பின் இணைப்பு 6
கடவுளின் மேன்மை
கடவுளின் மேன்மையானது மனிதனுடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டது என்பதை வசனம் 39:67லிருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம் - அந்த வசனம், அனைத்து ஏழு பிரபஞ்சங்களும் “கடவுளின் கையில் மடித்து வைக்கப்பட்டுள்ளது” எனக் கூறுகின்றது.

 

குர்ஆனின் மறுக்கவே இயலாத உறுதியான கணிதக் குறியீட்டின் ஆதரவு கொண்டு, நம்முடைய பிரபஞ்சம்தான் ஏழு பிரபஞ்சங்களிலும் மிகச்சிறியதும், மிகவும் உள்ளடங்கியதும் ஆகும் என்று நமக்கு கற்பிக்கப் படுகின்றது (41:12, 55:33, 67:5, & 72: 8 - 12). இதற்கிடையில், நம்முடைய நட்சத்திர மண்டல வீதி, பால்வெளி வீதி ஆகியவை 100,000 ஒளி வருடங்கள் பயணிக்கின்ற அளவு குறுக்களவு கொண்டது எனவும் மேலும் நம்முடைய பிரபஞ்சம் நூறுகோடி இத்தகைய நட்சத்திர மண்டல வீதிகளையும் மேலும் நூறுகோடி, பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களையும், கூடுதலாக எண்ணிலடங்கா பல லட்சக்கணக்கான கோடிகள் விண்வெளி வஸ்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்கின்றது என்பதை நம்முடைய விஞ்ஞான முன்னேற்றங்கள் நமக்கு காட்டுகின்றன. நம்முடைய பிரபஞ்சம் 20,000,000,000 ஒளிவருடங்களுக்கும் அதிகமான அளவு பயணிக்கும் தூர அளவையுடையது எனக் கணக்கிடப் பட்டிருக்கின்றது.

நட்சத்திரங்களை எண்ணுங்கள்!

ஒரு குவிண்டில்யன்ஸ1,000,000,000,000,000,000] எண்ணிக்கை மட்டும் கொண்ட நட்சத்திரங்களை எடுத்துக்கொண்டு, இரவு பகலாக, ஒரு வினாடிக்கு ஒரு நட்சத்திரம் என அவற்றை நாம் எண்ணிணோமேயானால் (0-லிருந்து குவின்டில்யன் வரையிலும்), இது 3200 கோடி வருடங்களை எடுத்துக்கொள்ளும் (இது நம் பிரபஞ்சத்தின் வயதை விடவும் அதிகமாகும்). அதாவது அவற்றை “எண்ணுவதற்கு” மட்டுமே அவ்வளவு காலம் பிடிக்கும் என்பதாகும். ஆனால் கடவுள் அவற்றைப் “படைத்துள்ளார்”. கடவுளின் மேன்மை இத்தகையதே.

 

நாம் ஒரு துணிகரமான விண்வெளிப் பயணம் செல்வதாக கற்பனை செய்தால் நம்முடைய பிரபஞ்சத்தின் மிகப் பரந்த அமைப்பை நம்மால் பாராட்ட இயலும். நாம் பூமியிலிருந்து சூரியனை நோக்கி ஒளியின் வேகத்தில் செல்வோமேயானால், 93,000,000 மைல்கள் மற்றும் 8 நிமிடங்களுக்குப் பிறகு நாம் சூரியனை அடைகின்றோம். நம்முடைய நட்சத்திரமண்டல வீதியை விட்டு வெளியேற, ஒளியின் வேகத்தில் செல்வோமேயானால் நமக்கு 50,000 வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளும். பால்வெளி வீதியின் வெளி எல்லையிலிருந்து நம்முடைய பூமி காணஇயலாததாக இருக்கின்றது. மிகச் சக்திவாய்ந்த தொலைநோக்கி கூட நம்முடைய மிகச்சிறிய “பூமியை” கண்டுபிடிக்க இயலாது.

 

நமக்கு அடுத்துள்ள நட்சத்திர மண்டல வீதியை அடைவதற்கு, ஒளியின் வேகத்தில், 2,000,000, ஆண்டுகளுக்கும் அதிகமாக நாம் செலவிட வேண்டும். நம்முடைய பிரபஞ்சத்தின் வெளி எல்லையை அடைவதற்கு, ஒளியின் வேகத்தில், குறைந்தது 10,000,000,000 ஆண்டுகளாவது செலவிட வேண்டும். நம்முடைய பிரபஞ்சத்தின் வெளி எல்லையிலிருந்து, பால்வெளிவீதி கூட ஒரு பெரிய அறையிலுள்ள ஒரு சிறிய தூசு போன்றது தான். நம்முடைய பிரபஞ்சத்தை இரண்டாவது பிரபஞ்சம் சூழ்ந்து கொண்டுள்ளது. மூன்றாவது பிரபஞ்சமோ இரண்டாவது பிரபஞ்சத்தை விடவும் பெரியது, மேலும் இவ்வாறே மற்ற பிரபஞ்சங்களும் உள்ளன. மிகச் சரியாக நம்முடைய பிரபஞ்சத்தை ஏழாவது பிரபஞ்சமாக கருத்தில் கொள்ள வேண்டும், இது ஆறாவது பிரபஞ்சத்தால் சூழப்பட்டுள்ளது. அது ஐந்தாவது பிரபஞ்சத்தால் சூழப்பட்டுள்ளது, மேலும் இவ்வாறே மற்றவைகளும் உள்ளன. மிகவும் வெளியிலுள்ள பிரபஞ்சமான அந்த முதல் பிரபஞ்சத்தின் மாபெரும் அளவை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அந்த முதல் பிரபஞ்சத்தின் சுற்றளவை விவரிப்பதற்கு எண்ணே கிடையாது. புரிந்து கொள்வதற்கு இயலாத இந்த மாபெரும் அளவானது கடவுளின் கைப்பிடிக்குள் உள்ளது. மிகவும் வெளியிலுள்ள பிரபஞ்சத்தின் வெளி எல்லையிலிருந்து பார்த்திடும் போது, பூமி கிரகம் எங்குள்ளது? எவ்வளவு முக்கியமானது இது? பூமி என அழைக்கப்படும் இந்த மிக மிகச் சிறிய வஸ்துவின் மீது தான் இன்னும் மிகவும் சிறிய படைப்புகளான மேரி, இயேசு மற்றும் முஹம்மது ஆகியோர் வாழ்ந்தனர். இருப்பினும் மக்களில் சிலர், சச்தியற்ற இந்த மனிதர்களை கடவுள்களாக ஏற்படுத்துகின்றனர்.

image6

கடவுளின் மேன்மை, அவர் ஏழு பிரபஞ்சங்களையும் அவருடைய கைகளில் வைத்திருக்கின்றார் என்ற உண்மையில் மட்டுமல்லாமல் இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் எங்கெங்கிலும் உள்ள ஒவ்வொரு அணுவையும், அணுவின் உட்பொருளையும் கூட அவர் முழுமையாகக் கட்டுப்படுத்துகின்றார் என்ற உண்மையிலும் அடையாளம் காணப்படுகின்றது (6:59, 10:61 & 34:3).

**********************************************