பின் இணைப்பு 5
சுவனமும் நரகமும்
குர்ஆன் முழுவதும் சுவனம் மற்றும் நரகம் பற்றிய வர்ணனைகள் உதாரணவிளக்கங்களாகவே உள்ளன. மேலும் பொதுவான விசயங்களில் அல்லாது, எப்பொழுதெல்லாம் இவ்விதமான வர்ணனைகள் தனி வாக்கியங்களாக காணப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அவ்விதமாகவே குர்ஆன் நமக்குக் கூறுகின்றது. 2:24-26, 13:35, மற்றும் 47:15, ஐப் பார்க்கவும். “மதல்” எனும் வார்த்தை (உதாரண விளக்கம்) இந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. மொழிக்கேற்றவாறு இந்த வசனங்களிலுள்ள “மதல்” எனும் வார்த்தையை நீக்கி விடவும் இயலும் மேலும் அப்போதும் நாம் முழுமையான வாக்கியங்களையே பெறுவோம். ஆனால் சுவனம் மற்றும் நரகத்தின் வர்ணனைகள் உதாரணங்களாக இருப்பதே அந்த வார்த்தை அங்கு இருப்பதற்குக் காரணமாகும்.

 

சுவனமும் நரகமும் உண்மையில் எப்படி இருக்கும் என்பது நம்முடைய புரிந்துகொள்ளும் சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டது. எனவேதான் உதாரணம் தேவைப்படுகின்றது. உதாரணத்திற்கு, சாக்லெட்டின் சுவையை ஒருபோதும் ருசித்துப்பார்த்திராத ஒரு நபருக்கு சாக்லெட்டின் சுவையை எவ்வாறு ஒருவர் விளக்கி விடஇயலும்? உதாரணம் பயன்படுத்தப்பட்டாக வேண்டும். சாக்லெட் எந்தவிதமான சுவையுடையது என்பதை அறிய உண்மையான சாக்லெட்டை சுவைப்பதற்கு அந்த நபர் காத்திருக்க வேண்டும். சாக்லெட்டின் சுவையை விளக்குவதற்கு எவ்விதமான உதாரணத்தை நாம் பயன்படுத்திய போதிலும் உண்மையான சுவையை ஒருபோதும் மதிப்பிட இயலாது.

 

ஆதாமும், ஏவாளும் அவர்களுடைய அறியாமைக் காலங்களில் சுவனத்தில் விடப்பட்ட காலம் முதல், சுவனம் உள்ளது (2:35) இரண்டு உயர்வான சுவனங்கள் - மனிதர்களுக்காக ஒன்று மற்றும் ஜின்களுக்காக ஒன்று - மேலும் இரண்டு கீழான சுவனங்கள், மனிதர்களுக்காக ஒன்று மற்றும் ஜின்களுக்காக ஒன்று உள்ளன என்பதை சூரா 55 லிருந்து நாம் அறிந்துக்கொள்கின்றோம் (அதிகமான விபரங்களுக்கு பின் இணைப்பு 11ஐப் பார்க்கவும்).

 

நரகம் இன்னும் படைக்கப்படவில்லை. அது தீர்ப்பு நாளன்று படைக்கப்படவுள்ளது (69:17 & 89:23) அதிகமான விபரங்கள் பின் இணைப்பு 11ல் கொடுக்கப்பட்டுள்ளது.

உயர்வான சுவனமும், கீழான சுவனமும்

உயர்வான சுவனத்திற்கும் கீழான சுவனத்திற்கும் ஆழ்ந்த வித்தியாசங்கள் இருக்கின்றன. உதாரண விளக்கமாக, உயர்வான சுவனத்தில் தண்ணீர் தங்கு தடையின்றி ஓடுகின்றது (55:50) அதே சமயம் கீழான சுவனத்திலுள்ள தண்ணீர் இரைத்து எடுக்க வேண்டிய தேவையுள்ளது (55:66)

 

உதாரண விளக்கமாக, உயர்வான சுவனம் அனைத்து வகையான பழங்களையும் கொண்டிருக்கின்றது (55:52), அதே சமயம் கீழான சுவனம் ஓர் அளவிற்குட்பட்ட வகையான பழங்களைக் கொண்டிருக்கின்றது (55:68).

 

உதாரண விளக்கமாக, உயர்வான சுவனத்தில் தூய்மையான துணைகள் உடனடியாக தங்களுடைய துணைகளுடன் சேர்ந்திடுவர் (55:56)

 

அதே சமயம் கீழான சுவனத்தில் தங்களுடைய துணைகளை தேடிச்சென்று கொண்டுவர வேண்டும் (55:72).

 

இருப்பினும், நரகத்திலிருந்து தப்பித்து கீழான சுவனத்தை அடைய போதுமான பாக்கியம் உள்ளவர்களுக்கு, கீழான சுவனம் கூட நம்பஇயலாத மிகச் சிறந்த பரிசாகும் (3:185) - கீழான சுவனத்திற்கு செல்வதும் ஒரு மகத்தான மாபெரும் வெற்றியாகும். தங்களுடைய 40வது பிறந்தநாளுக்கு முன்பு இந்த வாழ்க்கையைவிட்டுப்பிரியும், மேலும் தங்களுடைய ஆன்மாக்களை போதிய அளவு வளர்ச்சியடையச் செய்யாத மனிதர்கள் கீழான சுவனத்திற்கு செல்வார்கள் (46:15, பின் இணைப்பு 11 & 32) உயர்வான சுவனமானது நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, தங்களுடைய ஆன்மாக்களை போதிய அளவு வளர்ச்சியடையச் செய்தவர்களுக்காக ஒதுக்கிவைக்கப் பட்டுள்ளது.

 

எவரொருவர் வெளிப்படையாக நரகத்தினின்றும் தப்பிப்பதில் வெற்றியடைந்து, மேலும் சுவனத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றாரோ அவர் மகத்தானதொரு வெற்றியை அடைந்துவிட்டார்.[3:185]

**********************************************