பின் இணைப்பு 36
ஒரு சிறந்த தேசத்திற்கான விலை என்ன

வேதத்தையுடைய மக்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்) நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வில் நிலைத்திருந்தால், நாம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலும், பேரானந்தம் நிறைந்த சுவனத்தில் நுழையச் செய்வோம். அவர்கள் தோராவையும், சுவிஷேசத்தையும் மேலும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து இதில் என்ன வெளிப்படுத்தப் பட்டுள்ளதோ அதையும் கடைப்பிடித்து நடந்திருந்தால், அவர்களுக்கு மேலிருந்தும் மேலும், அவர்களின் பாதங்களுக்கு கீழிருந்தும் வாழ்வாதாரங்களை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். அவர்களில் சிலர் நன்னெறியாளர்களாக உள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாவம் செய்பவர்களாக உள்ளனர். [5:65-66]

 

பலதரப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மட்டும் நம்பிக்கைக் கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தியிருந்தால், நாம் வானம் மற்றும் பூமியிலிருந்து அருட்கொடைகளைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்திருப்போம் [7:96]

 

கடவுள் ஒருவர் தான் உங்களுடைய சந்தோஷத்தை அல்லது துக்கத்தை கட்டுப்படுத்துகின்றவர். கடவுள் ஒருவர் தான் உங்களை செல்வந்தராகவோ அல்லது ஏழையாகவோ ஆக்குபவர். [53:43,48]

கடவுளின் சட்டங்களை உறுதியாகக் கடைபிடிக்கும் ஒரு தேசம் உலகின் மற்ற தேசங்களுக்கிடையே வெற்றி, செழிப்பு மற்றும் சந்தோஷத்தில் மேன்மை அடையும் என்று உத்திரவாதம் அளிக்கப்படுகின்றது. (10:62 - 64, 16:97, 24:55, 41:30-31) அதற்கு மாறாக, கடவுளின் சட்டங்களை மீறும் ஒரு தேசம் துன்பகரமான வாழ்க்கைக்கு உள்ளாகும் (20:124). கடவுளின் சட்டங்களை உறுதியாகக் கடைப் பிடிக்கும் ஒரு தேசம், ஒரு சிறந்த தேசமாக விளங்குவதற்கு உத்திரவாதம் அளிக்கப்படுகின்றது. இது ஒரு வெறும் கற்பனை கனவல்ல; கடவுளின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதால் (10:61), அவருடைய உத்திரவாதங்களும், வாக்குறுதிகளும் நடந்தே தீரும். கடவுளின் சட்டங்களை உறுதியாகக் கடைபிடிக்கும் ஒரு தேசம் இவ்வாறு வர்ணிக்கப்படுகின்றது;

 

1. மக்களுக்கு அதிகபட்ச சுதந்திரம் - மார்க்கரீதியான சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பிரயாணசுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திரம் (2:256, 10:99, 88:21-22).

 

2. மக்கள் அனைவருக்கும், அவர்களுடைய இனம், நிறம், சமயக்கோட்பாடு, சமூக அந்தஸ்து, பொருளாதாரச் சூழ்நிலை அல்லது அரசியல் சார்பு ஆகியவைகளை கருத்தில் கொள்ளாது - அனைவருக்குமான உத்திரவாதமளிக்கப்பட்ட மனித உரிமைகள் (5:8, 49:13).

 

3. அனைத்து மக்களுக்கும் வளமான வாழ்வு. கடவுளின் பொருளாதார முறையானது மாறாத செல்வ சுழற்சி, கடும் வட்டியின்மை மற்றும் உற்பத்தி ரீதியிலான முதலீடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டது. உற்பத்திரீதியிலல்லாத பொருளாதாரமாகிய சூதாட்டம், லாட்டரி மற்றும் அதிக வட்டியுடைய கடன்கள் போன்றவைகளுக்கு அனுமதி இல்லை (2:275-7, 59:7).

 

4. அனைவருக்குமான சமூகநீதி. கடமையான தர்மத்தின் காரணமாக (ஜகாத்), எவரொருவரும் பசியுடனோ அல்லது வீடு இல்லாமலோ இருக்க மாட்டார்கள் (2:215, 70:24-25, 107:1-7).

 

5. ஏகோபித்த உடன்பாடு அடிப்படையிலான ஒரு அரசியல் முறை. பரஸ்பர ஆலோசனை மற்றும் பேச்சு சுதந்திரம் மூலமாக, ஒரு தரப்பில் எடுக்கப்பட்ட எந்த முடிவும் அந்த கலந்துரையாடலில் பங்கேற்கும் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும். அதன் இறுதி முடிவு ஒரு ஏகோபித்த ஒப்பந்தமாகவும், 51ரூ பெரும்பான்மையினரின் கருத்து 49ரூ சிறுபான்மையினரின் குரல் வளையை நெரிக்காதவாறும் இருக்க வேண்டும் (42:38).

 

6. ஒழுக்கமுடைய செயல்பாடுகளின் மிக உயர்ந்த நிலைகளை உறுதியாகக் கடைப்பிடிக்கும் மேலும் அதில் நிலைத்திருக்கும் ஒரு சமுதாயம். அங்கு மது போதை, சட்டவிரோதமான மருந்துகள், தவறான முறையில் கருத்தரித்தல், கருக் கலைப்புகள் மற்றும் நடைமுறையில் விவாகரத்து போன்றவைகள் இல்லாத பலமான குடும்பம் இருக்கும்.

 

7. மக்களுடைய உயிர்களுக்கும், சொத்துக்களுக்கும் அதிக பட்சமான மதிப்பு இருக்கும். ஆகையால் அங்கு மக்களின் உயிர்களுக்கோ, சொத்துக்களுக்கோ எதிராக எந்த குற்றமும் நிகழாது.

 

8. சாதாரணமாக எங்கும் அன்பு, மரியாதை, அமைதி மற்றும் மக்களுக்கிடையில் பரஸ்பர மரியாதை மேலும், இந்த நாட்டிற்கும் மற்ற உலக சமுதாயங்களுக்கும் இடையில் பரஸ்பர மரியாதை (3:110, 60:89) ஆகியவை இருக்கும்.

 

9. பயனற்ற பழக்கங்களினால் ஏற்படும் தீங்குகளிலிருந்து விலக்கிவைத்தல் மற்றும் தடை செய்தல் மூலமாக சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டிருக்கும். (30:41).

**************************************