பின் இணைப்பு 14
விதி

கடவுளின் மீது நம்பிக்கை கொள்வதற்கோ அல்லது நம்பமறுப்பதற்கோ முழுமையான சுதந்திரம் உடையவர்களாக நாம் இருக்கின்றோம். நாம் சுதந்திரமுடையவர்களாக இருக்க வேண்டுமென்பது கடவுளுடைய விருப்பமாகும் (18:29, 25:57, 73:19, 74:37, 76:29, 78:39, 80:12).

 

அசலான பாவத்தை நாம் செய்ததற்குப் பின்னர் (பின் இணைப்பு 7), நம்முடைய குற்றத்தை பகிரங்கமாக கண்டனம் செய்து மேலும் அவருடைய பரிபூரணமான அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பினைக் கடவுள் கொடுத்தார் (33:72). ஆனால் நாமோ ஒரு கடவுளாக சாத்தானின் தகுதியை ஒரு செயல் முறையாக காண்பதற்குத் தேவையுடையவர்கள் என முடிவெடுத்தோம். கடவுள்தான் தங்களை படைத்தவர் எனும் உண்மையையும், பயங்கரமான இந்த சோதனையினுள் தங்களை வைக்கின்றார் என்பதையும் மக்களில் அநேகர் மறுக்கின்றனர். தெளிவாக இத்தகைய மக்கள் (1) ஒரு பயங்கரமான குற்றத்தை அவர்கள் செய்து விட்டதையும் (அறிமுகவுரை & பின் இணைப்பு 7), மேலும் (2) அவர்களுடைய பாவத்தை பகிரங்கமாகக் கண்டனம் செய்து மேலும் அவர்களை மீட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்பட்டதையும், ஆனால் சோதனைக்குள் செல்வதையே அவர்கள் தேர்ந்தெடுத்ததையும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.

 

நம்முடைய வாழ்க்கையோடு, நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்தும் ஒளிநாடாவைப் போன்ற ஒன்றில் முன் கூட்டியே பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பதை 57:22ல் இருந்து நாம் கற்றுக்கொள்கின்றோம். நம்மில் ஒவ்வொருவரும் என்ன வகையான முடிவெடுக்கத் தீர்மானித்திருக்கின்றோம் என்பதை முழுமையாகக் கடவுள் அறிவார்; நம்மில் எவரெல்லாம் சுவனத்திற்கு செல்பவர்கள் மேலும் எவரெல்லாம் நரகத்திற்கு செல்பவர்கள் என்பதையும் அவர் அறிவார். நாம் இந்த உலகத்தில் பிறப்பதற்கும் முன்பே, எந்தெந்த ஆன்மாக்கள் நல்லவை மற்றும் எந்தெந்த ஆன்மாக்கள் தீயவை என்பதை கடவுள் அறிந்தே இருக்கின்றார். அனைத்தையும் அறிந்திருக்கும் கடவுளின் தன்மையை பொறுத்தவரை, “சுவனம்” அல்லது “நரகம்” என கூறிடும் முத்திரையை ஒவ்வொருவரின் நெற்றியிலும் நாம் கற்பனை செய்யலாம். இருப்பினும், நம்மைப் பொறுத்தவரை, கடவுளின் பரிபூரண அதிகாரத்தை ஆதரிக்கவோ அல்லது சாத்தானின் பலதெய்வக் கருத்துக்கு ஆதரவளிக்கவோ முழுமையான சுதந்திரமுடையவர்களாக நாம் இருக்கின்றோம். ஆகையால், கடவுளைப் பொறுத்தவரை விதி உண்மையாக இருக்கின்றது, நம்மைப் பொறுத்தவரை அவ்வாறில்லை.

 

இந்த அறிவாற்றலானது “கடவுள் தான் விரும்பியவர்களை வழிநடத்துகின்றார், மேலும் தான் விரும்பியவர்களை தவறான வழியில் செலுத்துகின்றார்” என கூறும் அநேக வசனங்களை விளக்குகின்றது. கடவுள் அவருடைய அறிவின் அடிப்படையில், நமக்குத் தகுதியான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் நம்முடைய ஆன்மாக்களை நியமிக்கின்றார். கடவுள் வானவர்களிடம், “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்” (2:30) என கூறியபோது, தம்மை மீட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பைப் பெற தகுதியுடையவர்கள் நம்மில் சிலர் உள்ளனர் என்பதையே இது காட்டுகின்றது. வழிகாட்டுதலுக்கு தகுதியானவர்களுக்கு கடவுளின் வழிகாட்டுதல் பற்றிய ஒரு உதாரணம் 21:51ல் காணப்படுகின்றது: “நாம் ஆப்ரஹாமிற்கு அவருக்குரிய வழிகாட்டுதலை வழங்கினோம், ஏனெனில் அவரைப் பற்றி நாம் முழுமையாக அறிந்திருந்தோம்”. இன்னும் கூறவேண்டுமானால், வழிநடத்தப்பட வேண்டிய ஒரு நல்ல ஆன்மாவாக ஆப்ரஹாம் இருந்தார் என்பதை கடவுள் அறிந்திருந்தார், மேலும் அவருடைய வழிகாட்டுதலையும் அறிவாற்றலையும் அவருக்கு கடவுள் வழங்கினார். மற்றுமொரு நல்ல உதாரணம் 12:24ல் கூறப்பட்டுள்ளது. எகிப்திய பிரபுவின் மனைவியிடம் ஜோஸஃப் விழுந்துவிட்டார், மேலும் கிட்டத்தட்ட விபச்சாரத்தில் சிக்கிக் கொண்டார் “அவர், அவருடைய இரட்சகரிடமிருந்து ஒரு அடையாளத்தை காணாதிருந்தால்”. 12:24ல் கடவுள் நமக்கு கற்றுத்தருவது என்னவென்றால் “அவர் ஜோஸஃப்பிடமிருந்து தீயதையும் பாவத்தையும் திசை திருப்பினார், ஏனெனில் எனக்கே அர்ப்பணம் செய்து வழிபடுபவர்களில் ஒருவராக அவர் இருந்தார். ஜோஸஃப் அவருடைய காம இச்சையை அவரே கட்டுப்படுத்தினாரா? அல்லது பாவம் செய்வதிலிருந்து கடவுளுடைய பாதுகாப்பு அவரை கற்புடையவராகச் செய்ததா? விதி என்பது இத்தகையதே.

**********************************************