பின் இணைப்பு 37
குற்றவியல் சட்டம்

ஒரு திருடன் உங்களிடமிருந்து ஆயிரம் டாலர்களை திருடிவிட்டால் அவனை சிறைக்கு அனுப்புவதால் உங்களுக்கு என்ன பயன்கிடைக்கும்? அந்த திருடனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருந்தால், அவர்கள் செய்த குற்றம் என்ன? அந்த பிள்ளைகள் தங்களுடைய தந்தையை ஏன் இழந்து நிற்க வேண்டும்?

 

இந்த பிரச்சனைக்கும், அதே சமயம் இன்றைய உலகில் நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் குர்ஆன் தீர்வு அளிக்கின்றது

சமநீதி தான் சட்டம் (2:178, 179)

குர்ஆனின் குற்றவியல் சட்டப்படி, உங்களிடமிருந்து ஆயிரம் டாலர்களை திருடிய திருடன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், நீங்கள் இழந்த அந்த ஆயிரம் டாலர்களை நீங்கள் பெறும் வரையும் கூடுதலாக அந்த திருட்டின் காரணமாக ஏதேனும் பிற நஷ்டங்கள் மற்றும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காகவும், அவன் உங்களுக்காக வேலை செய்தாக வேண்டும். அதே நேரம் அந்த திருடனின் குற்றமற்ற மனைவி மற்றும் குழந்தைகள் அவனை இழக்கமாட்டார்கள், மேலும் சிறையில் செய்யும் செலவுகளையும் தவிர்த்துக் கொள்ளலாம். சிறையில் அடைப்பது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனை, அது சம்பந்தப்பட்ட அனைத்தும் உபயோகமற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

பொதுவான நம்பிக்கைக்கு மாற்றமாக திருடனின் கை துண்டிக்கபடக் கூடாது. கடவுளுக்கு, அவருடைய கருணைக்காகவும் மற்றும் குர்ஆனில் உள்ள அவருடைய கணித அற்புதத்திற்காகவும் நாம் நன்றி செலுத்த வேண்டும், நாம் இப்போது திருடனின் கையில் அடையாளமிடப் படவேண்டும் என்பதை அறிகின்றோம். திருடனின் கையில் அடையாளமிடப்பட வேண்டும் என்று 5:38-ல் கூறப்பட்டுள்ளது. இந்த சூரா மற்றும் வசன எண்களை கூட்டினால் 5+38=43. குர்ஆனில் மற்றொரு இடத்தில் 12:31 ல்கையை வெட்டுவது பற்றி காணப்படுகின்றது. இதில் ஜோஸஃப்பின் அழகில் மதிமயங்கிய பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர் என்பதை நாம் அறிகின்றோம். அவர்கள் தங்களின் கைகளை துண்டித்துக் கொள்ளவில்லை என்பதை சுலபமாக புரிந்துக் கொள்ளலாம். எவராலும் அவ்வாறு செய்ய இயலாது. இந்த சூரா மற்றும் வசன எண்களை கூட்டினால் 12+31 = 43 இது 5:38 - ல் கிடைக்கும் அதே கூட்டுத் தொகை தான். குர்ஆனின் சட்டப்படி, திருடனின் கையில் அடையாளம் தான் இடவேண்டும், அதை துண்டித்து விடக்கூடாது என்பதற்கு கணித ரீதியிலான உறுதிப்பாட்டை இது தருகின்றது. கூடுதலான கணித உறுதிப்பாடும் கொடுக்கப்பட்டுள்ளது. அது 12:31-லிருந்து 19 வசனங்களுக்குப் பின்னர் கையை வெட்டுவது பற்றி மீண்டும் நாம் காண்கின்றோம். இஸ்லாத்தில் (அடிபணிதல்) தண்டனையானது, சமநீதி சட்டம் மற்றும் சமுதாய பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டது (2:178, 5:38, 24:2).

 

இறைநிந்தனைகளான ஹதீஸ் மற்றும் சுன்னத், திருமணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லால் அடித்துக் கொல்வதை தண்டனையாக ஏற்படுத்தியுள்ளது. இது கடவுளின் சட்டமல்ல. 24:2ல் கூறியுள்ள படி விபச்சாரம் செய்தவருக்கான தண்டனை பொது இடத்தில் வைத்து சவுக்கால் அடித்தல் : நூறு அடையாள கசையடிகள். மேலே சுட்டிக்காட்டப்பட்டிருப்பது போல், அந்த தண்டனையானது சமூக விழிப்புணர்ச்சியையும், மேலும் குற்றவாளியை தன் தவறை உணர வைப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பொது மக்களின் முன்பு கசையடி கொடுப்பது, இந்த நோக்கத்தை நிறைவேற்றும்.

 

கொலை குற்றத்தைப் பொறுத்தவரை குர்ஆன் நிச்சயமாக மரண தண்டனையை ஊக்குவிக்கவில்லை (2:179) “சுதந்திரமானவருக்கு, சுதந்திரமானவர், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்கு பெண்” (2:178). மனிதனின் இழிவான மற்றும் நேர்மையின்மையின் காரணமாக பெரும்பாலான மக்களால் இந்த குர்ஆனின் சட்டம் என்ன சொல்கின்றது என்பதை நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை. சமநீதி சட்டத்தை கண்டிப்பாகப் பின்பற்றியாக வேண்டும் என்ற தெளிவான கட்டளைகளை ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுக்கின்றார்கள் - ஒரு பெண் ஒரு ஆணை கொலை செய்தால், அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணை கொலை செய்தால் அல்லது ஒரு அடிமை ஒரு சுதந்திரமானவ ரை கொலை செய்தால், அல்லது ஒரு சுதந்திரமானவர் ஒரு அடிமையைக் கொலை செய்தால், மரண தண்டனையைப் பிரயோகிக்க இயலாது. கொலை செய்தவர், பலியானவரின் குடும்பத்திற்கு ஈட்டுத்தொகை தருவதற்கு குர்ஆன் முன்னுரிமை அளிக்கின்றது. கொலையாளியைக் கொலை செய்வது பலியானவரை திரும்பவும் கொண்டு வரப் போவதில்லை. அன்றி கொலையாளிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதால் பலியானவரின் குடும்பம் எந்த பயனையும் அடைவதில்லை. ஆயினும் ஈட்டுத்தொகையானது மற்றவர்களை எச்சரிப்பதற்கு போதுமானதாகும். இஸ்லாத்தில் (அடிபணிதல்) பாதிக்கப்பட்டவர் மற்றும் அல்லது பாதிக்கப்பட்டவரின் குடும்பம் தான் எல்லா குற்றங்களுக்கும் நீதிபதிகள்; என்ன தண்டனை என்பதை குர்ஆனை அறிந்த ஒருவரின் மேற்பார்வையின் கீழ் அவர்கள் தீர்மானிக்க வேண்டும்.

**************************************