பின் இணைப்பு 21
சாத்தான்: தாழ்ந்த நிலையை அடைந்த வானவர்

 

கடவுளின் சாம்ராஜ்ஜியத்தில், குறிப்பிட்ட படைப்புகளுக்கு அவைகளுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆற்றல்களைத் தருவது அவசியமாகின்றது. சாத்தான், கடவுளால் அவனுக்கு வழங்கப்பட்ட ஆற்றல்கள் அவனை தனித்து இயங்குகின்ற ஒரு தெய்வமாக செயலாற்றுவதற்கு தகுதியாக்கி விட்டதாக நம்பினான். சாத்தான் தகுதியற்றவன் என்பதை அவனுடைய அரசாட்சியில் சாதாரணமாகக் காணப்படும் துன்பம், நோய், விபத்துகள் மற்றும் யுத்தம் ஆகிய சான்றுகளின் மூலம் நாம் இப்போது அறிகின்றோம்.

 

சாத்தான், அவன் மீது சீரிய பண்பின் மிக அதிகமான ஆற்றல்கள் மற்றும் அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்த ஒரு வானவராக இருந்தான் என்று குர்ஆன் நமக்குத் தெளிவாக கூறுகின்றது. இதனால் தான் அவனுடைய வீழ்ச்சிக்கு முன்னால் ஒரு வானவர் என்று அவன் குறிப்பிடப்படுகின்றான் (2:34, 7:11, 15:29, 17:61, 18:50, 20:116, 38:71). இங்கு ஜின் என்பதன் அர்த்தமானது தாழ்ந்த நிலையை அடைந்ததோர் வானவர் என்பதாகும் (18:50). சாத்தானின் கலகமானது, வானவர்கள் தங்களுடைய சொந்த புத்தியைக் கொண்டு செயல்பட கூடியவர்களாகவும் மேலும் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உடையவர்களாகவும் படைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நமக்கு கற்பிக்கின்றது (2:34).

***************************************