பின் இணைப்பு 17
மரணம்

பெரும்பாலான மக்களுக்கு மரணம் ஒரு பெரிய மர்மமாகும். குர் ஆனின் மாணவர்களுக்கு அல்ல. மரணம் என்பது மிகச்சரியாக உறக்கத்தைப் போன்றது: கனவுகளைக் கொண்டு நிறைவடைகின்றது என்று நாம் அறிகின்றோம்(6:60, 40:46). மரணம் மற்றும் மீண்டும் உயிர்ப்பித்தலுக்கு இடைப்பட்ட கால அளவானது ஒரு இரவின் உறக்கத்தை போல கழிந்துவிடுகின்றது (2:259; 6:60; 10:45; 16:21; 18:11, 19,25; 30:35).

 

மரணத் தருவாயின் போது, ஆணாயினும், அல்லது பெண்ணாயினும் ஒவ்வொருவரும் அவர்களுடைய விதி சுவனமா அல்லது நரகமா என்பதை அறிந்துகொள்வார்கள். நம்ப மறுப்பவர்களுக்கு மரணம் ஒரு பயங்கரமான நிகழ்ச்சி ஆகும்; வானவர்கள் அவர்களுடைய ஆன்மாக்களைப் பறித்தவர்களாக அவர்களின் முகங்களின் மீதும் மேலும் முதுகுப் புறங்களிலும் அடிப்பார்கள் (8:50, 47:27, 79:1).

 

ஒரே சீராக, குர்ஆன் இரண்டு மரணங்களைப் பற்றிப் பேசுகின்றது. முதல் மரணமானது கடவுளின் பரிபூரணமான அதிகாரம் குறித்த ஒரு நிலையை எடுக்க நாம் தவறியபோது நேரிட்டுவிட்டது (பின் இணைப்பு 7). நாம் இந்த உலகில் பிறப்பது வரை அந்த முதல் மரணம் நீடித்திருந்தது. இரண்டாவது மரணம் இவ்வுலகில் நம்முடைய வாழ்வை முடிவடையச் செய்கின்றது (2:28, 22:66, 40:11).

 

குறிப்பு : பின் வருபவை, டாக்டர். ரஷாத் கலீஃபா அவர்களால் முழுவதும் நிறைவு செய்யப்பட்டு குறித்த நேரத்திற்கு முன்னதாக டிசம்பர் 1989ல் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்ட அடிபணிந்தவர்களின் மாதாந்திர செய்தித் தாளாகிய ஸப்மிட்டர்ஸ் பெர்ஸ்பெக்டிவ்- ன் பிப்ரவரி 1990 வெளியீட்டிலிருந்த முதன்மைக் கட்டுரையின் ஒரு மறுபதிப்பாகும். டாக்டர் கலீஃபா 1990-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி உயிர்த்தியாகம் செய்தார். அவருடைய ஆன்மா நேரடியாக சுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை

அவர்கள் நேரடியாக சுவனம் செல்கின்றனர்.


 

நம்பிக்கை கொண்டு நன்னெறியான செயல்கள் செய்வோருக்கு, அவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைப் பெறுவார்கள் என்று நற்செய்தி அளியும். அங்கிருக்கும் கனிகளைக் கொண்டு ஆகாரங்கள் வழங்கப்படும்போது “இதுதான் இதற்கு முன்னரும் எங்களுக்கு வழங்கப்பட்டது” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கு இதே மாதிரியான ஆகாரங்கள் கொடுக்கப்படும், மேலும் அங்கே அவர்கள் தூய்மையான துணைகளைப் பெற்றிருப்பார்கள், அவர்கள் அங்கே என்றென்றும் வசித்திருப்பார்கள். (2:25)

 

கடவுளின் பாதையில் கொல்லப்பட்டவர்களை மரணித்தவர்கள் என்று எண்ணாதீர்கள்; அவர்கள் அவருடைய வாழ்வாதாரங்களை அனுபவித்தவர்களாக, தங்களுடைய இரட்சகரிடத்தில் உயிரோடிருக்கின்றார்கள். (3:169)

 

கடவுள்-ன் காரணமாக கொல்லப் பட்டவர்களை, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனிருக்கின்றார்கள், ஆனால் நீங்கள் உணர மாட்டீர்கள். (2:154)

 

நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் கடவுள்-க்கும் உங்களுக்கு வாழ்வளிக்கக் கூடியதன்பால் தூதர் அழைக்கும் போது அவருக்கும் பதிலளிக்க வேண்டும். (8:24)

 

கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து, பின்னர் கொல்லபட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ அவர்களுக்கு கடவுள் நிச்சயமாக நல்லதொரு வாழ்வாதாரத்தை அளிப்பார். (22:58)

 

முதல் மரணத்திற்கு அப்பால் அவர்கள் மரணத்தைச் சுவைப்பதில்லை, மேலும் நரகத்தின் தண்டனையிலிருந்து அவர்களைக் கடவுள் காக்கின்றார். (44:56)

 

அவரிடம் “சுவனத்தில் நுழைவீராக” என்று கூறப்பட்டது. அவர், “என் இரட்சகர் என்னை மன்னித்து விட்டார் மேலும் என்னை கண்ணியப்படுத்தினார் என்பதை(பூமியிலுள்ள) என் சமூகத்தார் அறிய வேண்டும் என நான் விரும்புகின்றேன் என்று கூறினார்.”. (36:26-27)

பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமானியர்கள் 6:23)

3:81 மற்றும் 46:9ல் கூறப்பட்டுள்ளபடி கடவுளின் உடன்படிக்கைத் தூதர் புதிதாக எந்த ஒன்றையும் கொண்டு வரவில்லை. நான் பெற்று மேலும் உங்களிடம் அனுப்பிய ஒவ்வொன்றும் குர்ஆனில் ஏற்கனவே உள்ளதாகும். ஆயினும் குறிப்பிட்டதொரு நேரத்தில் வெளிப்படுத்தப் படுவதற்காக சர்வ வல்லமையுடையவரான கடவுளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல்கள் நிறைந்ததாக குர்ஆன் உள்ளது. மேலே காட்டப்பட்டுள்ள வசனங்களை பார்வையிட்டு மேலும் மகத்தான செய்தியாகிய; நன்னெறியாளர்கள் மரணிப்பதில்லை; என்பதை தெரிந்து கொள்ளும் நேரம் இது. பூமியின் மீது முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவிற்கு அவர்களுடைய வாழ்வு வரும்போது, மரணத்தை ஏற்படுத்தும் வானவர்கள் அவர்களுடைய உலகிற்குரிய உடல்களை விட்டு விட்டு ஆதாம் மற்றும் ஏவாள் ஒரு காலத்தில் வாழ்ந்திருந்த சுவனத்திற்கு செல்வதற்காக அழகிய முறையில் அவர்களை அழைப்பார்கள். ஆதாம் மற்றும் ஏவாள் காலம் முதல் சுவனமானது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது. கடவுள் நம்பிக்கையாளர்களின் ஆன்மாக்களை “எனது சுவனத்திற்குள் நுழையுங்கள்” என்று அழைக்கின்றார் என்பதை 89:27-30 லிருந்து நாம் அறிகின்றோம்.
என் சொந்த அனுபவம்
3:81ற்கு இணங்க வேதம் வழங்கப்பட்டவர்களுடனான கடவுளின் உடன்படிக்கை நிறைவடைந்த பொழுது, நான் நன்னெறியாளர்கள் இப்பொழுது வாழும் சுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டேன் (4:69). எனது உடல் இங்கு பூமியின்மீது கீழே இருந்த நேரம் நான் ஆதாம் & ஏவாளின் அதே சுவனத்தில் இருந்தேன்.
நம்ப மறுப்பவர்கள்
நம்ப மறுப்பவர்களைப் பொறுத்தவரை, மரணத் தருவாயின் பொழுது தாங்கள் நரகத்திற்காக விதிக்கப்பட்டு விட்டதை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். வானவர்கள் அவர்களின் முகங்கள் மற்றும் முதுகுப் புறங்களின் மீது அடிப்பார்கள் (8:50 & 47:27), அவர்களுடைய ஆன்மாக்களை வெளியேற்றும்படி உத்தரவிடுவார்கள் (6:93), அதன் பிறகு “அவர்களுடைய ஆன்மாக்களை பறிப்பார்கள்” (79:1). நம்ப மறுப்பவர்கள் 2 மரணங்களை அனுபவிப்பார்கள் என்று குர்ஆன் கற்பிக்கின்றது (2:28&40:11). தீர்ப்பு நாள் வரை நிலைத்திருக்கக் கூடிய தொரு தொடர்ச்சியான தீய கனவில் இரவும், பகலும் நரகத்தைப் பார்ப்பவர்களாக (40:46) ஒன்றுமில்லாத நிலையில் மரணத்தில் ஆழ்த்தப்படுவார்கள். நரகம் இதுவரையில் உருவாக்கப் படவில்லை (40:46, 89:23).
சந்தேகமின்றி, நன்னெறியாளர்கள் புறப்படுகின்றார்கள்
பூமியின் மீதுள்ள மக்களைப் பொறுத்தவரை, நன்னெறியாளர்கள் “இறக்கின்றார்கள்”. நன்னெறியாளர்கள் எளிதாக தங்களுடைய உடல்களை விட்டு விட்டு சுவனத்திற்கு செல்வதை மக்கள் உணரமாட்டார்கள். மேலே காட்டப்பட்டுள்ள வசனங்கள் சுயமாக விளக்கம் தருபவைகளாகும். அவை நன்னெறியாளர்கள் ஒரு தடவை மட்டுமே மரணிக்கின்றனர் - அந்த ஒரு மரணத்தையும் நாம் அந்த மகத்தான சச்சரவின் ஒரு விளைவாக அனுபவித்து விட்டோம் (38:69) என்று நமக்குக் கூறுகின்றது. நன்னெறியாளர்கள், அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இன்னும் பூமியின் மீது வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் சுவனத்திற்கு செல்கின்றனர் என்பதற்கான மிகச் சிறந்த சான்றை 36:26-27ல் நாம் காண்கின்றோம். ஹவாய்த் தீவிற்குச் சென்று அங்கு நமக்காக காத்திருப்பதைப் போல. கூடுதலாக 16:32 & 6:60-62 ஐயும் பார்க்கவும்.
**********************************************