பின் இணைப்பு 34

கற்பு

உண்மையான நம்பிக்கையாளர்களின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு மகிழ்ச்சியானது அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவது மற்றும் அவர்களுடைய கற்பைப் பாதுகாப்பதைச் சார்ந்தே உள்ளது என்று கற்பிக்கப்பட்டாக வேண்டும். இதன் அர்த்தம் அவர்கள் தங்களை தங்களுடைய வாழ்க்கைத் துணைவர்களுக்காக மட்டுமே பேணுதலாக வைத்திருக்க வேண்டும். மேலும் பாலியல் ரீதியாக எவரொருவரும் அவர்களைத் தொடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. (23:5-6, 24:30, 33:35, 70:29-30)

இன்றைய சமுதாயம் துர் நடத்தைகளைத் தூண்டும் சக்திகளால் நிறைந்துள்ளது. எண்பதுகளில் அமெரிக்கச் சமுதாயத்தில், பெற்றோர்கள் கூட தங்களுடைய மகள்களின் ஆண் நண்பர்கள் மேலும் தங்களுடைய மகன்களின் பெண் நண்பர்கள் குறித்து பேசுவதற்குத் துவங்கி விட்டார்கள். அவர்கள் பருவ வயதை அடையும் போது பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு கருத்தடை சாதனங்களைக் கூட கொடுக்கின்றார்கள். பயமுறுத்தக் கூடியதொரு சதவீதத்தில் பருவ வயதுடையவர்கள் உடல் ரீதியாக பூரண வளர்ச்சி அடையாமல் இருந்தாலும் கூட, எந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் இன்றி பாலியலில் தீவிரமாக உள்ளனர். பல இலட்சக்கணக்கான சட்ட விரோதமான கருத்தரித்தல் மற்றும் அவலங்கள் அவர்களுடன் இணைந்துள்ளன. கூடுதலாக USA - வில் ஒவ்வொரு மாதமும் பல இலட்சக்கணக்கான துக்க கரமான கருச்சிதைவுகள் நிகழ்கின்றன.

 

இந்த ஒழுக்கச் சீர் குலைவிற்கிடையில்: தேவையில்லாத மற்றும் ஆதரவில்லாத குழந்தைகள், கடமையைப் புறக்கணிக்கின்ற மற்றும் பொறுப்பற்ற தந்தைகள், மக்களுடைய வாழ்வுகள் அல்லது சொத்துக்கள் குறித்து அக்கறையில்லாத குற்றவாளிகள், சமூகத்திற்கு பொருத்தமில்லாத இலட்சக் கணக்கானவர்கள், குணப்படுத்த இயலாத பிறப்பிற்குரிய தோல் நோய் வகைகள், குணப்படுத்த முடியாத பிறப்பிற்குரிய பாலுண்ணிகள், நாசம் விளைவிக்கும் கொடிய மேக நோய் மற்றும் மேக வெட்டை நோய், கொலைகார AIDS, இன்னும் முன்னர் ஒரு போதும் அறிந்திராத புதிய நோய்கள் முதலிய விளைவுகள் ஏற்படுகின்றன.

 

பெரும்பாலான மக்கள் அரியாதது என்னவென்றால், இந்த ஒழுக்கச் சீர்குலைவானது அதிக பட்ச விலையாக அவர்களுடைய வாழ்க்கை முழுவதையும் அவர்கள் விலையாகத் தரும் படி செய்துவிடுகின்றது என்பதே, ஏனெனில் உலகத்தை ஆட்சி செய்கின்ற ஒரே சட்டம் கடவுளின் சட்டமாகும், மேலும் கடவுளுடைய சட்டங்களில் இத்தகைய படுமோசமான வரம்பு மீறல்கள், அதிக எண்ணிக்கையிலான துன்பம் மற்றும் பிரச்சனைகளை அவர்களுக்கு விலையாக்குகின்றது. (20:124)

 

தங்களுடைய பிள்ளைகளைப் பற்றி அக்கறை கொள்கின்ற உண்மையான நம்பிக்கையாளர்கள், அவர்களிடம் தங்கள் கற்பைப் பேணிக் காத்துக் கொள்ளும்படி திரும்பத் திரும்பவும் மற்றும் விடாது வற்புறுத்தியும் அவர்களுக்கு புத்திமதி கூறவும் மேலும் அவர்களுக்கு நினைவூட்டவும் (20:132) வேண்டும். இதற்கு அர்த்தம் அவர்களுடைய திருமண இரவு வரை கன்னிப் பெண்ணாக நீடித்திருக்க வேண்டும், அதன் பின்னர் அவர்களுடைய சொந்த சந்தோஷத்திற்காக - ஒருபோதும் விபச்சாரம் செய்யாது - ஒருவருடைய வாழ்க்கைத் துணையாக விசுவாசத்துடன் நீடித்திருக்க வேண்டும் என்பதே. திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் நம்முடைய கற்பைப் பேணிக் கொள்ள வேண்டும் என்ற கடவுளின் அறிவுரையானது நம்முடைய சொந்த நன்மைக்காகவே ஆகும். நம்முடைய ஆரோக்கியம், செல்வம் மற்றும் சந்தோஷம் அல்லது துன்பம் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துபவர் கடவுள் ஒருவரே ஆவார் (53:43,48).

**************************************