நிச்சயமாக, நம்பிக்கை கொண்டோரும்,
யூதர்களாக இருப்போரும், கிறிஸ்தவர்களும்,
மேலும் மாறியவர்களும், எவரொருவர்
(1) கடவுள் மேல் நம்பிக்கை கொண்டு, மேலும்
(2) மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டு, மேலும்
(3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றாரோ
அவர்கள் தங்கள் வெகுமதியை
தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை,
அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
[2:62, 5:69]
In co-operation with :
International Community of Submitters
Masjid Tucson
P.O. Box 43476
Tucson, AZ 85733-3476
Telephone : (520) 323 - 7636
Website :www.masjidtucson.org
              www.masjidchennai.com
email : info@masjidtucson.org
தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோர் :
கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர் சங்கம்
பதிவு எண். 107/2007
சென்னை - 600 001.

இணையதளம்: www.masjidchennai.com
மின்னஞ்சல்:info@icschennai.com


குர்ஆன் - இறுதி ஏற்பாடு

அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலப் பதிப்பின் தமிழ் மொழியாக்கம்

வெளியிட்டோர்:
கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர் சங்கம்
சென்னை

இந்த பதிப்பிற்கான குறிப்புகள்

டாக்டர். ரஷாத் கலீஃபா (1935-1990) அவர்களால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த குர்ஆன் தான், முதன் முதலில் தன்னுடைய தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்ட ஒரு நபரால் மொழியாக்கம் செய்யப்பட்டதாகும். இதன் ஆங்கிலமானது தெளிவாகவும் மேலும் படிப்பதற்கு எளிதாகவும் தனிச்சிறப்புடன் இருக்கின்றது. மிக முக்கியமான இந்தப் பணியில், அரபிக் குர்ஆனிற்குள் இருந்ததொரு சிக்கலான மற்றும் முழுவதும் பரவி இருந்த கணிதரீதியிலான கட்டமைப்பை - குர்ஆனின் கணிதரீதியிலான அற்புதத்தை - கண்டு பிடிப்பதற்கு அவர் அருள் பாலிக்கப்பட்டார். கூடுதலான விவரங்களை அவருடைய அறிமுகவுரை, அடிக்குறிப்புகள் மற்றும் பின் இணைப்புகள் தருகின்றன.

1990, ஜனவரி 31ம் நாளன்று விடியற்காலைக்கு சிறிது நேரம் முன்பாக டாக்டர். ரஷாத் கலீஃபா அவர்கள், அந்த இரவில் முன்னதாகவே மஸ்ஜிதிற்குள் அத்து மீறி நுழைந்து அவருடைய வருகைக்காக காத்திருந்த ஒன்று அல்லது அதற்கும் அதிகமான நம்ப மறுப்பவர்களால் கொல்லப்பட்டார். கடவுளின் அருளால் அவர், தன்னுடைய மொழிபெயர்ப்பின் பெரும் பகுதியை மறுசீராய்வு செய்து நிறைவு செய்திருந்தார், மேலும் அவருடைய பின் இணைப்புகளுக்கும் சில மாற்றங்களை செய்திருந்தார். இன்னும் அவர் அச்சுப்பார்வைப்படி திருத்துதலில் (ஞசடிடிக சுநயனiபே) ஈடுபட்டிருந்த மக்களிடம், தான் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டிருந்த குறிப்பிட்ட மாற்றங்கள் குறித்த விவரங்களையும் கொடுத்திருந்தார். அவரால் குறிப்பிடப்பட்டிருந்த அந்த மாற்றங்கள் மற்றும் வெளிப்படையான இலக்கணப் பிழைகள் அல்லது அச்சடிப்பு பிழைகள் தவிர இந்தப் புத்தகத்தின் பிரதானப் பகுதி தொடப்படாததாகவே விடப்பட்டுள்ளது.

டாக்டர். கலீஃபா அவர்களின் காலத்திலும் மேலும் மிக சமீபத்திய காலங்களிலும் சில அரபி வசனங்களுடைய அவருடைய மொழிபெயர்ப்பில் மாற்றம் வேண்டும் என்கின்ற ஆலோசனைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 1978ல் குர்ஆனின் முதல் இரண்டு சூராக்களின் மொழிபெயர்ப்பிற்கானஅறிமுகவுரையில், “குர்ஆனின் கருத்துக்களை மொழியாக்கம் செய்வதே தனது நோக்கமாக இருந்தது” என்று டாக்டர். கலீஃபா குறிப்பிட்டுள்ளார். இவ்விதமாக, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று அவர்கருதவில்லை. ஆனால், ஒரு வசனத்தின் உண்மையான கருத்தை எடுத்துச் சொல்வதில் மிகவும் கவனமாக இருந்தார். குறிப்பிட்ட இந்த வசனங்களை டாக்டர். கலீஃபா அவர்கள் எவ்வாறு அல்லது எவ்விதம் சரிபார்த்தார் என்பதை அறிந்து கொள்வதற்கு நமக்கு வழி இல்லை. ஆகையால், வருங்கால தலைமுறையினருக்காக அவர் அவற்றை எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்துள்ளாரோ அவ்வாறே நாம் விட்டுவிடுவோம்.

தன்னுடைய வாழ்நாளின் கடைசி வாரங்களின் போது டாக்டர். கலீஃபா அவர்கள், சப்மிட்டர்ஸ் பெர்ஸ்பெக்டிவ் என்கின்ற அவரது மாதாந்திர செய்தி மடலின் ஜனவரி மற்றும் பிப்ரவரி 1990க்கான வெளியீடுகளை முன்னதாகவே எழுதி அறிவித்திருந்தார். இந்த வெளியீடுகள் அவருடைய மொழி பெயர்ப்பின் பின் இணைப்புகள் 15 மற்றும் 17 உடன் நேரடி தொடர்புடைய முக்கியமான புதிய தகவல்களைக் கொண்ட கட்டுரைகளை கொண்டிருந்தது. அந்த செய்தி மடல்களில் உள்ள இந்த தகவல்களை சுட்டிக் காட்டுகின்ற அவருடைய அடிக்குறிப்புகளையும் கூட அவர் மாற்றி இருந்ததால், அந்த தகவல்களை அவருடைய கட்டுரைகளில் இருந்து நேரடியாக எடுத்துக் கூறும் பொருட்டு பின் இணைப்புகளில் அவற்றை நாங்கள் இணைத்திருக்கின்றோம்.

டாக்டர். கலீஃபா உயிர்த்தியாகம் செய்ததற்குப் பின்னரும் குர்ஆனின் கணித ரீதியிலான கண்டுபிடிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்பதில் நாங்கள் சந்தேகம் அற்றவர்களாக இருந்தோம். கடவுள் நாடினால் அவை தொடர்ந்து மற்ற வேலைகளிலும் வெளியிடப்படும்.

டாக்டர். ரஷாத் கலீஃபா இறந்து விட்டார், ஆனால் கடவுளின் தூய்மைப்படுத்தப்பட்ட செய்தி உயிருடன் உள்ளது, மேலும் இறுதியான முடிவுவரை தொடர்ந்து இவ்வுலகத்தை அது வழிநடத்தும். அது தான் குர்ஆன்.

அவர்கள் இறந்து விடுவதைப் போல் நிச்சயமாக நீரும் இறந்துவிடுவீர். (39:30)

கடவுள் : அவரைத் தவிர தெய்வம் இல்லை; உயிருடன் இருப்பவர், நிரந்தரமானவர் (3:2-3)

கடவுளுக்கு மட்டும் அடிபணிந்தோர் சங்கம்    
சென்னை    பிரகடனம் செய்கின்றது மக்கள் அனைவருக்கான
ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே மார்க்கம

      உலகின் அனைத்து மார்க்கங்களும்- யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்துமதம், புத்தமதம் இன்னும் மற்றவைகள் - புதுமைகள், பரம்பரை வழக்கங்கள், மேலும் வேதம் வழங்கப்பட்டவர்கள் மற்றும் புனிதர்கள் போன்றவர்களை இணைத் தெய்வ வழிபாடு செய்தல் மூலமாக கடுமையாக சிதைக்கப் பட்டுவிட்டன. பழைய ஏற்பாடு (மல்கியா 3:1), புதிய ஏற்பாடு (லூக்கா 17:22-36 & மத்தேயூ 24:27) மற்றும் இந்த இறுதி ஏற்பாடு (3:81) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளபடி  அனைத்து வேதங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்ட பின்னர் கடவுளிள் உடன்படிக்கைத் தூதரை அனுப்புவது கடவுளின் திட்டம் ஆகும். கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் முக்கியமான கடமையானது, இவ்வுலகை படைத்தவர் மற்றும் பாதுகாப்பவரிடம் இருந்து வந்துள்ள வேதங்களைத் தூய்மைப்படுத்தி மேலும் அவற்றை இவ்வுலகிற்கு எல்லாவற்றிற்கும் பொருந்துகின்ற ஒரே செய்தியாக ஒருங்கிணைப்பதாகும்.

       இந்த முக்கியமான வேத முன்னறிவிப்பு இப்போது நிறைவடைந்து விட்டது. கடவுளின் உடன்படிக்கைத் தூதர் திணற அடிக்கின்ற கண்கூடான சான்றுகளின் ஆதரவோடு  வந்துவிட்டார் (பின் இணைப்பு இரண்டைப் பார்க்கவும்).  தூய்மைப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் நடவடிக்கை தொடங்கி விட்டது.  கடவுளின் திட்டத்திற்கு கண்களுக்குத் தெரியாத கடவுளின் படைகள் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றது,  மேலும் இந்த தெய்வீகத் திட்டத்தின் எண்ணற்ற பரிமாணங்கள் பொய்யான மார்க்கவாதிகளை சமீபத்தில் வெளிப்படுத்தியது  மேலும் பெர்லின் சுவர், இரும்புத்திரை மற்றும் மூங்கில் திரை போன்ற சுதந்திரத்திற்கு எதிரான தடைகளை நீக்கியதில் தெளிவாக வெளிப்படுகின்றது.

      இனி மேல் கடவுளிடம் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற ஒரே ஒரு மார்க்கம் - அடிபணிதல் ஆகும்.  கடவுளுக்கு அடிபணிந்து மேலும் வழிபாட்டை கடவுளுக்கு மட்டும் அர்ப்பணிக்கின்ற எவரொருவரும் ஒரு “அடிபணிந்தவர்” ஆவார்.  இவ்விதமாக, ஒருவர் ஒரு யூத அடிபணிந்தவராகவோ, ஒரு கிறிஸ்தவ அடிபணிந்தவராகவோ, பௌத்த மதத்திய அடிபணிந்தவராகவோ, ஒரு இந்து அடிபணிந்தவராகவோ அல்லது ஒரு முஸ்லிம் அடிபணிந்தவராகவோ இருக்கலாம்.

கடவுளிடம் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மார்க்கம் “அடிபணிதல்” ஆகும்.[3:19]
அடிபணிதல் அல்லாததை தனது மார்க்கமாக எவரேனும் தேடினால், அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது, மேலும் மறுவுலகில்,அவர் நஷ்டவாளிகளுடன் இருப்பார். [3:85]

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்: அவருக்குச் செவி கொடுப்பீர்களாக. (உபாகமத்தில் மோஸஸ் 18:15)

உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்: நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.(உபாகமம் 18:18-19)

நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன். அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச்  சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்கு தந்தருளுவார். (யோவானில்  இயேசு 14:16-17)

சத்திய ஆவியாகிய அவர் வரும் போது, சகல சத்தியதிற்குள்ளும் உங்களை நடத்துவார்: அவர் தம்முடைய சுயமாய் பேசாமல் , தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். (யோவான் இயேசு 16:13)

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய்,  வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்?

அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்?

அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும் .....

அவர் உட்கார்ந்து சுத்திகரித்துக் கொண்டிருப்பார்........ (மல்கியா 3:1-3)

கடவுள் மட்டும் என்று கூறப்படும் பொழுது, மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன.  ஆனால் அவருடன் மற்றவர்களை சேர்த்து கூறப்படும் போது, அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.     (39:45)

13 ஹி.மு. (ஹிஜ்ரிக்கு முன்னர்) (கி.பி.610) ரமலானின் 27- வது இரவில் வேதம் வழங்கப்பட்டவராகிய முஹம்மது (அவரது ஆன்மா - அந்த மெய்யான நபர் - உடல் அல்ல) இந்த பூமி கிரகத்திலிருந்து பல லட்சக்கணக்கான ஒளி வருடங்கள் பயணிக்கும் தொலைவிலுள்ள, மிகவும் உயரமான சாத்தியக் கூறுடைய இடத்திற்கு வரவழைக்கப்பட்டார், மேலும் இந்தக் குர் ஆன் அவருடைய இதயத்தில் வைக்கப்பட்டது.  (2:185, 17:1, 44:3, 53:1-18, 97:1)

அதன் தொடர்ச்சியாக, இந்த குர் ஆன் கப்ரியேலுடைய துணை கொண்டு முஹம்மதுடைய நினைவுத் திறனுக்குள் ஓர் 23 ஆண்டு காலத்திற்கும் மேலாக வெளியிடப்பட்டது கி.பி. 610 முதல் 632 வரை (17:106) . வெளியிடப்படும் தருணத்தில் முஹம்மது சர்வ ஜாக்கிரதையாக தன்னுடைய சொந்தக் கையால் அதனை எழுதிக் கொண்டார்  (பின் இணைப்பு 28).  முஹம்மது விட்டுச் சென்றது, கடவுளால் கட்டளையிடப்பட்ட வரிசை  முறைப்படி, வெளிப்பாடுகளை வைப்பது தொடர்பான விபரமான உபதேசங்களுடன், இறக்கப்பட்ட வரிசைப்படி வெளிப்பாடுகள் எழுதப்பட்ட முழுமையான குர் ஆனைத் தான்.


     மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பொழுது வேதம் வழங்கப்பட்டவரை இணைத் தெய்வ வழிபாடு செய்த அந்த எழுதுபவர்கள் மதினாவில் கடைசியாக வெளிப்படுத்தப்பட்ட சூராவாகிய சூரா 9ன் கடைசியில் இரண்டு வசனங்களைச் சேர்த்து விட்டனர்.  இந்த இறை நிந்தனையான செயல், அலி இப்னு அபுதாலிப் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஒருபுறம் மேலும் குர் ஆனைச் சிதைத்தவர்கள் மறுபுறம் என இவர்களுக்கிடையில் ஓர் 50 ஆண்டு கால யுத்தத்திற்கு காரணமானது. அந்த யுத்தமானது ஹுசைன் இப்னு அலி மற்றும் அவருடைய குடும்பத்தார் கர்பலாவில் உயிர்த்தியாகம் செய்த போது முடிவடைந்தது.


   (கி.பி 684ல் மரணமடைந்த) உமையாதின் ஆட்சியாளனாக இருந்த மர்வான் இப்னு அல் - ஹக்கம் என்பவன் “புதிதாக சர்ச்சைகள் திடீரென்று தோன்றிவிடும் என்ற அச்சத்தால் ” முஹம்மதுடைய கையால் எழுதப்பட்ட அந்த மூலக் குர்ஆனை (கி.பி. 684ல் மரணமடைந்த) உமையாதின் ஆட்சியாளனாக இருந்த மர்வான் இப்னு அல் - ஹக்கம் என்பவன் அழித்துவிட்டான்.


            9:128-129 ஆகியவை குர் ஆனைச் சேர்ந்தது அல்ல என்பதற்கு கடவுளின் உடன்படிக்கைத் தூதர் திணறடிக்கின்ற   சான்றுகளை வழங்கியுள்ளார் (பின் இணைப்பு 24).  இந்த இரண்டு பொய்யான வசனங்களை நீக்கியதன் மூலம் முடிவாக குர் ஆன் தன்னுடைய பழைய நிலையை அடைந்து விட்டது.  நம்முடைய தலைமுறைதான் குர் ஆனை அதன் தூய்மைப் படுத்தப்பட்ட மேலும் நிறைவு செய்யப்பட்ட வடிவில் எப்பொழுதும்  பெறுகின்ற முதல் தலைமுறையாகும் (பின் இணைப்புகள் 1 மற்றும் 28 ஐப் பார்க்கவும்).