பின் இணைப்பு 8
பரிந்துரை எனும் கட்டுக்கதை

நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவோ அல்லது நம்முடைய விருப்பங்கள் நிறைவேற்றப் படுவதற்காகவோ கடவுளைத் தவிர வேறு யாரேனும் ஒருவர் நம் சார்பாக பரிந்துரைக்க இயலும் என்று நம்புவது கடவுளுடன் பங்காளிகளை ஏற்படுத்துவதாக ஆகும். இது இணைத் தெய்வ வழிபாடாகும். “பரிந்துரைகள் அனைத்தும் கடவுளுக்கு உரியது” (39:44), மேலும் “தீர்ப்பு நாளில் பரிந்துரை என்பது கிடையாது” (2:254) என்று குர் ஆன் பிரகடனம் செய்கின்றது.

 

பரிந்துரை என்னும் கட்டுக்கதையானது பல லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி இணைத் தெய்வ வழிபாட்டிற்கு உள்ளாக்குவதற்கான சாத்தானின் மிகவும் சக்தி வாய்ந்த யுக்திகளில் ஒன்றாகும். பல லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் அவர்களுக்காக கடவுளிடம் இயேசு பரிந்துரை செய்வார் என்று நம்புகின்றார்கள், மேலும் பல லட்சக்கணக்கான முஸ்லிம்கள் அவர்கள் சார்பாக முஹம்மது பரிந்துரை செய்வார் என்று நம்புகின்றார்கள் . அதன் விளைவாக இந்த மக்கள் இயேசு மற்றும் முஹம்மதை இணைத் தெய்வ வழிபாடு செய்கின்றார்கள். பரிந்துரை என்கிற அந்த எண்ணமானது முற்றிலும் முரண்பாடானது. உதாரணத்திற்கு, முஹம்மதுடைய பரிந்துரையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், அவர், கடவுளிடம் தங்களை மன்னிக்கும் படியும் மேலும் சுவனத்தில் அனுமதிக்கும் படியும் கேட்பார் என்று கூறுகின்றார்கள். தீர்ப்பு நாளில் முஹம்மது தன்னுடைய பரிந்துரைக்காக ஆட்களை தேர்ந்தெடுப்பதாக கற்பனை செய்கின்றார்கள். பரிந்துரையின் மீது நம்பிக்கை கொண்டவர்களிடம், முஹம்மது எவ்வாறு தன்னுடைய பரிந்துரைக்குத் தகுதியுடையவர்களை அடையாளம் காண்பார்? என்று நீங்கள் கேட்டால் அவர்கள், “கடவுள் அவரிடம் தெரிவிப்பார்” என்று உங்களிடம் சொல்வார்கள். இந்த கருத்திற்கிணங்க ஒரு நபர் முஹம்மதிடம் சென்று அவருடைய பரிந்துரையை கேட்பார். அதன் பிறகு முஹம்மது கடவுளிடம் அந்த நபர் தன்னுடைய பரிந்துரைக்கு தகுதியானவரா அல்லது இல்லையா என்று கேட்பார். கடவுள் முஹம்மதிடம் அந்த நபர் சுவனத்திற்கு செல்ல தகுதியுடையவர் என்று தெரிவிப்பார். அதன் பிறகு முஹம்மது திரும்பி கடவுளிடம் அந்த நபர் சுவனத்திற்கு செல்ல தகுதியுடையவர் என்று கூறுவார்! சந்தேகமே இல்லாமல் இது இறை நிந்தனையாகும்: பரிந்துரையில் நம்பிக்கை கொள்பவர்கள் கடவுளை தங்களுடைய இணைத்தெய்வமான முஹம்மதிற்கு ஒரு பிரத்தியேகமான குமாஸ்தாவாக ஆக்குகின்றார்கள். கடவுள் துதிப்பிற்குரியவர்.

 

மிக மிகச் சரியான புத்தகமாகக் குர் ஆன் இருப்பதால், இது சுவனத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களுடைய அன்பிற்குரியவர்கள் சார்பாக பரிந்துரை செய்வார்கள் என்கிற உண்மையை ஒத்துக் கொள்கின்றது: “கடவுளே, தயவு செய்து என் தாயாரை சுவனத்திற்குள் பிரவேசிக்க அனுமதிப்பீராக”. இது போன்ற பரிந்துரையானது, அந்த நபருடைய தாயார் சுவனத்திற்குச் செல்ல தகுதியுடையவராக இருப்பாரேயானால் வேலை செய்யும் (2:255, 20:109, 21:28) இவ்விதமாக, பரிந்துரையானது இந்த விதமானதாகவே ஆனபோதிலும் பயனற்றதே.

 

கடவுளின் அன்பிற்குரிய அடியார் ஆப்ரஹாம் தன்னுடைய தந்தையின் சார்பாக பரிந்துரைக்க இயலவில்லை (9:114).  நோவா தன்னுடைய மகன் சார்பாக பரிந்துரைக்க இயலவில்லை (11:46). முஹம்மது தன்னுடைய சிறிய தந்தை (111:1-3) அல்லது உறவினர்கள் (9:80) சார்பாக பரிந்துரை செய்ய இயலவில்லை, என்பதை நாம் குர் ஆனிலிருந்து கற்றுக் கொள்கின்றோம்.  எவராயினும் ஒருவரை, முழுக்க முழுக்க அன்னியரான ஒருவரின் சார்பாக ஒரு வேதம் வழங்கப்பட்டவரோ அல்லது ஒரு புனிதரோ பரிந்துரை செய்வார் என்று நினைக்கச் செய்தது எது?! 2:48, 123; 6:51, 70, 94; 7:53; 10:3; 19:87; 26:100; 30:13; 32:4; 36:23; 39:44; 40:18; 43:86; 53:26; & 74:48 ஐப் பார்க்கவும்.  முஹம்மதுடைய பரிந்துரையானது 25:30ல் உள்ளது.

**********************************************