பின் இணைப்பு 15
மார்க்கக் கடமைகள்: கடவுளிடமிருந்து ஒரு பரிசு

 

14:40ல், ஆப்ரஹாம் கடவுளை இறைஞ்சிப் பிரார்த்தித்த போது, அவர் செல்வத்தையோ அல்லது ஆரோக்கியத்தையோ கேட்கவில்லை; அவர் இறைஞ்சிக் கேட்ட கொடை என்னவென்றால்: “கடவுளே தயவுசெய்து, தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்கின்ற (ஸலாத்) ஒருவராக என்னை ஆக்குவீராக.” என்பதே. கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மார்க்கக் கடமைகள் யாவும் உண்மையில் அவரிடமிருந்து ஒரு பெரும் பரிசாகும். இவை நம்முடைய ஆன்மாக்களின் வளர்ச்சி மற்றும் அபி விருத்திக்குத் தேவையான ஊட்டத்தை தருகின்றன. இத்தகைய ஊட்டம் இல்லாமல், தீர்ப்பு நாளில் கடவுளின் நேரடி வருகையின் போது அவருடைய அளவற்ற சக்தியின் முன்பு நம்மால் ஜீவித்திருக்க இயலாது. கடவுளின் மீது கொள்கின்ற நம்பிக்கை மட்டுமே நம்முடைய மீட்சிக்கு உத்தரவாதம் ஆகி விடாது; நாம் நம்முடைய ஆன்மாக்களுக்கு கட்டாயமாக ஊட்டமளிக்கவும் வேண்டும் (6:158, 10:90-92). இன்னும் கூடுதலாக, கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மார்க்கக் கடமைகளைக் கடைப்பிடிப்பது தான் உறுதிப்பாட்டை அடைவதற்கான நம்முடைய உபாயங்களாக இருக்கின்றன என்று 15:99 விளக்குகின்றது : “உறுதிப்பாட்டை அடைவதற்காக உங்களுடைய இரட்சகரை வழிபடுங்கள்.”

தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்)

 

தினமும் ஐந்து நேரத் தொடர்புத் தொழுகைகள் நம்முடைய ஆன்மாவிற்கு மிக முக்கியமான உணவுகளாகும். தொடர்புத் தொழுகைகளைக் கடைப்பிடிக்காத நிலையில், நன்னெறியுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஒரு ஆன்மாவானது, சிறிதளவு முன்னேற்றமும் அபிவிருத்தியும் அடையக் கூடிய அதே சமயம், இந்த நிலை வழக்கமான ஆகாரங்களில்லாது சிற்றுண்டியை உண்டு உயிர் வாழ்வது போலாகும்.

 

கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட பிரத்யேகமான அரபி வார்த்தைகளை கூறுவதன் மூலம் கடவுளுடன் நாம் தொடர்பு கொள்ள இயலும் என்பதை 2:37லிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம். சூரா 1, திறவுகோல், கணிதரீதியாகத் தொகுக்கப்பட்ட ஒலிகளின் தொகுப்பாகும். இது நமக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள கதவைத்திறக்கின்றது :

 

1 அதிகாலைத் தொழுகையை சூரிய உதயத்திற்கு முன்னதாக இரண்டு மணிநேரத்திற்குள் கடைப் பிடிக்க வேண்டும் (11:114, 24:58).

 

2. நடுப்பகல் தொழுகையானது நடுப்பகலில் சூரியன் அதன் உச்சியிலிருந்து சாயும் பொழுது தொழ வேண்டியதாகும் (17:78).

 

3. பிற்பகல் தொழுகையை சூரிய அஸ்தமனத்திற்கு முன்னர் 3-4 மணிநேரத்திற்குள் கடைப்பிடித்துக் கொள்ளலாம் (2:238).

 

4. சூரிய அஸ்தமனத்தொழுகை, சூரிய அஸ்தமனம் ஆன பிறகு தொழ வேண்டியதாய் இருக்கின்றது (11:114).

 

5. இரவுநேரத் தொழுகையை வானிலிருந்து அந்தி வெளிச்சம் மறைந்த பிறகு கடைப்பிடித்துக்கொள்ளலாம் (24:58).

 

வெள்ளிக்கிழமை நடுப்பகல் கூட்டுத்தொழுகையானது அடிபணிந்த ஆண் மற்றும் பெண் ஒவ்வொருவரின்மீதும் கட்டாயமான கடமையாகும் (62:9). வெள்ளிக்கிழமைக் கூட்டுத்தொழுகையைக் கடைப்பிடிக்கத்தவறுவது பெரும்பாவமாகும்.

 

ஒவ்வொரு தொழுகையும் அந்தத் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய நேரம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்தத் தொழுகைக்குரிய நேரம் வருகின்ற காலக்கட்டத்திற்குள் கடைப்பிடித்தால் தான் அது செல்லத்தக்கதாகும். ஒருமுறை தவறவிடப்பட்டால், கொடுக்கப்பட்டத் தொடர்புத் தொழுகையானது தவறவிடப்பட்டதாகவே ஆகும் அதை ஈடு செய்ய இயலாது; தவறவிட்டவர் வருந்தித்திருந்தவும் பாவ மன்னிப்புக்கேட்கவும் மட்டுமே இயலும். இந்த ஐந்து நேரத் தொழுகைகள் முறையே 2,4,4,3 மற்றும் 4 அளவைகளைக் (ரகஅத்கள்) கொண்டிருக்கின்றது.

 

ஸலாத் ஆப்ரஹாம் மூலமாக ஏற்கனவே நிலை நாட்டப்பட்டது என்பதற்கான சான்று 8:35, 9:54, 16:123 & 21:73 ஆகியவற்றில் காணப்படுகின்றது. இஸ்லாத்தின் மிக முக்கியமான இந்தக் கடமையானது, முஸ்லிம்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு இணைத்தெய்வ வழிபாடு செய்வதில் ஒரு பயிற்சிமுறையாய் ஆகிவிட்டது எனும் அளவிற்கு இந்த தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) மிகக் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய தொடர்புத் தொழுகைகள் கட்டாயம் கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகின்ற போதிலும் (20:14,39:3, 45), இன்றைய முஸ்லிம்கள் அவர்களுடைய தொழுகையில் “முஹம்மதையும் அவருடைய குடும்பத்தாரையும்” மற்றும் “ஆப்ரஹாமையும் அவருடைய குடும்பத்தாரையும்” நினைவு கூர்வதை வலியுறுத்துகின்றனர். இந்த செயல், தொழுகைகளை பயனற்றதாய் மற்றும் செல்லுபடியாகாததாய் மாற்றி விடுகின்றது. (39:65).

 

பின்வரும் பிரதானப் பகுதி, தொடர்புத் தொழுகைகளை உறுதி செய்யும் அற்புதங்கள் சம்பந்தமானது, இது சப்மிட்டர்ஸ் பெர்ஸ்பெக்டிவ் பத்திரிகையின் ஜனவரி 1990 பிரதியிலிருந்து (வழக்கமான மற்றும் பிரத்யேகப் பிரதி இணைந்தது), டாக்டர். ரஷாத் கலீஃபா அவர்கள் எழுதியபடி எடுத்து எழுதப்பட்டுள்ளது.

அச்சுறுத்துகின்ற கணித அற்புதம் 5 தொடர்புத் தொழுகைகள் அனைத்தையும் உறுதி செய்கின்றது

 

(1) கடவுளுடன் தொடர்புகொள்வதற்கு (ஸலாத்), சூரா 1 நமக்கு கடவுளின் பரிசாகும். சூரா எண்ணையும் வசனங்களின் மொத்த எண்ணிக்கையும் ஒன்றன் பின் ஒன்றாய் எழுதுங்கள், நீங்கள் பெறுவது 17, இது தினமும் ஐந்து நேரத் தொழுகைகளிலுள்ள அளவைகளின் (ரகா ‘அத்) மொத்த எண்ணிக்கையாகும்.

 

(2) நாம் சூரா எண்ணையும், அதனைத் தொடர்ந்து சூராவிலுள்ள ஒவ்வொரு வசனத்தின் எண்ணையும் எழுதிக் கொள்வோம். நமக்குக் கிடைப்பது இதுதான் :

 

1 1 2 3 4 5 6 7 இந்த எண் 19ன் பெருக்குத் தொகையாகும்.

 

(3) இப்பொழுது, நாம் ஒவ்வொரு வசன எண்ணையும் எடுத்து விட்டு அந்த இடத்தில் வசனத்திலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை எழுதிக் கொள்வோம். நமக்குக் கிடைப்பது இதுதான்:

 

1 19 17 12 11 19 18 43 இதுவும் கூட 19ன் பெருக்குத்தொகையாகும். கோட்பாடு ரீதியாக, ஒருவர் சூரா 1ன் எழுத்துக்களை மாற்றி விட்டு, மேலும் இப்பொழுதும் அதே எண்ணிக்கையுள்ள எழுத்துக்களை வைத்திடலாம். ஆன போதிலும் பின்வரும் கணித அற்புதம் அதற்கான சாத்தியக் கூற்றை நீக்கி விடுகிறது. ஏனெனில் ஒவ்வொரு தனி எழுத்தினுடைய எழுத்தெண் மதிப்பும் கவனத்தில் எடுக்கப்படுகின்றது. அது இங்கே உள்ளது :

 

(4) நாம் ஒவ்வொரு வசனத்தினுடைய எழுத்தெண் மதிப்பையும் சேர்த்துக்கொள்வோம், மேலும் அதனை ஒவ்வொரு வசனத்தினுடைய எழுத்துக்களின் எண்ணிக்கையை பின் தொடருமாறு எழுதிக்கொள்ளலாம் :

 

1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009 இதுவும் கூட 19ன் பெருக்குத் தொகையாகும்.

 

(5) இப்பொழுது, நாம் ஒவ்வொரு வசனத்தினுடைய எண்ணையும் சேர்த்துக் கொள்வோம், அதனைத் தொடர்ந்து அந்த வசனத்திலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, பின்னர் அந்த வசனத்தின் எழுத்தெண் மதிப்பு ஆகியவை பின்தொடருமாறு எழுதிக் கொள்வோம். நமக்குக் கிடைப்பது இதுதான் :

 

1 1 19 786 2 17 581 3 12 618 4 11 241 5 19 836 6 18 1072 7 43 6009 இந்த எண்ணும் 19ன் பெருக்குத் தொகையாகும்.

 

(6) ஒவ்வொரு வசனத்தினுடைய எழுத்தெண் மதிப்பிற்கு பதிலாக, நாம் சூரா 1ல் உள்ள ஒவ்வொரு தனித்தனி எழுத்தினுடைய எழுத்தெண் மதிப்பை எழுதிக் கொள்வோம். மெய்யாகவே அச்சுறுத்துகின்ற இந்த அற்புதமானது, முடிவாகக் கிடைக்கின்ற 274 இலக்கங்களைக் கொண்ட அந்த நீண்ட எண்ணும் 19ன் பெருக்குத் தொகையாகவே உள்ளது என்று காட்டுகின்றது. அல்லாஹு அக்பர்.

 

1 7 1 19 2 60 40 1 30 30 5 1 30 200 8 40 50 1 30 200 8 10 40 2 17 ... 50

 

இந்த எண் சூரா எண்ணைக் கொண்டு ஆரம்பிக்கிறது, அதனைத் தொடர்ந்து சூராவிலுள்ள வசனங்களின் எண்ணிக்கை, அதனைத் தொடர்ந்து வசன எண், அதனைத் தொடர்ந்து இந்த வசனத்திலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, அதனைத் தொடர்ந்து இந்த வசனத்திலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களின் எழுத்தெண் மதிப்பு, அதனைத் தொடர்ந்து அடுத்த வசனத்தின் எண், அதனைத் தொடர்ந்து இந்த வசனத்திலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, அதனைத் தொடர்ந்து இந்த வசனத்தின் ஒவ்வொரு எழுத்தின் எழுத்தெண் மதிப்பு மேலும் சூராவின் முடிவு வரையிலும் இவ்வாறே எழுதிக் கொள்ள வேண்டும். இவ்விதமாக, கடைசி அங்கமாக இருப்பது 50, “ன” எழுத்தின் மதிப்பு (கடைசி எழுத்து).

 

திறவுகோல், சூரா 1ன் தன்மைகள்
வசன எண். எழுத்துக்களின் எண்ணிக்கை எழுத்தெண் மதிப்பு
1 19 785
2 17 581
3 12 618
4 11 241
5 19 836
6 18 1072
7 43 6009
(7) மிக நீண்ட எண்களை நான் இங்கே எழுத இயலாததால், நாம் ஒவ்வொரு வசனங்களின் எண், அதனைத் தொடர்ந்து வசனத்திலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை, அதனைத் தொடர்ந்து வசனத்திலுள்ள ஒவ்வொரு தனித்தனி எழுத்துக்களின் எழுத்தெண் மதிப்பு ஆகியவற்றிற்குப் பதிலாக, இந்தக் குறியீட்டை (*) ஈடாக வைப்போம். நாம் 1ம் சூராவின் எண்ணை எழுதி, அதனைத் தொடர்ந்து அந்த சூராவிலுள்ள வசனங்களின் எண்ணிக்கையை எழுதினோமேயானால் நமக்குக் கிடைப்பது 17, இது தினமும் ஐந்து நேரத்தொழுகைகளினுடைய அளவைகளின் (ரகஅத்கள்) மொத்த எண்ணிக்கையாகும். இந்த எண் 17ற்கு அடுத்து, முதல் தொழுகையினுடைய ரக அத்துகளின் எண்ணிக்கை (2), அதனை தொடர்ந்து இரண்டு (*) குறியீடுகள், அதனை தொடர்ந்து இரண்டாவது தொழுகையினுடைய ரக அத்துகளின் எண்ணிக்கை (4), அதனை தொடர்ந்து நான்கு (*) குறியீடுகள் என இவ்வாறே தொடர்ந்து எழுதிக் கொள்ளுங்கள். முடிவாகக் கிடைப்பது 19ன் பெருக்குத் தொகையாக அமைகின்ற மிக நீண்ட எண் மட்டுமல்ல, இந்த எண்ணினுடைய இலக்கங்களின் எண்ணிக்கை 4636 (19ஒ244) ஆகும்.... இந்த முடிவு பாதிக்காதவாறு, சூரா 1ன் உடைய வேறு ஏதாவது கூற்றைக் கொண்டு இந்தக் குறியீட்டிற்கு (*) பதிலாக ஈடு செய்யலாம் என்பதை தயவு செய்து கவனியுங்கள். அவையனைத்துமே 19ன் பெருக்குத் தொகைகளையே கொடுக்கின்றன. உதாரணத்திற்கு சூரா எண்(1), அதனைப்பின் தொடர்ந்து வசனங்களின் எண்ணிக்கை (7), அதனைப் பின் தொடர்ந்து சூரா 1ல் உள்ள எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை (139), அதனைத் தொடர்ந்து மொத்த சூராவினுடைய மொத்த எழுத்தெண் மதிப்பு (10143), ஆகியவற்றைக் கொண்டமைந்த இது “திறவுகோல்”ன் ஒரு சிறிய வர்ணணையாகும். முடிவாகக்கிடைக்கக்கூடிய இந்த எண்ணைக் (1713910143) கூட இந்தக் குறியீடாக (*) வர்ணிக்கலாம்.

17 2 [*] [*] 4 [*] [*] [*] [*] 4 [*] [*] [*] [*] 3 [*] [*] [*] 4 [*] [*] [*] [*]

வெள்ளிக்கிழமைத் தொழுகைகளை உறுதிசெய்தல்


 

(8) வெள்ளிக்கிழமைத் தொழுகை இரண்டு மார்க்க உரைகளையும் இரண்டு ரக அத்களையும் (மொத்தம் 4 அளவைகள்) கொண்டு அமைந்திருப்பதால், நாம் வெள்ளிக்கிழமையன்று 15 முறை மட்டுமே “திறவுகோல்” ஐ ஓதுகின்றோம், மற்ற நாட்களுடன் ஒப்பிடும்போது 17 முறை ஓதுகின்றோம். எண்குறிப்பு (7)ல் காட்டப்பட்டுள்ள அந்த நீண்ட எண்ணில் நாம் 17ஐ எடுத்துவிட்டு 15ஐ வைத்துக் கொண்டு மேலும் நடுப்பகல் தொழுகையிலிருந்து இரண்டு “திறவுகோல்”களை நீக்கிவிட்டால், இப்பொழுதும் நமக்குக்கிடைப்பது 19ன் பெருக்குத் தொகையேயாகும். இது வெள்ளிக்கிழமைத் தொழுகை, நடுப்பகலில், 2 “திறவுகோல்”களுடன் அமைந்துள்ளது என்பதை உறுதிசெய்கின்றது. கீழே காட்டப்பட்டுள்ள நீண்ட எண் வெள்ளிக்கிழமையன்று தொழக்கூடிய ஐந்து வேளைத் தொழுகைகளையும் வர்ணணை செய்கின்றது; இதுவும் 19ன் பெருக்குத் தொகையேயாகும்.(8) வெள்ளிக்கிழமைத் தொழுகை இரண்டு மார்க்க உரைகளையும் இரண்டு ரக அத்களையும் (மொத்தம் 4 அளவைகள்) கொண்டு அமைந்திருப்பதால், நாம் வெள்ளிக்கிழமையன்று 15 முறை மட்டுமே “திறவுகோல்” ஐ ஓதுகின்றோம், மற்ற நாட்களுடன் ஒப்பிடும்போது 17 முறை ஓதுகின்றோம். எண்குறிப்பு (7)ல் காட்டப்பட்டுள்ள அந்த நீண்ட எண்ணில் நாம் 17ஐ எடுத்துவிட்டு 15ஐ வைத்துக் கொண்டு மேலும் நடுப்பகல் தொழுகையிலிருந்து இரண்டு “திறவுகோல்”களை நீக்கிவிட்டால், இப்பொழுதும் நமக்குக்கிடைப்பது 19ன் பெருக்குத் தொகையேயாகும். இது வெள்ளிக்கிழமைத் தொழுகை, நடுப்பகலில், 2 “திறவுகோல்”களுடன் அமைந்துள்ளது என்பதை உறுதிசெய்கின்றது. கீழே காட்டப்பட்டுள்ள நீண்ட எண் வெள்ளிக்கிழமையன்று தொழக்கூடிய ஐந்து வேளைத் தொழுகைகளையும் வர்ணணை செய்கின்றது; இதுவும் 19ன் பெருக்குத் தொகையேயாகும்.

15 1 2 [*] [*] 2 4 [*] [*] 3 4 [*] [*] [*] [*] 4 3 [*] [*] [*] 5 4 [*] [*] [*] [*]

“திறவு கோல்” (அல் ஃபாத்திஹா) கட்டாயம் அரபியில்தான் ஓதவேண்டும்


 

(9) குர்ஆனிலுள்ள முதல் சூரா பூமியிலுள்ள பெரும் கணிதமேதைகளுக்கெல்லாம் சவாலாகவும் வாயடைத்துப்போகும் விதமாகவும் கணித ரீதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. “திறவுகோல்”, சூரா 1ஐ நம்முடையத் தொடர்புத் தொழுகைகளின் போது நாம் ஓதும்போது, இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒன்று நிகழ்கின்றது, மேலும் நம்முடைய படைப்பாளருடன் நாம் தொடர்பு கொள்கின்றோம் எனும் உண்மையை இப்பொழுது நாம் சரியாக உணர்ந்து கொள்கின்றோம். இதன் விளைவாகக் கிடைப்பது முழுமையான சந்தோஷம், இப்பொழுதும் எப்பொழுதும், சர்வ வல்லமையுடையவரான நம்முடைய படைப்பாளரை தினமும் ஐந்துவேளை தொடர்புகொள்வதன் மூலம், நாம் கடவுளைச் சந்திக்கும் அந்தப் பெரிய நாளுக்கான முன்னேற்பாடுகளாக நம்முடைய ஆன்மாக்களுக்கு நாம் ஊட்டமளித்து அபிவிருத்தி செய்கின்றோம்.தங்களுடைய ஆன்மாக்களுக்கு ஊட்டமளித்து அபிவிருத்தி செய்பவர்களால் மட்டுமே சர்வ வல்லமையுடையவரான கடவுளின் நேரடி வருகையினை எதிர்கொள்ளவும் சந்தோஷம் கொள்ளவும் இயலும்.

அனைத்து நாடுகளையும் சேர்ந்த அடிபணிந்தவர்கள் அனைவரும், கடவுளால் எழுதப்பட்டு மேலும் அவருடன் நாம் தொடர்பு கொள்வதற்காக கொடுக்கப்பட்ட “திறவுகோல்” உடைய வார்த்தைகளை ஓதுகின்றோம் (2:37).

எடிப்யுக்ஸலின் கண்டுபிடிப்பானது “திறவுகோல்” உடைய அச்சுறுத்தும் தன்மையை இன்னும் அதிகமாக்கு கின்றது. மேலும் இதை அரபியில் தான் கட்டாயம் ஓத வேண்டும் என்பதை தெளிவாக பிரகடனம் செய்கின்றது. நீங்கள் “திறவுகோல்” ஐ அரபியில் ஓதும்போது உங்களுடைய உதடுகள் மிகச்சரியாக 19 முறை ஒன்றையொன்று தொட்டுக் கொள்கின்றன.

 

எப்பொழுதெல்லாம் ‘ப’ மற்றும் ‘ம’ எழுத்துக்கள் வருகின்றதோ அப்போது உங்கள் உதடுகள் ஒன்றையொன்று தொட்டுக் கொள்கின்றன. இதில் 4 “ப” மற்றும் 15 “ம” உள்ளன, மேலும் இவற்றைக் கூட்டிட 19 ஆகின்றது. 4 “ப” வின் எழுத்தெண் மதிப்பு 4ஒ2 = 8 ஆகும். மேலும் 15 “ம” வின் எழுத்தெண் மதிப்பு 15ஒ40 = 600 ஆகும். 4 “ப” மற்றும் 15 “ம” உடைய மொத்த எழுத்தெண் மதிப்பு 608, இது 19ஒ32 ஆகும்.

வார்த்தை

எழுத்து

மதிப்பு

1

பிஸ்ம்

2

2

பிஸ்ம்

40

3

ரஹ்மான்

40

4

ரஹீம்

40

5

அல் ஹம்து

40

6

ரப்

2

7

ஆலமீன்

40

8

ரஹ்மான்

40

9

ரஹீம்

40

10

மாலிக்

40

11

யவ்ம்

40

12

நா‘புது

2

13

முஸ்தகீம்

40

14

முஸ்தகீம்

40

15

அன் ‘அம்த

40

16

அலைஹிம்

40

17

மஹ்தூப்

40

18

மஹ்தூப்

2

19

அலைஹிம்

40

608 (19x32)

தினசரி 5 வேளைத் தொழுகைகளை உறுதி செய்தல், குனிதல் (ருக் கூ‘), சிர வணக்கங்கள் (ஸுஜூத்) மற்றும் தஷஹ்ஹத் ஆகியவற்றின் எண்ணிக்கை

 

(10) பொதுவான சவால்களில் ஒன்று.....என்னவென்றால் : “குர்ஆன் முழுமையானதாகவும் விவரிக்கப்பட்டதாகவும் இருந்தால் (6:19, 38 & 114ல் கோரியுள்ள படி) தொடர்புத் தொழுகைகளினுடைய (ஸலாத்) விபரங்கள் எங்கே?” என்பதுதான். இந்த மக்கள் இந்தக் கேள்வியைக் கேட்பது ஏனென்றால் தொடர்புத் தொழுகைகள் ஆப்ரஹாமிடமிருந்து வந்தவை (21:73 & 22 : 78) என குர்ஆன் நமக்குத் தெரிவிக்கிறது என்பதை இவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். நம் தொழுகைகளின் எண்களை அவற்றிலுள்ள குனிதல்கள், சிர வணக்கங்கள் மற்றும் தஷஹ்ஹத்கள் ஆகியவற்றுடன் எழுதினால், நமக்குக்கிடைப்பது :

1 1 2 2 4 1 2 4 4 8 2 3 4 4 8 2 4 3 3 6 2 5 4 4 8 2s
இந்த நீண்ட எண் 5 நேரத்தொழுகைகளில் நாம் ஓதக்கூடிய சூரா எண் (1) அதனைத் தொடர்ந்து முதல் தொழுகையின் எண் (1), பின்னர் இந்தத் தொழுகையில் நாம் ஓதக் கூடிய “திறவுகோல்”களின் எண்ணிக்கை (2), பின்னர் குனிதல்களின் (ருக்கூ‘) எண்ணிக்கை (2), பின்னர் கீழே சிர வணக்கங்களின் எண்ணிக்கை (4), பின்னர் தஷஹ்ஹத்களின் எண்ணிக்கை (உட்கார்ந்த நிலையில்) (1), பின்னர் இரண்டாவது தொழுகையின் எண்ணிக்கை (2), பின்னர் இரண்டாவது தொழுகையில் நாம் ஓதக்கூடிய “திறவுகோல்”களின் எண்ணிக்கை (4), பின்னர் இந்தத் தொழுகையிலுள்ள குனிதல்களின் (ருக்கூ‘) எண்ணிக்கை (4), பின்னர் சிர வணக்கங்களின் எண்ணிக்கை (8) பின்னர் தஷஹ்ஹத்களின் எண்ணிக்கை (2), பின்னர் மூன்றாவது தொழுகையின் எண் (3), மேலும் இவ்வாறே கடைசி நேரத் தொழுகை வரையிலுமுள்ள எண்களைக் கொண்டு அமைந்திருக்கின்றது. இந்த நீண்ட எண் 19ன் பெருக்குத் தொகையாகும், மேலும் இது தொழுகைகளினுடைய மிகச் சிறிய விபரங்களையும் உறுதி செய்கின்றது, ருக்கூ‘, ஸுஜூத் மற்றும் தஷஹ்ஹத் ஆகியவற்றின் எண்ணிக்கைகளையும் கூட உறுதி செய்கின்றது.
கடமையான தர்மம் (ஜகாத்)

ஜகாத் “அறுவடை செய்யும் அந்த நாளில்” (6:141) கட்டாயம் கொடுக்கப்பட்டாக வேண்டும். எப்பொழுதெல்லாம் நாம் “நிகர வருமானம்” பெறுகின்றோமோ, அப்பொழுதெல்லாம் நாம் 2.5ரூ கட்டாயமாக தனியே பிரித்து அதனைப் பெற்றுக்கொள்பவர்களிடம் - பெற்றோர்கள், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள் மற்றும் நாடோடிகள் என இந்த வரிசைப் படி அதனைக் கொடுக்க வேண்டும் (2:215). ஜகாத்தினுடைய ஜீவாதாரமான முக்கியத்துவம் கடவுளின் சட்ட விதியில் பிரதிபலிக்கின்றது : “என்னுடைய கருணை அனைத்து விசயங்களையும் சூழ்ந்திருக்கின்றது, ஆனால் நான் குறிப்பாக அதனை ஜகாத் கொடுக்கும் நன்னெறியாளர்களுக்கு வழங்குவேன்” (7:156).

 

ஏதெனும், வருமானத்தை நாம் எப்பொழுதெல்லாம் பெறுகின்றோமோ அப்பொழுதெல்லாம் ஜகாத்தை மிகக் கவனமாக கணக்கிட்டு ஒழுங்கான முறையில் கொடுத்துவிட வேண்டும். அரசாங்க வரிகள் கழிக்கப்படவேண்டும், ஆனால் கடன்கள், அடமானம் மற்றும் வாழ்க்கைக்கான செலவுகள் ஆகியவற்றை கழிக்கக்கூடாது. ஒருவர் தேவையுடைய நபர்களை அறியாது போனால், அவனோ அல்லது அவளோ ஏழை மக்களுக்கு தனிப்பட்ட முறையில் உதவிக் கொண்டிருக்கும் மசூதிக்கோ அல்லது தருமம் செய்யக் கூடிய சங்கங்களுக்கோ ஜாகத்தைக் கொடுத்துவிடலாம். மசூதிகளுக்கோ அல்லது மருத்துவ மனைகளுக்கோ அல்லது சங்கங்களுக்கோ கொடுக்கப்பட்ட தருமங்கள் ஜகாத்தாக கருதப்பட மாட்டாது.

நோன்பு
நோன்பு பற்றிய முழுவிபரமும் 2:183 - 187ல் கொடுக்கப்பட்டுள்ளது.
புனிதப்பயணம்: ஹஜ் & ‘உம்ரா

போதுமான அளவு செல்வம் பெற்றிருப்பவர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு முறை ஹஜ் மற்றும் ‘உம்ரா விதிக்கப்பட்டிருக்கின்றது. புனிதப்பயணம் கடவுளிடம் அடிபணிவதில் ஆப்ரஹாமின் பின்பற்றத்தக்க முன்மாதிரியை நினைவு படுத்துகின்றது (பின் இணைப்பு 9), மேலும் நான்கு புனித மாதங்களாகிய ஜுல்-ஹிஜ்ஜா, முஹர்ரம், ஸஃபர் & ரபிய்யுல் 1 (12வது, 1வது, 2வது, 3வது மாதங்கள்) (2:197; 9:2, 36) ஆகிய காலகட்டங்களில் அவசியம் அனுசரிக்க வேண்டும். ‘உம்ராவை எந்தக் காலகட்டத்திலும் அனுசரிக்கலாம். இஸ்லாத்திலுள்ள மற்ற அனைத்துக் கடமைகள் சிதைக்கப்பட்டது போலவே, ஹஜ்ஜும் சிதைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஜுல்-ஹிஜ்ஜா மாதத்தில் சில நாட்கள் மட்டுமே ஹஜ்ஜை அனுசரிக்கின்றனர், மேலும் ரஜப், ஜுல் காய்தா, ஜுல்-ஹிஜ்ஜா, மற்றும் முஹர்ரம் (7வது, 11வது, 12வது, 1வது மாதங்கள்) ஆகியவற்றைப் புனிதமாதங்கள் என கருதுகின்றனர். இது ஒரு சிதைவாக இருக்கின்றது, இந்த செயல் கடுமையாகக் கண்டனம் செய்யப்படுகின்றது (9:37).

 

புனிதப் பயணம் குளியலுடன் ஆரம்பமாகின்றது, அதனைத் தொடர்ந்து “இஹ்ராம்” என அழைக்கப்படும் புனிதமான நிலை, அதில் ஆண் யாத்ரீகர் தையல் இல்லாத போர்வைகளை அணிகின்றார், மற்றும் பெண் யாத்ரீகர் அடக்கமான ஆடையை அணிகின்றார் (2:196). ஹஜ் பயணம் முழுவதிலும், யாத்ரீகர் பாலியல் உறவிலிருந்தும், முகச்சவரம் செய்தல், முடியை வெட்டுதல், வாக்குவாதங்கள் செய்தல், தீய நடத்தை மற்றும் தீய பேச்சு போன்ற பலனற்றவைகளிலிருந்தும் விலகியிருக்க வேண்டும் (2:197). தூய்மையாக இருப்பது, குளிப்பது மற்றும் வழக்கமான சுகாதாரம் சம்பந்தமான செயல்கள் யாவும் ஊக்குவிக்கப்படுகின்றது. மெக்காவிலிருக்கும் புனிதப்பள்ளிக்கு வந்து சேர்ந்த பின்னர், யாத்ரீகர் கடவுளைத் துதித்தவராகவும் மேலும் புகழ்ந்தவராகவும் (2:125, 22:26-29) கஃபாவை ஏழுமுறை சுற்றி வலம் வருகின்றார் . பொதுவான சூத்திரம்: “லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்” (என்னுடைய கடவுளே, நான் உமக்கு பதிலளிக்கின்றேன்). “லப்பைக்க லா ஷரீக லப்பைக்” (நான் உமக்கு பதிலளிக்கின்றேன், மேலும் உம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை என நான் பிரகடனம் செய்கிறேன்; நான் உமக்கு பதிலளிக்கின்றேன்). அடுத்தது சஃபா மற்றும் மர்வாஹ் குன்றுகளுக்கு இடையிலுள்ள அரை மைல் தூரத்தை ஏழுமுறை நடந்தும், இடையிடையே சமயத்திற்கேற்றவாறு வேகமாக நடந்தும் வலம் வரவேண்டும் (2:158). இந்தச் செய்கை புனிதப் பயணத்தின் ‘உம்ரா பகுதியை நிறைவு செய்கின்றது.

 

யாத்ரீகர் பின்னர் அதிகாலையிலிருந்து சூரிய அஸ்தமனம் வரையிலுமான ஒரு நாளை வழிபாடு, தியானம் மற்றும் கடவுளைத் துதித்தலில் செலவிடுவதற்காக அரஃபாத் செல்கின்றார் (2:198). சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, யாத்ரீகர் முஸ்தலிஃபா செல்கின்றார் அங்கே இரவுத் தொழுகை கடைபிடிக்கப்படுகிறது, மேலும் மினாவில் சாத்தான் மீது அடையாளக் கல்லெறிதல் செய்வதற்காக 21 கூழாங்கற்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. முஸ்தலிஃபாவிலிருந்து, யாத்ரீகர் இரண்டு அல்லது மூன்று நாட்களைச் செலவிடுவதற்காக மினா செல்கின்றார் (2:203). மினாவில் முதல்நாள் காலை, ஏழைகளுக்கு உணவளிப்பதற்காகவும், சாத்தானின் சூழ்ச்சியிலிருந்து இஸ்மவேலையும் ஆப்ரஹாமையும் காப்பாற்றுவதற்கான கடவுளின் தலையீட்டை நினைவு கூர்வதாகவும் யாத்ரீகர் ஒரு பிராணியை பலி கொடுக்கின்றார் (37:107, பின் இணைப்பு 9). கல்லெறிதல் சடங்குகள் சாத்தானின் பல தெய்வக் கொள்கையை மறுப்பதை அடையாளமாகத் தெரிவிக்கின்றது மேலும் கடவுளை துதித்தபடியே, மூன்று இடங்களில் ஒவ்வொரு முறையும் ஏழு கூழாங்கற்கள் எறியப்படுகின்றது (15:34). பின்னர் யாத்ரீகர் மெக்காவிற்கு திரும்புகின்றார், மேலும் கஃபாவை ஏழு தடவை வலம் வந்து ஒரு புறப்படுதலை கடைப்பிடிக்கின்றார்.

 

கடமையான தர்மம் (ஜகாத்)

துரதிர்ஷ்டவசமாக, இன்றைய முஸ்லிம் யாத்ரீகர்களில் பெரும்பாலோர் வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதின் சமாதிக்கு வருகை புரிவதை ஒரு நடைமுறை வழக்கமாக ஆக்கியிருக்கின்றனர், அங்கே அவர்கள் மிகபகிரங்கமான இணைத்தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர் மேலும் இவ்விதமாக தங்களுடைய ஹஜ்ஜை பலனற்றதாக ஆக்குகின்றனர். குர்ஆன் உறுதியான முறையில் “ஒரு புனிதப் பள்ளி”யைப் பற்றி பேசுகின்ற அதேசமயம் இன்றைய முஸ்லிம்கள் “இரண்டு புனிதப்பள்ளிகள்” பற்றிப் பேசுகின்றனர்! இணைத்தெய்வ வழிபாட்டின் வெளிப்படையான செயலாக, முஸ்லிம்கள் முஹம்மதின் சமாதியை மற்றொரு “புனிதப்பள்ளி”யாக ஏற்படுத்தியிருக்கின்றனர்! இது குர்ஆனின் கட்டளையை அவமதிக்கின்ற இறை நிந்தனையாகும், மேலும் எதிரிடையாக ஹதீஸைக் கூட மீறுகின்றது. கீழே காட்டியுள்ள ஹதீஸ் விசித்திரமான இந்த எதிரிடைக் கருத்தைக் காட்டுகின்றது:

இந்தப் பொய்யான வாக்கு மூலத்தின் மொழிபெயர்ப்பு : “தங்களுடைய வேதம் வழங்கப்பட்டவர்களின் சமாதிகளை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றியதற்காக யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் கடவுள் சபித்து விட்டார்”. (புகாரி, நவவி பதிப்பு, பகுதி 6, பக்கம் 14)

சரீர சம்பந்தமான நன்மைகள்

 

இவற்றினுடைய மதிப்பிட இயலாத ஆன்மீகப் பலன்களுடன் சேர்த்து, தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்), கடமையான தர்மம் (ஜகாத்), ரமலான் மாதத்தின்போது நோன்பு மற்றும் ஹஜ் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் சரீர சம்பந்தமான, பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான நன்மைகள் மிதமிஞ்சிய அளவில் செறிந்து இருக்கின்றன.

 

அதிகாலைத் தொழுகையைக் கடைப்பிடிப்பது, நீண்ட நேரமாக அசைவற்ற நிலையிலிருப்பதைத் தடுக்கிறது; இது மூட்டுவலியைத் தடுப்பதற்கு உதவுகின்றது என இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பது மனச்சோர்வு மற்றும் மனரீதியிலான பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றது. தொடர்புத் தொழுகைகளின் போது, கீழேவிழுந்து வணங்கும் நிலையை திரும்பத்திரும்பச் செய்வது நம்முடைய மூளையிலுள்ள இரத்த நாளங்களை விரிவடையச் செய்து அதிக இரத்தத்தை பெறும்படிச் செய்கிறது, மேலும் இது தலைவலியைத் தடுக்கின்றது. இவையனைத்தும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

 

தொடர்புத் தொழுகைகளுக்கு முன்னதாக தேவைப்படும், தண்ணீர் கொண்டு செய்யப்படும் அங்க சுத்திகள், கழிவறையை அதிகமதிகம் பயன்படுத்த நமக்கு ஊக்கமளிக்கின்றது. இந்தப்பழக்கம் பொதுவான மற்றும் நாசம் விளைவிக்கும் புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. தீமை பயக்கும் இரசாயனங்கள் யாவும் கழிவுப் பொருட்களாக, சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இந்தக் கழிவுப்பொருட்கள் நீண்ட நேரத்திற்கு குடலுக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தால், தீமை பயக்கும் பொருட்கள் யாவும் உடலுக்குள் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படுகின்றது, மேலும் புற்றுநோயை உண்டுபண்ணுகின்றது.

 

ரமலான் மாதத்தின் போது நோற்கக் கூடிய நோன்பானது நம்முடைய விரிவடைந்த வயிறுகளை சாதாரண நிலைக்கு மீட்கின்றது, தற்காலிகமான உலர்ந்த நிலையின் மூலம் நம்முடைய இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது, தீங்குவிளைவிக்கக் கூடிய விஷக்கிருமிகளை நீக்குகின்றது, நம்முடைய சிறுநீரகங்களுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்கின்றது, மேலும் மிதமிஞ்சிய மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியக் கொழுப்பை நீக்குவதன் மூலம் நம்முடைய எடையைக் குறைக்கின்றது.

 

ஜகாத் தர்மம் மற்றும் ஹஜ் புனித யாத்திரை ஆகியவை தொலை நோக்குடன் கூடிய பொருளாதார மற்றும் சமுதாய நன்மைகளைக் கொண்டது.

**********************************************