பின் இணைப்பு 25
உலகின் முடிவு

(கடவுள் தான்) எதிர்காலத்தை அறிந்தவர்; அத்தகைய அறிவை

வெளிப்படுத்துவதற்கு எவரொருவரையும் அவர் அனுமதிப்பதில்லை.

தான் தேர்ந்தெடுக்கின்ற தூதர்கள் மூலமாக மட்டுமே, அவர்

எதிர்கால மற்றும் கடந்தகால நிகழ்வுகளை வெளிப்படுத்துகின்றார். [72:27]

உலகத்தின் முடிவை வெளியாக்குவது (பக்கம் 415) கடவுளின் உடன்படிக்கை தூதராக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளில் உள்ளதாகும். இந்த உலகம் ஒரு முடிவிற்கு வரும் என்பதை 18:7-8 மற்றும் 69:13-15 லிருந்து நாம் அறிகின்றோம். இப்பொழுதுள்ள வானங்கள் மற்றும் பூமிக்குப் பதிலாக புதியதொரு பூமி மற்றும் புதிய வானங்கள் ஏற்படுத்தப்படும் (14:48)

உலகம் முடிவை நெருங்குகின்றது என்பதற்கான அடையாளங்கள்

குர்ஆன் பல அடையாளங்களைக் கொடுக்கின்றது, மேலும் உலக முடிவை வெளிப்படுத்துவதற்கான உபாயங்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் (47:18) கூறுகின்றது. குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ள அடையாளங்களுக்கு உட்பட்டவைகளான :

 

1. நிலவு பிளவுபடுதல் : இது முன்பே 1969 ஜூன் மாதத்தில் நாம் நிலவின் மீது இறங்கி மேலும் நிலவின் பாறைகளை இங்கே கொண்டு வந்த போது நிகழ்ந்து விட்டது. பூமியின் மீதுள்ள மக்கள் நிலவின் துண்டுகளைப் பல அருங்காட்சி நிலையங்கள், கல்லூரிகள் மற்றும் வானிலை ஆய்வுக் கூடங்களுக்குச் சென்று இப்போது பார்க்க இயலும்.

 

2. குர்ஆனின் 19 அடிப்படையிலான கணித குறியீட்டின் கண்டு பிடிப்பு (74:30-37): 1969-1974-ல் இது நிறைவேறி விட்டது.

 

3. சிருஷ்டிப் பொருள் (27:82): “பூமியிலிருந்து ஆக்கப்பட்டது. அது மனிதர்களை அவர்கள் தங்களுடைய படைப்பாளரிடம் கவனமற்று இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எச்சரிக்கும்”. பூமியிலிருந்து ஆக்கப்பட்ட அந்த சிருஷ்டிப் பொருள் தோன்றிவிட்டது, மேலும் குர்ஆனின் எண்களுக்குரிய குறியீட்டை வெளிப்படுத்துவதில் கருவியாகப் பயன்பட்டு மேலும் இந்த உலகம் கடவுளின் செய்தியை அலட்சியம் செய்து விட்டது என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டும் இருக்கின்றது. அந்த சிருஷ்டிப் பொருள் கணினி ஆகும். 27:82ன் இலக்க எண்களைக் கூட்டினால் 19 வருவதை கவனிக்கவும்.

 

4. கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் தோற்றம் (3:81): பின் இணைப்பு 2-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி வேதம் வழங்கப்பட்டவர்கள் அனைவரும் வேதங்களை ஒப்படைத்து விட்ட பின்னர் தூய்மைபடுத்தவும் மேலும் ஒன்றுபடுத்தவும் குர்ஆனில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைக்கும் ஒரு தூதர் வருவார். இந்த முன்னறிவிப்பு ரமலான் 1408-ல் நிறைவடைந்து விட்டது.

 

5. புகை (44:10): கடவுளி ன் உடன்படிக்கைத் தூதர் அந்த ஒருங்கிணைக்கப்பட்ட செய்தியை ஒப்படைத்து விட்டு மேலும் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மார்க்கம் இஸ்லாம் (அடிபணிதல்) என்று பிரகடனம் செய்ததற்குப் பின்னர் இது நேரிடும்.

 

6. யாஜூத் மற்றும் மாஜூத் : ஹிஜ்ரி 1700 (கி.பி. 2271)-ம் வருடத்தில் கடவுளுடைய திட்டத்திற்கிணங்க அவர்கள் மீண்டும் தோன்றுவார்கள், யாஜூத், மாஜூத் 18:94 மற்றும் 21:96ல் குறிப்பிடப் பட்டுள்ளார்கள். நீங்கள் 18:94 லிருந்து அந்த 18-வது சூராவின் இறுதி வரையுள்ள வசனங்களை எண்ணினால் நீங்கள் அவற்றை 17 ஆக காண்பீர்கள். 21:96-லிருந்து அந்த 21வது சூராவின் இறுதி வரையுள்ள வசனங்களை எண்ணினால், நீங்கள் அவற்றையும் 17 ஆகவே காண்பீர்கள். யாஜூத் மற்றும் மாஜூத் ஹிஜ்ரி 1700ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பது குர்ஆனின் அடையாளம் ஆகும்.

 

அது மறைவானதாகவே தொடர்ந்து இருக்காது [20:15]

 

உலக முடிவிற்கு முன்னதாக, உலக முடிவானது கடவுளால் வெளிப்படுத்தப் பட்டு விடும் என்று சூரா 20ன் 15ம் வசனம் நமக்குத் தெரிவிக்கின்றது, மேலும் சூரா 15ன் 87ம் வசனம் அந்த நிகழ்ச்சியின் நேரத்தைத் தருகின்றது:
நாம் உமக்கு ஏழு ஜோடிகளையும் மேலும் மகத்தான குர்ஆனையும் கொடுத்துள்ளோம் [15:87]

அந்த ஏழு ஜோடிகள் என்பது குர்ஆனின் 14 தலைப்பு எழுத்துக்கள் ஆகும். குர்ஆனுடைய அற்புதத்தின் ஆழ்ந்த தூண்களாகிய இவைகளின் எழுத்தெண் மதிப்பு உலக முடிவின் வருடத்தை மிக நுட்பமாகக் குறிப்பிடுகின்றது. சூரா 15ன் 85ம் வசனம் கூறுகின்ற; “உலக முடிவானது நிச்சயம் நடந்தே தீரும்” என்பது கவனிக்கத் தக்கதாகும். அதன் அடுத்த வசனமான 15:86, கடவுள் தான் இந்த உலகின் படைப்பாளராக இருக்கின்றார் மேலும் அது எப்போது முடியும் என்பதை அவர் சந்தேகமில்லாமல் அறிவார் என்று நமக்குச் சொல்கின்றது. அதைத் தொடர்ந்த வசனமான 15:87 உலகம் எப்போது முடியும் என்பதை நமக்கு கூறுகின்றது. அட்டவணை 1ல் காட்டப்பட்டுள்ளபடி குர் ஆனின் தலைப்பு எழுத்துக்களான “அந்த ஏழு ஜோடிகளின்” எழுத்தெண் மதிப்புகள் மொத்தம் 1709 (பின் இணைப்பு 1-ன் அட்டவணை 1ஐயும் பார்க்கவும்) 15:87ற்கு இணங்க உலகமானது இந்த முன்னறிவிப்பு கூறப்பட்டுள்ள நேரத்திலிருந்து 1709 சந்திர ஆண்டுகள் நீடித்திருக்கும். இதன் பொருள் இந்த உலகம் ஹிஜ்ரி 1710-ல் முடிவடையும். இந்த எண் 19ன் பெருக்குத் தொகையாகும்; 1710=19X90.

 

இந்தத் தகவல் வெளிப்பாடானது முன்னறிவிக்கப்பட்ட உலக முடிவிற்கு 309 வருடங்கள் முன்னதாக (1709-1400 = 309) ஹிஜ்ரி 1400-ம் வருடம் நிகழ்ந்தது. இந்த 309 என்கிற எண் குர்ஆனிய எண் (18:25)ஆகும், மேலும் இது உலக முடிவுடன் தொடர்புடையதாகும் (18:21). 18:25-ல் இந்த 309 “ஒன்பதைக் கொண்டு அதிகரிக்கப்பட்ட முன்னூறு வருடங்கள்” என்று விசித்திரமான வழியில் எழுதப்பட்டு அது 309 சந்திர ஆண்டுகள் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 300 சூரிய ஆண்டு மற்றும் 300 சந்திர ஆண்டுகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு 9 ஆண்டுகள் ஆகும்.

 

இந்தக் கண்டுபிடிப்பு வருடமான ஹிஜ்ரி 1400 கி.பி 1980 உடன் சரியாக ஒத்திருக்கிறது, மேலும் 1980 கூட்டல் 300 சூரிய வருடங்களானது 2280 ஆகும், இதுவும் ஒரு 19ன் பெருக்குத் தொகையே, 19X120. இவ்விதமாக உலகம் முடிவுறும் ஹிஜ்ரி 1710, 19X90 ஆனது, கி.பி 2280 19X120 உடன் மிகச் சரியாக ஒத்திருக்கின்றது. இந்த ஆற்றல் மிக்க குர்ஆனிய சான்றுகளை நம்ப மறுப்பவர்களுக்கு உலக முடிவானது திடீரென வரும் (6:31, 44, 47; 7:95, 187; 12:107; 21:40, 22:55; 26:202; 29:53; 39:55; 43:66; மற்றும் 47:18).

அட்டவணை 1: “ஏழு ஜோடி” குர்ஆனியத்

தலைப்பெழுத்துக்களின் மொத்த எழுத்தெண் மதிப்பு

குர்ஆனிய

தலைப்பெழுத்துக்கள்

எழுத்தெண்

மதிப்பு

1. க 100
 2. நூ  50
 3. ஸ  90
 4. ஹா.ம.  48
 5. ய.ஸீ.  70
 6. த.ஹ.  14
 7. த.ஸீ.  69
 8. அ.ல.ம.  71
 9. அ.ல.ர.  231
 10. த.ஸீ.ம.  109
 11. ‘ஐ.ஸீ.க.  230
 12. அ.ல.ம.ஸ.  161
 13. அ.ல.ம.ர.  271
 14. கா.ஹ.ய.‘ஐ.ஸ.  195
   1709

 

அது மறைவானதாகவே தொடர்ந்து இருக்காது [20:15]
மார்க்க போதனைகளுக்கொரு ஆதாரமாக ஹதீஸ்கள் தடுக்கப்பட்டுள்ள அதே சமயம் (பின் இணைப்பு 19), அதை ஒரு உபயோகமான சரித்திர ஆதாரமாகக் கொள்ள முடியும். இஸ்லாத்தின் ஆரம்பகால நூற்றாண்டுகளின் சரித்திர நிகழ்வுகள், உள்ளூர் பழக்க வழக்கங்கள் மற்றும் பரம்பரை பழக்க வழக்கங்கள் குறித்த அதிக எண்ணிக்கையிலான தகவல்களை நாம் பெற முடியும். முஸ்லிம் உம்மத்துக்களின் ஆயுட் காலத்தை தீர்மானிப்பதாக குர்ஆனின் தலைப்பு எழுத்துக்கள் நம்பப்பட்டது என ஹதீஸ் புத்தகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அல் படாவியின் சரித்திர பிரசித்தி பெற்ற உரையானது குர்ஆனின் தலைப்பெழுத்துக்களின் ஒரு சாத்தியமான விளக்கமாக பின் வரும் சரித்திரத்திலிருந்து பெறப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது. இதே நிகழ்ச்சி அல் - சுயூத்தியின் “இத்கான்” ஹிஜ்ரி 1318ன் முதல் பதிப்பின் பாகம் 2, பக்கம 10-ல் விவரிக்கப் பட்டுள்ளது.

மதினாவின் யூதர்கள் வேதம் வழங்கப்பட்டவரிடம் சென்று, “உம்முடைய குர்ஆன் அ.ல.ம என்கிற தலைப்பு எழுத்துக்களைக் கொண்டுள்ளது, மேலும் இந்தத் தலைப்பு எழுத்துக்கள் உம்முடைய மார்க்கத்தின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கின்றன. ‘அ’ 1 ஆகவும் ‘ல’ 30 ஆகவும் மேலும் ‘ம’ 40 ஆகவும் இருக்கின்ற படியால் உம்முடைய மார்க்கம் 71 ஆண்டுகள் மட்டுமே நீடித்திருக்கும் என்பதைக் குறிக்கின்றது என்று கூறினார்கள். முஹம்மது, ‘நாங்கள் அ,ல,ம,ச” வையும் பெற்றிருக்கின்றோம் என்று கூறினார். அவர்கள் அந்த ‘அ’ 1 ஆகவும், அந்த ‘ல’ 30 ஆகவும், அந்த ‘ம’ 40 ஆகவும் மேலும் அந்த ‘ச’ 90 ஆகவும் இருக்கின்றன. இதன் கூட்டுத்தொகை 161. நீர் வேறு எதையேனும் பெற்றிருக்கின்றீரா? என்று கூறினார்கள். வேதம் வழங்கப்பட்டவர், “ஆம், அ,ல,ம,ர” என்று கூறினார். அவர்கள் “இது நீளமானதாகவும், கனமானதாகவும் இருக்கின்றது; அந்த ‘அ” 1 ஆகவும், ‘ல’ 30 ஆகவும் ‘ம’ 40 ஆகவும் மற்றும் ‘ர’ 200 ஆகவும் மொத்தம் 271 ஆக ஆகின்றது” என்று கூறினார்கள். அவர்கள் இறுதியில் இந்த தலைப்பு எழுத்துக்களில் எத்தனையை அவர் கொடுத்தார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று கூறியவர்களாக விட்டு விட்டார்கள்!” [அல் - சுயூத்தியின் பிரபலமான குறிப்புரை இத்கான்]

 

இந்த வரலாறு நன்கு அறியப்பட்டதாக இருந்த போதிலும், பெரும்பாலான அறிஞர்கள், குர்ஆனிய தலைப்பு எழுத்துக்களுக்கும் உலக முடிவிற்கும் இடையில் உள்ள தெளிவான தொடர்பை ஏற்றுக் கொள்வதற்கு விருப்பம் அற்றவர்களாக உள்ளனர். கணக்கிடுதலானது உலக முடிவையும் மற்றும் தீர்ப்பையும் நோக்கிச் செல்கின்ற ஒரு உண்மை நிலை என்கிற சாதாரண காரணத்திற்காக அவர்களால் தங்களை இந்த விஷயத்துடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை.

 

**************************************