விரட்டப்பட்ட சாத்தானிடம் இருந்து , கடவுளிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.
கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

(1:1) In the name of GOD, Most Gracious, Most Merciful.

(1:1) கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَلَمِينَ

(1:2) Praise be to GOD, Lord of the universe.
(1:2) புகழ் அனைத்தும்  கடவுள்-க்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.

الرَّحْمَنِ الرَّحِيمِ

(1:3) Most Gracious, Most Merciful.
(1:3) மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.

مَلِكِ يَوْمِ الدِّينِ

(1:4) Master of the Day of Judgment.
(1:4) தீர்ப்பு நாளின் அதிபதி.

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

(1:5) You alone we worship;You alone we ask for help.
(1:5)உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்; உம்மிடம் மட்டுமே  நாங்கள்  உதவி கேட்கின்றோம். 

اهْدِنَا الصِّرَطَ الْمُسْتَقِيمَ

(1:6) Guide us in the right path;
(1:6) சரியான பாதையில் எங்களை வழி நடத்தும்;

صِرَطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

(1:7) the path of those whom You blessed; not of those who have deserved wrath, nor of  the strayers.

(1:7)நீர் எவர்களுக்கு அருள்புரிந்தீரோ அவர்களுடைய பாதையில்; கோபத்திற்குள்ளானோருடையதல்ல, அன்றியும் வழி தவறியவர்களுடையதுமல்ல

 سُبْحَنَكَ لَا عِلْمَ لَنَا اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ انْتَ الْعَلِيمُ الْحَكِيمُ

(2:32)“Be You glorified, we have no knowledge, except that which You have taught us.  You are the Omniscient, Most Wise.”
(2:32) “நீரே துதிப்பிற்குரியவர், நீர் எங்களுக்கு கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு எந்த அறிவும் இல்லை, நீரே எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.”

 اعُوذُ بِاللَّهِ انْ اكُونَ مِنْ الْجَهِلِينَ

(2:67) “GOD forbid, that I should behave like the ignorant ones.”
(2:67) “அறிவில்லாத  ஒருவனைப் போல் நான் நடந்து கொள்வதை விட்டும்   கடவுள்  காக்க வேண்டும்”

 رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ انْتَ السَّمِيعُ الْعَلِيمُ

(2:127)  “Our Lord, accept this from us. You are the Hearer, the Omniscient.
(2:127) “எங்கள் இரட்சகரே, எங்களிடமிருந்து இதனை ஏற்றுக்கொள்வீராக நீர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا اُمَّةً مُسْلِمَةً لَكَ وَارِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا اِنَّكَ انْتَ التَّوَّابُ الرَّحِيمُ

(2:128) “Our Lord, make us submitters to You, and from our descendants let there be a community of submitters to You. Teach us the rites of our religion, and redeem us. You are the Redeemer, Most Merciful.
(2:128)“எங்கள் இரட்சகரே, உம்மிடம் அடிபணிந்தவர் களாக எங்களை ஆக்குவீராக, மேலும் எங்களு டைய சந்ததியிலிருந்தும், உமக்கு அடி பணிந்தவர்களின் ஒரு சமூகம் இருக்கும்படி செய்வீராக. எங்கள் மார்க்கச் சடங்குகளை எங்களுக்கு கற்றுத் தருவீராக. மேலும் எங்களை மீட்டுக்கொள்வீராக. நீரே மீட்பவர், மிக்க கருணையாளர்.

رَبَّنَا ءاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْاءخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

(2:201)  “Our Lord, grant us righteousness in this world, and righteousness in the Hereafter, and spare us the retribution of Hell.”
(2:201)  “எங்கள் இரட்சகரே, இவ்வுலகில் நன்னெறியையும் மற்றும் மறுவுலகில் நன்னெறியையும் எங்களுக்குத் தாருங்கள், மேலும் நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என்று கூறுவார்கள்.

 رَبَّنَا افْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ اقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ

(2:250)  “Our Lord, grant us steadfastness, strengthen our foothold, and support us against the disbelieving people.”
(2:250) “எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப் பாட்டை வழங்குவீராக, எங்கள் பாதங்களைப் பலப்படுத்துவீராக, மேலும் நம்பமறுக்கின்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு ஆதரவளிப் பீராக” என்றும் பிரார்த்தித்தார்கள்.

سَمِعْنَا وَاطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيرُ

(2:285)  “We hear, and we obey. Forgive us, our Lord. To You is the ultimate destiny.”
(2:285) “நாங்கள் செவியேற்றோம் மேலும் கீழ்ப்படிந்தோம். எங்களுடைய இரட்சகரே, எங்களை மன்னிப்பீராக, இறுதிவிதி உம்மிடமே இருக்கின்றது”

 رَبَّنَا لَا تُؤَاخِذْنَا اِنْ نَسِينَا اوْ اخْطَاْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا اِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا انْتَ مَوْلَنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ

(2:286)  “Our Lord, do not condemn us if we forget or make mistakes. Our Lord, and protect us from blaspheming against You, like those before us have done. Our Lord, protect us from sinning until it becomes too late for us to repent. Pardon us and forgive us.  You are our Lord and Master. Grant us victory over the disbelieving people.”
(2:286) “எங்கள் இரட்சகரே, நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறு செய்து விட்டாலோ, எங்களைத் தண்டித்து விடாதீர். எங்கள் இரட்சகரே, மேலும் எங்களுக்கு முன்னிருந்தோர் செய்தது போல் உமக்கெதிராக நிந்தனை செய்வதை விட்டும் எங்களை பாதுகாப் பீராக. எங்கள் இரட்சகரே, வருந்தி திருந்துவதற்கு மிகவும் காலதாமதம் ஆகிவிடும் வரையிலும் பாவம் செய்து கொண்டிருப்பதை விட்டும் எங்களைப் பாதுகாப்பீராக. எங்களைப் பிழை பொறுப்பீராக மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே  எங்களுடைய இரட்சகரும் எஜமானருமாவீர், நம்பிக்கையற்ற மக்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை தருவீராக”.

رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً اِنَّكَ انْتَ الْوَهَّابُ

(3:8)  “Our Lord, let not our hearts waver, now that You have guided us. Shower us with Your mercy; You are the Grantor.
(3:8)  “எங்கள் இரட்சகரே, இப்போது எங்களை நீர் வழிநடத்திவிட்டீர், பின்னர் எங்களுடைய இதயங்களைத் தடுமாற விட்டு விடாதீர்.  உம்முடைய கருணையை எங்கள் மீது பொழிவீராக; நீரே கொடையாளி.

رَبَّنَا اِنَّنَا ءامَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

(3:16) “Our Lord, we have believed, so forgive us our sins, and spare us the agony of the hellfire.”
(3:16) “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், ஆகையால் எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பீராக, மேலும், எங்களை நரக நெருப்பின் வேதனை யிலிருந்து காத்திடுவீராக”

رَبَّنَا ءامَنَّا بِمَا انْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّهِدِينَ

(3:53)  “Our Lord, we have believed in what You have sent down, and we have followed the messenger; count us among the witnesses.”
(3:53) “எங்கள் இரட்சகரே, நீர் இறக்கி அனுப்பியதன் மேல் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” மேலும் நாங்கள் தூதரையும் பின்பற்றுகின்றோம்; சாட்சியாளர்களுடன் எங்களைக் கணக்கிடு வீராக”.

 رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَاِسْرَافَنَا فِي امْرِنَا وَثَبِّتْ اقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَفِرِينَ

(3:147) “Our Lord, forgive us our sins, and our transgressions, strengthen our foothold, and grant us victory over the disbelievers.”
(3:147) “எங்கள் இரட்சகரே, எங்கள் பாவங்களையும் எங்கள் வரம்பு மீறல்களையும் எங்களுக்கு மன்னிப் பீராக, எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து வீராக, மேலும் நம்ப மறுப்பவர்களுக்கு எதிராக எங்களுக்கு வெற்றியை வழங்குவீராக”

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

(3:173) ” this only strengthens their faith and they say, “GOD suffices us; He is the best Protector.”
(3:173) “கடவுள் எங்களுக்கு போதுமானவர், அவரே மிகச் சிறந்த பாதுகாவலர்”

رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَطِلًا سُبْحَنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ

(3:191)  “Our Lord, You did not create all this in vain. Be You glorified. Save us from the retribution of Hell.
(3:191) “எங்கள் இரட்சகரே இவையனைத்தையும் வீணிற்காக நீர் படைக்கவில்லை. நீர் துதிப்பிற்குரியவர், நரகத்தின் தண்டனையிலிருந்து எங்களை காப்பாற்றுவீராக.


رَبَّنَا اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْاِيمَنِ انْ ءامِنُوا بِرَبِّكُمْ فَءامَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّءَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْابْرَارِ

(3:193)  “Our Lord, we have heard a caller calling to faith and proclaiming: `You shall believe in your Lord,’ and we have believed. Our Lord, forgive us our transgressions, remit our sins, and let us die as righteous believers.
(3:193) “எங்கள் இரட்சகரே, அழைப்பாளர் ஒருவர் விசுவாசத்தின் பால் அழைத்து:  ‘நீங்கள் உங்கள் இரட்சகர் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்’ எனப் பிரகடனம் செய்ததை நாங்கள் செவியேற்றோம், மேலும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எங்கள் இரட்சகரே, எங்களை எங்கள் வரம்பு மீறல்களை மன்னிப்பீராக, எங்கள் பாவங்களை பொறுத்துக் கொள்வீராக, மேலும் நன்னெறியுடைய நம்பிக்கையாளர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக.

رَبَّنَا وَءاتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَمَةِ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ

(3:194)  “Our Lord, shower us with the blessings You promised us through Your messengers, and do not forsake us on the Day of Resurrection. You never break a promise.”
(3:194)  “எங்கள் இரட்சகரே, உம்முடைய தூதர்கள் மூலம் எங்களுக்கு நீர் வாக்களித்த அருட்கொடைகளை எங்கள் மீது பொழிவீராக, மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும்  நாளில் எங்களைக் கைவிட்டு விடாதீர், நீர் ஒருபோதும் வாக்குறுதியை முறிப்பவர் அல்ல.”


 رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

(5:83) “Our Lord, we have believed, so count us among the witnesses.
(5:83) “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம், ஆகையால் எங்களை சாட்சியாளர்களுடன் கணக்கிடுவீராக.

 رَبَّنَا ظَلَمْنَا انفُسَنَا وَانْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنْ الْخَسِرِينَ

(7:23)  “Our Lord, we have wronged our souls, and unless You forgive us and have mercy on us, we will be losers.”
(7:23) “எங்கள் இரட்சகரே, எங்கள் ஆன் மாக்களுக்கு நாங்கள் தீங்கு இழைத்துக் கொண்டோம், அன்றியும் நீர் எங்களை மன்னித்து, எங்கள் மீது கருணை புரியவில்லை யெனில்,நாங்கள் நஷ்டவாளிகளாகி விடு வோம்”

 رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ الْقَوْمِ الظَّلِمِينَ

(7:47)  “Our Lord, do not put us with these wicked people.”
(7:47) “எங்கள் இரட்சகரே, இந்தத் தீய மக்களோடு எங்களைப் போட்டுவிடாதீர்” என்று கூறுவார்கள்.

 رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَانْتَ خَيْرُ الْفَتِحِينَ

(7:89) Our Lord, grant us a decisive victory over our people. You are the best supporter.”
(7:89) எங்கள் இரட்சகரே, எங்கள் சமூகத்தாரின் மீது எங்களுக்கு ஒரு தீர்மானமான வெற்றியை வழங்குவீராக, நீரே மிகச் சிறந்த ஆதரவாளர்”.


 رَبَّنَا افْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ

(7:126) “Our Lord, grant us steadfastness, and let us die as submitters.”
(7:126) “எங்களு டைய இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டை வழங்கு வீராக, மேலும் அடிபணிந்தவர்களாக எங்களை மரணிக்கச் செய்வீராக”.

 رَبِّ اغْفِرْ لِي وَلِاخِي وَادْخِلْنَا فِي رَحْمَتِكَ وَانْتَ ارْحَمُ الرَّحِمِينَ

(7:151)  “My Lord, forgive me and my brother, and admit us into Your mercy. Of all the merciful ones, You are the Most Merciful.”
(7:151) “என்னுடைய இரட்சகரே, என்னை யும், என்னுடைய சகோதரரையும் மன்னிப்பீராக, மேலும் உம்முடைய அருளில் நுழைய எங்களை அனுமதிப்பீராக. கருணையாளர்கள் அனை வரிலும் நீரே மிக்க கருணையாளர்”

 تُضِلُّ بِهَا مَنْ تَشَاءُ وَتَهْدِي مَنْ تَشَاءُانْتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَانْتَ خَيْرُ الْغَفِرِينَ

(7:155) You condemn whomever You will, and guide whomever You will. You are our Lord and Master, so forgive us, shower us with Your mercy; You are the best Forgiver.
(7:155) நீர் நாடுவோரைத் தண்டிக்கின்றீர் மேலும் நீர் நாடுவோரை வழிநடத்துகின்றீர். நீரே எங்கள் இரட்சகரும் அதிபதியும் ஆவீர், எனவே எங்களை மன்னிப்பீராக, உமது அருளைக் கொண்டு எங்கள்மேல் பொழிவீராக; மன்னிப் போரில் நீரே மிகச் சிறந்தவர்.

وَاكْتُبْ لَنَا فِي هَذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الاْءخِرَةِ انَّا هُدْنَا الَيْكَ

(7:156)  “And decree for us righteousness in this world, and in the Hereafter. We have repented to You.”
(7:156) “மேலும் இவ்வுலகிலும் மறுவுலகிலும், எங்கள் மீது நன்னெறியினை விதித்திடுவீராக; நாங்கள் உம் பால் மீண்டுவிட்டோம்.”

 رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظّلِمِينَ

(10:85)  Our Lord, save us from the persecution of these oppressive people.
(10:85) எங்கள் இரட்சகரே, அடக்கு முறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமை களிலிருந்து எங்களைக் காப்பீராக..

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنْ الْقَوْمِ الْكَفِرِينَ

(10:86)  “Deliver us, with Your mercy, from the disbelieving people.”
(10:86)  “நம்ப மறுக்கும் மக்களிடமிருந்து, உம்முடைய கருணையால், எங்களைக் காப்பாற்றுவீராக.”

 ربِّ انِّي اعُوذُ بِكَ انْ اسْءَلكَ مَا ليْسَ لي بِهِ عِلمٌ وَالا تَغْفِر لي وَتَرحَمْنِي اكُنْ مِنْ الخَسِرينَ

(11:47) “My Lord, I seek refuge in You, lest I implore You again for something I do not know. Unless You forgive me, and have mercy on me, I will be with the losers.”
(11:47) “என்னுடைய இரட்சகரே, நான் அறியாத எந்த ஒன்றையும் மீண்டும் நான் உம்மிடம் இறைஞ்சாமலிருக்கும் பொருட்டு, உம்மிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். நீர் என்னை மன்னித்து, மேலும் என் மேல் கருணை கொண்டாலே அன்றி, நான் நஷ்டமடைந் தோருடனே இருப்பேன்”...

رَبِّ قَدْ ءاتَيْتَنِي مِنْ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَاْوِيلِ الْاحَادِيثِ فَاطِرَ السَّمَوَتِ وَالْارْضِ انْتَ وَلِيِّ فِي الدُّنْيَا وَالاْءخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَالْحِقْنِي بِالصَّلِحِينَ

(12:101) “Initiator of the heavens and the earth; You are my Lord and Master in this life and in the Hereafter. Let me die as a submitter, and count me with the righteous.”
(12:101)  “வானங் கள் மற்றும் பூமியைத் துவக்கியவரே; இவ்வுலகிலும், மறுவுலகிலும் நீரே என் இரட்ச கரும்,  எஜமானருமாவீர். அடிபணிந்த ஒருவனாக என்னை மரணிக்கச் செய்வீராக, மேலும் நன்னெறியாளர்களுடன் என்னைக் கணக்கிடு வீராக.”

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَوَةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

(14:40)  “My Lord, make me one who consistently observes the Contact Prayers (Salat), and also my children. Our Lord, please answer my prayers.
(14:40) “என் இரட்சகரே, தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒருவராக என்னையும், அத்துடன் என் பிள்ளைகளையும் ஆக்குவீராக. என் இரட்சகரே, தயவு கூர்ந்து என் பிரார்த்தனைகளுக்குப் பதிலளிப்பீராக.

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَلِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ

(14:41)  “My Lord, forgive me and my parents, and the believers, on the day when the reckoning takes place.”
(14:41) “என் இரட்சகரே, கேள்விக் கணக்கு நடைபெறும் நாளின்போது, என்னையும் என் பெற்றோரையும், மேலும் நம்பிக்கையாளர்களை யும் மன்னிப்பீராக.”

 رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

(17:24) “My Lord, have mercy on them, for they have raised me from infancy.”
(17:24) “என் இரட்சகரே, அவர்கள் மீது கருணை கொள்வீராக, ஏனெனில் அவர்கள் குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வளர்த்து வந்தனர்” என்று கூறுவீராக.

رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَنًا نَصِيرًا

(17:80)  “My Lord, admit me an honorable admittance, and let me depart an honorable departure, and grant me from You a powerful support.”
(17:80) “ என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவிற்குள் என்னை அனுமதிப்பீராக, மேலும்  கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னைப் புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்கதொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக”...

رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِنْ لَدُنْكَ سُلْطَنًا نَصِيرًا

(17:80)  “My Lord, admit me an honorable admittance, and let me depart an honorable departure, and grant me from You a powerful support.”
(17:80) “ என் இரட்சகரே, கௌரவமானதொரு நுழைவிற்குள் என்னை அனுமதிப்பீராக, மேலும்  கௌரவமானதொரு புறப்பாட்டுடன் என்னைப் புறப்பட அனுமதிப்பீராக, மேலும் உம்மிடமிருந்து சக்திமிக்கதொரு ஆதரவை எனக்கு வழங்குவீராக”...

رَبَّنَا ءاتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

(18:10) ...“Our Lord, shower us with Your mercy, and bless our affairs with Your guidance.”
(18:10) ...“எங்கள் இரட்சகரே, உமது கருணையைக் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக, மேலும் எங்களுடைய காரியங்களை உம்முடைய வழிகாட்டலைக் கொண்டு அருள்பாலிப்பீராக”

 رَبِّ اشْرَحْ لِي صَدْرِي

 وَيَسِّرْ لِي أَمْرِي

(20:25)  “My Lord, cool my temper.
(20:26)  “And make this matter easy for me.
(20:25) “என் இரட்சகரே, என் சுபாவத்தைக் குளிர்விப்பீராக.
(20:26) “மேலும் இந்த விஷயத்தை எனக்கு எளிதாக்குவீராக.

 رَبِّ زِدْنِي عِلْمًا

(20:114)  “My Lord, increase my knowledge.”
(20:114) “என் இரட்சகரே, எனது அறிவை அதிகரிப்பீராக”

أَنِّي مَسَّنِي الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّحِمِينَ

(21:83) “Adversity has befallen me, and, of all the merciful ones, You are the Most Merciful.”
(21:83)  மேலும் ஜோப் தன் இரட்சகரை: “எனக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும், கருணை யுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்”

 

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَنَكَ إِنِّي كُنتُ مِنْ الظَّلِمِينَ

(21:87)  “There is no god other than You. Be You glorified. I have committed a gross sin.”
(21:87) “உம்மை விடுத்து வேறு தெய்வம் இல்லை. நீர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு பெரும்பாவத்தைச் செய்து விட்டேன்”

 

رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَرِثِينَ

(21:89)  “My Lord, do not keep me without an heir, though You are the best inheritor.”
(21:89) “என் இரட்சகரே, நீரே சிறந்த வாரிசாக இருக்கும் போதிலும், வாரிசு இல்லாமல் என்னை ஆக்கி விடாதீர்”

 

 رَبِّ أَنزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِينَ

(23:29) `My Lord, let me disembark onto a blessed location; You are the best deliverer.’ “
(23:29) என்னுடைய இரட்சகரே, பாக்கியம் மிக்கதொரு இடத்தில் என்னைக் கரை யிறங்கச் செய்வீராக; கரை சேர்ப்பவர்களில் நீரே மிகச் சிறந்தவர்,”


رَبِّ فَلَا تَجْعَلْنِي فِي الْقَوْمِ الظَّلِمِينَ

(23:94)  “My Lord, let me not be one of the transgressing people.”
(23:94) “என் இரட்சகரே, வரம்பு மீறுகின்ற மக்களில் ஒருவராக இருக்கும்படி என்னை விட்டு விடாதீர்”.

رَبِّ أَعُوذُ بِكَ مِنْ هَمَزَتِ الشَّيَطِينِ

وَأَعُوذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُون

(23:97) “My Lord, I seek refuge in You from the whispers of the devils.
(23:98) “And I seek refuge in You, my Lord, lest they come near me.”
(23:97)  “என் இரட்சகரே, சாத்தான்களின் கிசுகிசுப்புகளில் இருந்து நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.
(23:98) “மேலும் என் இரட்சகரே, அவை என் அருகில் வருவதை விட்டும் நான் உம்மிடம் புகலிடம் தேடுகின்றேன்.”

 رَبَّنَا ءامَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّحِمِينَ

(23:109)  “Our Lord, we have believed, so forgive us and shower us with mercy. Of all the merciful ones, You are the Most Merciful.’
(23:109) “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எனவே எங்களை மன்னிப்பீராக மேலும் எங்களை கருணையால் பொழிந்திடுவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்”

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّحِمِينَ

(23:118) “My Lord, shower us with forgiveness and mercy. Of all the merciful ones, You are the Most Merciful.”
(23:118) “என் இரட்சகரே, மன்னிப்பையும், கருணை யையும் கொண்டு எங்கள் மேல் பொழிவீராக. கருணையுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்”

 رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

(25:65)  “Our Lord, spare us the agony of Hell; its retribution is horrendous.
(25:65) “ எங்கள் இரட்சகரே, நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பீராக; அதன் தண்டனை படுபயங்கரமானதாகும்.

 رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَجِنَا وَذُرِّيَّتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

(25:74)  “Our Lord, let our spouses and children be a source of joy for us, and keep us in the forefront of the righteous.”
(25:74) “எங்கள் இரட்சகரே, எங்களுடைய வாழ்க்கைத் துணைகளையும்  மற்றும் பிள்ளைகளையும் எங்களுடைய இன்பத்திற்கானதொரு மூலாதாரமாக இருக்கச் செய்வீராக, மேலும் நன்னெறி யாளர்களின் முன் அணியில் எங்களை வைப்பீராக”

رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّلِحِينَ

وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْاءخِرِينَ

وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ

وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ

يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ

(26:83)  “My Lord, grant me wisdom, and include me with the righteous.
(26:84) “Let the example I set for the future generations be a good one.
(26:85)  “Make me one of the inheritors of the blissful Paradise.
(26:87)  “And do not forsake me on the Day of Resurrection.”
(26:88)  That is the day when neither money, nor children, can help.


(26:83)  “என் இரட்சகரே, எனக்கு ஞானத்தை வழங்கு வீராக, மேலும் என்னை நன்னெறியாளர் களுடன் சேர்த்துக் கொள்வீராக.
(26:84)  “வருங்காலத் தலைமுறையினருக்கு நான் அமைக்கும் முன்மாதிரியை நல்லதான ஒன்றாக இருக்கச் செய்வீராக.
(26:85)  “பேரானந்தமயமான சுவனத்தின் வாரிசுகளில் ஒருவராக என்னை ஆக்குவீராக.
(26:87) “மேலும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று என்னைக் கைவிட்டு விடாதிருப்பீராக.”
(26:88)  பணமோ, அன்றிப் பிள்ளைகளோ, உதவ இயலாத நாள் அதுவாகும்.

رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ

(26:169)  “My Lord, save me and my family from their works.”
(26:169) “என் இரட்சகரே, என்னையும் என் குடும்பத் தாரையும் அவர்களுடைய செயல்களிலிருந்து காப்பாற்றுவீராக.”

رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَلِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَلِحًا تَرْضَهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّلِحِينَ

(27:19)  “My Lord, direct me to be appreciative of the blessings You have bestowed upon me and my parents, and to do the righteous works that please You. Admit me by Your mercy into the company of Your righteous servants.”
(27:19) “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றிபாராட்டுபவனாக இருப்பதற்கும் உம்மை திருப்தி படுத்தும் நன்னெறியான காரியங்களைச் செய்வதற்கும் என்னை வழிநடத்துவீராக. உமது கருணையால், நன்னெறியாளர்களான உம் முடைய அடியார்களின் கூட்டத்தில் என்னை நுழைய அனுமதிப்பீராக” என்று கூறினார்.

 

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِر ْ لِي فَغَفَرَ

(28:16)  “My Lord, I have wronged my soul. Please forgive me,”
(28:16) “என் இரட்சகரே, நான் என் ஆன்மாவிற்குத் தீங்கிழைத்துக் கொண்டேன். தயவுசெய்து என்னை மன்னிப்பீராக,”

 

 رَبِّ نَجِّنِي مِنْ الْقَوْمِ الظَّلِمِينَ

(28:21)   “My Lord, save me from the oppressive people.”
(28:21)“என் இரட்சகரே, அடக்குமுறை செய்கின்ற இம் மக்களிடமிருந்து என்னைக் காப்பீராக”

 رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ

(28:22) “May my Lord guide me in the right path.”
(28:22)“என் இரட்சகர் என்னைச் சரியான பாதையில் வழிநடத்துவாராக”

 

 رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

(28:24)  “My Lord, whatever provision You send to me, I am in dire need for it.”
(28:24) “என் இரட்சகரே, எந்த ஒரு வாழ்வாதாரத்தை நீர் எனக்கு அனுப்பினாலும், அதற்காக நான் கடும் தேவையுடையவனாக இருக்கின்றேன்”

 

 رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ

(29:30)  “My Lord, grant me victory over these wicked people.”
(29:30) “என் இரட்சகரே, இந்தத் தீய மக்கள் மீது எனக்கு வெற்றியைத் தருவீராக”

 

رَبِّ هَبْ لِي مِنْ الصَّلِحِينَ

(37:100)  “My Lord, grant me righteous children.”
(37:100)  “என் இரட்சகரே, நன்னெறியுடைய பிள்ளைகளை எனக்கு அளிப்பீராக.”


سُبْحنَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ

وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ

(43:13)  “Glory be to the One who subdued this for us. We could not have controlled them by ourselves.
(43:14) “We ultimately return to our Lord.”
(43:13)“இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித் தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தி யிருக்க எங்களால் இயன்றிருக்காது.
(43:14)“இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்”.

 رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَلِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَلِحًا تَرْضَهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنْ الْمُسْلِمِينَ

(46:15)  “My Lord, direct me to appreciate the blessings You have bestowed upon me and upon my parents, and to do the righteous works that please You. Let my children be righteous as well. I have repented to You; I am a submitter.”
(46:15) “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்துள்ள அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் படியும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறியான காரியங்களைச் செய்யும்படியும் என்னை வழி நடத்துவீராக. அதுபோலவே என்னுடைய குழந்தை களையும் நன்னெறியாளர்களாக இருக்கச் செய் வீராக. நான் உம்மிடம் வருந்துகின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்”

رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَنِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَنِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ ءامَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ

(59:10) “Our Lord, forgive us and our brethren who preceded us to the faith, and keep our hearts from harboring any hatred towards those who believed. Our Lord, You are Compassionate, Most Merciful.”
(59:10) “எங்கள் இரட்சகரே, எங்களையும் மேலும் விசுவாசம் கொள்வதில் எங்களை முந்தியவர்களான எங்களுடைய சகோதரர்களையும் மன்னிப்பீராக, மேலும் நம்பிக்கை கொண்டவர்கள் பால் எந்த வெறுப்பும் கொண்டிருப்பதிலிருந்து எங்கள் இதயங்களைத் தடுத்து விடுவீராக. எங்கள் இரட்சகரே, நீர் இரக்கமுடையவராக, மிக்க கருணையாளராக இருக்கின்றீர்”

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

(60:4)  “Our Lord, we trust in You, and submit to You; to You is the final destiny.
(60:4) “ எங்கள் இரட்சகரே, நாங்கள் உம்மிடம் பொறுப்பேற்படுத்து
கின்றோம், மேலும் உமக்கு  அடிபணிகின்றோம்; இறுதி விதியானது உம்வசமே உள்ளது.

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ

(60:5) “Our Lord, let us not be oppressed by those who disbelieved, and forgive us. You are the Almighty, Most Wise.”
(60:5) “எங்கள் இரட்சகரே, நம்பமறுப்பவர்களால் அடக்குமுறை செய்யப்பட்டவர்களாக இருக்க எங்களை விட்டுவிடாதீர், மேலும் எங்களை மன்னிப்பீராக. நீரே சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்”.

 رَبَّنَا أَتْمِمْ لَنَا نُورَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

(66:8) “Our Lord, perfect our light for us, and forgive us; You are Omnipotent.”
(66:8) “ எங்கள் இரட்சகரே, எங்களுடைய ஒளியை எங்களுக்குப் பூரணப் படுத்துவீராக, மேலும் எங்களை மன்னிப்பீராக, நீர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றீர்” என்று கூறுவார்கள்.

رَبِّ اغْفِرْ لِي وَلِوَلِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِي مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَتِ

(71:28) “My Lord, forgive me and my parents, and anyone who enters my home as a believer, and all the believing men and women. .”
(71:28)  “என் இரட்சகரே, என்னையும் என் பெற் றோரையும், மேலும் ஒரு நம்பிக்கையாளராக என் இல்லத்தில் நுழைகின்ற எவரொரு வரையும், மேலும் நம்பிக்கை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் மன்னிப்பீராக.”.

أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

 

مِنْ شَرِّ مَا خَلَقَ

 

وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

 

وَمِنْ شَرِّ النَّفَّثَتِ فِي الْعُقَدِ

 

وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

(113:1) “I seek refuge in the Lord of daybreak.
(113:2) “From the evils among His creations.
(113:3) “From the evils of darkness as it falls.
(113:4) “From the evils of the troublemakers.
(113:5) “From the evils of the envious when they envy.”


(113:1) “வைகறையின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.
(113:2) “அவருடைய படைப்புகளுக்கிடையில் உள்ளவற்றின் தீங்குகளில் இருந்து.
(113:3)   “இருளின் தீங்குகளிலிருந்து, அது விழும் பொழுது.
(113:4)   “இடையூறு செய்பவர்களின் தீங்குகளி லிருந்து.
(113:5) “பொறாமைக்காரர்களின் தீங்குகளிலிருந்து, அவர்கள் பொறாமைப்படும் பொழுது.”

أَعُوذُ بِرَبِّ النَّاسِ

 

مَلِكِ النَّاسِ

 

إِلَهِ النَّاسِ

 

مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاس

ِ

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

 

مِنْ الْجِنَّةِ وَالنَّاسِ

(114:1) Say, “I seek refuge in the Lord of the people.
(114:2)  “The King of the people.
(114:3) “The god of the people.
(114:4) “From the evils of sneaky whisperers.
(114:5) “Who whisper into the chests of the people.
(114:6)  “Be they of the jinns, or the people.”

(114:1) கூறுவீராக, “ மனிதர்களின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.


(114:2) “மனிதர்களின் அரசர்.
(114:3) “மனிதர்களின் தெய்வம்.
(114:4) “நழுவிச் செல்லும் கிசுகிசுப்போரின் தீங்குகளிலிருந்து.
(114:5) “மனிதர்களின் நெஞ்சங்களுக்குள் கிசுகிசுப்பவர்கள்.
(114:6) “அவர்கள் ஜின்களிலோ அல்லது மனிதர்களிலோ இருந்த போதிலும்.”