பின் இணைப்பு 29
விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்

 

சூரா 9ஐத் தவிர்த்து குர்ஆனின் ஒவ்வொரு சூராவும், பஸ்மலாஹ் என அறியப்பட்ட கடவுளின் பெயரால் மிக்க அருளாளர், மிக்க கருணையாளர் எனும் கூற்றுடன் ஆரம்பமாகின்றது. சூரா 9 ல் கவனத்தை ஈர்க்கும் பஸ்மலாஹ்வின் இல்லாமை குர்ஆனுடைய புதிரான அம்சமாக 14 நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்த அற்புதமான விசயத்தினை விளக்குவதற்கு பல கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

 

விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ் [1] குர்ஆனின் கணித அற்புதத்தினுடைய முக்கியமானதொரு அங்கமாகவும், [2] சூரா 9 சிதைக்கப்பட்டுள்ளது என்பதற்கும் மேலும் பரிசுத்தப்படுத்த வேண்டியள்ளது என்பதற்கும் மிக்க அருளாளர், மிக்க கருணையாளரிடமிருந்து கிடைத்துள்ள பிரகாசமானதொரு அடையாளமாகவும் (பின் இணைப்பு 24) முக்கியமான பங்கினை ஆற்றுகின்றது என்பதனை இப்பொழுது நாம் அறிகின்றோம். (பின் இணைப்பு 24). குர்ஆனின் கணிதக் குறியீட்டுக் கண்டுபிடிப்புடன் விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்வின் இரண்டு பணிகளும் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது.

 

விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்வின் அற்புத பண்புகளை பின்வரும் புள்ளிவிபரங்கள் விளக்குகின்றன:

 

(1) பஸ்மலாஹ் 19 அரபி எழுத்துக்களால் அமைக்கப் பட்டிருப்பதாலும் மேலும் ஒரு சூராவைத் தவிர அனைத்து சூராக்களிலும் முற்சேர்க்கையாக இருப்பதாலும், இதனை அஸ்திவாரமாக கொண்டு அதன் மீது குர்ஆனின் 19 அடிப்படையிலான குறியீடு கட்டப்பட்டிருக்கின்றது என்று கருத்தில் கொள்ள இயலும். ஆனால் சூரா 9ல் பஸ்மலாஹ்வின் இல்லாமை, தீர்மானமான இந்த ஆரம்பக்கூற்று 113 ஆகக் காரணமாகின்றது, (113 என்ற) எண் அது குர்ஆனின் குறியீட்டுடன் ஒத்திராத எண். ஆயினும் இந்தப்பற்றாக்குறை சூரா 27ல் ஈடு செய்யப் பட்டிருப்பதை நாம் காணலாம். சூரா 27ல் இரண்டு பஸ்மலாஹ்கள் காணப்படுகின்றன. ஒன்று ஆரம்பக் கூற்றாகவும் மற்றுமொன்று வசனம் 30லும் காணப்படுகின்றது. இது குர்ஆனிலுள்ள பஸ்மலாஹ்களின் மொத்த எண்ணிக்கையை 114, 19ஒ6 ஆக மீட்டுக் கொள்கின்றது.

 

(2) சூரா 9ல் விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்வி லிருந்து சூரா 27னுடைய கூடுதலான பஸ்மலாஹ் வரையிலும் 19 சூராக்கள் இருக்கின்றன.

அட்டவணை 1: விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்விலிருந்து கூடுதலான பஸ்மலாஹ் வரையிலும் உள்ள வசனங்களில்

அல்லாஹ் எனும் வார்த்தையை கொண்டுள்ள சனங்கள்

சூரா எண் “அல்லாஹ்” எனும் வார்த்தையுள்ள வசனங்கள்
9100
1049
1133
1234
1323
1428
152
1664
1710
1814
198
206
215
2250
2312
2450
256
2613
276
342513
(19x18)(19x27)

 

 

(3) விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்விலிருந்து (சூரா 9) கூடுதலான பஹ்மலாஹ் (சூரா 27) வரையிலும் உள்ள சூரா எண்களின் கூட்டுத்தொகையானது 9+10+11+12+......25+ 26+27 = 342, 19ஒ18. தொடர்ந்து வரிசையாக வரும் 19 எண்களைக் கூட்டினால் கிடைக்கும் எண் 19ன் பெருக்குத் தொகையாகவே இருக்கும் என்பது கணிதப்பண்பு. ஆனால் அற்புதமான விசயம் என்னவென்றால் இந்த எண் 342 ஆனது சூரா 27ன் முதல் பஸ்மலாஹ்விலிருந்து 27:30ல் வரும் இரண்டாவது பஸ்மலாஹ் வரையுள்ள வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு சமமாக உள்ளது.

 

(4) 27:30ல் கூடுதலான பஸ்மலாஹ்வின் வருகை யானது, அந்த சூரா எண்ணையும் வசன எண்ணையும் கூட்டினால் ஒரு 19ன் பெருக்குத் தொகையாக வருவது கொண்டு குர்ஆனின் கணிதக் குறியீட்டோடு ஒத்துப் போகின்றது (27+30=57=19ஒ3).

அட்டவணை 2: விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்விலிருந்து கூடுதலான பஸ்மலாஹ் வரையிலும் உள்ள சூராக்கள் & வசனங்கள்

 

சூரா எண் “அல்லாஹ்” எனும் வார்த்தையுள்ள வசனங்கள் வசன எண்களின் கூட்டுத்தொகை
9 127 8128
10 109 10
11 123 7626
12 111 6216
13 43 946
14 52 1378
15 99 4950
16 128 8256
17111 6216
18110 6105
1998 4851
20135 19180
21112 6328
2278 3081
23118 7021
2464 2080
2577 3003
26227 25878
2729 435
3421951 117673
1951+117673=119624=19ஒ6296

 

 

(5) வசனம் 30ல் உள்ள கூடுதல் பஸ்மலாஹ்வின் வருகையானது (சூரா 74) வசனம் 30ல் உள்ள எண் 19ன் வருகையுடன் ஒத்திருக்கின்றது.

 

(6) குர்ஆன் 6234 எண்ணிடப்பட்ட வசனங்களைக் கொண்டுள்ளது. 9வது சூராவில் பஸ்மலாஹ் இல்லாமை, மேலும் சூரா 27 வசனம் 30ல் அதற்கான பதிலீடு செய்வது நமக்கு இரு எண்ணிடப்பட்ட பஸ்மலாஹ்களைத் தருகின்றது, அவை 1:1 & 27:30 ஆகும், மேலும் 112 எண்ணிடப்படாத பஸ்மலாக்களும் உள்ளன. இது குர்ஆனில் உள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை 6234+112  = 6346, 19ஒ334 ஆக காரணமாகின்றது.

 

(7) விடுபட்ட பஸ்மலாஹ்விலிருந்து கூடுதல் பஸ்மலாஹ் வரையிலுள்ள வசனங்களில் “அல்லாஹ்” என்கிற வார்த்தை இடம் பெற்றுள்ள வசனங்கள் 513, 19ஒ27. இந்த 27 என்கிற எண்ணானது கூடுதல் பஸ்மலாஹ் இடம் பெற்றிருக்கும் சூராவின் எண், என்பது குறிப்பிடத்தக்கது. கொடுக்கப்பட்ட அம்சங்கள் அட்டவணை 1ல் உள்ளன.

 

(8) விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்விலிருந்து கூடு தலான பஸ்மலாஹ் வரையிலுமுள்ள வசன எண்களின் கூட்டுத்தொகை (1+2+3+....+எ) கூட்டல் வசன எண்கள் 119624, 19ஒ6292 ஆகும்.  அட்டவணை 2 ஐப் பார்க்கவும்.

 

அட்டவணை 3: விடுபட்ட பஸ்மலாஹ்விலிருந்து கூடுதல் பஸ்மலாஹ்

வரையிலும் இலக்கங்களைக் கூட்டினால் 10 வரை வருகின்ற வசனங்கள்.

 

சூரா எண் “அல்லாஹ்” எனும் வார்த்தையுள்ள வசனங்கள் நிகழ்வுகளின் எண்ணிக்கை
9 127 12
10 109 10
11 123 11
12 111 10
13 43 3
14 52 4
15 99 9
16 128 12
17111 10
18110 10
1998 9
20135 12
21112 10
2278 7
23118 11
2464 6
2577 7
26227 22
2729 2
3421951 117

(19X18) & 1951 +177 =2128 =19X112.

 

அட்டவணை 4: ஒற்றைப்படை எண் கொண்ட சூராக்கள், அவற்றின் வசனங்களின் எண்ணிக்கையும் ஒற்றைப்படை ஆகும்.
சூராஎண் இலக்கங்களின்கூட்டுத்தொகை வசனங்களின்எண்ணிக்கை இலக்கங்களின்கூட்டுத்தொகை
9 9 127 10
11 2 123 6
13 4 43 7
15 6 99 18
17 8 111 3
25 7 77 14
27 9 29 11
45 69
45+69=114=19X6

 

(9) இந்தச் செய்தியும் சூரா 9, 127 வசனங்களைக் கொண்டதே, 129 அல்ல என்பதை நிரூபிக்கின்றது (பின் இணைப்பு 24 ஐப் பார்க்கவும்). 127ன் இலக்கங்களின் கூட்டுத் தொகையானது 1+2+7=10. சூரா 9ல் விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்விலிருந்து சூரா 27ல் உள்ள கூடுதலான பஸ்மலாஹ் வரையிலுமுள்ள வசனங்களில், அதன் இலக்கங்களின் கூட்டுத்தொகை 10 என வரக்கூடிய வசனங்களை கண்டெடுத்து பின்னர் இந்த வசனங்களின் எண்ணிக்கையுடன், விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்விலிருந்து கூடுதலான பஸ்மலாஹ் வரையிலுமுள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கையை கூட்டிடும்போது நமக்குக் கிடைக்கும் தொகை 2128, அல்லது 19ஒ112ஆகும். (அட்டவணை 3).

 

(10) சூரா 9 ஒரு ஒற்றைப்படை எண் கொண்ட சூராவாகும், அதன் வசனங்களின் எண்ணிக்கையும் (127) ஒற்றைப்படை எண்ணாகும். விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்வி லிருந்து கூடுதல் பஸ்மலாஹ் வரையிலும் 7 சூராக்கள் இப்பண்பை உடையதாக இருக்கின்றன. அவைகள் ஒற்றைப் படை எண் கொண்ட சூராக்கள் ஆகும், அவற்றின் வசன எண்ணிக்கையும் கூட ஒற்றைப்படை ஆகும். அட்டவணை 4 ல் விவரிக்கப்பட்டிருப்பது போல், இவைகள் 9, 11, 13, 15, 17, 25 மற்றும் 27ஆகிய சூராக்கள் ஆகும். சூரா எண்களின் இலக்கங் களையும் மற்றும் வசன எண்ணிக்கையின் இலக்கங்களையும் கூட்டுவதன் மூலம் கிடைக்கும் மொத்தத் தொகை 114, 19ஒ6 ஆகும்.

 

(11) அடுத்த இரண்டு முக்கிய அம்சங்கள், விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ் மற்றும் சூரா 9 ல் உள்ள வசனங்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டையும் உண்மையென நிரூபிக் கின்றன (இதில் தான் இரண்டு பொய்யான வசனங்கள் நுழைக்கப்பட்டுள்ளன). அட்டவணை 4ல் பட்டியலிடப் பட்டிருக்கும் அதே சூராக்கள, அவற்றின் வசன எண்ணி க்கையும் ஒற்றைப்படையாகவே இருக்கின்ற அந்த சூராக்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு சூராவின் எண்ணையும் அதனைத் தொடர்ந்து அதன் வசன எண்ணிக்கையையும் எழுதுவோமேயானால், கிடைக்கும் நீண்ட எண் (30 இலக்கங்கள்) 19 ன் பெருக்குத் தொகையாகும் (படிவம் 1).

 

(12) விடுபட்டிருக்கும் பஸ்மலாஹ்விலிருந்து கூடுதல் பஸ்மலாஹ் வரையிலுமுள்ள அட்டவணை 4ல் குறிப்பிட்டுள்ள சூராக்களுடன் நாம் நம் வேலையைத் தொடருவோம். அவை அனைத்தும் ஒற்றைப்படை சூராக்களாகும், மேலும் அவற்றின் வசனங்களும் ஒற்றைப்படை எண்ணிக்கையே ஆகும். சூரா எண்ணுடன் அந்த சூராவிலுள்ள ஒவ்வொரு வசனங்களின் கடைசி இலக்கத்தை பின் தொடருமாறு நாம் எழுதுவோமேயானால், 1988 இலக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட எண்ணுடன் முடிவுபெறும், அதுவும் 19ஆல் வகுபடும் எண்ணாகும் (படிவம் 2).

 

9 127 11 123 13 43 15 99 17 111 25 77 27 29

ஒவ்வொரு சூரா எண்ணுடன் அதிலுள்ள வசன எண்ணிக்கை பின் தொடர்கிறது. இந்த நீண்ட எண்

9 X 48037427533385052195322409091.

[படிவம் 1]

 

9 1234567890123 ..................27  1234567890 ............ 789

சூரா எண்ணுடன், ஒவ்வொரு வசன எண்ணின் கடைசி இலக்கம் பின்தொடர்கின்றது.

[படிவம் - 2]

 

****************************