பின் இணைப்பு 35

போதைப் பொருட்கள் & மதுபானம்

 

சட்டவிரோதமான போதைப் பொருட்கள் மற்றும் சாராயம் போன்ற பானங்கள் சம்பந்தமான எதுவாயினும் சமரசம் என்பதே கிடையாது: அவைகள், “மிக்க அருவருப்பானவைகள் மற்றும் சாத்தானின் செயல்” (5:90) என்று அழைக்கப்படுகின்றது. 2:219 மற்றும் 5:90ல் போதையூட்டும் பொருட்கள், சூதாட்டம், விக்கிரஹங்களின் பலிபீடங்கள் மற்றும் அதிர்ஷ்ட விளையாட்டுகள் ஆகியவை கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதை நாம் காணலாம். போதையூட்டும் பொருட்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தையான “கம்ர்” அதன் மூல வார்த்தையான “கமாரா” விலிருந்து பெறப்பட்டது, அதன் பொருள் “மூடுதல்” என்பதாகும். இவ்விதமாக, நினைவை மூடுகின்ற அல்லது தடங்கல் செய்கின்ற எதுவாயினும் தடை செய்யப்படுகின்றது. மனதை மாற்றுகின்ற கஞ்சா, ஹெராயின், கொக்கைன், மதுபானம், ஹாஷிஷ் போன்ற மற்றும் நினைவை பாதிக்கும் எதுவாயினும் அவை அனைத்தையும் இது உள்ளடக்கியதாகும்.

**************************************