பின் இணைப்பு 18
குர் ஆன்: மீட்சிக்காக உங்கள் அனைவருக்கும் அவசியமானது

19:64 ல் பேசுகின்ற குர்ஆனின் வார்த்தைகள், “நாங்கள் உம்முடைய இரட்சகரின் கட்டளைகளுக்கு இணங்க இறங்கி வருகின்றோம். கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர் காலம் அவருக்கே உரியது. உம்முடைய இரட்சகர் ஒரு போதும் மறப்பதில்லை” என்று கூறுகின்றது. கடவுள் மறந்துவிடவில்லை, உதாரணத்திற்கு, எவ்வாறு உறங்க வேண்டும் என்று நமக்குக் கூறுவது (18:109, 31:27). இருப்பினும் ஹதீஸ் & சுன்னத் போன்ற இத்தகைய பொய்யான போதனைகளை இட்டுக் கட்டுபவர்கள், தங்களை பின்பற்றுபவர்களுக்கு எவ்வாறு உறங்குவது மேலும் எவ்வாறு உங்கள் நகங்களை வெட்ட வேண்டும் என்பதைக் கூட மார்க்க உபதேசங்களாகக் கொண்டு உத்தரவிட்டு வருகின்றனர். புனிதப் பள்ளியான மெக்காவிலும் மேலும் சட்ட விரோதமான “புனிதப் பள்ளியான” மதீனாவிலும் களைப்படைந்தவர்களாக வருகை புரிபவர்களைத் தேடிக் கண்டு பிடித்து மேலும் அவர்கள் தவறான பக்கம் படுத்து உறங்கினால் அவர்களை குச்சியால் அடிப்பதற்காக சில தனி நபர்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர்!

 

குர்ஆன் முழுமையானது, மிகவும் சரியானது, மற்றும் முழுவதும் விவரிக்கப்பட்டது (6:19, 38, 114, 115; 50:45) மேலும் குர்ஆனில் குறிப்பிட்டு ஏற்படுத்தப்படாத மார்க்கச் சட்டங்கள், இஸ்லாம் அதாவது அடிபணிதல் (42:21, 17:46) அல்லாத வேறொரு மார்க்கத்தை உண்டாக்குகின்றன என்று குர்ஆன் பிரகடனம் செய்கின்றது. உண்மையான நம்பிக்கையாளர்கள் குர்ஆனை, முழுகுர்ஆனை வேறெதையும் அல்லாது குர்ஆனை மட்டும் உறுதியாகக் கடைபிடிப்பார்கள். இந்த அடிப்படைக் கொள்கை குர்ஆனின் கணிதக் குறியீட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் குர்ஆனை மட்டுமே உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று சூரா 17ன் 46வது வசனம் பிரகடனம் செய்கின்றது. “மட்டும்” என்கிற வார்த்தை குர்ஆனில் 6 முறை வருகின்றது : 7:70, 17:46, 39:45, 40:12 & 84 மற்றும் 60:4. இவற்றில் 17:46ஐத் தவிர மற்ற அனைத்தும் “கடவுளைக்” குறிக்கின்றது. “கடவுள் மட்டும்” என்று குறிப்பிடுகின்ற சூராக்கள் மற்றும் வசனங்களின் எண்களை நாம் கூட்டும்போது, நாம் பெறுவது 361, 19ஒ19. இது 17:46 “குர்ஆன் மட்டும்” என குறிப்பிடுகின்றது என்பதை நிரூபிக்கின்றது.

**********************************************