பின் இணைப்பு 27
யார் உங்கள் கடவுள்?

இந்தக் கேள்வியைக் கேட்டவுடனே அநேக மனிதர்கள் கோபமடைகின்றார்கள். நீங்கள் என்ன கேட்கின்றீர்கள்? உங்கள் கடவுள் யார்? என்று எதிர் கேள்வி கேட்கின்றார்கள். “வானங்களையும் பூமியையும் படைத்தவர் தான் என்னுடைய கடவுள்”. வானங்களையும் பூமியையும் படைத்தவர் எங்களுடைய கடவுள் என்று பொதுவாக உதட்டளவில் சொல்பவர்கள் உண்மையில் நரகத்திற்கென விதிக்கப்பட்டவர்கள் என்றால் அநேக மனிதர்கள் அதிர்ச்சி அடைவார்கள் (12:106).

உங்கள் மனதை அதிகநேரம் ஆட்கொள்ளும் எவராகிலும் அல்லது எதுவாகிலும் தான் உங்கள் கடவுள்.
உங்களுடைய கடவுள், உங்களது குழந்தைகளாக (7:190), உங்களது துணைவராக (9:24) உங்களது வியாபாரமாக (18:35) அல்லது உங்களது ஆணவமாக (25:43) இருக்க இயலும். இதனால்தான் குர்ஆனில் மிக முக்கியமான மற்றும் திரும்பத் திரும்பக் கூறப்படும் கட்டளைகளில் ஒன்றாக கீழே கொடுக்கப்பட்ட வசனம் உள்ளது என்பதை நாம் அறிகின்றோம்.
நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் கடவுளை அடிக்கடி நினைவில் கொள்ளுங்கள், அவரை இரவும் பகலும் துதித்திடுங்கள். (33:41)

இந்தக் கட்டளையை செயல்படுத்த, மற்ற எதையும் எவரையும் விட அதிகமாக நம்முடைய மனதை ஆட்கொள்பவராகக் கடவுள் மட்டும் தான் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த, நாம்சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களைப் பின்பற்றியாக வேண்டும்:

 

 

1. தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) : தினமும் 5 வேளை தொடர்புத் தொழுகைகளைத் தொழு பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தின் கணிசமான சதவிகிதம் கடவுளை அதிகமாக நினைவு கூர்ந்து போற்றுகின்றார்கள். ஸலாத்தானது தொழுகையின் பொழுதான சில நிமிடங்கள் மட்டும் அல்லாது அதை எதிர்பார்த்திருக்கும் நேரங்கள் முழுவதும் கடவுளை நினைவு கூர்வதற்கு நமக்கு உதவுகின்றது. காலை 11.00 மணியளவில் ஒருவர் ஆணோ அல்லது பெண்ணோ நண்பகல் தொழுகைக்கு இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என கடிகாரத்தைப் பார்க்க கூடும். இந்தச் செயலானது ஒருவர் கடவுளைப் பற்றி நினைப்பதற்குக் காரணமாகின்றது மேலும் இதற்கிணங்க ஒருவர் நன்மையை அடைகின்றார் (20:14).

 

2. உணவருந்தும் முன் கடவுளைப் போற்றுங்கள் : நாம் சாப்பிடும் முன் கடவுளின் பெயரைச் சொல்லிச் சாப்பிடும்படி வசனம் 6:121 நமக்குக் கட்டளையிடுகின்றது: “எதன் மீது கடவுளின் பெயர் கூறப்படவில்லையோ அதிலிருந்து நீங்கள் உண்ண வேண்டாம்”.

 

3. கடவுள் நாடினால் (இன்ஷா அல்லாஹ்) : “கடவுள் நாடினால்” (இன்ஷா அல்லாஹ்) என்று சொல்லாமல், நான் “இதை அல்லது அதை நாளைக்குச் செய்வேன்” என்று நீங்கள் கூற வேண்டாம். இதைச் செய்ய நீங்கள் மறந்துவிட்டால் பின்னர் மன்னிப்புக் கேட்டுவிட்டு “அடுத்த தடவை சிறப்பாகச் செய்ய என்னுடைய இரட்சகர் என்னை வழி நடத்தட்டும்” என்று கூறுவீராக (18:24). இது நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய நேரடிக் கட்டளையாக உள்ளது, நாம் யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் பொருட்டல்ல.

 

4. கடவுளின் பரிசு (மாஷா அல்லாஹ்) : நாம் விரும்பும் பொருள்களான நம் குழந்தைகள், நம் கார்கள், நம்வீடுகள், முதலியவற்றிற்குக் கடவுளின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள “மாஷா அல்லாஹ்” (இது கடவுளின் பரிசு) என்று கூறுமாறு நாம் 18:39ல் கட்டளையிடப்பட்டிருக்கின்றோம்.

 

5. இரவும் பகலும் கடவுளைப் போற்றுதல்: நாம் எந்த உணவையும் உண்ணும் போது, நாம் மிருகங்களைப் போன்றிருக்கக் கூடாது. நாம் உண்ணும் உணவை கடவுள் உருவாக்கியதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் - கடவுள் நமக்கு கொடுத்துள்ள புலன்கள் காரணமாக வாசனை, சுவைகளை நாம் அனுபவிப்பதையும், வாழைப்பழம் அல்லது ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் சரியான கட்டமைப்பையும், கடவுளால் படைக்கப்பட்ட பலவகையான கடல் உணவுகள் முதலியவற்றையும் சிந்தித்து மேலும் அவருடைய வாழ்வாதாரங்களை அனுபவிப்பவர்களாகிய நாம் அவரைத் துதிக்க வேண்டும. நாம் ஒரு அழகான மலரையோ அல்லது மிருகத்தையோ அல்லது சூரியன் அஸ்தமிப்பதையோ பார்க்கும் போது கடவுளைப் போற்ற வேண்டும். கடவுள் நம் கடவுளாக இருக்க, நாம் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பற்றிக் கொண்டு கடவுளை நினைத்து அவரைப் போற்ற வேண்டும்.

 

6. முதல் சொல்: “மிக்க அருளாளரும் மிக்க கருணையாளருமான கடவுளின் பெயரால் என்ற முதல்வார்த்தையையும், கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பதையும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் சொல்வதை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். நீங்கள் இந்த நல்ல பழக்கத்தை நிலைநிறுத்தினால், நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் பொழுது, இந்த வார்த்தைகளைத் தான் கூறுவீர்கள்.

**************************************