பின் இணைப்பு 38
19: படைத்தவரின் கையொப்பம்

19 என்ற பொதுவான வகுக்கும் எண்ணை அடிப்படையாகக் கொண்டு கடவுளின்  கணித கட்டமைப்பிலான படைப்புகளாக வேதங்கள் மட்டும் இல்லை. கலிலியோவின் பிரபலமான கூற்றாகிய: “கணிதம் என்பது மொழி, இதைக் கொண்டு கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்” என்பது உண்மையிலேயே அறிவுப்பூர்வமான கூற்றாகும். கடவுளின் கையொப்பமாக குறிப்பிட்ட பல படைப்பினங்களின் மீது எண் 19 இருப்பதை பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தற்போது காட்டுகின்றன. மைக்கேல் ஏஞ்சலோ, பிக்காசோ போன்றவர்களின் கையொப்பங்கள் அவர்களது ஓவியங்களை அடையாளம் காட்டுவது போல பிரபஞ்சம் முழுவதும் இந்த தெய்வீக முத்திரை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு:

 

1.     சூரியன், சந்திரன் மற்றும் பூமி இம்மூன்றும் ஒவ்வொரு 19 வருடங்களுக்கு ஒரு முறை, ஒரே நேர்கோட்டில் வருகின்றன. (எண்சைக்லோபீடியா ஜுடைகா வில் “காலண்டர்” என்ற பகுதியில் பார்க்கவும்).

 

2.     அறிவுப்பூர்வமானதொரு வானியல் அற்புதமான ஹேலியின் வால் நட்சத்திரம் நம்முடைய சூரிய மண்டலத்திற்கு 76 வருடங்களுக்கு ஒரு முறை வருகை புரிகின்றது, 119x4.

 

3.     கடவுளின் முத்திரை உங்கள் மீதும், என்மீதும் உண்டு என்பதை மனித உடல் 209 எலும்புகளைக் கொண்டது என்ற உண்மை தெளிவுப்படுத்துகின்றது, 119x11.

 

4.     கூ.று. சேட்லர் உடைய லேங்மேன்ஸ் மெடிக்கல் எம்பிரியோலஜி என்ற புத்தகம் அமெரிக்காவில் பல மருத்துவப் பள்ளிகளில் பாடபுத்தகமாக பயன்படுத்தப்படுகின்றது. அதன் 5-வது பதிப்பின் பக்கம் - 88 - ல் நாம் பின்வரும் கூற்றை காண்கின்றோம்: பொதுவாக இறுதி மாதவிடாயின் தொடக்கம் முதல் 280 நாட்கள் அல்லது 40 வாரங்கள் என்பது தான் ஒரு பூரண வளர்ச்சி அடையும் கர்ப்ப காலமாக கருதப்படுகின்றது, அல்லது மிகச் சரியாக கருத்தரித்த பிறகு 266 நாட்கள் அல்லது 38 வாரங்கள் என்று கருதப்படுகின்றது. இந்த எண்கள் 266-ம், 38-ம் 19ன் பெருக்குத் தொகையாக உள்ளன.

கடவுள் துதிப்பிற்குரியவர்