பின் இணைப்பு 7

நாம் ஒரு பயங்கரமான குற்றத்தை செய்துவிட்ட காரணத்தினால் தான் இவ்வுலகில் இருக்கின்றோம்,மேலும் இந்த வாழ்வு நம்மை மீட்டுக்கொண்டு, நம்முடைய குற்றத்தை பகிரங்கமாகக் கண்டனம் செய்து மேலும் கடவுளின் ராஜ்யத்திற்குள் மீண்டும் இணைவதற்கான நம்முடைய வாய்ப்பாகும்.

 

இவை அனைத்தும் ஒரு சில நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் விண்ணக சமூகத்தாரிடையில் ஒரு சச்சரவு (38:69) எழுந்தபோது துவங்கியது. உயர்ந்த அந்தஸ்தையுடைய படைப்புகளில் ஒருவனாகிய சாத்தான், அவனுக்கு கடவுள் வழங்கியிருந்த சக்திகள் அவனை கடவுளுடன் ஒரு தெய்வமாக இருப்பதற்கான தகுதியை அளித்துவிட்டது என்கிற அகம்பாவமான எண்ணங்களை மனதில் கொண்டிருந்தான். இவ்விதமாக அவன் கடவுளின் பரிபூரணமான அதிகாரத்திற்கு சவால் விட்டான். சாத்தானின் அந்த எண்ணம் இறை நிந்தனை மட்டும் அல்ல, அது தவறானதுமாகும்-கடவுள் மட்டுமே, அவரைத் தவிர எவர் ஒருவரும் தெய்வமாக இருப்பதற்கான தகுதி மற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை. சாத்தானின் இந்த இறை நிந்தனையின் விளைவாக, விண்ணக சமூகத்தாரிடையில் ஒரு பிளவு ஏற்பட்டது, மேலும் கடவுளுடைய ராஜ்ஜியத்தின் அனைத்து அங்கத்தினர்களும் நான்கு பிரிவினர்களாக வகைப்படுத்தப் பட்டனர்.

 

1. வானவர்கள்: கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை உறுதியாகக் கடைபிடித்த படைப்புகள்.

 

2. விலங்குகள்: வருந்தி திருந்தி மேலும் கடவுளின் ராஜ்யத்திற்குள் மீண்டும் நுழைவதற்கு அவர் அளித்த வாய்ப்பை அணுகூலமாக எடுத்துக் கொண்ட (விலங்குகள், மரங்கள், நட்சத்திரங்கள் முதலிய) கலகக்காரர்கள். ஸஅறிமுகவுரையில் இருந்து]

 

3. ஜின்கள்: சாத்தானுடன் உடன்பட்டுவிட்ட படைப்புகள் : அதாவது அவன் ‘தெய்வமாக’ இருப்பதற்கு ஆற்றல் உடையவன்.

 

4. மனிதர்கள்: தங்கள் மனங்களை நிறைவு செய்யாதவர்கள்: அவர்கள் கடவுளின் பரிபூரணமான அதிகாரம் குறித்து ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியவர்கள்.

மிக்க கருணையாளர்

கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை ஆதரிக்காத படைப்புகளை அவர் துரத்தி விடுவார் என்று வானவர்கள் எதிர்பார்த்தனர் (2:30). ஆனால் கடவுள் மிக்க கருணையாளர்; நம்முடைய தவறை பகிரங்கமாக கண்டனம் செய்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பைத் தர அவர் தீர்மானித்தார், மேலும் வானவர்களிடம், நீங்கள் அறிந்திருக்காதவற்றை நான் அறிந்திருக்கின்றேன் (2:30) என்று தெரிவித்தார். படைப்புகளில் சில மீட்சியடைவதற்கான ஒரு சந்தர்ப்பத்திற்கு தகுதியுடையவை என்பதை கடவுள் அறிந்திருந்தார்.

 

ஒரு ஆகாய விமானத்தை செலுத்தும் ஆற்றல் இருப்பதாக நீங்கள் கோரிக்கை விடுத்தால், உங்களுடைய கோரிக்கையை சோதிப்பதற்கான மிகச்சிறந்த வழி உங்களிடம் ஒரு ஆகாய விமானத்தைக் கொடுத்து அதைச் செலுத்தும்படி உங்களிடம் கேட்பதுதான். இதைத்தான் மிகச்சரியாக சாத்தானின் கோரிக்கைக்கு பதிலளிப்பதில் கடவுள் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது. கடவுள் மிகப் பெரிய ஏழு பிரபஞ்சங்களைப் படைத்தார், பின்னர் வானவர்களிடம் பூமி என்றழைக்கப்படுகின்ற மிகச் சிறிய இடத்திற்கு சாத்தானை ஒரு தெய்வமாக நியமிப்பதாக அறிவித்தார் (2:30). “சாத்தானை ஒரு தற்காலிக தெய்வமாக” (36:60) நியமிப்பது தொடர்பான விபரங்கள் முந்திய வேதத்தை உறுதிப் படுத்துகின்றன.

 

கடவுளின் திட்டம் இறப்பை உண்டு பண்ணி (67:1-2), பின்னர் மனிதர்கள் மற்றும் ஜின்களை இவ்வுலகிற்கு கொண்டு வருவதாக இருந்தது. இவ்விதமாக, அவர்கள் எந்த பாரபட்சமுமின்றி, மேலும் கடவுளின் பரிபூரண அதிகாரத்தையோ அல்லது சாத்தானின் பல தெய்வ நம்பிக்கைக் கோட்பாட்டையோ ஆதரிப்பதற்கு முழு சுதந்திரத்துடன் செயல்படக் கூடியவர்களாக துவங்குகின்றனர். இந்த மிக முக்கியமான முடிவை எடுப்பதற்கு ஒவ்வொரு மனிதரும் கடவுளுடைய பரிபூரண அதிகாரத்தை ஆதரிக்கும் தன்மையுள்ள ஒரு செய்தியை கடவுளிடமிருந்தும் அவ்வண்ணமே சாத்தானுடைய பல தெய்வ நம்பிக்கைக் கொள்கைகளைத் திணிக்கின்ற ஒரு செய்தியை அவனிடமிருந்தும் பெறுகின்றார்.

 

 

 

ஒரு தலையாய துவக்கத்தை நமக்குத் தருவதற்கு, நம்மை இவ்வுலகத்திற்கு அனுப்பு வதற்கு முன்னர், மிக்க கருணையாளர் மனிதர்கள் அனைவரையும் அவருக்கு முன்னால் ஒன்று திரட்டினார், மேலும் அவர் மட்டுமே நம்முடைய இரட்சகர் மற்றும் எஜமானர் (7:172) என்று நாம் சாட்சி கூறினோம். இவ்விதமாக, கடவுளின் பரிபூரண அதிகாரத்தை ஆதரிப்பது ஒரு இயற்கையான பிறவிக் குணமாகவும், அது ஒவ்வொரு மனிதனையும் முழுமைப் படுத்துவதற்கு மிகவும் அவசியமான பகுதியாகவும் உள்ளது.

 

கலகக்காரர்களை மரணத்தில் ஆழ்த்தியதற்கு பின்னர், மனிதர்கள் மற்றும் ஜின்களின் ஆன்மாக்கள் ஒரு பிரத்யேகமான களஞ்சியத்தில் வைக்கப்பட்டன. பின்னர் கடவுள் சோதனைக் காலத்தின் பொழுது ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஆன்மாக்களை வசிக்கச் செய்வதற்காக பொருத்தமான உடல்களைப் படைத்தார். முதல் ஜின் உடலானது நெருப்பிலிருந்து ஆக்கப்பட்டது, மேலும் சாத்தான் அந்த உடலுக்கு நியமிக்கப்பட்டான் (15:27). முதல் மனித உடலானது பூமியின் பொருளான களி மண்ணிலிருந்து படைக்கப்பட்டது (15:26), மேலும் அந்த உடலிற்கு முதல் மனிதனை கடவுள் நியமித்தார். பூமியின் மீது மனிதர்களுக்கு வானவர்கள் பணிவிடை செய்ய வேண்டும் என்பது கடவுளின் திட்டமாக இருந்தது - அவர்களைக் காவல் காத்தல், காற்று மற்றும் மழையை அவர்களுக்காக ஓட்டுதல், வாழ்வாதாரங்களைப் பங்கீடு செய்தல் போன்றவை. இந்த உண்மை குர்ஆனில் உருவகமாகக்  கூறப்பட்டுள்ளது: உங்கள் இரட்சகர் வானவர்களிடம் “ஆதாமிற்கு முன்னால் சிரம் பணிந்து விழுங்கள்” என்று கூறினார். சாத்தான் மனித இனத்திற்கு எந்த ஒரு பணிவிடையும் செய்வதை விட்டும் சந்தேகத்திற்கு இடமின்றி மறுத்துவிட்டான் (2:34, 7:11, 17:61, 18:50, 20:116).

 

நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன் ; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இதயத்தில் சொன்னாயே. (ஏசைய்யா 14:13-15)

 

மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்போது இயேசு: அப்பாலே போ சாத்தானே: உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். (மத்தேயூ 4:8-10) & (லூக்கா 4:5-8)

ஆதாமின் உடல் பூமியின் மீது நிலைத்திருந்த அதே சமயம், மெய்யான நபராகிய அவரது ஆன்மா பிரபஞ்சத்திற்கு மிகவும் தொலைவில் உள்ள சுவனத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டது. கடவுள் ஆதாமிற்கு தடுக்கப்பட்ட மரம் போன்றவற்றை சுட்டிக் காட்டுகின்ற குறிப்பிட்ட கட்டளைகளைக் கொடுத்தார், மேலும் சாத்தானிய செய்தியை ஆதாமிடம் சேர்ப்பிப்பதற்கு ஆதாமின் கூட்டாளியாக சாத்தான் நியமிக்கப்பட்டான். மற்றவை சரித்திரம் ஆகும்.

 

ஒரு மனிதன் பிறக்கும் ஒவ்வொரு முறையும், ஆன்மாக்களின் களஞ்சியத்திலிருந்து அந்த புதிய குழந்தைக்கு ஒரு மனித நபர் நியமிக்கப்படுகின்றார். கடவுள் அவருடைய அறிவிற்கிணங்க ஆன்மாக்களை நியமிக்கின்றார் (28:68). ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு குறிப்பிட்ட உடலுக்கு நியமிக்கப்படுவதற்கான மற்றும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் வாழ்வதற்கான தகுதியைப் பெறுகின்றது. எந்த ஆன்மாக்கள் நல்லவை மேலும் எந்த ஆன்மாக்கள் தீயவை என்பதை கடவுள் மட்டுமே அறிவார். கடவுளின் திட்டங்களுக்கிணங்கவே நம்முடைய குழந்தைகள் நம்முடைய வீடுகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள்.

புதிதாய்ப் பிறக்கும் மனிதனுக்கு கூடுதலாக சாத்தானுடைய நோக்கத்தின் நிலையை எடுத்துக் கூறுவதற்காக ஒரு சுதந்திரமான ஜின் ஆன்மாவும் நியமிக்கப்படுகின்றது. எந்த ஜின்னின் பௌதீக உடலும் சுதந்திரமானது. ஜின்கள் சாத்தானின் சந்ததியர் ஆவர் (7:27, 18:50). நியமிக்கப்பட்ட அந்த ஜின்அந்த மனிதனுடன் அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடர்ந்து இருக்கும், மேலும் தீர்ப்பு நாளன்று முக்கியமான சாட்சியாக பணியாற்றும் (50:23). நம்முடைய தலைகளுக்குள் மனித ஆன்மா மற்றும் ஜின் ஆன்மாவிற்கு இடையில் அவை இரண்டும் ஒரே நோக்கத்தின் நிலை மீது நம்பிக்கை கொள்ளும் வரை ஒரு தொடர்ச்சியான தர்க்கம் நடந்துக் கொண்டே இருக்கும்.

அசலான பாவம்
பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, “அசலான பாவம்” என்பது ஆதாம் அந்த மரத்திலிருந்து உண்டபோது கடவுளின் சட்டத்தை மீறினார் என்பது அல்ல. அசலான பாவமானது அந்த மாபெரும் சச்சரவின் பொழுது கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை நாம் உறுதியாகக் கடைபிடிக்கத் தவறியதே ஆகும். மனித நபர் ஆணோ அல்லது பெண்ணோ தன் ஜின் கூட்டாளியை அந்த அசலான பாவத்தை வெளிப்படையாகக் கண்டனம் செய்வதிலும் மேலும் கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை ஆதரிப்பதிலும் நம்பிக்கை கொள்ளச் செய்து விடுவாரேயானால் அந்த இரண்டு படைப்புகளும் தீர்ப்பு நாளன்று கடவுளின் நிலையான ராஜ்ஜியத்திற்கு மீட்சிஅடைந்து விடுவார்கள். ஆனால் அந்த ஜின் கூட்டாளி அந்த மனிதரை சாத்தானுடைய இணைத் தெய்வ வழிபாட்டுக் கருத்துக்களில் நம்பிக்கை கொள்ளச் செய்து விடுமேயானால், பின்னர் அந்த இரண்டு படைப்புகளும் கடவுளின் ராஜ்ஜியத்திலிருந்து என்றென்றும் வெளியேற்றப்படுவர்.

சாத்தானுடைய கருத்துக்களை ஸ்தாபிப்பதற்காக சாத்தான் மற்றும் அவனுடைய பிரதிநிதிகள் முஹம்மது, இயேசு, மேரி மற்றும் புனிதர்கள் போன்ற சக்தியற்ற படைப்புகளை இணைத் தெய்வ வழிபாடு செய்யும்படி பரிந்துரைக்கின்றனர். நம்முடைய பல தெய்வ நம்பிக்கை கோட்பாடுகள் காரணமாகவே நாம் இங்கு இருக்கின்ற படியால் நம்மில் பெரும்பாலோர் சாத்தானுக்கு எளிதில் இரையாகி விடுகின்றனர்.

 

ஒரு தெய்வமாக சாத்தானுடைய தகுதியின்மை அவனுடைய ராஜ்ஜியத்தில் (36:66) சாதாரணமாகக் காணப்படுகின்ற ஒழுங்கின்மை, வியாதி, விபத்துகள், துக்கம் மற்றும் போர் ஆகியவை மூலம் முன்னரே நிரூபிக்கப்பட்டு விட்டது. மற்றொரு புறம் சாத்தானை பகிரங்கமாகக் கண்டனம் செய்து, கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை உறுதியாக ஆதரித்து மேலும் இயேசு மற்றும் முஹம்மது போன்ற சக்தியற்ற மேலும் இறந்துவிட்ட படைப்புகளை இணைத் தெய்வ வழிபாடு செய்வதிலிருந்து விலகி இருப்பவர்கள் கடவுளின் பாதுகாப்பிற்குத் திரும்பி விட்டவர்கள் ஆவர் - அவர்கள் இங்கு இவ்வுலகிலும் மேலும் மறுவுலகிலும் ஒரு முழு நிறைவான வாழ்வை மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள்.

 

ஏனெனில் நம்முடைய பல தெய்வ நம்பிக்கை எண்ணங்களை வெளிப்படுத்துவதற்காக நம்முடைய வாழ்வு இவ்வுலகில் தொடர் சோதனைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இணைத் தெய்வ வழிபாடு தான் மன்னிக்க முடியாத ஒரே குற்றம் ஆகும் (4:48, 116). இந்த உலகம், கடவுளின் பரிபூரணமான அதிகாரத்தை அல்லது சாத்தானின் இணைத்தெய்வ வழிபாடு எண்ணங்களை (67:1-2) ஆதரிக்கின்ற நம்முடைய தீர்மானத்தை தெளிவுபடுத்துவதற்காக, கடவுளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சூடான மற்றும் நீளமான நாட்களையுடைய காலங்களிலும் விடியற்காலை தொடர்புத் தொழுகை மற்றும் நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் கடவுளின் சட்டங்களை ஆதரிப்பது தொடர்பான நம்முடைய விருப்பத்தை சோதிப்பதற்காக இரவும், பகலும் சீராக மாறி மாறி வருகின்றது. கடவுளின் பரிபூரணமான அதிகாரம் குறித்து முற்றிலும் உறுதியாய் இருப்பவர்கள் மட்டுமே மீட்சியடைவார்கள். (26:89).

**************************************