பின் இணைப்பு 2
கடவுளின் உடன்படிக்கைத் தூதர்
கடவுளின் உடன்படிக்கைத் தூதர் ஓர் ஒருங்கிணைக்கும் தூதர் ஆவார். இருக்கக் கூடிய அனைத்து மார்க்கங்களையும் தூய்மைப்படுத்தி ஒன்று சேர்த்து ஒரே மார்க்கமாய் ஆக்கிடுவது அவருடைய பணியாகும் : இஸ்லாம் (அடிபணிதல்).
இஸ்லாம் என்பது ஓர் பெயரல்ல; அது இயேசு, மேரி, முஹம்மது அல்லது மகான்களை இணைத்தெய்வ வழிபாடு செய்யாது, கடவுளிடம் மட்டுமே ஒட்டுமொத்தமாக அடிபணிதல் மற்றும் அர்ப்பணித்தல் ஆகியவை சம்பந்தமான ஒருவருடைய விளக்க முறையாகும். எவரொருவர் இந்த அளவுகோலை எதிர்கொள்கின்றாரோ அவர் ஒரு முஸ்லிம் (அடிபணிந்தவர்) ஆவார். ஆகையால், ஒருவர் முஸ்லிம் யூதராகவோ, ஒரு முஸ்லிம் கிருஸ்தவராகவோ, ஒரு முஸ்லிம் இந்துவாகவோ, ஒரு முஸ்லிம் பௌத்தராகவோ அல்லது ஒரு முஸ்லிம் முஸ்லிமாகவோ இருக்க இயலும்.
“கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் அடிபணிதல் ஆகும்” (3:19), மேலும் “அடிபணிதலைத் தவிர்த்து மற்றொன்றை மார்க்கமாக எவர் ஒருவர் தேடிக்கொள்கின்றாரோ, அது அவரிடமிருந்து அவளிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது” (3:85) எனும் கடவுளின் பிரகடனத்தை கடவுளின் உடன்படிக்கைத் தூதர் அறிவிக்கின்றார்.
கடவுளின் தூதரான ஒருவர் அவர் கடவுளின் தூதர் என்பதற்கான சான்றினை அவசியம் வழங்கிடுதல் வேண்டும். கடவுளின் தூதர் ஒவ்வொருவரும் அவருடைய செய்திகளை சேர்ப்பதற்கு சர்வ வல்லமையுடையவரால் அவர் அங்கீகரிக்கப்பட்டவர் என்பதை நிரூபிக்கக்கூடிய மறுக்கவே இயலாத தெய்வீக அத்தாட்சிகளால் ஆதரிக்கபடுகின்றனர். மோஸஸ் அவருடைய தடியை கீழே எறிந்தார், அது பாம்பாக மாறியது, இயேசு கடவுளின் அனுமதியோடு குஷ்ட நோயாளிகளை குணப்படுத்தினார் மேலும் இறந்தவர்களை உயிர்ப்பித்தார், ஸாலிஹின் அத்தாட்சியாக பிரபலமான ஒட்டகம் இருந்தது, ஆப்ரஹாம் நெருப்பினின்றும் நடந்து வெறியேறினார், மேலும் முஹம்மதின் அற்புதமாக குர்ஆன் இருந்தது (29:50-51).
குர்ஆனும் (3:81, 33:7, 33:40) பைபிளும் (மல்கியா 3:1-3) கடவுளின் உடன்படிக்கைத் தூதரான, ஒருங்கிணைக்கும் தூதரின் வருகையை முன்னறிவிப்புச் செய்கின்றன. மிக முக்கியமான பணியுடன் கூடிய ஒரு தூதர் மிகவும் பலமான அற்புதத்தைக் கொண்டு அவசியம் உதவி செய்யப்பட வேண்டும் என்பதே பொருத்தமானது (74:30-35). முன்னர் வந்த தூதர்களின் அற்புதங்கள் காலம் மற்றும் இடத்திற்கு உட்பட்டு வரையறை செய்யப்பட்டிருந்த அதே சமயம், அவருடைய உடன்படிக்கைத் தூதரை ஆதரிக்கும் கடவுளின் அற்புதம் நிலையானது; இதனை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எவரொருவராலும் பார்க்க இயலும்.
ரஷாத் கலீஃபா கடவுளின் உடன்படிக்கைத் தூதர் என்பதற்கான வெளிப்படையான, பரிசோதிக்கக் கூடிய, சரிகாணக் கூடிய, மேலும் மறுக்கவே இயலாத அத்தாட்சியை இந்தப் பின் இணைப்பு வழங்குகின்றது.
ஒரு குர்ஆனிய உண்மை
வேதம் வழங்கப்பட்டவர்கள்அனைவரும் இந்த உலகிற்கு வந்து விட்ட பிறகு, மேலும் கடவுளின் வேதங்கள் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டு விட்ட பிறகு கடவுளின் உடன்படிக்கைத் தூதர் அனுப்பப்படுவார் என்பது குர்ஆனிலுள்ள முக்கியமான முன்னறிவிப்புகளில் ஒன்றாகும்.
கடவுள் வேதம் வழங்கப்பட்டவர்களிடம், “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் வழங்கி விட்ட பின்னர், உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு தூதர் வருவார். நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொள்ளவும் மேலும் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று கூறியவராக ஓர் உடன்படிக்கை எடுத்தார். அவர் “நீங்கள் இதனை ஒப்புக்கொள்கின்றீர்களா மேலும் இந்த உடன்படிக்கையை ஆதரிக்க உறுதியளிக்கின்றீர்களா? என்று கூறினார். அவர்கள், “நாங்கள் ஒப்புக் கொள்கின்றோம்” என்று கூறினார்கள். அவர், “இவ்விதமாக நீங்கள் சாட்சியமளித்தீர்கள், மேலும் உங்களுடன் நானும் ஒரு சாட்சியாக இருக்கின்றேன்,” என்று கூறினார் (3:81)
முஹம்மது மர்மடூக் பிக்தால் 3:81ஐ பின்வருமாறு மொழிபெயர்த்துள்ளார்:
அல்லாஹ் வேதம் வழங்கப்பட்டவர்களுடன் (அவருடைய) உடன்படிக்கையைச் செய்தபோது, (அவர் கூறினார்): நான் உங்களுக்கு வேதத்தையும் அறிவையும் கொடுத்துள்ளேன் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் . மேலும் அதன்பிறகு உங்களுக்கு ஒரு தூதர் வருவார், நீங்கள் வைத்திருப்பதை உறுதிசெய்வார். நீங்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் மேலும் நீங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும்.
அவர் கூறினார் : நீங்கள் ஒப்புக் கொள்கின்றீர்களா, இதில் (இந்த விசயத்தில்) என்னுடைய சுமையை (நான் உங்கள் மீது ஏற்படுத்துவதை) நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா? அவர்கள்: நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று பதிலளித்தனர். அவர்: ஆகவே சாட்சியளியுங்கள். நானும் உங்களுடன் சாட்சியாயிருப்பேன் என்று கூறினார்.
கடவுளுடன் பவித்ரமான அந்த உடன்படிக்கையை செய்த வேதம் வழங்கப்பட்டவர்களில் முஹம்மதுவும் ஒருவர் என்பதை சூரா 33 லிருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம்.
மேலும் நாம் வேதம் வழங்கப்பட்டவர்களிடம் ஓர் உடன்படிக்கையை நிர்பந்தித்து வாங்கியபோது, (முஹம்மதே) உம்மிடமிருந்தும் மேலும் நோவா மற்றும் ஆப்ரஹாம் மற்றும் மோஸஸ் மற்றும் மேரியின் மகனாகிய இயேசுவிடமிருந்தும், நாம் அவர்களிடமிருந்து பவித்ரமான ஒரு உடன்படிக்கை எடுத்தோம்.
(முஹம்மது மர்மடூக் பிக்தால் மொழிபெயர்ப்புக் கேற்ப.) (33:7)
மற்றபல வசனங்களுக்கிடையில், வசனம் 3:81, “நபி” (வேதம் வழங்கப்பட்டவர்) மற்றும் “ரசூல்” (தூதர்) பற்றிய சரியான விளக்கத்தை வழங்குகின்றது. இவ்விதமாக, “நபி” என்பவர் ஒரு புதிய வேதத்தை ஒப்படைக்கின்ற கடவுளின் தூதராக இருக்கின்றார். அதே சமயம் “ரசூல்” என்பவர் இருக்கின்ற வேதத்தை உறுதிபடுத்துவதற்கு கடவுளாள் நியமிக்கப்படுகின்ற தூதர் ஆவார், அவர் ஒரு புதிய வேதத்தைக் கொண்டுவர மாட்டார். குர்ஆனுக்கேற்ப, ஒவ்வொரு “நபி”யும் ஒரு “ரசூல்” ஆவார், ஆனால் ஒவ்வொரு “ரசூலும்” ஒரு “நபி”யாக மாட்டார்.
ஒவ்வொரு தூதரும் ஒரு புதிய வேதம் கொடுக்கப்பட்டவராக இல்லை. சில முஸ்லிம் “அறிஞர்கள்” கூறுவது போல, கடவுள் வேதம் வழங்கப்பட்டவருக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து, பின்னர் தனிப்பட்ட முறையில் அவருக்கே அதனை வைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்வார் என்பதில் நியாயம் இல்லை (2:42, 146, 159). குர்ஆனை போதுமான அளவிற்கு நன்கு அறியாதவர்கள், 19:53ல் கூறப்பட்டுள்ளபடி, ஆரோன் ஒரு “நபி”யாக இருந்தார், அவர் ஒரு வேதத்தைப் பெற்றிருக்கவில்லையே என சிந்திக்கின்றனர். ஆயினும், “மோஸஸ் மற்றும் ஆரோன் இருவருக்குமே” பிரத்யேகமாக சட்டப்புத்தகம் கொடுக்கப்பட்டது என்பதை குர்ஆன் தெளிவாக விளக்குகின்றது (21:48, 37:117).
முஹம்மது வேதம் வழங்கப்பட்டவரில் (நபி) இறுதியானவராக இருந்தார், ஆனால் இறுதித்தூதராக (ரசூல்) இல்லை என்பதை குர்ஆனின் 33:40,ல் இருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்:
உங்களில் ஆண்கள் எவருக்கும் முஹம்மது தந்தையாக இருக்கவில்லை; அவர் கடவுளின் தூதராகவும் (ரசூல்) மேலும் வேதம் வழங்கப்பட்டவரில் (நபி) இறுதியானவராகவும் இருந்தார். (33:40)
முக்கியமான இந்த விளக்கம் குர்ஆனின் கணிதக் குறியீட்டின் மூலம் உறுதிச் செய்யப்படுகின்றது. 33:40ல் பயன்படுத்தப்பட்டுள்ள இந்தக் கூற்று “முஹம்மது காத்தும் அல் நபிய்யீன் (இறுதி வேதம் வழங்கப்பட்டவர்) என்பதாகும். இந்தக் கூற்றின் எழுத்தெண் மதிப்புடன் இந்த சூரா எண்ணையும் (33) மேலும் இந்த வசன எண்ணையும் (40) கூட்டினால் 1349, 19X71 ஆகும், அதே சமயம் தவறான கூற்றான “முஹம்மது காத்தும் அல்-முர்ஸலீன்” (இறுதித்தூதர்) என்பதன் எழுத்தெண் மதிப்பு 19ன் பெருக்குத்தொகையாக இல்லை.
சமகாலத்தில், வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தூதரைப் புறக்கணிப்பது, நினைவிற்கெட்டாத காலத்திலிருந்தே, மனிதனின் குணமாக இருந்துவருகின்றது. ஜோஸஃப் இறுதித்தூதராகப் பிரகடனம் செய்யப்பட்டார் (40:34). இருந்தபோதிலும், அவருக்குப் பிறகு, மோஸஸ், டேவிட், ஸாலமன், இயேசு மற்றும் முஹம்மது உட்பட பல தூதர்கள் வந்தனர்.
உடன்படிக்கை நிறைவு செய்யப்பட்டது
இந்த உலகைப் பொறுத்த வரையிலும், வேதம் வழங்கப்பட்டவர்கள் மரணித்து விட்ட போதிலும், அவர்களுடைய ஆன்மாக்களாகிய, அந்த உண்மையான நபர்கள், இந்த பிரபஞ்சத்திற்குள் ஏதோ ஓரிடத்தில் நிரந்தரமாக இப்பொழுது இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். தங்கள் உடல்களை விட்டுவிட்டு இந்த உலகை விட்டும் பிரிந்து சென்ற நம்பிக்கையாளர்களை இறந்தவர்கள் என எண்ணுவதைவிட்டும் பல வசனங்கள் நம்மை தடுக்கின்றன (2:154, 3:169, 4:69). அவர்கள் நம்முடைய உலகிற்கு வரஇயலாத போதிலும் (23:100), அவர்கள் இந்த பிரபஞ்சத்திற்குள் ஏதோ ஓரிடத்தில் “உயிரோடு” இருக்கின்றனர். தயவு செய்து பின் இணைப்பு 17 ஐப் பார்க்கவும்.
மெக்காவிற்கான என்னுடைய புனிதப்பயணத்தின் போது, மேலும் துல்ஹிஜ்ஜா 3, 1391, டிசம்பர் 21, 1971, செவ்வாய்கிழமையன்று சூரிய உதயத்திற்கு முன்பு நான், ரஷாத் கலீஃபா, உண்மையான நபராகிய எனது ஆன்மா, உடல் அல்ல, இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஓரிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டேன் அங்கே வேதம் வழங்கப்பட்டவர்கள் அனைவரிடத்திலும் கடவுளின் உடன்படிக்கைத் தூதராக நான்அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். ரமலான் 1408 வரையிலும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களும் உண்மையான பொருளும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை.
தெளிவான நினைவோடு, நான் என்ன கவனித்தேனென்றால், நான் அசையாது உட்கார்ந்திருந்தேன், அதே சமயம் வேதம் வழங்கப்பட்டவர்கள், ஒருவர் பின் ஒருவராக, என்னை நோக்கி வந்தனர், என்னுடைய முகத்தைக் கவனித்தனர், பின்னர் தங்களுடைய தலையை அசைத்தனர். அவர்கள் இந்த உலகத்தில் இருந்த தோற்றத்திலேயே அவர்களை கடவுள் எனக்குக் காட்டினார், அவரவர் காலத்திய நாகரீக ஆடையை அவர்கள் அணிந்திருந்தனர். அங்கே பெரும் பயபக்தி, மகிழ்ச்சி மற்றும் மரியாதை நிறைந்த சூழ்நிலை நிலவியது.
ஆப்ரஹாமைத் தவிர, வேறு எந்தவொரு வேதம் வழங்கப்பட்டவரும் எனக்கு அடையாளம் காட்டப்படவில்லை. மோஸஸ், இயேசு, முஹம்மது, ஆரோன், டேவிட், நோவா மற்றும் மீதமுள்ளவர்கள் உட்பட வேதம் வழங்கப்பட்டவர்கள் அனைவரும் அங்கே இருந்ததை நான் அறிந்தேன்.
ஆப்ரஹாமைப் பற்றிய அடையாளம் எனக்கு வெளிக்காட்டப்பட்டதற்கான காரணம் நான் அவரைப் பற்றி கேட்டதுதான் என நான் நம்புகின்றேன். அவர் என்னுடைய தந்தை என்னுடைய பெரியதந்தை, சிறியதந்தை போன்று உறுதியான சாயல் கொண்டிருந்ததால் நான் ஆச்சர்யமுற்றேன். “என்னுடைய உறவினர்களைப் போலவே தோற்றமளிக்கும் இந்த வேதம் வழங்கப்பட்டவர் யார்?” என நான் ஆச்சரியமுற்றது அந்த நேரம் தான். “ஆப்ரஹாம்” என்று பதில் வந்தது. எந்தவொரு மொழியும் பேசப்படவில்லை. தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மனரீதியாகவே நடந்தது.
வேதம் வழங்கப்பட்டவர்களின் உடன்படிக்கை நிறைவடைந்தது ஜுல்-ஹிஜ்ஜா 3, 1391 நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. நாம் அந்த மாதம் (12) + அந்த நாள் (3) + அந்த வருடம் (1391) ஆகியவற்றைக் கூட்டினோமேயானால், 1406 எனும் மொத்தத் தொகையை அடைவோம், அது 19X74. சூரா 74ல் தான் குர்ஆனுடைய பொதுவகு எண்ணாகிய, எண் 19 குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண் 1406 என்பது குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் அற்புதம் வெளிப்படுத்தப்பட்டவரையிலுமுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கையாகும் (பின் இணைப்பு1).
கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய பணியானது இருக்கின்ற வேதங்களை உறுதிப்படுத்துவதும், அவற்றைத் தூய்மைப்படுத்துவதும், அவற்றை ஒரு தெய்வீகச் செய்திக்குள் ஒன்று சேர்ப்பதும் ஆகும். இப்படிப்பட்ட ஒரு தூதர் கடவுளின் செய்தியை அதன் அசலானதூய்மை நிலைக்கு மீட்டெடுப்பதற்கும் , - யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் பலரில் - நன்னெறியோடு வாழும் நம்பிக்கையாளர்களை இருளிலிருந்து ஒளியின் பால் வழிநடத்திச் செல்வதற்கும், பொறுப்புக் கொடுக்கப்பட்டவர் ஆவார் என குர்ஆன் கூறுகின்றது (5:19 & 65:11). இஸ்லாம் (முற்றிலும் கடவுளுக்கு அடிபணிதல்) மட்டுமே கடவுளால் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மார்க்கம் என அவர் பிரகடனம் செய்கின்றார் (3:19).
இதோ, நான் என் தூதனை அனுப்புகின்றேன், அவன்எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் மேலும் நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகின்ற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவர் யார்? அவர் வெளிப்படுகையில் நிலை நிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப் போலவும் இருப்பார். (மல்கியா 3:1-2)
சான்று
கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் பெயர் குர்ஆனிற்குள்ளே கணிதரீதியாக “ரஷாத் கலீஃபா” என குறியீடு செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயமாக இந்த கணினி யுகத்தில் உலகத்திற்கு கடவுளின் உடன்படிக்கைத் தூதரை அறிமுகப்படுத்துகின்ற மிகவும் பொருத்தமான முறையாகும்.
(1) பின் இணைப்பு 1ல் காட்டியுள்ளபடி, குர்ஆனிலுள்ள கடவுளின் மாபெரும்அற்புதம் பகுக்க இயலாத எண்ணாகிய 19ன் அடிப்படையில் அமைந்துள்ளது, மேலும் அது 1406 (19X74) வருடங்களுக்குத் தொடர்ந்து மறைவானதாய் இருந்தது. அச்சமூட்டும் இந்த அற்புதம் ரஷாத் கலீஃபா மூலமாக திரை நீக்கம் செய்யப்படவேண்டுமென்பது சர்வ வல்லமையுடையவரான கடவுளால் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது. கடந்த 14 நூற்றாண்டு காலமாக நூற்றுக்கணக்கான முஸ்லிம் அறிஞர்களும் மற்றும் கிழக்கத்திய மொழி மற்றும் மொழி வரலாற்று அறிஞர்களும் முயற்சி செய்தது வீணானது, அவர்களில் ஒருவரும் குர்ஆனியத் தலைப்பெழுத்துகளுக்கான பொருளின் இரகசியத்தைக் கண்டுபிடிக்க அனுமதிக்கப்படவில்லை.
அட்டவணை 1: “ரஷதா” மற்றும் “கலீஃபா”
இடம் பெறும் சூராக்கள் மற்றும் வசனங்கள்
எண். |
சூரா |
வசனம் |
சூரா |
வசனம் |
1 |
2 |
186 |
(2) |
30 |
2 |
- |
256 |
38 |
26 |
3 |
4 |
6 |
|
|
4 |
7 |
146 |
|
|
5 |
11 |
78 |
|
|
6 |
- |
87 |
|
|
7 |
- |
97 |
|
|
8 |
18 |
10 |
|
|
9 |
- |
17 |
|
|
10 |
- |
24 |
|
|
11 |
- |
66 |
|
|
12 |
21 |
51 |
| |
13 |
40 |
29 |
|
|
14 |
- |
38 |
|
|
15 |
49 |
7 |
|
|
16 |
72 |
2 |
|
|
17 |
- |
10 |
(சூரா 2 மீண்டும் வருகிறது) |
18 |
- |
14 |
|
|
19 |
- |
21 |
|
|
|
224 |
1145 |
38 |
56 |
224 + 1145+38+56=1463=19x77 |
(2) உண்மையான நம்பிக்கையாளர்களுக்கும் உண்மையைத் தேடுபவர்களுக்கும் குர்ஆன் எளிதானதாக ஆக்கப்பட்டுள்ளது. (54:17, 22:32, 40 & 39:28). குறிப்பிட்ட தெய்வீக அதிகாரம் வழங்கப்பட்ட உண்மையான நம்பிக்கையாளராக உள்ள ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலேயன்றி எவர் ஒருவரும் குர்ஆனை அடைவதற்கு அனுமதிக்கப்படாது , அதன் மகத்தான அற்புதத்தினின்றும் தடுக்கப்படுவார்கள் என்பது மாற்ற இயலாததொரு தெய்வீகச் சட்டமாகும் (17:45-46, 18:57, 41:44, 56:79). குர்ஆனின் அற்புதமானது ரஷாத் கலீஃபா மூலமாக திரை நீக்கம் செய்யப்படுவது. அவருடைய தூதுத்துவத்திற்கானதொரு பெரிய அடையாளமாக இருக்கின்றது.
(3) “ரஷாத் ”என்ற பெயரின் மூலவார்த்தை “ரஷதா (சரியான வழிகாட்டலை ஆதரிப்பது) ஆகும். இந்த மூலவாத்தை குர்ஆனில் 19 முறை குறிப்பிடப்படுகின்றது. 19 என்பது குர்ஆனின் பொது வகு எண் ஆகும் (குர்ஆனுடைய வார்த்தைகளின் அட்டவணை, முதல்பதிப்பு பக்கம் 320 ஐப் பார்க்கவும்).
(4) “ரஷாத்” எனும் வார்த்தை 40:29&38ல் காணப்படுகின்றது. “கலீஃபா” எனும் வார்த்தை 20:30 மற்றும் 38:26ல் காணப்படுகிறது. முதல் “கலீஃபா” மனிதனல்லாத “கலீஃபா”வைக் குறிப்பிடுகிறது, அதாவது, சாத்தானை, அதேசமயம் இரண்டாவது நிகழ்வு (சூரா 38) மனித “கலீஃபா” வைக் குறிப்பிடுகின்றது. “ரஷாத்” (40:29, 38) மற்றும் கலீஃபா” (38:26) உடைய சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்களை நாம் கூட்டினோமேயானால், நமக்குக் கிடைப்பது 40+29+38+38+26 = 171 = 19X9.
(5) எங்கெல்லாம் “ரஷதா” மற்றும் “கலீஃபா” காணப்படுகிறதோ அந்த சூராக்கள் மற்றும் வசனங்கள் அனைத்தின் எண்களையும், சாதக பாதகமின்றி, கூட்டிட கிடைக்கும் கூட்டுத்தொகை 1463, 19X77 ஆகும் (அட்டவணை1).
(6) “ரஷதா” எனும் மூலவார்த்தை காணப்படும் அனைத்து சூராக்கள் மற்றும் வசனங்களின் மொத்தத்தொகை 1369, அல்லது (19X72)+1 ஆகும், அதே சமயம் “கலீஃபா” வினுடைய அனைத்து நிகழ்வுகளின் மொத்தம் 94, இது (19X5)-1 ஆகும். “ரஷதா” என்ற வார்த்தை ஒன்று கூடுதலாகவும், “கலீஃபா” என்ற வார்த்தை ஒன்று குறைவாகவும் உள்ளது எனும் இந்த உண்மை இந்தப் பெயரை “ரஷாத் கலீஃபா” என ஒன்று சேர்த்துத் தைக்கின்றது மேலும் எந்த ஒன்றும் “ரஷாத்” ஆகவோ அல்லது எந்த ஒன்றும் “கலீஃபா” ஆகவோ இல்லை.
அட்டவணை 2: குர்ஆனின் ஆரம்பத்திலிருந்து மூல வார்த்தையான “ரஷதா” வின்
முதல் நிகழ்வு வரையிலான சூராக்கள் மற்றும் வசனங்கள்
சூரா எண். |
வசனங்களின்
எண்ணிக்கை |
வசனஎண்களின
கூட்டுத்தொகை |
1 |
7 |
28 |
2 |
185 |
17205 |
3 |
192 |
17233 |
|
|
(19x907) |
அத்துடன் “ரஷாத்” (505)+ “கலீஃபா” (725) + மொத்த சூரா (3) + மொத்த வசனங்கள் (192) = 1425 (19x75) 505+725+3+192+1425+=19x75
(5) எங்கெல்லாம் “ரஷதா” மற்றும் “கலீஃபா” காணப்படுகிறதோ அந்த சூராக்கள் மற்றும் வசனங்கள் அனைத்தின் எண்களையும், சாதக பாதகமின்றி, கூட்டிட கிடைக்கும் கூட்டுத்தொகை 1463, 19X77 ஆகும் (அட்டவணை1).
(6) “ரஷதா” எனும் மூலவார்த்தை காணப்படும் அனைத்து சூராக்கள் மற்றும் வசனங்களின் மொத்தத்தொகை 1369, அல்லது (19X72)+1 ஆகும், அதே சமயம் “கலீஃபா” வினுடைய அனைத்து நிகழ்வுகளின் மொத்தம் 94, இது (19X5)-1 ஆகும். “ரஷதா” என்ற வார்த்தை ஒன்று கூடுதலாகவும், “கலீஃபா” என்ற வார்த்தை ஒன்று குறைவாகவும் உள்ளது எனும் இந்த உண்மை இந்தப் பெயரை “ரஷாத் கலீஃபா” என ஒன்று சேர்த்துத் தைக்கின்றது மேலும் எந்த ஒன்றும் “ரஷாத்” ஆகவோ அல்லது எந்த ஒன்றும் “கலீஃபா” ஆகவோ இல்லை.
அட்டவணை 3: மூல வார்த்தையான “ரஷதா” காணப்படுகின்ற சூராக்கள்
சூரா எண். |
வசனங்களின்
எண்ணிக்கை |
மொத்தம் |
2 |
286 |
288 |
4 |
176 |
180 |
7 |
206 |
213 |
11 |
123 |
134 |
18 |
110 |
128 |
21 |
112 |
133 |
40 |
85 |
125 |
49 |
18 |
67 |
72 |
28 |
100 |
224 |
1144 |
1368 |
|
|
(19x72) |
(7) “ரஷாத்” உடைய எழுத்தெண் மதிப்பு 505 மற்றும் “கலீஃபா” உடைய எழுத்தெண் மதிப்பு 725 (அட்டவணை 7, பின் இணைப்பு 1) ஆகும். குர்ஆனின் ஆரம்பத்திலிருந்து “ரஷதா” வினுடைய முதல் நிகழ்வு வரையிலுமுள்ள சூராக்களின் எண்களையும் வசனங்களின் எண்களையும் “ரஷாத் கலீஃபா” வினுடைய மதிப்புடன் (1230) கூட்டினோமேயானால், பெறக் கூடிய மொத்தத் தொகை 1425, 19X75 ஆகும். விபரங்கள் அட்டவணை 2ல் கொடுக்கப்பட்டுள்ளது.
(8) ஒவ்வொரு சூராவிலுள்ள அனைத்து வசனங்களின் எண்களையும் நாம் கூட்டினோமேயானால், அதாவது குர்ஆனின் ஆரம்பத்திலிருந்து “ரஷதா” எனும் மூலவார்த்தையின் முதல் நிகழ்வு வரையிலுமுள்ள வசன எண்களின் கூட்டுத் தொகை (1+2+3+....+n), மொத்தமாக வருவது 17233, 19X907 ஆகும் (அட்டவணை 2).
(9) குர்ஆனியத் தலைப்பெழுத்துகள் குர்ஆனுடைய அற்புதத்தின் அடிப்படைக் கட்டமைப்பை அமைக்கின்றன. இந்தத் தலைப்பெழுத்துகள் 2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 50 மற்றும் 68 ஆகிய சூராக்களில் காணப்படுகின்றன. இந்த எண்களின் கூட்டுத் தொகையை (822) “ரஷாத் கலீஃபா” வினுடைய மதிப்புடன் (1230) நாம் கூட்டினோமேயானால், மொத்தத் தொகை 2052, 19X108 ஆகும்.
(10) அட்டவணை 3ல் காட்டியுள்ளபடி, மூலவார்த்தை “ரஷதா” காணப்படுகின்ற அனைத்து சூராக்களின் எண்களையும் + வசனங்களின் எண்ணையும் நாம் கூட்டினோ மேயானால், நாம் பெறுவது 1368, அல்லது 19X72.
(11) நாம் சூரா எண்ணை எழுதி, அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சூராவிலுமுள்ள வசனங்களின் எண்ணிக்கையை எழுதி அதனைத்தொடர்ந்து மூல வார்த்தையான “ரஷதா”வின் முதல் நிகழ்விலிருந்து (2:186) “ரஷதா”வின் கடைசி நிகழ்வான (72:21) வரையிலும் ஒவ்வொரு தனி வசனத்தின் எண்களையும் எழுதி, பின்னர் இந்த எண்களை ஒன்றன் பின் ஒன்றாய் அடுக்கினோமேயானால், 11087 இலக்கங்களைக் கொண்ட மிக நீண்ட எண்ணை நாம் பெறுகிறோம் மேலும் அது 19ன் பெருக்குத் தொகையாகும். இந்த மிக நீண்ட எண் சூரா எண் 2 ஐக் கொண்டு ஆரம்பிக்கின்றது, தொடர்ந்து சூரா 2ல் “ரஷதா”வின் முதல் நிகழ்வு காணப்படும் வசனம் 186லிருந்து அந்த சூராவின் முடிவு வரையிலும் உள்ள வனங்களின் (100 வசனங்கள்) மொத்த எண்ணிக்கை அதனைப் பின் தொடர்கிறது. இவ்வாறு இந்த எண்ணின் ஆரம்பம் இதுபோல் காணப்படும்: 2 100. இந்த 100 வசனங்களின் தனித்தனி எண்களையும் (187-286) அந்த எண்ணிற்கு அடுத்தபடியாக எழுதப்படுகின்றது. இவ்விதமாக சூரா 2ஐ வர்ணிக்கும் எண் இதுபோலிருக்கும் : 2 100 187 188 189 .......285 286. இந்த செயல்முறையை “ரஷதா”வின் கடைசி நிகழ்வு அமைந்திருக்கும். 72:21 வரையிலும் செய்யப்படுகிறது. இறுதியாகக் கிடைக்கும் முழுமையான எண் இதுபோலிருக்கும்:
2 100 187 188 189 .... 72 21 1 2 3 ....... 19 20 21
சூரா எண்ணைப் பின் தொடர்ந்து வசனங்களின் எண்ணிக்கையையும், பின்னர் “ரஷதா” வின் முதல் நிகழ்விலிருந்து கடைசி நிகழ்வு
வரையிலும் (2:187 லிருந்து 72:21 வரையிலும்) உள்ள வசனங்களின் தனித்தனி எண்களையும் எழுதிட கிடைத்திடும் முழுமையான
எண் 11087 இலக்கங்களைக் கொண்டிருக்கிறது, மேலும் இது 19 ஆல் வகுபடக் கூடியதாகும்.
(12) மூல வார்த்தையான “ரஷதா”வின் முதல் நிகழ்விலிருந்து “கலீஃபா” எனும் வார்த்தை காணப்படும் 38:26 வரையிலுமுள்ள சூராக்கள் மற்றும் வசனங்களை நாம் பரிசோதித்தோமேயானால், அந்த சூராக்களின் எண்கள் மற்றும் வசனங்களின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை 4541 அல்லது 19X239 வருவதை நாம் காணலாம். விபரங்கள் அட்டவணை 4ல் கொடுக்கப்பட்டுள்ளன.
(13) “ரஷாத்”தின் மதிப்பையும் (505), அதனைத் தொடர்ந்து “கலீஃபா”வின் மதிப்பையும் (725), அதனைத் தொடர்ந்து மூலவார்த்தையான “ரஷதா” காணப்படும் ஒவ்வொரு சூரா எண்ணையும் அதனைப் பின் தொடர்ந்து முதல் “ரஷதா”விலிருந்து (2:186) “கலீஃபா” (38:26) எனும் வார்த்தை வரையிலுமுள்ள வசனங்களின் எண்களை எழுதிடும்போது, ஒரு மிக நீண்ட எண் நமக்குக் கிடைக்கும். அது 19 ஆல் வகுபடக் கூடியதாகும்
“ரஷதா” வினுடைய முதல் நிகழ்வு 2:186ல் உள்ளது. ஆகவே 2 186 என நாம் எழுதிக்கொள்வோம். இரண்டாவது நிகழ்வு 2:256ல் உள்ளது, ஆகவே நாம் 256ஐ எழுதிக்கொள்வோம். அடுத்த நிகழ்வு 4:6ல் உள்ளது, ஆகவே நாம் 4 6 என எழுதிக்கொள்வோம், மேலும் (“கலீஃபா” காணப்படும் 38:26 வரையிலும்) இவ்வாறே 38 26 வரையிலும் எழுதிக்கொள்வோம். இந்த முழுமையான எண் இதுபோலிருக்கும்.
அட்டவணை 4: முதல் “ரஷதா” விலிருந்து “கலீஃபா” வரையிலான சூராக்கள் மற்றும் வசனங்கள்
சூரா எண். |
வசனங்களின்
எண்ணிக்கை |
மொத்தம் |
2 |
100(187-286) |
102 |
3 |
200 |
203 |
4 |
176 |
180 |
5 |
120 |
125 |
- |
- |
- |
35 |
45 |
80 |
36 |
83 |
119 |
37 |
182 |
219 |
38 |
26 |
64 |
740 |
3801 |
4541 |
|
|
(19x239) |
505       725       2       186       256       4       6       ................. 38       26
“ரஷாத்”ன் எழுத்தெண் மதிப்பு, அதனைத் தொடர்ந்து “கலீஃபா”வினுடைய எண் மதிப்பு அதனைத் தொடர்ந்து “ரஷதா” வின் முதல் நிகழ்விலிருந்து 38:26ல் உள்ள “கலீஃபா”வின் நிகழ்வு வரையிலும் உள்ள மூல வார்த்தையான “ரஷதா” வின் ஒவ்வொரு நிகழ்வுமிருக்கும் சூரா எண் மற்றும் வசன எண்கள் எழுதப்பட்டுள்ளது.
கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் அடிபணிதல் ஆகும் (3:19)
(14) இஸ்லாத்தின் (அடிபணிதல்) மூன்று தூதர்களைக் குர்ஆன் விவரிக்கின்றது:
ஆப்ரஹாம் இஸ்லாத்தினுடைய வழிபாட்டு முறைகள் அனைத்தையும் ஒப்படைத்தார். அவருடைய பெயரின் மதிப்பு = 258
முஹம்மது குர்ஆனை ஒப்படைத்தார். அவருடைய பெயரின் மதிப்பு = 92
ரஷாத் இஸ்லாத்தினுடைய உண்மைத் தன்மைக்கான சான்றை ஒப்படைத்தார். அவருடைய பெயரின் மதிப்பு = 505
3 பெயர்களுக்கான எழுத்தெண் மதிப்பு = 258+92+505 = 855
(19X45)
யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவை ஒரே மார்க்கமாக ஒன்றிணைக்கப்படும். அது - முழுமையான அடிபணிதல் மற்றும் கடவுளுக்கு மட்டுமே பூரணமாக அர்ப்பணித்தல்.
யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் உட்பட இருக்கக் கூடிய மார்க்கங்கள் கடுமையாக சிதைக்கப்பட்டுள்ளன மேலும் இவை எளிதாக அழிந்து போகும் (9:33, 48:28, 61:9).
(15) சில நேரங்களில் “ஆப்ரஹாம், இஸ்மவேல் மற்றும் ஐசக்” பற்றி குர்ஆன் குறிப்பிடுவதால் இஸ்மவேலையும் ஐசக்கையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்க விதமாக, இஸ்மவேலையும், ஐசக்கையும் சேர்ப்பதன் மூலம் கிடைத்த தொகையும் கூட, 19ன் பெருக்குத் தொகையாகவே இருக்கின்றது. அட்டவணை 5ல் காட்டியுள்ளபடி, புதிய தொகை 1235, அல்லது 19X65 ஆகும். ஆப்ரஹாம், முஹம்மது அல்லது ரஷாத் ஆகிய இம்மூன்று பேரில் ஏதாவது ஒருவருடைய பெயரை நீக்கினாலும் இவ்வாறு 19 ஆல் வகுபடக்கூடிய சாத்தியம் இருக்காது.
ஏன் 81:       வசனம்       &       சூரா
(16) சூரா 3லுள்ள வசனம் 81ல் கடவுளின் உடன் படிக்கைத் தூதர் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருக் கின்றார். “ரஷாத்” உடைய எழுத்தெண் மதிப்பு (505) + “கலீஃபா” வினுடைய எண்மதிப்பு (725) + வசனஎண் (81) ஆகியவற்றை கூட்டிட உருவாகிடும் எண் 505+725+81 = 1311 = 19X69.
அட்டவணை 5: 5 தூதர்களுடைய எழுத்தெண் மதிப்பு
பெயர் |
தனித்தனி எழுத்துக்களின் மதிப்பு |
மொத்தம் |
ஆப்ரஹாம் |
1+2+200+5+10+40 |
258 |
இஸ்மவேல் |
1+60+40+70+10+30 |
211 |
ஐசக் |
1+60+8+100 |
169 |
முஹம்மது |
40+8+40+4 |
92 |
ரஷாத் |
200+300+1+4 |
505 |
|
.................... |
.................... |
|
1235 |
1235 |
|
|
(19x65) |
அட்டவணை 6: 1:1 லிருந்து 3:81
வரையிலான சூராக்கள் மற்றும் வசனங்கள்
சூரா எண். |
வசனங்களின் எண்ணிக்கை |
மொத்தம் |
1 |
7 |
8 |
2 |
286 |
288 |
3 |
81 |
84 |
6 |
374 |
380 |
|
|
(19x20) |
(17) சூரா 81ல் நாம் பார்த்தோமேயானால், பலமாக உதவி செய்யப்பட்ட மேலும் சர்வ வல்லமையுடையவரால் அனுமதிக்கப்பட்ட கடவுளின் தூதர் ஒருவரைப் பற்றி நாம் படிக்கலாம் (வசனம் 19). இவ்விதமாக, சூரா 3லுள்ள வசனம் 81 மற்றும் சூரா 81, வசனம் 19 ஆகியவை “ரஷாத் கலீஃபா” என்ற பெயருடன் உறுதியான தொடர்புடையதாக உள்ளது 505+725+81 = 1311 = 19X69.
(18) குர்ஆனின் ஆரம்பத்திலிருந்து கடவுளின் உடன்படிக்கைத்தூதர் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருக்கும் வசனம் 3:81 வரையிலுள்ள சூரா எண்களையும் வசனங்களின் எண்ணிக்கையையும் நாம் கூட்டினோமேயானால், மொத்தத் தொகையாக வருவது 380, 19X20 ஆகும். இந்த விபரங்கள் அட்டவணை 6 ல் உள்ளன.
(19) 3:81 உடைய எழுத்தெண் மதிப்பு 13148, 19X692 ஆகும். இந்த மதிப்பு இந்த வசனத்திலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களின் எழுத்தெண் மதிப்பையும் கூட்டிட கிடைப்பதாகும்.
(20) கடவுளின் உடன்படிக்கைத் தூதரை பிரத்யேகமாகக் குறிப்பிடும் வசனம் 3:81 உடைய அந்தப் பகுதியை நாம் கவனித்து பார்த்தோமேயானால்: “உங்களிடமிருப்பதை உறுதி செய்யக் கூடிய, ஒரு தூதர் உங்களிடம் வருவார்”, அரபியில்:
“ஜா அக்கும் ரஸுலுன் முஸத்திக்குன் லிமாமஅக்கும்”
இந்த முக்கியமான சொற்றொடரின் எழுத்தெண் மதிப்பு 836, 19X44 என்பதை நாம் காண்கின்றோம்
“நிச்சயமாக, நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்” (36:3)
(21) சூரா 36 லுள்ள வசனம் 3 பிரத்யேகமாக என்னைத்தான் குறிப்பிடுகின்றது என வானவர் கேப்ரியல் மூலமாக, மிக உறுதியாக என்னிடம் கூறப்பட்டது. தலைப்பெழுத்துகளுடைய சூராக்களை மட்டும் வரிசையாக நாம் அடுக்கினோமேயானால், சூரா 2 லிருந்து ஆரம்பித்து, பின்னர் சூரா 3, பின்னர் சூரா 7, மேலும் இவ்வாறு வரிசைப்படுத்தினால், சூரா 36, யாஸீன் 19வது இடத்தைப் பெற்றிருப்பதை நாம் காணலாம்.
(22) சூரா 36ன் வசனம் 3, “நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்” என்று கூறுகின்றது. இந்த சொற்றொடரின் எழுத்தெண்மதிப்பு 612 ஆகும். இந்த மதிப்பு (612) + சூரா எண் (36) + வசன எண் (3) + ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண்மதிப்பு (505+725) ஆகியவற்றைக் கூட்டுவதன் மூலம், நமக்குக் கிடைப்பது 36+3+612+505+725 = 1881 = 19X99.
(23) 36 வது சூரா 83 வசனங்களைக் கொண்டிருக்கின்றது. சூரா எண் (36) + அதனுடைய வசனங்கஹளின் எண்ணிக்கை (83) + “ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண் மதிப்பு (505+725) ஆகியவற்றை நாம் கூட்டுவோமேயானால், நமக்குக் கிடைப்பது 36+83+505+725 = 1349 = 19X71.
(24) உடன்படிக்கைத்தூதர் முன்னறிவிப்புச் செய்யப்பட்டிருக்கும் 3:81லிருந்து சூரா 36 வரையிலும் 3330 வசனங்கள் உள்ளன. இந்த வசனங்களின் எண்ணிக்கையோடு (3330), “ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண்மதிப்பை (1230) கூட்டுவதன் மூலம், நமக்குக் கிடைப்பது 505+725+3330=4560, 19X240.
அட்டவணை 7: சூரா 1லிருந்து சூரா 36ன் 3வது
வசனம் வரையிலான சூராக்கள் மற்றும் வசனங்கள்
சூரா எண். |
வசனங்களின்
எண்ணிக்கை |
வசனஎண்களின
கூட்டுத்தொகை |
1 |
7 |
28 |
2 |
286 |
41041 |
3 |
200 |
20100 |
- |
- |
- |
9 |
127 |
8128 |
- |
- |
- |
34 |
54 |
1485 |
35 |
45 |
1035 |
36 |
2 |
3 |
666 |
3705 |
257925 |
|
(19x195) |
(19x13575) |
(25) 3:81 லிருந்து 36:3 வரையிலும் 3333 வசனங்கள் உள்ளன. “ரஷாத்” உடைய எழுத்தெண் மதிப்புடன் இந்த எண்ணை கூட்டுவதன் மூலம், நமக்குக் கிடைப்பது, 3333+505 = 3838 = 19X202.
(26) 1:1லிருந்து 36:3 வரையிலுமுள்ள வசனங்களின் எண்ணிக்கை 3705, 19X195 ஆகும். (அட்டவணை 7).
(27) 1:1லிருந்து 36:3 வரையிலுமுள்ள ஒவ்வொரு சூராக்களிலுமுள்ள வசன எண்களின் கூட்டுத்தொகை 257925, 19X13575 ஆகும் (அட்டவணை 7).
(28) சூரா 1லிருந்து சூரா 36 வரையிலுமுள்ள சூரா எண்களின் கூட்டுத்தொகை 666 ஆகும் (அட்டவணை 7). இந்தக் கூட்டுத்தொகை + “ரஷாத் கலீஃபா” வின் எழுத்தெண் மதிப்பு (505+725) + “நிச்சயமாக நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்” என கூறும் வசனமான 36:3 உடைய எழுத்தெண் மதிப்பு (612) ஆகியவற்றை நாம் கூட்டு வோமேயானால் கிடைக்கக் கூடிய மொத்தத் தொகையானது : 666+505+725+612+2508 = 19X132 ஆகும்.
அட்டவணை 8: முதல் “ரஷதா” விலிருந்து 36:3
வரையிலான சூராக்கள் மற்றும் வசனங்கள்
எண். |
சூரா எண். |
வசனஎண்களின
கூட்டுத்தொகை |
1 |
2(186-286) |
23836 |
2 |
3 |
20100 |
3 |
4 |
15576 |
4 |
5 |
7260 |
- |
- |
- |
10 |
9 |
8128 |
- |
- |
- |
33 |
34 |
1485 |
34 |
35 |
1035 |
35 |
36(1-3) |
6 |
|
665 |
240695 |
|
35+665+240695=241395 (19x12705) |
(29) மூலவார்த்தையான “ரஷதா”வின் முதல் நிகழ்வில் (2:186) இருந்து 36:3 (நீர் தூதர்களில் ஒருவராக இருக்கின்றீர்) வரையிலுமுள்ள வசன எண்களின் கூட்டுத்தொகை (1+2+3+..........+n) + சூராக்களின் மொத்தத் தொகை (35) + அந்த சூரா எண்களின் கூட்டுத்தொகை ஆகியவற்றை நாம் கூட்டுவோமேயானால் மொத்தத்தொகையானது 241395 அல்லது 19X 12705 ஆகும் (அட்டவணை 8).
(30) மூலவார்த்தையான “ரஷதா”வின் முதல் நிகழ்விலிருந்து 36:3 வரையிலுமுள்ள சூரா எண்களின் கூட்டுத்தொகை 665, 19X35 ஆகும். இவை மொத்தம் 35 சூராக்கள் என்பதையும் கவனிக்கவும் (அட்டவணை 8).
“வேதத்தையுடைய மக்களுக்கு ஒரு தூதர்”
(யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லிம்கள்)
வேதத்தையுடைய மக்களே, தூதர்களில்லாது ஒரு நீண்ட காலத்திற்குப் பிறகு, விசயங்களை உங்களுக்கு விளக்குவதற்காக, நம்முடைய தூதர் உங்களிடத்தில் வந்திருக்கின்றார். “உபதேசம் செய்பவரோ அல்லது எச்சரிக்கை செய்பவரோ எங்களிடத்தில் வரவில்லை” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு. ஒரு உபதேசம் செய்பவர் மேலும் எச்சரிக்கை செய்பவர் உங்களிடத்தில் வந்திருக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர். (5:19),
(31) தெளிவாக, இந்த வசனத்தின் எண் 19, ரஷாதால் கண்டுபிடிக்கப்பட்ட குர்ஆனின் பொது வகு எண்ணாகவும் மேலும் குர்ஆனில் “ரஷதா” என்பதன் மொத்த நிகழ்வுகளின் எண்ணிக்கையும் ஆகும்.
(32) “ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண் மதிப்பு (1230)+சூராஎண் (5) + வசன எண் (19) ஆகியவற்றை கூட்டுவோமேயானால், நமக்குக் கிடைப்பது 1230+50+19 = 1254 = 19X 66.
(33)
குர்ஆனின் ஆரம்பத்திலிருந்து இந்த வசனம் (5:19) வரையிலுமுள்ள சூரா எண்கள் மற்றும் வசனங்களின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை 703, 19X37 ஆகும். அட்டவணை 9ஐப் பார்க்கவும்.
(34)
சூரா 98, “சான்று” வசனம் 2, “வேதத்தையுடைய மக்களின் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லிம்கள்)” நன்மைக்காக, கடவுளின் உடன்படிக்கைத் தூதரின் வருகையைப் பற்றிப் பிரகடனம் செய்கின்றது. “ரஷாத் கலீஃபா”வின் எழுத்தெண் மதிப்பு (505+725) + சூரா எண் (98) + வசன எண் (2) ஆகியவற்றைக் கூட்டுவதன் மூலம், நமக்குக் கிடைப்பது 505+725+98+2 = 1330 = 19X70.
வேதத்தையுடைய மக்களில் நம்ப மறுப்பவர்கள் (யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்) மற்றும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் ஆகிய இவர்களுக்கு ஆழ்ந்த அத்தாட்சி கொடுக்கப்பட்ட போதிலும், நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் (98:1)
கடவுளிடமிருந்து ஒரு தூதர், புனிதமான வேதங்களை எடுத்துரைக்கின்றார். (98:2)
அட்டவணை 9: ஆரம்பத்திலிருந்து 5:19 வரையிலான சூராக்கள் மற்றும் வசனங்கள்
சூரா எண். |
வசனங்களின்
எண்ணிக்கை |
வசனஎண்களின
மொத்தம் |
1 |
7 |
28 |
2 |
286 |
288 |
3 |
200 |
203 |
4 |
176 |
180 |
5 |
19 |
24 |
15 |
688 |
703 |
|
|
(19x37) |
(35) “ஆழ்ந்த அத்தாட்சி” எனும் பொருள்கொண்ட, மேலும் சூரா 98ன் தலைப்பாகவுமிருக்கின்ற “க்ஷபய்யினாஹ்” என்ற வார்த்தை குர்ஆனில் 19 முறை காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தெய்வீக ஆசிரியரையுடைய குர்ஆனின் சான்றானது வகுபடா எண் 19ன் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதற்கும், மேலும் 98:2ல் கூறப்படும் அந்த தூதர் “ரஷாத் கலீஃபா” தான் என்பதற்கும் இது மற்றொரு அத்தாட்சி.
ஆழ்ந்ததோர், தூதர் வந்துள்ளார் (44:13)
(36) 1:1லிருந்து 44:13 வரையிலுமுள்ள சூரா எண்களையும் + ஒவ்வொரு சூராவிலுள்ள வசனங்களின் எண்களையும் கூட்டுவதன் மூலம், கிடைத்திடும் தொகை 5415, 19X19X15. (அட்டவணை 10).
(37) சூரா எண் (44) + தூதரைப் பற்றி முன்னறிவிப்புச் செய்யும் வசன எண் (13) ஆகியவற்றின் கூட்டுத் தொகையானது 57, இது 19X3 ஆகும். அட்டவணை 10ஐப் பார்க்கவும்.
அட்டவணை 10: 1:1லிருந்து 44:13 வரையிலான சூராக்கள் மற்றும் வசனங்கள்
சூரா எண். |
வசனங்களின்
எண்ணிக்கை |
மொத்தம் |
1 |
7 |
8 |
2 |
286 |
288 |
3 |
200 |
203 |
4 |
176 |
180 |
5 |
120 |
125 |
- |
- |
- |
9 |
127 |
136 |
- |
- |
- |
41 |
54 |
95 |
42 |
53 |
95 |
43 |
89 |
132 |
44 |
13 |
57 |
990 |
4425 |
5415 |
|
|
(19x19x15) |
உலக முடிவு
அட்டவணை 11: 72:27 ல் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தூதரின் எழுத்தெண் மதிப்பு
எழுத்து |
எழுத்தெண் மதிப்பு |
அ |
1 |
ல |
30 |
அ |
1 |
ம |
40 |
நு |
50 |
அ |
1 |
ர |
200 |
த |
400 |
ட |
800 |
ய |
10 |
ம |
40 |
நு |
50 |
ர |
200 |
ஸீ |
60 |
வ |
6 |
ல |
30 |
|
..... |
|
1919 |
(38) கடவுள் மட்டுமே எதிர்காலத்தை அறிந்தவர்; அவரே இந்த உலகம் எப்பொழுது முடிவடையும் என்பதை மிகச் சரியாக அறிவார் (7:187, 31:34, 33:63, 41:47, 43:85). கடவுள் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய குறிப்பிட்ட நிலைகளை வெளிப்படுத்துகின்றார் என்பதைக் குர்ஆனிலிருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம். 72:27க்கு ஏற்ப, ரஷாத் கலீஃபாதான் உலகத்தினுடைய முடிவை திரை நீக்கம் செய்யும் பாக்கியம் பெற்றவர் என்பதற்கு பின் இணைப்பு 25ல் சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
(39) குர்ஆன் ஆரம்பத்திலிருந்து வசனம் 72:27 வரையிலுமுள்ள வசனங்களின் எண்ணிக்கை 5472. அல்லது 19X72ஒ4 ஆகும். 72:27ல் எதிர்காலத்தைப் பற்றிய செய்தி கொடுக்கப்பட்டவர் அந்த தூதர் என்பதையும் மேலும் இந்த சூரா, 4 “ரஷதா” வார்த்தைகளைக் கொண்டுள்ளது என்பதையும் (72:2,10,14&21) கவனிக்கவும். “ரஷாத் கலீஃபாவின்” எழுத்தெண் மதிப்பு (1230)+சூராஎண் (72) + “ரஷதா” குறிப்பிடப்பட்டுள்ள அந்த 4 வசனங்களின் எண்கள் ஆகியவற்றை கூட்டுவதன் மூலம், நமக்குக் கிடைப்பது 1230+72+2+10+14+21 = 1349 = 19X71.
(40) 72:27 வது வசனம் இந்தக் கூற்றுடன் ஆரம்பிக்கின்றது: (அவர் தேர்ந்தெடுக்கின்ற தூதருக்கு மட்டும்) எதிர்காலத்தைப் பற்றிய செய்திகளைப் பெறுவதற்கு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தூதர் எழுத்தெண் மதிப்பாக 1919 ஐக் கொண்டுள்ளார் என்று இது சுட்டிக் காட்டுகின்றது. விபரங்களை அட்டவணை 11 தருகின்றது.
போலித்தூதரிடமிருந்து கடவுளின் தூதரை எவ்விதம் அடையாளம் காண்பது.
பொய்யான தூதர்களிலிருந்து கடவுளின் உண்மையான தூதர்களை அடையாளம் காணுவதற்கு நேரடியான அளவுகோல்களை குர்ஆன் வழங்குகின்றது:
(1) கடவுளின் தூதர் கடவுளை மட்டும் வழிபடும் படியும் மேலும் அனைத்து வடிவிலான இணைவழிபாட்டை நீக்கும்படியும் ஏவுகின்றார்.
(2) கடவுளின் தூதர் தனக்காக ஒருபோதும் கூலி கேட்க மாட்டார்.
(3) கடவுளின் தூதர் அவருடைய தூதுத்துவத்திற்குரிய தெய்வீகமான, மறுக்க இயலாத சான்று கொடுக்கப்படுகின்றார்.
எவரொருவர் கடவுளின் தூதர் என உரிமை கொண்டாடி, மேலே பட்டியலிடப்பட்டுள்ள குறைந்த பட்ச அளவுகோல்கள் மூன்றையும் எதிர்கொள்ள இயலாது இருக்கின்றாரோ அவர் போலியாக உரிமை கொண்டாடுபவர் ஆவார்.
கடவுளின் தூதருக்கும் போலித் தூதருக்கும் இடையேயுள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் கடவுளின் தூதர் கடவுளால் உதவி செய்யப்படுகின்றார், அதே சமயம் போலித்தூதர் அவ்வாறு உதவி செய்யப்படமாட்டார்:
* கடவுளின் தூதர் கண்களால் காணஇயலாத கடவுளின் படைவீரர்களைக் கொண்டு உதவி செய்யப்படுகின்றார். (3:124-126, 9:26&40, 33:9, 37:171-173, 48:4&7, 74:31).
* கடவுளின் தூதர் கடவுளின் கஜானாவிலிருந்து உதவி செய்யப்படுகின்றார். (63:7-8)
* கடவுளின் தூதரும், அதேபோல் நம்பிக்கையாளர்களும், இவ்வுலகிலும் மேலும் என்றென்றைக்கும் வெற்றியையும், கண்ணியத்தையும் கொண்டு வாக்களிக்கப்பட்டிருக்கின்றார்கள் (40:51 & 58:21).
இவ்விதமாக, கடவுளின் தூதருடைய உண்மைத்தன்மை மாற்றமில்லாது வெற்றியடைகின்றது, அதே சமயம் போலித்தூதருடைய கபடத்தன்மை, விரைவிலோ அல்லது தாமதமாகவோ வெளிப்படுத்தப்படுகின்றது.
கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய பிரதானப் பணிகள்
குர்ஆன் 3:81ல் கூறப்பட்டுள்ளபடி, வேதம் வழங்கப்பட்டவர்கள் அனைவராலும் ஒப்படைக்கப்பட்ட அனைத்து வேதங்களையும் கடவுளின் உடன் படிக்கைத் தூதர் உறுதி செய்து, மேலும் அவற்றின் அசலான பரிசுத்தத் தன்மைக்கு அவைகளை மீட்க வேண்டும்.
கடவுளிடமிருந்து கருணை [21:107]
நம்பிக்கையாளர்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, சாத்தியமாகக் கூடிய பல தீர்வுகளை அவர்கள் ஏற்படுத்துவார்கள், மேலும் இது கணிசமான அளவு சண்டை சச்சரவிற்கும், பிரிவினைக்கும், ஒழுங்கின்மைக்கும் வழியேற்படுத்துகின்றது. நம்முடைய பிரச்சினைகளுக்கு இறுதித்தீர்வுகளை வழங்குவதற்காக கடவுள் நமக்குத் தூதர்களை அனுப்புவது என்பது அவரிடம் இருந்துள்ள கருணையேயாகும் என்பதை 2:151, 3:164 மற்றும் 21:107 ஆகிய வசனங்களிலிருந்து நாம் அறிந்துக் கொள்கின்றோம். நம்முடன் தொடர்பு கொள்வதற்காகவும் மேலும் புதியச் செய்திகளை பரவச் செய்வதற்காகவும் கடவுள் தன்னுடைய தூதர்களை அனுப்புகின்றார். என்பதை 42:51லிருந்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். ஆகவே தான் கடவுளின் தூதர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்ட உபதேசங்களை, சிறிதளவும் தயக்கமின்றி, ஏற்றுக்கொள்ளும்படி, 4:65, 80ல் உறுதியான உத்தரவு உள்ளது.
பின்வருபவை கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய பிரதான பணிகளின் பட்டியலாகும்:
1. குர்ஆனிலுள்ள கணித அற்புதத்தை திரைநீக்கம் செய்து மேலும் பிரகடனம் செய்வது (பின் இணைப்பு 1).
2. குர்ஆனிலிருந்து போலியான இரண்டு வசனங்களான 9:128-129 ஆகியவற்றை வெளிப்படுத்தி நீக்குவது (பின் இணைப்பு 24)
3. நம்முடைய வாழ்க்கைக்கான காரணத்தை விளக்குவது; ஏன் நாம் இங்கே இருக்கின்றோம் (பின் இணைப்பு 7).
4. அனைத்து மக்களுக்கும் ஒரே மார்க்கத்தைப் பிரகடனம் செய்து, மேலும் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றில் கேடு விளைவித்துக் கொண்டிருக்கும் அனைத்து சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கித் தூய்மைப்படுத்துவது (பின் இணைப்பு 13, 15, 19).
5. ஜகாத் (கடமையான தர்மம்) மீட்சிக்கான முதல் தேவையாக இருக்கின்றது (7:156) என்பதைப் பிரகடனம் செய்து, மேலும் ஜகாத்தைக் கடைப்பிடிக்கும் சரியான வழிமுறையை விளக்கிடுவது (பின் இணைப்பு 15).
6. உலகத்தின் முடிவை திரை நீக்கம் செய்வது (பின் இணைப்பு 25).
7. 40 வயதிற்கு முன்பு இறப்பவர்கள் சுவனத்திற்குச் செல்கின்றனர் என்பதைப் பிரகடனம் செய்வது (பின் இணைப்பு 32).
8. இயேசுவின் மரணத்தைப் பற்றி விளக்குவது (பின் இணைப்பு 22).
9. முஹம்மதிற்கும், பின்னர் முஹம்மது வழியாக மக்களுக்கும் குர்ஆன் சேர்ப்பிக்கப்பட்டது பற்றி விளக்குவது (பின் இணைப்பு 28).
10. கடவுளின் வெளிப்பாடுகளை (குர்ஆனை) முஹம்மது தன் சொந்தக் கரங்களால் எழுதியது பற்றி அறிவிப்பது (பின் இணைப்பு 28).
11. கடவுளின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் ஏன் சுவனத்திற்கு செல்வதில்லை என விளக்குவது (பின் இணைப்பு 27).
12. கடவுள் ஆப்ரஹாமிடம் அவருடைய மகனைக் கொல்லும்படி ஒருபோதும் கட்டளையிடவில்லை என்பதைப் பிரகடனம் செய்வது (பின் இணைப்பு 9).
13. முழுமையான மகிழ்ச்சியை அடைவது பற்றிய இரகசியத்தைப் பிரகடனம் செய்வது (அறிமுகவரை,xx)
14. குற்றவியல் நீதி ஒழுங்குமுறையை நிலை நாட்டுவது (பின் இணைப்பு 37).
*********************************************************