பின் இணைப்பு 9
ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் ஆரம்பத்தூதர்
எங்கும் வியாபித்திருக்கும் கட்டுக்கதைகளில் முஹம்மது இஸ்லாத்தின் ஸ்தாபகர் என்பதும் ஒன்றாகும். ஆதாமின் காலத்திலிருந்தே கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கமாக இஸ்லாம் - கடவுளுக்கு மட்டுமே முற்றிலுமாக அடிபணிதல் - இருந்தபோதிலும் (3:19, 85), ஆப்ரஹாம்தான் “இஸ்லாம்” எனும் வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியவர் எனவும் மேலும் நம்மை “முஸ்லிம்கள்” அதாவது அடிபணிந்தவர்கள் (22:78) என அழைத்தவர் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது. கடவுளின் கட்டளை என எண்ணிக்கொண்டு, தன்னுடைய ஒரே மகனான இஸ்மவேலை பலியிட சம்மதித்ததன் மூலம், கடவுளிடத்தில் ஆப்ரஹாம் கொண்டிருந்த உயர்வான அடிபணிதல் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது தெரியவந்துள்ளபடி உண்மையில், அத்தகையதொரு கட்டளை சாத்தானிடமிருந்து வந்ததே ஆகும்.
கடவுள் ஒருபோதும் ஆப்ரஹாமிடத்தில் அவருடைய மகனை பலியிடும்படி கட்டளையிடவில்லை
கடவுள் மிக்க கருணையாளர். அவருடைய சட்டத்தை அவர் ஒருபோதும் மீறுவதில்லை (7:28). மிக்க கருணையாளர் ஆப்ரஹாமிடத்தில், அவருடைய மகனை கொல்லும்படி கட்டளையிட்டார் என நம்பும் எவர் ஒருவரும் கடவுளுடைய சுவனத்தினுள் நுழையும் வாய்ப்பே கிடையாது. கடவுளைப் பற்றிய இவ்விதமான தீய எண்ணமானது மாபெரும் இறைநிந்தனையாகும். கடவுள் ஆப்ரஹாமிடத்தில் அவருடைய மகனை கொல்லும்ப டி கட்டளையிட்டார் என குர்ஆனில் நாம் எங்கும் காணமுடியவில்லை. அதற்கு மாறாக சாத்தானின் சதியிலிருந்து, ஆப்ரஹாமையும், இஸ்மவேலையும் பாதுகாப்பதற்கு கடவுள் தலையிட்டார் (37:107), மேலும் அவர் ஆப்ரஹாமிடத்தில்: “நீர் கனவை நம்பிவிட்டீர்” என்று கூறினார் (37:105). சந்தேகமேயில்லாமல், அது சாத்தானால் உள்ளுணர்வூட்டப்பட்ட ஒரு கனவாகும். கடவுளுடைய மாற்ற முடியாத சட்டம்: “கடவுள் ஒருபோதும் பாவம் செய்வதை ஆதரிக்கமாட்டார் (7:28) என்பது ஆகும்.
மில்லத் இப்ராஹிம்

இஸ்லாம் “மில்லத் இப்ராஹிம்” (இப்ராஹிமின் மார்க்கம்) என குர்ஆன் முழுவதிலும் அழைக்கப்படுகின்றது (2:130, 135; 3:95; 4: 125; 6:161; 12:37-38; 16:123; 21:73; 22:78). இன்னுமதிகமாக, முஹம்மது ஆப்ரஹாமை பின்பற்றியவர் என குர்ஆன் நமக்கு அறிவிக்கின்றது (16:123).

 

இஸ்லாத்தின் (அடிபணிதல்) ஆரம்பத்தூதர் ஆப்ரஹாம் எனும் உண்மை குறித்து பொதுவானதொரு விழிப்பற்ற நிலையின் காரணத்தால், பெயரளவிலான முஸ்லிம்கள் பலர் கடவுளிடத்தில்: “குர்ஆன் முழுமையானதாகவும், முற்றிலும் விவரிக்கப்பட்டதாகவும் இருந்தால் (கடவுள் கூறுவது போல்), ஒவ்வொரு தொடர்புத்தொழுகையிலும் (ஸலாத்) ரக் அத்துகளின் எண்ணிக்கையை நாம் எங்கே காண இயலும்?” என்று சவால் விடுகின்றனர். இஸ்லாத்தின் அனைத்து மார்க்க வழிபாடுகளும் குர்ஆனுடைய வெளிப்பாடுகளுக்கு முன்பாக ஏற்கனவே நிலைநாட்டப்பட்டது என்பதை நாம் குர்ஆனிலிருந்து கற்றுக்கொள்கின்றோம் (8:35; 9:54; 16:123; 21:73; 22:27; 28:27). இஸ்லாத்தின் மார்க்க வழிபாடுகள் அனைத்தும் முஹம்மது பிறந்தபோதே முழுமையாக இருந்தன என்பதற்கு வசனம் 16:123 நேரடி அத்தாட்சியாக உள்ளது. “ஆப்ரஹாமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக” என்று முஹம்மது கட்டளையிடப்பட்டிருந்தார். நான் உம்மை ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வாங்கும்படி கேட்டுக்கொண்டால், வண்ணத் தொலைக் காட்சி என்னவென்று உமக்குத் தெரியும் என்று தானே அர்த்தம். அதுபோலவே தான், ஆப்ரஹாமுடைய வழிபாட்டு முறைகளை (16:123) பின்பற்றும்படி முஹம்மதிற்கு கடவுள் கட்டளையிட்டபோது, அவ்விதமான மார்க்க வழிபாட்டு முறைகள் நன்கு அறியப்பட்டதாக இருந்தன.

 

ஆப்ரஹாமிற்கு கொடுக்கப்பட்ட இஸ்லாமிய வழிபாட்டு முறைகளுக்கான தெய்வீகப் பாதுகாப்பு குறித்து மற்றொரு சான்று, இவ்விதமான வழிபாட்டு முறைகள் “உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது” ஆகும். தினமும் ஐந்து நேரத் தொழுகைகளிலுள்ள ரகஅத்துகளின் எண்ணிக்கை குறித்து எந்த விதமான சர்ச்சையுமில்லை. ஸலாத்தின் மீதான தெய்வீகப் பாதுகாப்பை இது நிரூபிக்கின்றது. குர்ஆனுடைய கணிதக் குறியீடு ஐந்து நேரத்தொழுகைகளிலுள்ள ரகஅத்களின் எண்ணிக்கையை முறையே 2,4,4,3 மற்றும் 4 என உறுதிசெய்கின்றது. 24434 எனும் இந்த எண் ஒரு 19ன் பெருக்குத் தொகையாகும்.

 

குர்ஆன், சிதைக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை மட்டுமே விவரிக்கின்றது. உதாரணத்திற்கு, சிதைக்கப்பட்ட அங்க சுத்தியை அதனுடைய அசலான நான்கு செயல் முறைகளுக்கு 5:6ன் மூலமாக மீட்கப்படுகின்றது. தொடர்புத் தொழுகைகளின் (ஸலாத்) போது குரல் ஒலியின் தொனி குறித்து திரித்துக் கூறப்பட்டிருந்தது - பெரும்பாலான முஸ்லிம்கள் சப்தமின்றி அமைதியாகத் தொழுகின்றனர். இது குர்ஆனில் 17:110 மூலம் சரி செய்யப்பட்டது. ரமலான் மாதத்தில் இரவு நேரங்களில் உடலுறவு கொள்வதற்கு குர்ஆனில் அனுமதியளித்ததன் மூலம் நோன்பு திருத்தியமைக்கப்பட்டது (2:187). ஜகாத் 6:141 மூலம் அசலான நிலைக்கு மீட்கப்படுகின்றது, மேலும் சரியான நான்கு மாதங்களுக்கு ஹஜ் மீட்கப்படுகின்றது. (பின் இணைப்பு 15 ஐப் பார்க்கவும்)

**********************************************