பின் இணைப்பு 16
உணவு சம்பந்தமான தடைகள்

 

குர்ஆனில் குறிப்பிட்டுத் தடைசெய்யப்படாத எந்த ஒன்றையும் தடை செய்பவர்களுக்கு எதிராக கடவுள் மிக அதிகமாகக் கோபப்படுகின்றார் என்று குர்ஆன் போதிக்கின்றது (16:112-116). குர்ஆனில் குறிப்பாகச் சொல்லப்படாத எந்தத் தடைகளையும் ஆதரிப்பதானது இணைத் தெய்வ வழிபாட்டிற்குச் சமமானதாகும் (6:142-152). இத்தகைய தடைகள் கடவுளைத் தவிர வேறு சில தெய்வங்களை சுட்டிக் காட்டுவதாக ஆகும். நீங்கள் கடவுளை மட்டும் வழிபடுபவர்களாக இருந்தால் நீங்கள் அவருடைய போதனைகளை மட்டுமே உறுதியாக கடைபிடியுங்கள் மேலும் அவரால் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட கட்டளைகள் மற்றும் தடைகளை கண்ணியப்படுத்துங்கள்.

 

உணவு சம்பந்தமான தடைகளின் முழுமையான குறிப்பு குர்ஆனில் 6:145-146ல் மிகவும் நன்றாக விளக்கிச் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரு வசனங்களிலிருந்து கடவுள் இறைச்சியைத் தடை செய்யும்போது, மற்றெதுவுமின்றி இறைச்சியை அவர் தடைசெய்கின்றார், மேலும் அவர் கொழுப்பைத் தடை செய்யும் போது அதையேதான் அவர் குறிப்பிட்டுத் தடை செய்கின்றார் என்பதை நாம் அறிகின்றோம். இவ்விரு வசனங்களும் பன்றியின் இறைச்சிதான் தடை செய்யப்பட்டது, அதன் கொழுப்பு அல்ல என்று நமக்குத் தெரிவிக்கின்றது. வெளிப்படையாக பெரும்பாலான நாடுகளில் பன்றியின் கொழுப்பானது வேகவைத்துச் சுடப்படும் பொருட்கள் மற்றும் வேறு உணவுத் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுவதை கடவுள் அறிந்தே இருக்கின்றார், மேலும் இத்தகைய பயன்பாடுகள் உணவுகளை ஹராமாக (தடை செய்யப்பட்டதாக) ஆக்கி விடுவதில்லை. குர்ஆன் குறிப்பிட்ட நான்கு உணவுகளைத் தடை செய்கின்றது, (2:173, 5:3,6: 142-145 மற்றும் 16:112) :

 

“எனக்கு கொடுக்கப்பட்ட வெளிப்பாடுகளில்

எந்த ஒரு உணவும் உண்ணக்கூடிய எவருக்கும் இவற்றைத்

தவிர தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை,

(1) இறந்தவற்றின் இறைச்சி

(2) ஓடுகின்ற இரத்தம்,

(3) பன்றிகளின் இறைச்சி ஏனெனில் அது அசுத்தமாக இருப்பதால், மேலும்

(4) கடவுள் அல்லாத மற்றவர்களுக்கு இறை நிந்தனையாக

அர்ப்பணிக்கப்பட்ட பிராணிகளின் இறைச்சி,” என்று கூறுவீராக. வேண்டுமென்றோ அல்லது கெட்ட

எண்ணத்துடனோ இல்லாத நிலையில் ஒருவர் (இவற்றை உண்பதற்கு) நிர்பந்திக்கப்பட்டால், பின்னர்

உங்களுடைய இரட்சகர் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.                                                                                                                                       [6:145]

****************************