பின் இணைப்பு 13
இஸ்லாத்தின் முதல் தூண் (அடிபணிதல்):
“லா இலாஹா இல்லல்லாஹ்”(கடவுளைத்தவிர கடவுள் இல்லை)

 

வசனம் 3:18 (அடிபணிதல்) இஸ்லாத்தின் முதல் தூணை எடுத்துரைக்கின்றது. “அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று கடவுள் சாட்சியம் அளிக்கின்றார், அவ்வாறே வானவர்களும், அறிவைப் பெற்றிருப்போரும் செய்கின்றனர்.”

 

மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்தூணானது சிதைக்கப்பட்டுவிட்டது. கோடிக் கணக்கான முஸ்லிம்கள், சாத்தானுடைய பலதெய்வக் கொள்கையின் வடிவத்தை சுவீகரித்துக் கொண்டு, கடவுளின் பெயருடன் முஹம்மதின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். ஆயினும், 39:45 ல் கூறப்பட்டுள்ள குர்ஆனின் மாபெரும் அடிப்படை அளவுகோல், இத்தகைய முஸ்லிம்களை நம்ப மறுப்பவர்கள் என்று முத்திரையிடுகின்றது: “கடவுள் மட்டும் தனித்துக் குறிப்பிடப்பட்டால், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கிவிடுகின்றன, ஆனால் அவருடன் மற்றவர்கள் குறிப்பிடப்பட்டால், அவர்கள் திருப்தி அடைந்தவர்களாக ஆகின்றனர்”.

 

இந்த அடிப்படை அளவுகோலின் மீது நான் விரிவான ஆய்வு நடத்தி, ஒரு திடுக்கிடும் தீர்மானத்தை எட்டி உள்ளேன்; 3:18ல் எடுத்துக் கூறப்பட்டுள்ள, இஸ்லாத்தின் முதல் தூணை உறுதியாக கடைபிடிக்காத இணைத்தெய்வ வழிப்பாட்டாளர்கள், சரியான ஷஹாதத்தை உச்சரிப்பதை விட்டும் கடவுளால் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களால் முஹம்மதுடைய பெயரைக் குறிப்பிடாமல் தனியாக “அஷ்-ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹ்” என்று மட்டும் கூறவே முடியாது. தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொள்ளும் எந்த ஒரு இணைத்தெய்வ வழிப்பாட்டாளரிடமும் இதனை முயன்று பாருங்கள், அவர்களிடம்: “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்” என்று கூறும்படி அறைகூவல் விடுங்கள், அவர்களால் ஒருபோதும் இதனை கூறவே இயலாது. இது ஆப்ரஹாமின் மார்க்கமாக இருப்பதால் (2:130, 135; 3:95; 4:125; 6:161, 12:37 - 38; 16:123; 22:78; பின்இணைப்பு 9), “லா இலாஹ இல்லல்லாஹ் (ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை) ” என்பது மட்டுமே ஒரே மார்க்க நம்பிக்கையாக இருக்க வேண்டும். பூமியில் ஆப்ரஹாமிற்கு முன்னால் முஹம்மது உயிர் வாழ்ந்திருக்கவில்லை.

ஒரு மாபெரும் இறை நிந்தனை

வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதின் விருப்பத்திற்குஎதிராக, அவரை இணைத்தெய்வ வழிபாடு செய்வதற்க்கு குர்ஆனைச் சிதைத்துத் திரித்துக் கூறுவதை விட மாபெரும் இறைநிந்தனை எதுவுமில்லை. அத்தியாயம் “முஹம்மத்” வசனம் 19 (47:19) “ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறுகின்றது. கீழே காட்டப்பட்டிருப்பது, த ரிவியூ ஆஃப் ரிலிஜன்ஸ் ன் (சமயங்கள் குறித்த ஒரு திறனாய்வு) என்ற முஸ்லிம் பிரசுரத்தின், வழமையான அடையாளச் சொல் முத்திரையின் புகைப்பட நகல் ஆகும்.(லண்டன் மசூதி, 16, க்ரெஸ்ஸன்ஹால் சாலை, லண்டன் ளுறு185ணுடு, இங்கிலாந்து) த ரிவியூ ஆஃப் ரிலிஜன்ஸ் ன்வெளியீட்டாளர்கள், குர்ஆனின் அழகிய எழுத்து முறையைப் பயன்படுத்தி, “முஹம்மது ரசூலுல்லாஹ்”, என்ற வாசகத்தைச் சேர்த்து 47:19ல் கூறப்பட்டுள்ள குர்ஆன் வாசகம் அதுதான் என்பதைப் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். எத்தகையதொரு இறைநிந்தனை!

சிதைக்கப்பட்ட இஸ்லாத்தை எடுத்துக்காட்டும் ஓர் உதாரணம்

அல்லாஹ் என்ற அந்த ஒரு கடவுளைத் தவிர வேறு கடவுள் எதுவுமில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்; முஹம்மது கடவுளின் ஒரு தூதர் ஆவார். (அந்த இறைநிந்தனை)

**********************************************