பின் இணைப்பு 28
கடவுளின் வெளிப்பாடுகளை முஹம்மது தனது சொந்தக் கரத்தினால் எழுதினார்

முதல் வெளிப்பாடு “ஓதுவீராக” என்பதாகும், மேலும் கடவுள் “எழுதுகோல் மூலம் கற்பிக்கின்றார்” (96:1-4) என்ற கூற்றையும் உள்ளடக்கியது, மேலும் இரண்டாவது வெளிப்பாடு “எழுதுகோல்” (68:1) என்பதாகும். எழுதுகோலின் ஒரே பணி எழுதுவதாகும்.

 

குர் ஆன் வெளிப்படுத்தப்பட்ட பின்னர் வந்த முதல் இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறியாமையிலிருந்த முஸ்லிம் அறிஞர்களால் குர்ஆனைப் போன்ற ஒன்றை உருவாக்க இயலாது என்ற குர்ஆனின் சவாலைச் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் குர்ஆனின் கணிதக் கட்டமைப்பைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் அவர்கள் பெரும்பாலான இலக்கிய ஜாம்பவான்களால் குர்ஆனுடன் ஒப்பிடக் கூடிய வேலைகளைத் தொகுக்க இயலும் என்றே அறிந்திருந்தார்கள். உண்மையில் பல இலக்கிய ஜாம்பவான்கள், குர்ஆன் எவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளதோ அதே போன்றதோர் இலக்கியத்தை உருவாக்கத் திறமை பெற்றிருந்ததாக உரிமை கொண்டாடினார்கள். சமீபத்தில் பலரும் அறிந்த எகிப்திய எழுத்தாளர் தாஹா ஹுசைனிடமிருந்து இந்தக் கோரிக்கை வந்தது.

 

அதன் பின்னர் அறியாமையிலிருந்த முஸ்லிம் அறிஞர்கள், முஹம்மது எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று பிரகடனம் செய்யத் தீர்மானித்தார்கள்! இது குர்ஆனுடைய அசாதாரணமான இலக்கிய சிறப்புத் தன்மையை, உண்மையான அற்புதமாக ஆக்கும் என்று அவர்கள் கற்பனை செய்து கொண்டனர். எழுத்தறிவின்மையை வேதம் வழங்கப்பட்டவர் மீது அளிப்பதற்கு அவர்கள் சார்ந்திருந்த அந்த வார்த்தை “உம்மி” என்பதாகும். இந்த வார்த்தை தெளிவாக “பிறச்சமயம் சார்ந்தவர்” அல்லது எந்த வேதத்தையும் (தோரா, இன்ஜீல் அல்லது குர்ஆன்) பின்பற்றாதவர் என்ற பொருளை தருவது அந்த அறிஞர்களின் துரதிர்ஷ்டமே (2:78, 3:20 & 75, 62:2 ஐப் பார்க்கவும்) இதற்கு அர்த்தம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பது அல்ல.

 

வேதம் வழங்கப்பட்டவர் ஒரு வெற்றி பெற்ற வர்த்தகராக இருந்தார். அவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்ற பொய்யை கற்பனை செய்த முஸ்லிம் அறிஞர்கள் வேதம் வழங்கப்பட்டவரின் காலத்தில் எண்கள் வழக்கத்தில் இல்லை என்பதை மறந்துவிட்டனர். அரபி எழுத்துக்கள் தான் எண்களாகப் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு நாளும் எண்களைப் பயன்படுத்தி வியாபாரம் செய்த வர்த்தகரான வேதம் வழங்கப்பட்டவர் ஒன்றிலிருந்து ஓராயிரம் வரை உள்ள எண்களுக்கான அரபி எழுத்துக்களை அறிந்தே இருக்க வேண்டும்.

 

முஹம்மது குர்ஆனை எழுதிக் கொண்டார் என்று குர்ஆன் நமக்குக் கூறுகின்றது - முஹம்மதின் சம காலத்தவர்கள், “இவைகள் அவர் எழுதிக் கொண்ட கடந்த காலக் கதைகள், அவைகள் பகலும், இரவும் அவருக்குச் சொல்லப்படுகின்றன” (25:5) என்று கூறியவர்களாகக் குறிப்பிட்டார்கள். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபரிடம் எழுதுவதற்கு நீங்கள் சொல்ல இயலாது. வேதம் வழங்கப்பட்டவரை எழுதப்படிக்கத் தெரியாதவர் என்று குற்றம் சாட்டுகின்ற அவருடைய எதிரிகள், முந்தைய வேதங்களுடன் பிரத்யேகமான தொடர்புடைய வசனம் 29:48 ஐ தவறாகப் பயன்படுத்துகின்றனர்.

 

13 ஹி.மு (ஹிஜ்ரிக்கு முன்னர்) ரமலான் மாதத்தின் 27-வது இரவில் முஹம்மதாகிய அவரது ஆன்மா, உடம்பல்ல மிக உயர்ந்த பிரபஞ்சத்திற்கு வரவழைக்கப்பட்டு குர்ஆன் அவருக்கு கொடுக்கப்பட்டது (2:97, 17:1, 44:3, 53:1-18, 97:1-5). அதனைத் தொடர்ந்து முஹம்மதின் ஆன்மாவிலிருந்து அவரது நினைவிற்கு ஒவ்வொரு முறையும் சில வசனங்களை முஹம்மது வெளியிட வானவர் கப்ரியேல் அவருக்கு உதவினார். வேதம் வழங்கப்பட்டவர் தன்னுடைய மனதிற்குள் வசனங்கள் சரியாக வெளியிடப்பட்டவுடன் அவற்றை எழுதிக் கொண்டார். மேலும் மனனமும் செய்து கொண்டார். வேதம் வழங்கப்பட்டவர் இறந்த பொழுது ஒவ்வொரு வசனத்தையும் எங்கு வைக்கவேண்டும் என்பதற்கான அறிவுரைகளோடு, வெளிப்படுத்தப்பட்ட வரிசைப்படி தன்னுடைய சொந்தக் கரத்தால் எழுதி வைத்திருந்த முழுமையான குர்ஆனை அவர் விட்டுச் சென்றார். குர்ஆனை இறுதி வடிவமாக ஒன்று சேர்த்து உலகிற்கு கடவுளின் இறுதி ஏற்பாட்டைத் தருவதற்காக திட்டமிடப்பட்ட தெய்வீக அறிவுரைகள் வேதம் வழங்கப்பட்டவரால் பதிவு செய்யப்பட்டன (75:17). ஆரம்பகால முஸ்லிம்கள் கலீஃபா ரஷாத் ‘உதுமான் காலம் வரை குர் ஆனை ஒன்று சேர்த்துவிட முயற்சிக்க வில்லை. இந்த வேலையைச் செய்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது. விபரங்களுக்கு பின் இணைப்பு 24 ஐப் படிக்கவும்.

**************************************