Language :
பின் இணைப்பு 32
முடிவைத் தீர்மானிக்கின்ற 40 வயது

பொறுப்பிற்கான வயது எது? ஒரு குழந்தை கடவுளைப் பற்றி கூட அறியாத நிலையில் அதன் 12-வது வயதில் இறந்து விடுமேயானால், அந்தக் குழந்தை சுவனத்திற்கு செல்லுமா அல்லது நரகத்திற்கா? அந்தக் குழந்தை 15 அல்லது 21 அல்லது 25 வயதுடையதாயின் அதன் நிலை என்ன? மனித இனம் ஆணோ அல்லது பெண்ணோ அவர்களுடைய நம்பிக்கைகளுக்காக எந்த வயதில் பொறுப்பு ஆக்கப்படுவார்கள்? இந்த கேள்வியானது அனைத்து மார்க்கங்களின் ஆராய்ச்சியாளர்களை ஒரு நீண்ட காலம் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டது.

 

குர்ஆன் வயது 40 ஐ பொறுப்பிற்கான வயதாக நிர்ணயிக்கின்றது; இந்த வயதிற்கு முன்னர் இறந்து விடுகின்ற எவரொருவரும் சுவனத்திற்கு செல்கின்றார் (46:15). அந்த நபர் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டிருந்து மேலும் தன் ஆன்மாவை வளர்த்து மற்றும் அபிவிருத்தி செய்ததன் மூலம் நம்பிக்கையிலிருந்து பலனடைந்து இருப்பாராயின் (பின் இணைப்பு 15ஐப் பார்க்கவும்) அவர் ஆணோ அல்லது பெண்ணோ உயர்வான சுவனத்திற்குச் செல்கின்றார் இல்லாவிடில், அந்த நபர் கீழான சுவனத்திற்குச் செல்கின்றார்.

 

தூதுச் செய்தியின் ஒரு பகுதியாகிய இதற்கு உங்களின் முதல் எதிர்ப்பு: “அந்த நபர் உண்மையிலேயே கெட்டவராக, பாவியாக மேலும் ஒரு நாத்திகராக இருந்து 40 வயதிற்கு முன்னர் இறந்துவிட்டால் அவரும் சுவனத்திற்குச் சென்று விடுவாரா”? என்று ஆட்சேபிப்பதாகும். இதற்கு காரணம் நீங்கள் பெருந்தன்மை அற்றவர்கள் அதே சமயம் கடவுள் மிக்க கருணையாளர். “அவர்கள் அனைவரையும் நரகில் போட வேண்டும்” என்பது நம்முடைய மனப்பாங்கு ஆகும்.

 

உண்மையிலேயே தீயவராக இருந்தாலுமா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். அதற்கு பதிலாவது, “அந்த நபர் தீயவராக இருந்தாரா என்பது கடவுளுக்குத் தெரியாதா? “ஆம்”, எனில் அந்த நபர் 40 வயதிற்குள் மரணிக்க மாட்டார்”, அவ்வளவுதான். கடவுள் ஒருவர் மட்டுமே இந்த பூமியின் மீது நம்முடைய வாழ்வுகளை முடித்து வைக்கின்றவர். யார் சுவனத்திற்குச் செல்ல தகுதியுடையவர் மேலும் யார் நரகத்திற்குச் செல்ல தகுதியுடையவர் என்பதை அவர் மிகச் சரியாக அறிவார்.

 

1989-ன் ஆரம்ப காலங்களில் அநேக பெண்களைக் கொலை செய்ததற்காக தியோடர் ராபர்ட் பண்டி என்ற பெயருடைய ஒரு மனிதன் சட்டப்படி கொல்லப்பட்டான். சரித்திரத்தில் அவன் மிகவும் கொடிய குற்றவாளிகளில் ஒருவன் என்று முழு தேசமும் ஒப்புக் கொண்டது. அதிகத்திலும் அதிகமாக, மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்காத அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக அவனுடைய மரண தண்டனை நிறைவேற்றல் இருந்தது. நேர் மாறாக அவனுக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதை உண்மையில் பெரும்பாலான மக்கள் கொண்டாடினார்கள். டெட் பண்டிக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட பதினொரு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த செய்கைக்காக எண்ணற்றப் பத்திரிகை எழுத்தாளர்கள், தலையங்கம் எழுதுபவர்கள் மற்றும் அரசியல் வாதிகள் வருத்தப்பட்டார்கள். அவர்கள் பண்டி குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்ட பின்னர் அதிக பட்சம் ஆறு ஆண்டுகளுக்குள் அவனுக்கு மரண தண்டணை நிறைவேற்றப் பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்கள். எவரேனும் ஒருவர் பண்டிக்கு இவ்வாறு செய்ய முடிந்திருந்தால் அது குர்ஆனின் படி மிகப் பெரிய உபகாரமாக அவனுக்கு இருந்திருக்கும். மரண தண்டணை நிறைவேற்றப்படும்போது அவனுக்கு வயது 42 ஆக இருந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக 37 -வது வயதில் அவனுக்கு மரண தண்டணை நிறைவேற்றப் பட்டிருந்தால் அவன் நேரடியாகச் சுவனத்திற்குச் சென்றிருப்பான், ஆனால் அவன் அதற்குத் தகுதி பெற்றிருக்கவில்லை.

 

இப்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, 40 வயதிற்கு முன்னர் இறந்து விடுகின்ற எவவொருவரும் சொர்க்கம் செல்கின்றனர் என்பதை உறுதிப் படுத்துவதற்கு கடவுள் நமக்குத் தந்துள்ள அத்தாட்சிகளில் பண்டியும் ஒரு அத்தாட்சி ஆவான். பண்டியின் பெயரான தியோடர் ராபர்ட் பண்டி 19 எழுத்துக்களைக் கொண்டது. மேலும் அவனுக்கு மரண தண்டணை நிறைவேற்றுவதற்கு சரியாக ஒரு நாள் முன்னதாக 19 பெண்களைக் கொலை செய்ததாக அவன் ஒப்புக் கொண்டான். கடவுளிடம் இருந்து வேறு பல அத்தாட்சிகளும் உள்ளன.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர் என்ற முறையில் இந்த முக்கியமான செய்திப் பகுதியை சேர்ப்பிப்பது எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் ஒன்றாகும். இது என்னுடைய சொந்த அபிப்பிராயம் அல்ல.

 

மார்ட்டின் லூதர்கிங் மற்றும் மால்கம் ஒ ஆகிய இருவரும் அவர்களுடைய 40-வது பிறந்த நாட்களுக்குச் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

**************************************