அடிபணிதலின் பால் வரவேற்கிறோம்

கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க அன்பாளர்


       நீங்கள் முன்னரே ஒரு அடிபணிந்தவராக இருக்கக் கூடும். எனவே, அடிபணிந்தவர் என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்படாமல் இருந்தாலும், அதன் பொருள் என்னவென்று தெரியாமல் இருந்தாலும், அதனைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வு முழுதும் நீங்கள் ஒரு அடிபணிந்தவராக இருந்த போதிலும், நீங்கள் அவர்களில் ஒருவர் என்பதை இதனைப் படிக்கும் வரை நீங்கள் உணராமலிருக்கக் கூடும்.

அடிபணிந்தவர் என்பவர் யார்?

       கடவுளின் நாட்டத்திற்குச் அடிபணிந்த ஒருவரை அடிபணிந்தவர் என்று கூறலாம். அடிபணிந்தல் என்ற இந்நிலை, கடவுளுக்கும் ஒரு மனிதருக்கும் இடையில் மட்டுமே ஏற்படக் கூடியதாகவும் கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு வழிபாட்டு முறையாகவும் உள்ளது. எனவே, அடிபணிந்தல் என்பது ஒரு மதத்தின் பெயரல்ல; சரியாகக் கூறுவதானால், அது கடவுளுக்கு மட்டுமேயான ஒருவரது அர்ப்பணிப்பை வர்ணிக்கிறது. அடிபணிந்தல் என்ற இம்மார்க்கத்தின் மூலம் ஒருவர் கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை அடையாளம் கண்டு கொண்டு, கடவுளிடம் மட்டுமே அனைத்துச் சக்திகளும் உள்ளன. அவரைச் சார்ந்திராமல் வேறெவருக்கும் எந்தச் சுயமான சக்தியும் இல்லை என்பதில் ஒரு அசைக்க முடியாத உறுதியை அடைகிறார். இத்தகையதொரு அடையாளம் காண்பதின் இயற்கையான விளைவு, கடவுளுக்கு மட்டும் ஒருவர் தன் வாழ்வையும் வழிபாட்டையும் அர்ப்பணிப்பதே ஆகும். இதுவே எல்லா வேதங்களிலும் முதற் கட்டளையாக உள்ளது. பழைய எற்பாடு, புதிய ஏற்பாடு, மற்றும் இறுதி ஏற்பாடான குர்ஆன் உட்பட.

இஸ்þரவேலர்களே கேளுங்கள்! நம் இரட்சகரான கடவுள் ஒரே கடவுள் ஆவார். எனவே, நீங்கள் முழு இதயத்துடனும், ஆத்மார்த்தமாகவும், முழு மனத்துடனும், முழு பலத்துடனும் உங்கள் இரட்சகரான கடவுளை மட்டுமே வழிபட வேண்டும்.

(டெட்ரானமி 64-5, மார்க்கு 12:29-30, குர்ஆன் 3:18)

நாம் அடிபணிந்தவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியானவர்தானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? அடிபணிந்தவராக இருப்பதற்குரிய குறைந்த பட்ச அளவுகோல் கீழ்கண்ட வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

“நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களோ, யூதர்களோ, கிறித்துவர்களோ, மதம்மாறியவர்களோ, எவரெல்லாம் கடவுளை நம்பி, இறுதி நாளை நம்பி, நேரிய வாழ்க்கை நடத்துகிறார்களோ, அவர்கள் தங்களுக்குரிய கூலியைத் தங்கள் இரட்சகரிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்; அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”

(குர்ஆன் 2:62, 5:69)

ICS, என்றால் என்ன?

       ICS சர்வதேச அடிபணிந்தோர் சமுதாயம் என்பது கடவுளை -– கடவுளை மட்டுமே வழிபடுவதற்காக ஒருங்கிணைந்த, ஒருமித்த எண்ணம் கொண்ட தனிமனிதர்கள் அடங்கிய ஒரு குழுமம் ஆகும். நாங்கள் ஆதாம், நோவா மற்றும் ஆப்ரஹாமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். இதுவே மோசே, இயேசு மற்றும் முஹம்மதின் மார்க்கமும் ஆகும். அவர்கள் அனைவரும் கடவுளை - கடவுளை மட்டுமே அடிபணிந்தோராக இருந்தனர். சசசவில் இணைய உங்களுக்கு உறுப்பினர் படிவம் எதுவும் தேவையில்லை, நீங்கள் எவ்வித சந்தாக்களும் செலுத்தத் தேவையில்லை. நீங்கள் அடிபணிந்த ஒருவராக இருந்தால் நீங்கள் எங்களுடைய சகோதரர் / சகோதரி ஆவீர்கள். அடிபணிந்தோர் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர் ஆவார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் தோழர்கள். கடவுளும் அவருடைய வானவர்களும் அவர்களுக்கு உதவியும் ஆதரவும் அளிப்பதைப் போல அவர்கள் ஒருவருக்கொருவர் உதவியும் ஆதரவும் அளித்துக்கொள்கின்றனர். அவர்கள் கடவுளின் பாதையில் பாடுபடும்பொழுது ஓரணியாக ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அடிபணிந்தோர் கடவுளின் வெளிப்பாடுகளைப் பின்பற்றுகிறார்கள், தங்களால் இயன்ற வரை கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்கள். அவர்கள் தங்கள் இரட்சகரிடமிருந்து வந்த சத்தியத்தைப் பின்பற்றுகிறார்கள், சீர்கெட்டுப்போன மதங்களையோ மனிதர்கள் உருவாக்கிய கொள்கைகளையோ அல்ல. இன்று, அடிபணிந்தல் என்பது மூட்டை மூட்டையான மனிதக்கண்டு பிடிப்புக்களால் மூடப்பட்டுக் கிடக்கும் மதிப்பு மிக்க ஓர் ஆபரணத்திற்கு ஒப்பானது என சசச கருதுகிறது. குர்ஆனை மட்டுமே ஆதரிப்பதன் மூலம் இத்தகைய மனிதக் கண்டுபிடிப்புக்கனை அகற்றி, அடிபணிந்தல் என்ற ஆபரணத்தை உலகுக்குக் காட்டுவதே எங்கள் குறிக்கோள். உருவாகிக் கொண்டிருக்கும் சரித்திரத்தின் ஓர் அங்கமாக நீங்களும் ஆக வேண்டுமெனில் எங்கள் குறிக்கோளில் உங்களையும் இணைத்துக் கொள்ளலாம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.

       நாங்கள் எவரையும் மதம் மாற்ற முயற்சிக்கவில்லை, ஆனால் மெய்யான இஸ்லாம் மார்க்கத்தை (அடிபணிதலை) உலகுக்குக் காட்டவே விரும்புகிறோம். கடவுள் குர்ஆனில் கூறுகிறார் :

“மார்க்கத்தில் நிர்ப்பந்தம் கூடாது. இப்போது, தவறான வழியில் இருந்து சரியான வழி தெளிவாகி உள்ளது. எவரொருவர் சாத்தான்களை விட்டு விலகி கடவுளின் மேல் நம்பிக்கை கொண்டாரோ அவர் மிக உறுதியான, உடைந்து விடாத பிடிமானத்தைப் பற்றிக் கொண்டார். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர். (2:256)

நாங்கள் மாதாந்திரச் செய்தி மடல் ஒன்றை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம். அச்செய்தி மடலை நீங்கள் பெற விரும்பினால் நீங்கள் எங்களுக்கு எழுதலாம். தற்போது நீங்கள் ஒரு சந்தாதாரராக இருந்து இனி அதைப் பெற விரும்பவில்லையெனில் தயவு கூர்ந்து எங்களுக்குத் தெரிவித்தால், கடவுள் நாடினால், நாங்கள் அனுப்ப வேண்டியோர் பட்டியலில் இருந்து உங்கள் பெயரை நீக்கி விடுவோம். அவ்வாறில்லாமல், அதனை நீங்கள் விரும்பினால் உங்கள் கருத்துக்களைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். மேலும் இச்செய்தி மடலினால் பயன்அடையக் கூடியவர் என நீங்கள் கருதும் உங்களுக்குத் தெரிந்தவர் எவரேனும் இருந்தால் தயை கூர்ந்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இச்செய்தி மடல்களின் இலவசப்பிரதிகளை அவருக்கு அனுப்ப நாங்கள் ஏற்பாடுகள் செய்வோம். சந்தா விபரங்களை நீங்கள் செய்தி மடல் பார்த்து அறிந்து கொள்ளலாம்.**********************************************