பின் இணைப்பு 22
இயேசு
இயேசு கடவுளின் ஒரு மனிதத் தூதராக இருந்தார், கடவுளின் தூதுச் செய்தியை சேர்ப்பிப்பதே அவருடைய ஒரே பணியாக இருந்தது என்று, குர்ஆன் நமக்குத் தெரிவிக்கின்றது; அவர் எந்த ஆற்றலையும் ஒரு போதும் பெற்றிருந்ததில்லை, மேலும் இப்போது இறந்தவர் ஆகிவிட்டார் (4:171, 5:75, 117). இயேசுவை கடவுளாக, அல்லது கடவுளின் மகனாக, அல்லது முத்தெய்வங்களில் ஒரு பகுதியாக கருதுபவர்கள் “இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள்” ஆவர் (5:17, 72, 73). பிரபலமான கிறிஸ்தவ அறிஞர்கள் இதே மாதிரியான தீர்மானங்களை அடைந்து விட்டார்கள் (த மித் ஆஃப் காட் இன்கார்னேட், ஜான் ஹிக், நன., தவெஸ்ட் மின்ஸ்டர் பிரஸ், பிளடெல்பியா, 1977 & த மித் மேக்கர், ஹயாம் மக்கோபி, ஹார்பர் & ரோவ் 1986). கிறிஸ்தவமதம் நைஸீனின் தயாரிப்பு ஆகும் (ஹனு 325).
பைபிளின் இயேசு

இயேசு சப்தமிட்டு பிரகடனம் செய்தார்: “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன்; என்னிடத்தில் அல்ல என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான் .... ஏனெனில் நான் சுயமாகப் பேசவில்லை: நான் பேச வேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்கு கட்டளையிட்டார்: அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று நான் அறிவேன் : ஆகையால் நான் பேசுகின்றவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்” [ஜான் 12:44-50]

 

“நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை: நான் கேட்கிற படியே நியாயந் தீர்க்கிறேன், எனக்குச் சித்தமானதை நான் தேடாமல் என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.” [ஜான் 5:30]

 

இயேசு கூறினார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” [ஜான் 7:16]

 

“இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கின்றபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு, தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார் [ஆக்டஸ் 2:22]

 

“...... என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு [ஜான் 5:24]

 

உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான், என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்கிறான். [மத்தேயூ 10:40, மார்க் 9:37, லூக் 9:48 & ஜான் 13:20-]

 

“... நான் என் சுயமாய் வரவில்லை. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன்”. [ஜான் 7:28-29]

 

இயேசு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து;“...ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்” [ஜான் 17:1-3]

 

எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள் [ரோமானியர்கள் 8:14]

 

இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, “பிதாவே, நீர் எனக்கு செவி கொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும் படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்” என்றார். [ஜான் 11:41-42]

 

அவர் புறப்பட்டு வழியிலே போகையில் ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால் படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்”? என்று கேட்டான். அதற்கு இயேசு, “நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. [மார்க் 10:17-18]

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல் லாமல் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை”. [மத்தேயூ 7:21]

 

“...என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப் போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு”. [ஜான் 20:17]

 

“கடவுள் என்னுடைய இரட்சகராகவும் மேலும் உங்களுடைய இரட்சகராகவும் இருக்கின்றார்; நீங்கள் அவரை மட்டுமே வழிபட வேண்டும். இது தான் நேரான பாதை”. [குர்ஆன் 3:51, 19:36 & 43:64]

 

கிறிஸ்தவர்களால் போதிக்கப்பட்ட கோட்பாடாகிய மூன்று தெய்வக் கொள்கையானது, கடவுள் சாராம்சத்தில் ஒருவராகவும், ஆனால் நேரில் (தாமே) பிதா, மகன் மற்றும் பரிசுத்த ஆவி என மூவராக உள்ளார் என்று உறுதியாகக் கூறுகின்றது. முத்தெய்வம் என்கிற வார்த்தையோ அன்றி அதைப் போன்ற விளக்கத்தையுடைய கோட்பாடுகளோ புதிய ஏற்பாட்டில் காணப்படவில்லை, அன்றியும் இயேசு மற்றும் அவரைப் பின்பற்றியவர்கள், பழைய ஏற்பாட்டில் உள்ள யூதரின் அன்றாட வழிபாட்டு வாசக வாய்பாடாகிய ஷீமா குறித்து முரண்பட்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை: இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தா” [உபாகமம் 6:4]

[பிரிட்டானியா கலைக்களஞ்சியம், 1975]

இயேசுவின் மரணம்
இவ்வுலகில் இதுதான் மிகவும் ஆட்சேபணைக்கு இடமளிகின்ற ஒரே விவாதிக்கப்படும் விஷயமாக இருந்து கொண்டிருக்கின்றது. குர்ஆனின் அற்புதமான, கணிதக் குறியீடு இந்த விஷயத்திற்கான இறுதி பதிலை இப்போது வழங்கியுள்ளது.
இயேசுவின் ஆன்மா உயர்த்தப்பட்டது, அதாவது அவரைக் கைது செய்து மேலும் அவருடைய உடலை சிலுவையில் அறைவதற்கு முன்னதாகவே அவர் மரணத்தில் ஆழ்த்தப்பட்டுவிட்டார். இவ்விதமாக, அவரைத் துன்புறுத்தியவர்கள் கைது செய்தது, சித்ரவதை செய்தது மேலும் சிலுவையில் அறைந்தது ஒரு வெற்றுடலையே - இயேசு ஏற்கனவே ஆன்மாக்களின் உலகத்திற்குச் சென்றுவிட்டார் [3:55, 4:157].

அவர்கள் திட்டமிட்டார்கள் மேலும் சூழ்ச்சி செய்தார்கள்,

ஆனால் கடவுளும் அவ்வாறே செய்தார், மேலும் திட்டமிடுவதில் கடவுள்

மிகச்சிறந்தவராக இருக்கின்றார். இவ்விதமாக,

கடவுள், “இயேசுவே, நான் உம்மை மரணிக்கச்

செய்கின்றேன், மேலும் என்னிடத்தில் உம்மை உயர்த்துகின்றேன்;

நான் நம்பமறுப்பவர்களிடம் இருந்து உம்மை காப்பாற்றுவேன்” என்று கூறினார். [குர்ஆன் 3:54-55]

 

மேரியின் மகனும், கடவுளின் தூதருமான

மெஸையாஹ் இயேசுவை அவர்கள் கொலை செய்ததாக அவர்கள்

உரிமை கொண்டாடுகின்றார்கள்! உண்மையில், அவர்கள்

ஒருபோதும் அவரைக் கொலை செய்யவில்லை; அவர்கள்

ஒரு போதும் அவரைச் சிலுவையில் அறையவுமில்லை,

தாங்கள் செய்ததாக நம்பும்படியாக அவர்கள் வழிநடத்தப்பட்டார்கள். [குர்ஆன் 4:157]

தன்னுடைய ஆன்மா இவ்வுலகை விட்டுச் சென்று விட்ட பின்னரும் உடலானது தொடர்ந்து 19 மாதங்கள் ஜீவித்திருந்த ஒரு நபரின் உதாரணத்தை அருளிரக்கத்துடன் கடவுள், நம்முடைய தலைமுறையினருக்கு அளித்துள்ளார். 1984ம் ஆண்டு நவம்பர் 25-ம் நாள் ஹியூமன் ஹாஸ்பிடல் ஆஃப் லூயிஸ்வில், கென்டக்கியின் மருத்துவர்கள் திரு. வில்லியம் ஷ்ரோடர் என்பவரின் நோய்ப்பட்ட இருதயத்தை அகற்றி விட்டு ஒரு பிளாஸ்டிக் மற்றும் உலோக இயந்திரத்தைக் கொண்டு அதற்குப் பதிலாக வைத்துவிட்டனர். (த நியூ யார்க் டைம்ஸ், திங்கட்கிழமை, நவம்பர் 26, 1984).

சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த அறுவை சிகிச்சை முடிந்து 19வது நாள் - வியாழக்கிழமை, டிசம்பர் 13, 1984 அன்று திரு. ஷ்ரோடரின் ஆன்மாவாகிய அந்த மெய்யான நபர் இவ்வுலகை விட்டுச் சென்று விட்டார். திரு. ஷ்ரோடர் இறந்து விட்டார். ஆனால் அவருடைய உடலுக்குள் பதிக்கப்பட்ட செயற்கையான இருதயத்தைக் கொண்டு அவருடைய உடலானது தொடர்ந்து செயலாற்றப்பட்டது. இந்த உலகம் அவர் “அனேகமாக பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டிருப்பார்” என்று கூறியது. (த நியூயார்க் டைம்ஸ், டிசம்பர் 14, 1984). குறிப்பிடத்தக்க வகையில் ஷ்ரோடரின் மரணத்திற்கு ஒரே ஒரு நாள் முன்னதாக அவர் நேஷனல் கூ.ஏயில் ஜனாதிபதி ரொனால்டு ரீகனுடன் பேசினார். மேலும் சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்தை தனக்கு ஏற்கனவே சேர வேண்டிய காசோலையை அனுப்பும் படி உரிமையுடன் கேட்டார். அவர் முற்றிலும் விழிப்புடன் இருந்தார். பக்க வாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த தருணத்திலிருந்து அவர் நாள் மற்றும் நேரத்தை அறிந்து கொள்ளவில்லை, அன்றி அவருடைய குடும்ப அங்கத்தினர்களையும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. உண்மையில் அதற்குப் பிறகு திரு. ஷ்ரோடர் இவ்வுலகில் இருந்திருக்க வில்லை.

 

சுவிசேஷங்கள், கைது செய்யப்பட்ட இயேசுவின் உடல், அதனைச் சுற்றிலுமிருந்த நிகழ்வுகளை அறியாததாக இருந்தது என்று தெளிவாகக் கூறுகின்றன:

பிரதான ஆசாரியர்கள், இடைப்பட்ட நேரத்தில், இயேசுவுக்கு எதிராக

அநேக குற்றங்களை சாட்டினார்கள். பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ,

இவர்கள் உன் மேல் எத்தனையோ குற்றங்களைச்

சாட்டுகிறார்களே, அதற்கு நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா?

என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும்

சொல்லவில்லை. அதனால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். [மார்க் 15:3-5]

ஏரோது இயேசுவைக் குறித்து அநேக காரியங்களைக் கேள்விபட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசை கொண்டிருந்தான். அதன்படி அவரைக் கண்டபோது சந்தோஷப்பட்டு அநேக காரியங்களைக் குறித்து அவரிடத்தில் வினாவினான். இயேசு மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவர் மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சாட்டிக் கொண்டே நின்றார்கள். அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடு கூட அவரை நிந்தித்துப் பரியாசம் பண்ணினான். [லூக்கா 23:8-11]

 

காப்பாற்றுபவர் என்னிடத்தில், “மரத்தின் மீது மகிழ்ச்சியோடும், சிரித்துக் கொண்டும் யாரை நீங்கள் கண்டீர்களோ அவர்தான் ஜீவித்திருக்கும் இயேசு. ஆனால் அவர்களால் கைகள் மற்றும் கால்களில் ஆணிகள் அடிக்கப்படுகின்ற இந்த ஒருவர் சதைப்பிண்டம் ஆவார் என்று கூறினார். (பீட்டரின் அபோகலிப்ஸ் ஏஐஐஐ, 3, 81) நாக் ஹம்மாடி நூலகத்திலிருந்து (ஹார்பர் & ரோவ், 1977, ஜேம்ஸ் ஆ. ராபின்சன் நன. பக்கம் 339)

 

உண்மைகள் என்னவெனில் (1) திரு.ஷ்ரோடரின் ஆன்மா, அறுவைசிகிச்சை முடிந்து 19வது நாள் இறந்துவிட்டது, மேலும் (2) அவருடைய உடலானது19 மாதங்களுக்கு சாகாமலிருந்தது என்கிற இந்த உண்மைகள் ஷ்ரோடரின் சூழ்நிலைக்கும் மற்றும் இயேசுவின் ஆன்மாவற்ற உடலை கைது செய்து, சித்ரவதை செய்து மேலும் சிலுவையில் அறைவதற்கு முன்னதாக அவருடைய மரணம் நிகழ்ந்து விட்டது என்கிற நிரூபிக்கப்பட்ட உண்மைக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை உலகம் அறியும்படி செய்ய கடவுள் விரும்புகின்றார் என்பதற்கான தெய்வீக நினைவூட்டல்கள் ஆகும்.

 

*******************************