பின் இணைப்பு 31
பரிணாம வளர்ச்சி: தெய்வீகமாகக் கட்டுப்படுத்தப்பட்டதே
பரிணாம வளர்ச்சி என்பது கடவுளால் திட்டமிடப்பட்டதொரு நிகழ்வாகும் என்று குர்ஆனிலிருந்து நாம் அறிகின்றோம்.

உயிர் தண்ணீரிலிருந்து தொடங்கியது :

 

“உயிருள்ள பொருட்கள் அனைத்தையும் நாம் தண்ணீரிலிருந்து துவக்கினோம்”. (21:30, 24:45)

 

மனிதர்கள் குரங்குகளின் சந்ததியர்கள் அல்ல:

 

“ அவர் மனிதப் படைப்பை சேற்றிலிருந்து துவக்கினார்” (32:7)

 

மனிதன் முதிர்ந்த சேற்றிலிருந்து படைக்கப்பட்டான்:

 

“நான் மனித இனத்தை முதிர்ந்த களி மண்ணிலிருந்து படைக்கின்றேன்.” (15:28)

பரிணாம வளர்ச்சியானது அந்தந்த இனத்திற்குள் மட்டுமே சாத்தியமாகும். உதாரணத்திற்கு, தொப்புள் போன்ற உச்சி அமைப்புடைய கிச்சிலிப் பழமானது, விதையுடைய கிச்சிலிப் பழங்களில் இருந்துதான் வெளிப்படுகின்றது, ஆப்பிள் பழங்களில் இருந்து அல்ல. நிகழும் சாத்தியக்கூறின் விதிகள், இனங்களுக்கு இடையில் முறைப்படி அல்லாத பரிணாமத்தை சாத்தியமற்றது என்கின்றன. ஒரு மீன் ஒரு பறவைக்குள் வளர இயலாது; ஒரு குரங்கு ஒரு போதும் ஒரு மனிதருக்குள் வளர இயலாது.

நிகழும் சாத்தியக்கூறின் விதிகள் டார்வினின்

பரிணாம கோட்பாடை சாத்தியமற்றதாக ஆக்குகின்றன

 

இந்தக் கணினி யுகத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி சாத்தியமானதா அல்லது இல்லையா என்று நமக்கு எடுத்துரைக்கின்ற கணித விதிகள் நம்மிடம் உள்ளன. நாம் ஐந்து எண்ணிக்கையிலான கனசதுரங்களை மேலே காற்றில் வீசி மேலும் அவற்றை ஒரு நேர் கோட்டில் விழும்படி செய்தால் நமக்குக் கிடைக்கக் கூடிய சாத்தியமுள்ள சேர்மானங்களின் எண்ணிக்கை 1X2X3X4X5 = 120 சேர்மானங்களாகும் என்று நிகழும் சாத்தியக்கூறு விதிகள் நமக்குத் தெரிவிக்கின்றன. இவ்விதமாக, பெறப்படுகின்ற எந்த சேர்மானமாயினும், அதன் சாத்தியமானது 120-ல் 1 அல்லது 1/120, அல்லது 0.0086 ஆகும். கனசதுரங்களின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் போது இந்த சாத்தியக்கூறானது வேகமாகக் குறைகின்றது. நாம் ஒன்றைக் கொண்டு அவற்றை அதிகரித்தால் சேர்மானங்களின் எண்ணிக்கை 1X2X3X4X5X6 = 720 ஆக ஏற்படுகின்றது, மேலும் பெறுகின்ற சேர்மானங்களின் சாத்தியக் கூறானது 1/720, 0.0014 ஆகக் குறைகின்றது. மிகவும் கடினமான விஞ்ஞானிகளான கணித வல்லுநர்கள், கனசதுரங்களின் எண்ணிக்கையை 84 வரை நாம் அதிகரிக்கும் போது சாத்தியக் கூறானது பூஜ்ஜியத்திற்கு குறையும் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் 84 கனசதுரங்களை கொண்டு செயல் புரிந்தால் சாத்தியக்கூறானது 209 X 10-50 அல்லது 0.00000000000000000000000000000000000000000000000000209க்குக் குறைகின்றது.

 

டார்வினின் பிரசித்தி பெற்ற கூற்றான “உயிர் ‘பகுக்க இயலாததோர்’ உயிரணுவாகத் தொடங்கியது” என்பது நகைப்பிற்குரியது. சமீபத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெல்ஸ், ஹக்ஸ்லி மற்றும் வெல்ஸ், தங்களுடைய சிறப்புடன் கூடிய பாடப் புத்தகத்தில் “மையக் கருவின் உட்புறத்தில் தெளிவான திரவத்தைத் தவிர வேறெதையும் பார்க்க இயலாது” என்று எழுதியுள்ளார்கள். உயிரணு என்பது மையக் கருவின் உட்புறத்தில் பலநூறு கோடி அணு ஆற்றலின் மூல ஆதாரங்களை கொண்ட உயிர்மத்தின் இணை மரபுப் பொருள், மற்றும் பல இலட்சக் கணக்கான உயிர் வேதியியல் சார்ந்த பிரதிபலன்களை உடைய மிக அதிகமான பகுதிகளுடன் தனித்து நிற்கும் பொருள் என்பதை இப்போது நாம் அறிகின்றோம். மரபணுவினுள் (னுசூஹ) அணு ஆற்றலின் மூல ஆதாரங்களை தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற தற்செயலான படைப்பிற்கான சாத்தியக் கூறுகள் பூஜ்ஜியம் என்று நிகழும் சாத்தியக்கூறு விதிகள் நமக்குத் தெரிவிக்கின்றன, பல தடவைகள் தெரிவித்து விட்டன. நாம் 84 அணு ஆற்றலின் மூல ஆதாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை: நாம் ஒரு தெளிவான தொடர் வரிசை முறைக்குள் சீராக அமைக்கப்பட்டாக வேண்டிய பல நூறு கோடி அணு ஆற்றலின் மூல அதாரங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றோம்.

 

சில பரிணாம ஆராய்ச்சியாளர்கள், மனித உயிர்மத்தின் இணை மரபுக் கீற்றும் குரங்குடைய உயிர்மத்தின் இணை மரபுக் கீற்றும் 90ரூ ஒரே மாதிரியானது என்று கூறியுள்ளார்கள். ஆயினும் இந்த ஒற்றுமை 99ரூ இருந்தாலும் கூட நாம் இன்னும் குரங்கை மனிதனாக மாற்றுவதற்கு தற்செயலாக திரும்பவும் வரிசைப்படுத்தப்பட்டாக வேண்டிய 3,00,000,000 அணு ஆற்றலின் மூல ஆதாரங்கள் குறித்துதான் இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றோம். நிகழும் சாத்தியக்கூறு விதிகள் இதை முற்றிலும் சாத்தியமற்ற ஒன்று என தள்ளுபடி செய்கின்றன. மனித உயிர்மத்தின் இணை மரபுக் கீற்று 30,000,000,000 அணு ஆற்றல் மூல ஆதாரங்களைக் கொண்டுள்ளது. அதில் 1ரூ தான் 300,000,000, ஆகும்.
பேராசிரியர் எட்வின் கான்க்ளினின் ஒரு பொருத்தமான மேற்கோள் இதோ; அவர் கூறினார்:
தற்செயலான நிகழ்வின் மூலம் உண்டாக்கப்படுகின்ற உயிரின் நம்பகத் தன்மையானது ஒரு அச்சிடும் தொழிற் சாலையின் வெடி விபத்திலிருந்து பெறப்படுகின்ற முழுமையான அகராதியின் நம்பகத் தன்மையுடன் ஒப்பிடக் கூடியதாகும்.

 

****************************