பின் இணைப்பு 19
ஹதீஸ் & சுன்னத் சாத்தானிய புதுமைகள்

கடவுள் மற்றும் அவருடைய வெளிப்பாடுகளைத் தவிர வேறு எந்த ஹதீஸை அவர்கள் ஆதரிப்பார்கள்? (45 :6)

 

இந்த குர்ஆன் இட்டுக்கட்டப் பட்டதொரு ஹதீஸ் அல்ல; ... இது அனைத்தையும் விவரிக்கின்றது. (2:111)

 

சில மக்கள் கடவுளின் பாதையிலிருந்து மற்றவர்களை வேறு வழியில் செலுத்துவதற்காக வீணான ஹதீஸை ஆதரிக்கின்றனர். (31:6)

 

பின்பற்ற வேண்டிய ஒரே சுன்னத்தாக கடவுளுடைய சுன்னத் இருக்க வேண்டும்.(17:77, 33:62, 48:23, 6:114)

“மனிதர் மற்றும் ஜின் சாத்தான்களில்” வேதம் வழங்கப்பட்டவருக்கு எதிரிகள் என்று விவரிக்கப்பட்ட சிலர், பொய்களை இட்டுக்கட்டி மேலும் அவற்றை வேதம் வழங்கப்பட்டவர் மீது கற்பிக்கின்றனர் என்று குர்ஆன் நமக்குத் தெரிவிக்கின்றது (6:112, 25:31). இதுதான் மிகச் சரியாக வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதுடைய மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்தது. ஹதீஸ் (வாய்மொழி) மேலும் சுன்னத் (செயல் முறை) ஆகியவை நூதனமாகக் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் வேதம் வழங்கப்பட்டவர் மீது கற்பிக்கப்பட்டது. ஹதீஸ் மற்றும் சுன்னத்துகள் சாத்தானிய புதுமைகள் ஆகும். ஏனெனில் அவைகள் :

 

[1] குர்ஆன் முழுமையானதாக, மிகச் சரியானதாக, முழுவதும் விவரிக்கப்பட்டதாக இருக்கின்றது, மேலும் மார்க்க வழிகாட்டலுக்கு ஒரே ஆதாரமாக அது இருக்க வேண்டும் (6:19, 38, 114 & 45:6-7), என்கிற தெய்வீக வலியுறுத்தல்களை எதிர்க்கின்றன,

 

[2] வேதம் வழங்கப்பட்டவருக்கு எதிராக அவதூறையும் மேலும் அவரை, குர்ஆனை ஆதரிக்காத ஒழுங்கீனமான கொடுங்கோலராகவும் சித்தரிக்கின்றன, மேலும்

 

[3] ஆதாரமற்ற மூட நம்பிக்கை, அறிவின்மை மேலும் நியாயமானதென்று வாதிட இயலாத முட்டாள்தனமான பரம்பரை வழக்கங்கள் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு பொய்யானக் கோட்பாடுகளை உருவாக்குகின்றன. குர்ஆனைத் தவிர எந்த மார்க்க உபதேசங்கள் தருவதிலிருந்தும் கடுமையான வார்த்தைகளால் வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மது தடுக்கப்பட்டிருந்தார் (69:38-48).

 

சில முஸ்லிம்கள்; “ஒரு ஹதீஸ் குர்ஆனுடன் ஒத்திருக்குமேயானால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்வோம் மேலும் அது குர்ஆனுக்கு முரண்பட்டால் நாங்கள் அதனை மறுத்து விடுவோம்” என்று சமரசம் செய்கின்றனர். இத்தகைய கூற்றுகள், இந்த மக்கள் குர்ஆன் “முழுமையானது, மிகச் சரியானது மற்றும் முற்றிலும் விவரிக்கப்பட்டது” என்கிற கடவுளின் உறுதிச் சொற்களின் மீது நம்பிக்கை கொள்வதில்லை என்பதை நிரூபிக்கின்றது. குர்ஆனைத் தவிர வேறு ஏதாவது ஒன்றிலிருந்து வழிகாட்டலை அவர்கள் தேடும் நேரத்தில் அது பார்ப்பதற்கு எவ்வளவு “சரியானதாக” இருந்தாலும் பொருட்டல்ல அவர்கள் சாத்தானின் பொறியில் விழுகின்றார்கள் (63:1 ஐப் பார்க்கவும்). ஏனெனில் அவர்கள் கடவுளின் வார்த்தையை ஏற்க மறுத்து மேலும் கடவுளைத் தவிர மற்றொரு தெய்வத்தை அமைத்துக் கொள்கின்றனர் (18.57). பின் இணைப்பு 33 ஐப் பார்க்கவும்.

 

குர்ஆனின் கணித அற்புதம், குர்ஆன்தான் நம்முடைய மார்க்க போதனைகளுக்கான ஒரே ஆதாரமாக இருக்க வேண்டும் என்பதற்கு கணித ரீதியிலான அத்தாட்சியை அளிக்கின்றது. சரியான 2 உதாரணங்கள் இதோ:

 

1. “ நாம் இந்தப் புத்தகத்தில் எந்த ஒன்றையும் விட்டுவிடவில்லை” என்று வசனம் 38 (19ஒ2)ல் உள்ளது. மேலும் 19 அரபி எழுத்துக்களைக் கொண்டதாகவும் உள்ளது (6:38).

 

2. “ அவர் இந்தப் புத்தகத்தை முழுவதும் விவரிக்கப்பட்டதாக இறக்கி அனுப்பியுள்ளார்” என்று வசனம் 114 (19ஒ6)ல் உள்ளது, மேலும் 19 அரபி எழுத்துக்களைக் கொண்டதாகவும் உள்ளது (6:114).

**********************************************