பின் இணைப்பு 30
பலதார மணம்

1400 வருடங்களுக்கு முன்பு குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது வரையிலும் பலதாரத்திருமணமானது ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. பூமியில் ஆரம்பகாலத்தில் மக்கள் தொகை குறைவாக இருந்த போது, மக்கள் தொகையைப் பெருக்கி மேலும் மனித இனத்தை தேவையான வளர்ச்சி அடையச் செய்து கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு, பலதாரத்திருமணம் ஒரு செயல் முறையாக இருந்தது. குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட நேரத்தில் இந்த உலகமானது போதுமான அளவு மக்கள் தொகையைக் கொண்டிருந்தது, மேலும் குர்ஆன் பலதாரத் திருமணத்திற்கு எதிராக முதல் வரையறைகளை ஏற்படுத்தியது.

 

பலதாரத்திருமணம் குர்ஆனில் அனுமதிக்கப்படுகின்றது, ஆனால் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப் பட வேண்டிய சூழ்நிலைகளின் கீழ். இந்த தெய்வீக அனுமதியில் எந்தவொரு துஷ்பிரயோகமும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கும். இவ்விதமாக, பலதாரத்திருமணம் கடவுளால் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், குறிப்பிட்ட தொரு பலதார உறவு அனுமதிக்கப்பட்டது என்று கூறுவதற்கு முன்பாக நம்முடைய சூழ்நிலைகளை கவனமாக ஆராய்வது நமக்கு இன்றியமையாதது.

 

வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மது இங்கே நமக்கு சரியான உதாரணமாக இருக்கின்றார். அவர் கதிஜா, என்பவரை மணமுடித்து அப்பெண் இறக்கும் வரையிலும் அந்த ஒரு மனைவியுடனேயே இருந்தார். அவருடைய அனைத்துக் குழந்தைகளையும், ஒன்றைத்தவிர கதிஜாவின் மூலமாகவே அவர் பெற்றார். இவ்விதமாக 25 ஆண்டுகள் அப்பெண் அவரைத்திருமணம் புரிந்திட்ட காலம் முழுவதும், அப்பெண்ணும் அவருடைய குழந்தைகளும் வேதம் வழங்கப்பட்டவரின் முழுமையான கவனிப்பை அனுபவித்தனர். அனைத்துவிதமான நடைமுறை காரணங்களுக்காகவும், 25 வயது முதல் 50 வயது வரையிலும் முஹம்மது ஒரு மனைவியையே கொண்டிருந்தார். மீதமுள்ள அவருடைய 13 ஆண்டுகால வாழ்க்கையில், பல குழந்தைகளோடு விதவைகளாக அவருடைய நண்பர்கள் விட்டுச்சென்ற வயதான விதவைகளையே அவர் திருமணம் செய்தார். குழந்தைகளுக்கு நிறைவானதொரு இல்லத்துடன், தந்தையைப் போன்ற நம்பிக்கைக்குரிய வரும் தேவைப்படுகின்றது, வேதம் வழங்கப்பட்டவர் அதனையே வழங்கினார். அநாதைகளுக்கு, தந்தையைப் போன்ற நம்பிக்கைக்குரியவரை வழங்கிடுவது என்பது மட்டுமே, குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் பலதாரத்திருமணத்திற்கு ஆதரவான பிரத்யேக சூழ்நிலையாகும் (4:3).

 

விதவைகளான அநாதைகளின் தாய்மார்களை தவிர்த்து, வேதம் வழங்கப்பட்டவரின் வாழ்க்கையில் அரசியல் சம்பந்தமான மூன்று திருமணங்கள் நடைபெற்றன. அவருடைய நெருங்கிய நண்பர்களான அபுபக்கர் மற்றும் உமர் ஆகியோர் அவர்களுக்கிடையே பாரம்பரியமிக்க குடும்ப உறவை ஏற்படுத்துவதற்காகஅவர்களுடைய மகள்களான ஆயிஷா மற்றும் ஹஃப்ஸாஹ் ஆகிய பெண்களை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தினர். மூன்றாவது திருமணம் மரியா என்ற எகிப்திய பெண்ணுடன் ஆனது; எகிப்திய ஆட்சியாளரிடமிருந்து அரசியல் ரீதியிலான நட்பின் அடையாளமாக அப்பெண் அவருக்குக் கொடுக்கப்பட்டார்.

 

ஒரு மனிதன் மகிழ்ச்சியான நல்லதொரு குடும்பத்தை உருவாக்குவதற்கு திருமணம் புரிந்து தனது மனைவி மற்றும் குழந்தைகளிடத்தில் முழு கவனிப்பையும், விசுவாசத்தையும் கொடுக்க வேண்டும் என்று இந்த சரியான உதாரணம் நமக்குக் கூறுகின்றது.

 

குர்ஆன் பலதாரத்திருமணத்திற்கு எதிரான வரையறைகளை உறுதியான வார்த்தைகளால் வலியுறுத்துகின்றது: “ஒன்றுக்கு அதிகமான மனைவியரிடத்தில் முற்றிலும் நியாயமாக நடக்க இயலாமல் போய் விடுமோ என்று நீங்கள் அஞ்சினால், அப்போது நீங்கள் ஒன்றைக் கொண்டு திருப்தி கொள்ள வேண்டும்” (4:3). “நீங்கள் எவ்வளவுதான் கடுமையாக முயற்சித்த போதிலும், பலதாரத்திருமண உறவில், நியாயமானவர்களாக நீங்கள் இருக்க இயலாது”. (4:129)

 

பலதாரத்திருமணத்திற்கெதிரான குர்ஆனின் வரையறைகள், கடவுளின் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான சாத்தியக் கூறுகளை சுட்டிக் காண்பிக்கின்றது. ஆகையால், கடவுளின் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்துவிட மாட்டோம் என்பதில் நாம் முழுமையான உறுதியோடு இல்லாவிடில், நம்முடைய ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு பலதார மணத்திலிருந்து விலகியிருப்பதே நமக்கு நல்லது. சூழ்நிலைகள் பலதாரமணத்தை தூண்டிவிடாதிருந்தால், ஒரே மனைவியிடமும், குழந்தைகளிடம் நம்முடைய முழுக்கவனத்தையும் செலுத்துவதே நமக்கு சிறந்ததாகும். குறிப்பாக பலதாரமணம் தடை செய்யப்பட்ட நாடுகளில், குழந்தைகளின் மனநலமும் சமூக நலமும், நன்றாக உள்ளன, அவைகிட்டத்தட்ட மாற்றமில்லாது ஒரு தார மணத்தையே தூண்டுகின்றன. பலதாரமணம் பற்றி சிந்திக்கும் பொழுது ஒருசில அடிப்படை அளவுகோல்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.
1. பலதாரமணம் வேதனையையும், துன்பத்தையும் நீக்க வேண்டும், அது எந்தவிதமான வேதனையையோ, துன்பத்தையோ ஏற்படுத்தக் கூடாது.
2. நீங்கள் இளமையானதொரு குடும்பத்தை உடையவராக இருந்தால், பலதாரமணம் புரிவது ஓர் துஷ்பிரயோகம் என்பது நிச்சயம்.
3. ஒரு இளம் மனைவிக்கு மாற்றாக பலதாரமணம் கொள்வது கடவுளின் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதேயாகும். (4:19).

 

****************************