந்து கொள்வதற்கு கடினமானது மேலும் குர்ஆனை விளக்குவதற்கு “ஹதீஸ் & சுன்னத்”  அவசியமாக இருக்கின்றது என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். முதலில், குர்ஆனையும், “ஹதீஸையும்” ஒரு தடவை பார்த்தாலே இது உண்மைக்கு மாறானது என்பதை அதைப் படிப்பவர் நம்பிவிடுவார். “ஹதீஸை” இட்டுக்கட்டியவர்கள், வெவ்வேறு மொழி வேறுபாடுகளையும், கொச்சையான பேச்சுகளையும் மற்றும் உச்சரிப்பு முறைகளையும் கொண்ட வெவ்வேறு பிரிவுகளையும், இன்னும் வெவ்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்களாக இருந்த காரணத்தினால், “ஹதீஸின்” மொழிதான் உண்மையில் மிகவும் கடினமானது.

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْءانَهُ

فَإِذَا قَرَأْنَهُ فَاتَّبِعْ قُرْءانَهُ

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ

(முஹம்மதே) அதனை விரைவுபடுத்துவதற்காக உமது நாவை அசைக்காதீர்.
அதனைக் குர்ஆனாக ஒன்று சேர்க்க இருப்பது நாம்தான்.
நாம் அதனை ஓதிக்காட்டியவுடன், அத்தகைய குர்ஆனை நீர் பின்பற்ற வேண்டும்.
பின்னர் அதனை விளக்கிக்கூற இருப்பதும் நாமேதான்.

அல்-குர்ஆன் 75:16-19

அல்லாஹ் ஒருவர்தான் குர்ஆனை விளக்குகின்றவர் என்று கூறுகின்ற இந்த வசனம் இடம் பெற்றிருக்கும் வசன எண் 19 ஆகும்.

குர்ஆன் நமக்கு தேவையான அனைத்து முன்மாதிரிகளையும் கொண்டிருக்கின்றது

குர்ஆன், நமக்கு தேவையான அனைத்து முன்மாதிரிகளையும், உருவக வர்ணனைகள் அல்லது ஒப்புவமைகளையும் கொண்டிருக்கின்றது என்று பொதுவாக கூறுகின்ற, அங்கும் இங்குமான நான்கு வசனங்கள் உள்ளன. அந்த வசனங்கள் 17:89, 18:54, 30:58 & 39:27 ஆகும். இந்த நான்கு வசனங்களின் வசன எண்களை கூட்டினால் அதன் கூட்டுத் தொகை 228 அல்லது 19x12 ஆகும்.

89+54+58+27=228= 19 x 12

وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرْءانِ مِنْ كُلِّ مَثَلٍ فَأَبَى أَكْثَرُ النَّاسِ إِلَّا كُفُورًا
وَلَقَدْ صَرَّفْنَا فِي هَذَا الْقُرْءانِ لِلنَّاسِ مِنْ كُلِّ مَثَلٍ وَكَانَ الْإِنسَنُ أَكْثَرَ شَىء جَدَلًا
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِي هَذَا الْقُرءانِ مِنْ كُلِّ مَثَلٍ وَلَئنْ جِئتَهُمْ بَِِءايَةٍ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا اِنْ اَنْتُمْ اِلَّا مُبْطِلُونَ
كَذَلِكَ يَطْبَعُ اللَّهُ عَلَى قُلُوبِ الَّذِينَ لَا يَعْلَمُونَ

இந்த நான்கு வசனங்களின் வசன எண்கள் 89, 54, 58 மற்றும் 27 ஆகும்.

89+54+58+27=228

228 = 19 x 12

மேலே காட்டப்பட்டுள்ள வசனங்கள் கூடுதலாக, நம்மில் எஞ்சியிருப்போர் மரணிப்பது போல் மரணிக்கின்ற ஒரு மனிதராக முஹம்மது இருக்கின்றார் என்றும், மேலும் நாம் முரண்பாடுகளையுடைய பல ஆதாரங்களை பின்பற்றாது ஒரே சட்ட ஆதாரத்தை பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றன. அந்த ஒரே ஆதாரம் குர்ஆன்தான் என்று மேலே உள்ள வசனம் 28ல் அடையாளம் காட்டப்படுகின்றது.

ஹதீஸ் : அவர்கள் விரும்புகின்ற எதனையும் அதில் அவர்கள் காண்கின்றனரா

இறுதியாக, நம்ப மறுப்பவர்கள், தாங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் காணுகின்றதொரு புத்தகத்தை பின்பற்றுகின்ற அதே சமயம், நம்பிக்கையாளர்களை, முரண்பாடற்ற ஒரே ஆதாரத்தை (குர்ஆனை) பின்பற்றுகின்ற அவர்களுடைய செயல்கள் மூலம் அடையாளம் காண முடியும் என்று நமக்கு தெரிவிக்கின்ற கண்கூடான சான்றின் ஒருபகுதி இங்கே உள்ளது. நாம் விரும்புகின்ற எந்த ஒன்றையும் “ஹதீஸ்” புத்தகங்களில் நம்மால் காண முடியும் என்பது நன்கு அறியபட்டதாக இருக்கின்றது.
           

நம்ப மறுப்பவர்களை கேள்வி கேட்கும் விதத்தில் இருக்கும் இந்த கூற்றானது, “நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் அதனில் காணுகின்றதொரு புத்தகத்தை நீங்கள் பின்பற்றுகின்றீர்களா?” என்று கூறுகின்றது.

இந்த முக்கியமான கூற்று எண் 38 ல் இடம் பெற்றுள்ளது.

38 = 19 x 2

أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

أَمْ لَكُمْ كِتَبٌ فِيهِ تَدْرُسُونَ

إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

அடிபணிந்தவர்களைக் குற்றவாளிகளைப் போல் நாம் நடத்துவோமா?
உங்களுடைய நியாயத்தில் என்ன கோளாறு?
நீங்கள் பின்பற்றுவதற்கு வேறொரு புத்தகம் இருக்கின்றதா?
அதில், நீங்கள் விரும்புகின்ற எந்த ஒன்றையும் நீங்கள் காண்கின்றீர்களா?

அல்-குர்ஆன் 68:35-38

அல்லாஹ் குர்ஆனை முழுமையானது (6:115) என்று அழைக்கின்றார்.

 

அல்லாஹ் குர்ஆனை முற்றிலும் விவரிக்கப்பட்டது (6:114) என்று அழைக்கின்றார்.

 

அல்லாஹ் குர்ஆனை மிகச்சரியானது (6:38) என்று அழைக்கின்றார்

 

நபி குர்ஆனை மட்டுமே ஒப்படைத்தார் (69:40-47)

 

ஹதீஸ் & சுன்னத் ஆகியவை இறை நிந்தனையான புதுமைகள் ஆகும்             (6:112 & 25:31)

 

நீங்கள் குர்ஆனை மட்டுமே உறுதியாக கடைபிடிக்க வேண்டும் (6:19; 7:3 இன்னும் பல)

 

அல்லாஹ் கண்கூடான சான்றையம் கூட வழங்கியுள்ளார் (பக்கங்கள் 82-89 வரை பார்க்கவும்)

 

இதன் பின்னரும் அவர்கள் இவை அனைத்தையும் காண தவறுவது ஏன் ??? !!!

அவர்கள் அல்லாஹ்வை நம்ப தவறுவது ஏன்?

ஏனெனில் அவர்கள் தங்கள் வாய்களால் கூறுபவற்றை, உள்ளே இருக்கும் அவர்களுடைய இதயங்கள் மறுக்கின்றன. சமூக மற்றும் கல்வி சம்பந்தமான சூழ்நிலைகள் காரணமாகவே நம்பிக்கையை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர், ஆனால் உள்ளே இருக்கும் அவர்களுடைய இதயங்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றன.
إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَالَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْاءخِرَةِ قُلُوبُهُمْ مُنكِرَةٌ وَهُمْ مُسْتَكْبِرُونَ

உங்கள் தெய்வம் ஒரே தெய்வம். மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய இதயங்கள் மறுத்துக் கொண்டிருக்கின்றன, மேலும் அவர்கள் ஆணவம் கொண்டிருக்கின்றனர்.

அல்-குர்ஆன் 16:22

(ஒருவனுடைய ஆழமான நம்பிக்கைகள் மறுப்பவையாக இருக்கின்றன) குர்ஆனை விட்டு முற்றிலும் விலக்கி வைக்கப்படுதலே இந்த மறுப்பின் விளைவாக இருக்கின்றது :

وَإِذَا قَرَأْتَ الْقُرْءانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْاءخِرَةِ حِجَابًا مَسْتُورًا

 

وَجَعَلْنَا عَلَى قُلُوبِهِمْ أَكِنَّةً أَنْ يَفْقَهُوهُ وَفِي ءاذَانِهِمْ وَقْرًاوَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْءانِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَرِهِمْ نُفُورًا

நீர் குர்ஆனை படிக்கும் போது, உமக்கும் மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இடையில் காண முடியாததொரு தடையை நாம் அமைத்து விடுகின்றோம்.
அவர்கள் அதனைப் புரிந்து கொள்வதை விட்டும் தடுப்பதற்காக, அவர்களுடைய மனங்களைச் சுற்றிக் கவசங்களையும், அவர்களுடைய காதுகளில் செவிட்டுத் தனத்தையும் நாம் அமைத்து விடுகின்றோம். மேலும் குர்ஆனை மட்டும்* பயன்படுத்தி, உமது இரட்சகரைப்பற்றி நீர் உபதேசித்தால், அவர்கள் வெறுப்பினால் வெருண்டோடி விடுகின்றனர்.

அல்-குர்ஆன் 17:45-46

ஆகையால், குர்ஆன் மட்டும் என்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலாது ; “ஹதீஸ் & சுன்னத்” போன்ற மற்ற ஆதாரங்களை அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.

உத்தரவாதமுள்ள வெற்றி

வெற்றி என்பது முஸ்லிம்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக இருக்கின்றது என்று குர்ஆன் தெளிவாக போதிக்கின்றது.

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை அளிப்பதென்பது நம்முடைய கடமையாகும்.

அல்-குர்ஆன் 30:47

إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَالَّذِينَ ءامَنُوا فِي الْحَيَوةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَدُ

மிகவும் நிச்சயமாக, நம் தூதர்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இவ்வுலகம் மற்றும் சாட்சிகள் வரவழைக்கப்படும் அந்த நாள் ஆகிய இரண்டிலும், நாம் வெற்றியைத் தருவோம்.

அல்-குர்ஆன் 40:51

وَلَيَنصُرَنَّ اللَّهُ مَنْ يَنصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ

நிச்சயமாக, கடவுள்-க்கு ஆதரவளிப்பவர்களுக்கு அவர் ஆதரவளிக்கின்றார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.

அல்-குர்ஆன் 22:40

إِنَّ اللَّهَ يُدَفِعُ عَنْ الَّذِينَ ءامَنُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ خَوَّانٍ كَفُورٍ

நம்பிக்கை கொண்டோரைக் கடவுள் காக்கின்றார். நம்பிக்கைத் துரோகி, நன்றிகெட்டவர் எவரையும் கடவுள் நேசிப்பதில்லை.

அல்-குர்ஆன் 22:38

يَأيُّهَا الَّذِينَ ءامَنُوا إِنْ تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ

 நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-க்கு நீங்கள் ஆதரவளித்தால், அவர் உங்களுக்கு ஆதரவளிப்பார், மேலும் உங்களுடைய ஆதாரத்தை பலப்படுத்துவார்.

அல்-குர்ஆன் 47:7

 

அப்படியானால் ஏன் முஸ்லிம்கள் தோல்வி அடைந்தவர்களாக இருக்கின்றனர்?

முஸ்லிம்கள் தோல்வி அடைந்தவர்களாக இருக்கின்றனர்? முந்தைய பக்கத்தில் காட்டப்பட்டுள்ள உத்தரவாதங்களையும் மேலும் அல்லாஹ் ஒருபோதும் தவறிழைப்பதில்லை என்பதையும் கருத்தில் கொண்டால் இன்றைய ‘முஸ்லிம்கள்’ முஸ்லிம்களாக இருக்க சாத்தியமே இல்லை.

 

வரலாற்று உண்மைகள்

முஸ்லிம் உம்மத்துகள், குர்ஆனை, வேறெதுவுமில்லாது குர்ஆனை மட்டும் உறுதியாக பின்பற்றிய காலம் வரையிலும், அந்த முஸ்லிம்கள் விஞ்ஞான ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மேலும் பொருளாதார ரீதியாகவும் உலகை வழி நடத்தினர். அவர்கள் ஒரு போரில் கூட, ஒருபோதும் தோல்வி அடைந்ததில்லை. இஸ்லாத்தின் எல்லைகள் மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து சைனா வரையிலும், தெற்கு பிரான்ஸிற்குள்ளும் மேலும் கிழக்கத்திய ஜெர்மனிக்குள்ளும் நீண்டன.

வரலாற்று உண்மைகள்


ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹதீஸ் & சுன்னத் தோன்றியவுடன், படிப்படியாக முஸ்லிம் உம்மத்துகளின் சீரழிவு தொடங்கியது. குர்ஆனுடன், இந்தப் புதுமைகளும் வழிகாட்டுதலின் ஆதாரங்களாக தோன்றியது முதல் “முஸ்லிம்கள்” ஒரு போரில் கூட ஒருபோதும் வெற்றியடையவில்லை.


30 லட்சம் இஸ்ரேலியர்கள், 15 கோடி அரேபியர்களை தொடர்ச்சியாக தோற்கடிப்பது ஏன்???


30 லட்சம் இஸ்ரேலியர்கள், 100 கோடி “முஸ்லிம்களை” ஜெருசலத்தில் உள்ள அவர்களுடைய பள்ளிவாசலுக்குள் நுழைய விடாமல் வலுக்கட்டாயமாக தடுத்துக் கொண்டிருப்பது ஏதேனும் பொருளை உணர்த்துகின்றதா?

 

இந்தியா பாகிஸ்தானை  தொடர்ச்சியாக தோற்கடிப்பது ஏன்? ரஷ்யர்கள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தாக்குவது ஏன்? இப்படியாக இன்னும் பல ......

 

அப்படியானால் “முஸ்லிம்கள்” ஏன் தோல்வி அடைந்தவர்களாக இருக்கின்றனர்

அவர்கள் அல்லாஹ்வை, குர்அன் முழுமையானது, மிகச்சரியானது, முற்றிலும் விவரிக்கப்பட்டது, மேலும் மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரமாக இருக்க வேண்டியது என்கின்ற அவருடைய கூற்றுகளில் நம்ப மறுப்பதே இதற்கு காரணமாகும்.

 

ஏனெனில் அவர்கள் குர்ஆனுடன், ஹதீஸ் மற்றும் சுன்னத் என்றழைக்கப்படும் மற்ற ஆதாரங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَمَةِ أَعْمَى

قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا

قَالَ كَذَلِكَ أتَتْكَ ءايَتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنسَى

وَكَذَلِكَ نَجْزِي مَنْ أَسْرَفَ وَلَمْ يُؤْمِنْ بِءايَتِ رَبِّهِ وَلَعَذَابُ الْاءخِرَةِ أَشَدُّ وَأَبْقَى

“என் தூதுச் செய்தியை (குர்ஆனை) அலட்சியப் படுத்துகின்றவனைப் பொறுத்தவரை, அவனுக்குத் துன்பகரமானதொரு வாழ்வே இருக்கும், மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவனை நாம் குருடனாக உயிர்ப்பித்தெழுப்புவோம்.”
அவன் , “என் இரட்சகரே, (முதல் வாழ்வில்) நான் பார்வையுடைய ஒருவனாக இருந்து வந்த போதும், ஏன் என்னைக் குருடனாக வரவழைத்தீர்?” என்று கூறுவான்.
அவர், “நமது வெளிப்பாடுகள்  உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டதால், இப்போது நீ மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவார்.
வரம்பு மீறுபவர்களுக்கும் தங்களுடைய இரட்சகரின் வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களுக்கும் இவ்விதமாகவே நாம் கூலி கொடுப்போம். மறுவுலகின் அந்தத் தண்டனையானது மிக மோசமானது, மேலும் நிரந்தரமானது.

அல்-குர்ஆன் 20:124-127

குர்ஆனை விட்டு விலகுவதற்கு ஹதீஸ் காரணமாகின்றது!

(1) நீங்கள் உங்களுடைய அங்க சுத்தியை (உது) இவ்வாறு தான் செய்கின்றீர்களா?

) செய்யும் முறை பற்றிய அல்லாஹ்வின் கட்டளைகள்  குர்ஆனில் தெளிவாகவும், எளிதாகவும் இருந்தபோதிலும், எண்ணற்ற  “முஸ்லிம்கள்” அல்லாஹ்வைத் தவிர வேறொரு தெய்வத்தை பின் பற்றுகின்றனர் அல்லாஹ்வால் உத்தரவிடப்பட்டபடி அவர்கள் அங்க சுத்தி செய்வதில்லை. இறுதியான விளைவு இழிவடைதல் & தோல்வியுறுதல்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا

நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கும் போது நீங்கள் (1) உங்கள் முகங்களை கழுவிக் கொள்ளுங்கள், (2) உங்கள் கைகளை முழங்கைகள் வரை கழுவிக்கொள்ளுங்கள். (3) உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் மேலும் (4) உங்களுடைய பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள்.

அல்-குர்ஆன் 5:6

இன்றைய “முஸ்லிம்களில்” பெரும்பான்மையானோர் அல்லாஹ்வின் கட்டளைகளை கொண்டு திருப்தியடைய மறுக்கின்றனர். அவர்கள் வெவ்வேறு “இமாம்கள்” மற்றும் “அறிஞர்கள்” போன்ற மனிதர்களின் கட்டளைகளை ஆதரிக்கின்றனர். அதன் விளைவாக, அவர்கள், தாங்கள் பின்பற்றுகின்ற “பிரிவைச்” சேர்ந்ததொரு நீண்ட அங்க சுத்தியை செய்பவர்களாக இருக்கின்றனர். நபி தன்னுடைய அங்க சுத்தியை இவ்வாறு தான் செய்திருப்பார் என்று கற்பனை செய்து கொண்ட வெவ்வேறு “இமாம்களின்” கருத்துகளில் இருந்து, இந்த பிரிவுகள் அனைத்தும் உருவாயின. இவ்விதமாக, அவர்கள் சைத்தானின் வலையில் வீழ்ந்தனர், தங்களை படைத்தவருக்கு கீழ்படிய மறுத்தனர், மேலும் துன்பம் மற்றும் தோல்விக்கு உள்ளாயினர்.

குர்ஆனை விட்டு விலகுவதற்கு ஹதீஸ் காரணமாகின்றது

(2) நீங்கள் உங்களுடைய ஸலாத் தொழுகைகளை இவ்வாறு தான் செய்கின்றீர்களா?

 وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا

உமது தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) நீர் மிகவும் சப்தமாகவோ, அன்றி இரகசியமாகவோ கூறவேண்டாம்; நடுத்தரமானதொரு தொனியைப் பயன்படுத்துவீராக.

அல்-குர்ஆன் 17:110

 இவை அல்லாஹ்விடமிருந்துள்ள வெளிப்படையான உபதேசங்களாக இருந்த போதிலும், எண்ணற்ற “முஸ்லிம்கள்” ஹதீஸினால் திசை திருப்பப்பட்டு விட்டனர். அவர்கள் நடுப்பகல் (லுஹர்) தொழுகை மற்றும் பிற்பகல் (அஸர்) தொழுகை முழுவதும், மேலும் சூரிய அஸ்தமனத் தொழுகையின் (மக்ரிப்) முன்றாவது ரக - அத்திலும், மற்றும் இரவுத் தொழுகையின் (இஷா) இரண்டாவது பாதியிலும் (3&4வது ரக-அத்கள்) முழுமையான அமைதியை கடைபிடிக்கின்றனர். இந்த உபதேசங்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? அல்லாஹ்விடம் இல்லாது வேறு தெய்வத்திடம் இருந்துதானே. குர்ஆனிடம் இல்லாது வேறு ஆதாரங்களிடம் இருந்துதானே.

இவ்விதமாக, அவர்கள் ஒட்டு மொத்தமாக சாத்தானின் வலைகளில் வீழ்ந்தனர், மேலும் தங்களைப் படைத்தவரின் வார்த்தையாகிய (குர்ஆனை) முழுமையானது, மிகச்சரியானது மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டது என்பதை நம்பாது அவருக்கு கீழ்படிய மறுத்தனர் (6:19,38&114)

 

குர்ஆனை விட்டு விலகுவதற்கு ஹதீஸ் காரணமாகின்றது.

(3) ஸலாத்தில் அல்லாஹ்வுடைய பெயருடன் மற்ற பெயர்களை நீங்கள் குறிப்பிடுகின்றீர்களா?

நாம், நம்முடைய ஸலாத் தொழுகைகளில் அல்லாஹ்வின் பெயருடன் வேறு எந்த பெயர்களையும் குறிப்பிடக் கூடாது என்பது அல்லாஹ்வின் கட்டளையாக இருக்கின்றது (72:18)

 

ஆனால் இன்றைய தினம் எண்ணற்ற முஸ்லிம்கள், தங்கள் இரட்சகரிடம் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம், முஹம்மது மற்றும் இப்ராஹிமை புகழும்படியும், துதிக்கும்படியும் அவர்களுக்கு கட்டளையிடுகின்ற புதுமைகளை பின்பற்றுகின்றனர்.
وَأَنَّ الْمَسَجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا

வழிபாட்டுத் தலங்கள் கடவுள்-க்குரியவை; கடவுள்-உடன் வேறு எவரொருவரையும் அழைக்காதீர்கள்.

அல்-குர்ஆன் 72:18

 

அதை விட மிகத் தெளிவானது எது?

“முஸ்லிம்கள்”, “தஷஹ்ஹீது” எனப்படும் இருப்பு நிலையில், முஹம்மது மற்றும் இப்ராஹிம் மீது புகழ்ச்சிகள் மற்றும் துதிப்புகளை பொழிகின்றதொரு புதுமையை கூறுபவர்களாக ஆக்கப்பட்டு சைத்தானால் ஏமாற்றப்பட்டு விட்டனர்.


“தஷஹ்ஹீதில்” உள்ள இந்த புதுமையானது ஸலாத் தொழுகைகளின் பகுதி அல்ல என்பதை ஹதீஸ் & சுன்னத்தின் ஆதாரங்கள் கூட ஒப்புக் கொள்வது கவனிக்கத்தக்கது!

இது பகிரங்கமான இணை தெய்வ வழிபாடு இல்லையா???

 

ஹதீஸ் & சுன்னத்தும் அல்லாஹ்வுடைய சட்டமும் எதிரெதிரில்

குர்ஆனிய கட்டளையானது, விபச்சாரம் செய்தவர்களை நூறு கசையடி மூலம் தண்டிக்கும்படி நமக்கு கட்டளையிடுகின்றது. விபச்சாரத்திற்கு எதிரான இந்த சட்டம் “மிகத் தெளிவாக” இருக்கின்றது என்று கூறிய பின்னரும்.


முஸ்லிம்கள் தங்களைப் படைத்தவரை பின்பற்றவும் மேலும் அவருக்கு கீழ்படியவும் செய்கின்றனரா? இல்லை.

 

முஸ்லிம் “அறிஞர்கள்” குர்ஆனிய சட்டம் தெளிவானதாக இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தனர்!!! அவர்கள் விபச்சாரம் செய்த திருமணம் ஆனவர்களின் நிலை குறித்து குர்ஆனில் விளக்கப்படவில்லை என்றும், அதனால்தான் குர்ஆனை தெளிவுபடுத்த அவர்களுக்கு ஹதீஸ் அவசியம் என்றும் கோரினர்!!!

وَفَرَضْنَهَا وَأَنزَلْنَا فِيهَا ءايَتٍ بَيِّنَتٍ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ

 

فَاجْلِدُوا كُلَّ وَحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْاءخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنْ

நாம் இறக்கி அனுப்பிய, மேலும் நாம் சட்டமாக விதித்துள்ள ஒரு சூரா. நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, தெளிவான வெளிப்பாடுகளை அதனில் நாம் வெளிப்படுத்தியுள்ளோம்.


விபச்சாரம் செய்பவள் மற்றும் விபச்சாரம் செய்பவன் ஆகிய அவர்கள் ஒவ்வொரு வருக்கும் நீங்கள் நூறு சவுக்கடிகள் கொடுக்க வேண்டும். கடவுள் மீதும் மற்றும் இறுதி நாளின் மீதும் நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டிருந்தால், கடவுள்-ன் சட்டத்தைச் செயல் படுத்துவதை விட்டும் அனுதாபத்தால் நீங்கள் ஊசலாடாதீர்கள். மேலும் நம்பிக்கையாளர்களின் ஒருகூட்டம் அவர்களுடைய தண்டனையைக் காணட்டும்.*

அல்-குர்ஆன் 24:1-2

 பரம்பரை வழக்கங்கள் மற்றும் சைத்தானின் வசீகரிப்பு ஆகியவற்றால் செயலற்றுப்போன “முஸ்லிம்” அறிஞர்கள், திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால், அதற்கு தண்டனையாக “கல்லெறிந்து கொல்லுதலை” ஏற்படுத்திவிட்டனர்!!!

 

கடவுளுக்கு கீழ்படியுங்கள் மேலும் தூதருக்கு கீழ்படியுங்கள்

கடவுளுக்கு கீழ்படிவது என்பது குர்ஆனிற்கு கீழ்படிவது என்றும், அதே சமயம் தூதருக்கு கீழ்படிவது என்பது ஹதீஸிற்கு கீழ்படிவது என்றும் கோடிக்கணக்கான முஸ்லிம்களை நம்ப வைத்து ஏமாற்றுவதில் சைத்தான் வெற்றியடைந்துவிட்டான்.    

 

இந்த சைத்தானிய சூழ்ச்சி பிரபலம் அடைவதற்கு உதவியது எது என்றால், முஸ்லிம் மக்களிடையே பொதுவாக காணப்படும் குர்ஆனை பற்றிய அறியாமையும், மேலும் சட்டவியல் மற்றும்/அல்லது மார்க்க வழிகாட்டுதலின் ஒரே ஆதாரமாக குர்ஆன்தான் இருக்க வேண்டும் என்கின்ற இறை கட்டளைகளில் அவர்கள் கவனம் செலுத்த தவறியதுமே ஆகும்.


குர்ஆன் முஹம்மதுடைய வாய் வழியாகவே நமக்கு வந்தது, மேலும் அது அல்லாஹ்விடமிருந்து நேரடியாக நமக்கு வந்து விடவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்வதற்கு, நாம் சிறிய அளவு சிந்தித்தாலே போதுமானது. நாம் தூதருக்கு கீழ்படிய வேண்டும் என்பது கட்டளையாக இருப்பதால், அவர் கூறுகின்ற அல்லாஹ்வின் வார்த்தைகளுக்குதான் நாம் கீழ்படிய வேண்டும்.     

முந்தைய வேதங்கள் அனைத்தும், “எவர் ஒருவர் தூதருக்கு கீழ்படிகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தவர் ஆவர்” என்கின்ற இதே உண்மையை கூறியுள்ளன. சந்தேகத்திற்கிடமின்றி தூதர் என்பவர் அல்லாஹ் அல்ல என்பதால், இந்த கட்டளையானது தூதரால் கூறப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு கீழ்படிவதையே தெளிவாக குறிப்பிடுகின்றது.

 

ஆகையால், அறிவுடைய மற்றும் பாக்கியசாலிகளான நம்பிக்கையாளர்கள், ஹதீஸ் & சுன்னத் ஆகியவை அல்லாஹ்வின் பாதையிலிருந்து மக்களை திசை திருப்புவதை குறிக்கோளாகக் கொண்ட சைத்தானிய இட்டுக்கட்டல்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்கின்றனர்.

முஹம்மதுடைய ஹதீஸ்கள் எனப்படுபவை முஹம்மதுடையவை அல்ல

மாறாக, அவை நபியை ஒருபோதும் பார்த்திராத ஆண்கள் மற்றும் பெண்களின் ஹதீஸ்களாக (கூற்றுகள்) இருக்கின்றன. உண்மையில் அவர்களுடைய பாட்டனார்களின் பாட்டனார்களே கூட நபியை ஒருபோதும் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஹதீஸின் முதல் புத்தகமான புஹாரியை எழுதிய புஹாரி என்பவர், முஹம்மது நபியின் மரணத்திற்கு பின்னர் 200 ஆண்டுகள் கழித்துதான் பிறந்தார் என்பது நன்கு அறியப்பட்டதாகும். புஹாரி, அவருடைய ஹதீஸ்களின் புத்தகத்தை எழுதியபோது, ஆதாரங்களாக தான் அறிந்திருந்த மனிதர்களை சந்திப்பவராக இருந்தார். தன்னுடைய ஆதாரம் உண்மையானவர் என்பதையும், மேலும் நன்னெறியான ஆண் அல்லது பெண் என அறியப்பட்டவர் என்பதையும் உறுதி செய்த பிறகு, அவரிடம் புஹாரி,” “உங்களுக்கு ஏதேனும் ஹதீஸ் தெரியுமா? என்று கேட்பார். அந்த நபர் “ஆம்” என்று பதிலளித்தவராக அப்போது பின்வருமாறு “ஹதீஸை” விவரிக்க தொடங்குவார் :


நான் என் தந்தையிடம் செவியுற்றேன், அல்லாஹ் அவருடைய ஆன்மாவிற்கு அருள் பாலிப்பாராக, கூறினார், அவர் தனது மூத்த சகோதரரிடம் செவியுற்றதாக, அல்லாஹ் அவருடைய ஆன்மாவிற்கு அருள்பாலிப்பாராக, கூறினார், அவர் தனது பாட்டியுடன் அமர்ந்து இருந்தார், அல்லாஹ் அவருடைய ஆன்மாவிற்கு அருள் பாலிப்பாராக, மேலும் அவர் அவரிடம் கூறினார், ஒருநாள் தனது பெரிய மாமாவுடன் விருந்தில் இருந்ததாகவும், அல்லாஹ் அவருடைய ஆன்மாவிற்கு அருள்பாலிப்பாராக, அவர் அவருடைய தாய் வழி பாட்டனார் இமாம் அஹமது இப்னு முஹம்மது அல்-அமாவியை அறிந்திருந்ததாகவும், அவர் தனது பாட்டனார் நபியின் மிக நெருங்கிய கூட்டாளியான உமர் பின் காலித் அல்-யமானியை சந்தித்த தனது மிகவும் மூத்த மாமாவிடம் இருந்து செவியுற்றதாக அவரிடம் கூறினார், நபி, அவர்மீது அமைதி உண்டாவதாக (ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம்) கூறினார்.....


இவ்விதமாக ஹதீஸ் என்பது நபி மரணமடைந்து எட்டு தலைமுறைகளுக்கு பின்னர் வாழ்ந்த, மேலும் தான் நபியைப் பற்றி செவியுற்றதாக உரிமை கோரிய ஆணுடைய அல்லது பெண்ணுடைய கூற்றுகளே ஆகும்.


இதற்கு நேர்மாறாக, குர்ஆன் அல்லாஹ்வின் தவறிழைக்காத வார்த்தை என்பதற்கு மறுக்க முடியாத கண்கூடான சான்றை நாம் கொண்டிருக்கின்றோம், மேலும் இது முஹம்மது நபியால் கூறப்பட்டதாகும். ஆகையால், நாம் குர்ஆனிற்கு, வேறெதுவுமில்லாது குர்ஆனிற்கு மட்டும் கீழ்படிவதன் மூலம் தூதருக்கு கீழ்படிகின்றோம்.

ஹதீஸிற்கு கீழ்படிவது தூதருக்கு கீழ்படிவது அல்ல

மாறாக, இது “ஹதீஸ்களை” கூறிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கீழ்படிவது ஆகும்.
“நபியின் ஹதீஸ்” என்று அழைக்கப்படுபவைகளுக்கு கீழ்படிவது உண்மையில், தாங்கள் பிறப்பதற்கு 200 வருடங்களுக்கு முன்னர், நபி ஏதோ ஒன்றை கூறியிருந்தார் என்று எண்ணிக் கொண்ட முட்டாள்தனமான ஒரு மக்கள் கூட்டத்திற்கு கீழ்படிவது ஆகும்.


இவ்விதமாக, குறிப்பிடப்பட்ட ஹதீஸைக் கூறுபவர், உதாரணத்திற்கு அப்பாஸ் இப்னு யாசர் என்றால், அப்போது அப்பாஸ் இப்னு யாசரால் கூறப்பட்ட அந்த ஹதீஸிற்கு கீழ்படிவது, உண்மையில் அப்பாஸ் இப்னு யாசருக்கு கீழ்படிவதாக ஆகுமே தவிர நபிக்கு கீழ்படிவதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


நிச்சயமாக முஹம்மது நபியால் கூறப்பட்டதும் மேலும் மறுக்க முடியாத கண்கூடான சான்றைக் கொண்டு ஆதரவு அளிக்கப்பட்டிருப்பதுமான குர்ஆனிற்கு மட்டும் கீழ்படிவதுதான் முஹம்மது நபிக்கு உண்மையிலேயே கீழ்படிவது ஆகும்.

இந்த உண்மைகள், திரும்ப திரும்ப கூறப்படுகின்ற குர்ஆனுடைய கூற்றுகளான “அறிவுத்திறன் உடையவர்கள் மட்டுமே கவனத்தில் கொள்வர்” என்பதை விளக்குகின்றன.


எந்த ஒரு மத்தியஸ்தரோ அல்லது விவரிப்பவரோ இன்றி முஹம்மதுடைய வாய்வழியாக குர்ஆன் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. குர்ஆனானது, அது கூறப்பட்ட தருணத்தில், சர்வ ஜாக்கிரதையாக அதை எழுதிய “வெளிப்பாடுகளை எழுதுபவர்களின்” காதுகளுக்கு முஹம்மதுடைய வாய் வழியாக நேரடியாக வந்தது.

 

இவ்விதமாக, முஹம்மதுடைய உண்மையான ஹதீஸ் குர் ஆன் மட்டுமே ஆகும். இன்னும் கூடுதலாக, முஹம்மதால் கூறப்பட்ட (15:9) படி தன்னுடைய வார்த்தைகளின் நிலையான பாதுகாப்பிற்கு சர்வ வல்லமையுடையவர் உத்தரவாதம் அளித்திருக்கின்றார்.

மாபெரும் ஆபத்து

إِنَّ الَّذِينَ كَفَرُوا يُنَادَوْنَ لَمَقْتُ اللَّهِ أَكْبَرُ مِنْ مَقْتِكُمْ أَنْفُسَكُمْ إِذْ تُدْعَوْنَ إِلَى الْإِيمَنِ فَتَكْفُرُونَ

قَالُوا رَبَّنَا أَمَتَّنَا اثْنَتَيْنِ وَأَحْيَيْتَنَا اثْنَتَيْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوبِنَا فَهَلْ إِلَى خُرُوجٍ مِنْ سَبِيلٍ

ذَلِكُمْ بِأَنَّهُ إِذَا دُعِيَ اللَّهُ وَحْدَهُ كَفَرْتُمْ وَإِنْ يُشْرَكْ بِهِ تُؤْمِنُوا فَالْحُكْمُ لِلَّهِ الْعَلِيِّ الْكَبِيرِ

(தீர்ப்பு நாளன்று) நம்ப மறுப்பவர்களிடம், “ உங்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் சொந்த வெறுப்பை விடவும் உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள வெறுப்பு மிகவும் அதிகமானதாகும். ஏனெனில் நம்பிக்கை கொள்ளுமாறு நீங்கள் அழைக்கப்பட்டீர்கள், ஆனால் நீங்கள் நம்பமறுப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்” என்று கூறப்படும்.


அவர்கள், “எங்கள் இரட்சகரே, நீர் எங்களை இருமுறை மரணத்தில்* ஆழ்த்தினீர். மேலும் இரண்டு வாழ்வுகளை எங்களுக்குக் கொடுத்தீர்; இப்போது நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டு விட்டோம். இதிலிருந்து வெளியேற ஏதேனும் வழி உண்டா?” என்று கூறுவார்கள்.


இது ஏனெனில் கடவுள் மட்டும் என்று வாதிட்ட போது, நீங்கள் நம்பமறுத்தீர்கள், ஆனால் அவருடன் மற்றவர்களும் சேர்த்து கூறப்பட்ட போது நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள். ஆகையால் கடவுள்-ன் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது, அவர் மிகவும் உயர்ந்தவர், மிகவும் சிறந்தவர்.

அல்-குர்ஆன் 40:10-12

அல்லாஹ் மட்டும் என்று கூறப்படும் பொழுது, நீங்கள் நம்பிக்கை கொள்கின்றீர்களா? அல்லது உங்களுக்கு அவருடன் கூட மற்றவர்களையும் சேர்த்து கூறப்படுதல் வேண்டுமா?

மாபெரும் ஆபத்து

فَلَمَّا جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَتِ فَرِحُوا بِمَا عِنْدَهُمْ مِنْ الْعِلْمِ وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِءون

فَلَمَّا رَأَوْا بَأْسَنَا قَالُوا ءامَنَّا بِاللَّهِ وَحْدَهُ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهِ مُشْرِكِينَ

فَلَمْ يَكُ يَنْفَعُهُمْ إِيمَنُهُمْ لَمَّا رَأَوْا بَأْسَنَا سُنَّت اللَّهِ الَّتِي قَدْ خَلَتْ فِي عِبَادِهِ وَخَسِرَ هُنَالِكَ الْكَفِرُونَ

அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்ற பொழுது, அவர்கள் பாரம்பர்யமாகப்  பெற்ற அறிவில் அவர்கள் மகிழ்ந்திருந்தனர், மேலும் அவர்கள் கேலி செய்து கொண்டிருந்த அதே விஷயங்கள் அவர்களுடைய வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தன.

அதனைத் தொடர்ந்து, நம் தண்டனையை அவர்கள் கண்டபொழுது, அவர்கள், “கடவுள் மட்டுமே என்பதில் நாங்கள் இப்போது நம்பிக்கை கொள்கின்றோம், மேலும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருந்த இணைத் தெய்வவழிபாட்டை இப்போது நாங்கள் நிராகரிக்கின்றோம்“ என்று கூறினார்கள்.


நம் தண்டனையை அவர்கள் கண்டுவிட்டவுடன்,  அவர்களுடைய நம்பிக்கை அப்போது அவர்களுக்குச் சிறிதளவும் உதவிட இயலவில்லை. அவருடைய படைப்புகளை நிர்வகிப்பதற்காக நிலை நாட்டப்பட்டுள்ள கடவுள்-ன் வழிமுறை இத்தகையதேயாகும்; நம்பமறுப்பவர்கள் எப்பொழுதும் அழிந்தே போவார்கள்.

அல்-குர்ஆன் 40:83-85

உங்களுடைய பெற்றோர்கள், மூத்தவர்கள், அல்லது அறிஞர்கள் ஆகியோரிடம் இருந்து பரம்பரை பரம்பரையாக பெற்ற அறிவை கொண்டு (ஹதீஸ் & சுன்னத்) நீங்கள் சந்தோஷம் மற்றும் திருப்தியை அடைகின்றீர்களா?

 

அல்லாஹ்வுடைய போதனைகளுக்கு ஆதரவாக, இத்தகைய அறிவை கைவிட நீங்கள் விரும்புகின்றீர்களா? அல்லது உங்களுக்கு அது மிகவும் காலதாமதம் ஆகுமா?

 

மாபெரும் அளவுகோல்

لِيُكَفِّرَ اللَّهُ عَنْهُمْ أَسْوَأَ الَّذِي عَمِلُوا وَيَجْزِيَهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ الَّذِي كَانُوا يَعْمَلُونَ

கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர் களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும்போது, அவர்கள் திருப்தி அடைகின்றனர்* (39:45).

 

தெளிவுபடுத்துதல் : நாம் ஏன் இங்கிருக்கின்றோம்?

நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை நாம் புரிந்து கொள்வோமேயானால் எதிரெதிரான குர்ஆன் மற்றும் ஹதீஸ் & சுன்னத் ஆகியவற்றின் முழு விஷயமும் தெளிவானதாக ஆகிவிடும்.


நாம் ஒரே ஒரு நோக்கத்திற்காகத்தான் இந்த உலகத்தில் வாழ்கின்றோம். குர் ஆனில் (67:1-2 & 51:56) கூறியுள்ளபடி அல்லாஹ்வை மட்டும் வழிபட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் நாம் படைக்கப் பட்டிருக்கின்றோம்.    அல்லாஹ்வுடன் ஒரு பங்காளியாக, அல்லாஹ்வுடன் ஒரு தெய்வமாக இருக்க சைத்தான் விரும்பினான். அதன் விளைவாக சைத்தானுடைய கலகம் விளைவிக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக அல்லாஹ் ஆதமை படைத்தார். மேலும் எந்த பங்காளிகளின் தேவையுமின்றி, அவரை மட்டும் நம்மால் வழிபட முடியும் என்பதை சைத்தான் மற்றும் வானவர்கள் அனைவருக்கும் காண்பிப்பதற்காக அல்லாஹ் நம்மை படைத்தார்.


ஆகையால், நம்முடைய வாழ்க்கையின் நோக்கம் அல்லாஹ்வை மட்டும் வழிபடுவதே ஆகும். அதனால்தான் மன்னிக்க முடியாத ஒரே குற்றமாக இணை தெய்வ வழிபாடு இருக்கின்றது. அதன் காரணமாகவே எவர் ஒருவரையோ அல்லது எந்த ஒன்றையோ அல்லாஹ்வுடன் நாம் இணை தெய்வவழிபாடு செய்கின்ற பொழுது, நாம் சோதனையில் தோல்வி அடைகின்றோம்.


நாம் முஹம்மதையோ அல்லது இயேசுவையோ அல்லது மேரியையோ அல்லது எந்தவொரு மகானையோ அல்லது எந்தவொரு இமாமையோ அல்லது எவர் ஒருவரையோ அல்லது எந்த ஒன்றையோ இணை தெய்வ வழிபாடு செய்யாது அல்லாஹ்வை மட்டும் வழிபடுவதில் வெற்றி அடைந்தால் மட்டுமே நாம், நம்முடைய வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவு செய்ய இயலும்.


அல்லாஹ்வைத் தவிர முஹம்மதிடம் இருந்தோ அல்லது வேறு எந்த ஆதாரத்திடம் இருந்தோ “மார்க்க” போதனைகளை நாம் தேடும் பொழுது, அல்லாஹ்விற்கு ஒரு பங்காளி தேவை என்று உரிமை கோருகின்ற  சைத்தானுக்கு ஆதரவு அளித்தவர்கள் ஆகின்றோம். ஆகையால், அல்லாஹ்வை மட்டும் வழிபடுவர்கள், அல்லாஹ்வின் போதனைகள் மற்றும் உபதேசங்களை மட்டுமே பின்பற்றுகின்றார்கள். இந்த புத்தகம் முழுவதும் காட்டியுள்ளபடி, குர்ஆனில் அல்லாஹ்வுடைய போதனைகள் முழுமையானதாகவும், மிகச் சரியானதாகவும் மேலும் முற்றிலும் விவரிக்கப்பட்டதாகவும் இருக்கின்றன.

 

 

 இறுதியாக : மிக முக்கியமான கேள்வி

உங்களுடைய மனதில் தனித்தவராக அல்லாஹ் தொடர்ந்து நீடித்திருக்க முடியுமா???


அல்லது உங்களுடைய மனதில், தான் நினைவு கூரப்படுவதற்கும் மேலும் வழிபடப்படுவதற்கும் அல்லாஹ்விற்கு முஹம்மது தேவையாக இருக்கின்றாரா???


உங்களுடைய மனதில் அல்லாஹ் மட்டும் தொடர்ந்து நீடித்திருக்க முடியுமா?


அல்லது உங்களுடைய மனதில் முஹம்மது, இயேசு, மேரி அல்லது சில மகான்கள் போன்றோர் ஒரு பங்காளியாக அல்லாஹ்விற்கு தேவைப்படுகின்றனரா?


முஹம்மதோ, இயேசுவோ, மேரியோ அல்லது எந்தவொரு மகானோ அல்லது எவர் ஒருவரோ அல்லது எந்த ஒன்றோ இல்லாது அல்லாஹ் மட்டும் என்பதை பற்றி நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் முழுமையான மகிழ்ச்சியுடனும் மற்றும் திருப்தியுடனும் இருந்திருப்பீர்களா?


அல்லாஹ் மட்டும் என்பது குறித்து பேசுவதால் நீங்கள் கோபம் அடைகின்றீர்களா?


தொடர்ந்து அல்லாஹ் மட்டும் என்பது குறித்து நான் பேசுகின்ற பொழுது, இது உங்களுக்கு கோபமூட்டுகின்றதா? அல்லாஹ்வுடன் சேர்த்து மற்ற பெயர்களையும் நீங்கள் கேட்க வேண்டுமா? உங்களுடைய மனதில் அல்லாஹ் மட்டும் தொடர்ந்து நீடித்திருக்க முடியுமா?


அல்லாஹ் மட்டும் என்பதைப் பற்றிய எனது பேச்சை நான் மீண்டும், மீண்டும் தொடர்கின்ற பொழுது, நீங்கள் ஏதேனும் வெறுப்பை உணர்கின்றீர்களா? அல்லது அல்லாஹ் மட்டும் என்பது பற்றிய பேச்சைக் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகின்றீர்களா???


மகத்தான குர்ஆனிய. அளவுகோலின் அடிப்படையில், 39:45ல் கூறப்பட்டுள்ளபடி, இந்த கேள்விகளுக்கான உங்களுடைய பதில்கள் தான், உங்களைப் பற்றியும் மேலும் உங்களுடைய விதியைப் பற்றியும் நீங்கள் அறிந்து கொள்கின்ற திறவுகோலை வழங்குகின்றன.

அல்லாஹ்வுடைய வழிகாட்டுதலை பின்பற்று பவர்களுக்கு, வெற்றி, ஆரோக்யம், செல்வம், மன அமைதி மற்றும் பரிபூரணமான மகிழ்ச்சி ஆகியவை அல்லாஹ்வால் முற்றிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக இருக்கின்றன (குர் ஆன் 2:38, 3:160; 22: 38,40; 24:55; 30:47 & 40:51). இருப்பினும், 3,000,000 இஸ்ரேலியர்கள், 150,000,000 அரேபியர்களை தொடர்ச்சியாக தோற்கடிப்பதை நாம் காண்கின்றோம். இந்தியா பாகிஸ்தானை தொடர்ச்சியாக தோற்கடிப்பதை நாம் காண்கின்றோம். ரஷ்யா எளிதாக ஆப்கானிஸ்தானிற்குள் அத்து மீறி நுழைவதை நாம் காண்கின்றோம். பூமியின் மீது “முஸ்லிம்” நாடுகள் மிகவும் ஏழ்மையானவைகளாகவும், மிகவும் துன்பகரமான வைகளாகவும், மிக குறைந்த அளவே வளர்ச்சி அடைந்த வைகளாகவும் மேலும் மிகவும் கொடுங்கோலான ஆட்சி நடைபெறுகின்ற நாடுகளாகவும் இருக்கின்றன.


இந்த புத்தகம், வெளிப்படையான இந்த முரண்பாட்டை விளக்குகின்றது, மேலும் அனைத்து தேச மக்களுக்கான மற்றும் ஒவ்வொரு தனி நபருக்குமான முழுமையான வெற்றி, ஆரோக்யம், செல்வம், மன அமைதி மற்றும் பரிபூரணமான மகிழ்ச்சி ஆகியவற்றிற்கான உறுதியான / நம்பகமான பாதையையும் சுட்டிக் காட்டுகின்றது.

தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோர் :

கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர் சங்கம்