பின் இணைப்பு 12
வேதம் வழங்கப்பட்டவரான முஹம்மதின் பங்கு்

வேதம் வழங்கப்பட்டவரின் ஒரே பணி குர்ஆனை, முழுக்குர்ஆனை, மேலும் வேறொன்றுமில்லாது குர்ஆனை மட்டும் ஒப்படைப்பதாகவே இருந்தது. (3:20, 5:48-50, 92, 99; 6:19; 13:40; 16:35, 82; 24:54; 29:18, 42:48, 64:12).

 

குர்ஆனை ஒப்படைப்பது என்பது மிக முக்கியமான மற்றும் உன்னதமான தூதுப்பணியாகும். ஆகையால் வேதம் வழங்கப்பட்டவருக்கு வேறெதனையும் செய்வதற்கு எவ்வித நேரமும் இருந்ததில்லை. இன்னுமதிகமாக, வேதம் வழங்கப்பட்டவர் குர்ஆனைத்தவிர வேறு எவ்விதமான மார்க்க போதனைகளையும் வெளியிடுவது குறித்து மிக உறுதியான வார்த்தைகளால் தடுக்கப்பட்டிருந்தார் (69:38-47). குர்ஆனை விளக்கிக் கூறுவதிலிருந்தும் கூட அவர் தடுக்கப்பட்டிருந்தார் (75:15-19). கடவுள் ஒருவரே குர்ஆனுடைய ஆசிரியராக இருக்கின்றார். (55:1-2) மேலும் குர்ஆன் மிகச் சிறந்த ஹதீஸ் ஆகும் (39:23 & 45:6).

 

வேதம் வழங்கப்பட்டவரின் மீது இட்டுக் கட்டப்பட்ட அந்த சொற்கள் மற்றும் செயல்கள் (ஹதீஸ் & சுன்னத்) எனப்படுபவை அவருடைய மரணத்திற்கு பிறகு இரண்டு நூற்றாண்டுகள் வரையிலும் தோன்றவில்லை எனும் சரித்திரப் பூர்வமான உண்மைகளின் மூலம் இந்த குர்ஆனிய உண்மைகள் தெளிவாகின்றன. வேதம் பெற்ற தூதரின் எதிரிகளால் ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகிய பொய்த்தயாரிப்புகள் ஏற்படுத்தப்படும் என்பதைப் பற்றி குர்ஆன் முன்னறிவிப்புச் செய்கின்றது (6:112-115). தங்களுடைய இதயத்தில் நம்பிக்கை கொள்ளாது, தங்களுடைய உதட்டளவில் மட்டும் நம்பிக்கை கொண்டிருப்பவர்களை வெளிப்படுத்தும் பணியை ஆற்றிடும் அளவுகோலாக ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகிய கண்டுபிடிப்புகளை அனுமதிப்பதென்பது கடவுளின் விருப்பமாக இருந்தது என்பதை குர்ஆன் நமக்கு கற்பிக்கின்றது. ஹதீஸ் மற்றும் சுன்னத் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்கள் பொய்யான நம்பிக்கையுடையவர்கள் என நிரூபிக்கப்படுகின்றனர் (6:113). அவரிடமிருந்து குர்ஆனைத் தவிர வேறொன்றையும் எழுதக் கூடாது எனும் வேதம் வழங்கப்பட்டவரின் கட்டளைகளை ஹதீஸ் புத்தகங்களே அவைகளுக்கு எதிராக அறிவிக்கின்றன! ஹதீஸ்வாதிகளின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆதாரமாக விளங்கும் ஷஹீஹ் முஸ்லிம் மற்றும் இஸ்ஹாஹ் அஹமத் இப்ன் ஹன்பல் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட அத்தகைய இரண்டு ஹதீஸ்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

வேதம் வழங்கப்பட்டவர், “குர் ஆனைத்தவிர வேறெதனையும் என்னிடத்திலிருந்து எழுதாதீர் என்று கூறினார். ஸஅஹமத், பகுதி 1, பக்கம் 171, மேலும் ஷஹீஹ் முஸ்லீம்]
 
வேதம்வழங்கப்பட்டவர்மரணிக்கும்வரையிலும்ஹதீஸிற்குஎதிரானநிலையையேகடைப்பிடித்தார்எனஇந்தஹதிஸ்கூறுகின்றது. [அஹமத், பகுதி 1, பக்கம் 192].
**********************************************