பின் இணைப்பு 11
மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்

கொம்பு ஊதப்படும், அப்போது கடவுளால் விட்டுவைக்கப்பட்டவர்களைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் சுயநினைவை இழந்து விடுவார்கள். பின்னர் அது இரண்டாவது முறையாக ஊதப்படும், அப்போது அவர்கள் எழுந்து விடுவார்கள். [39:68]

 

மனிதர்கள் மற்றும் ஜின்களுடைய அனைத்துத் தலைமுறையினர்களும் இந்த பூமியின் மீதே மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்பட இருக்கின்றனர். கிட்டத்தட்ட 15000 கோடி எண்ணிக்கையுடையவர்கள் ஆவர். ஆனால் அப்போது நாம் பூமியைச் சார்ந்து இருக்க மாட்டோம். கடவுள், கம்பளி பூச்சியின் உதாரணத்தைக் கொண்டு நமக்கு கற்றுத் தருகின்றார். அது கூட்டினில் (புதைகுழியில்) பூச்சியாக மாறுகின்றது, பின்னர் காற்றில் பறக்கும் பட்டாம் பூச்சியாக மாறி கூட்டை விட்டு வெளியேறுகின்றது. அதுபோலவே, நாம் இங்கே பூமியில் வாழுகின்றோம், மேலும் நாம் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் புதை குழியிலிருந்து வெளியேறும் போது நாம் பட்டாம் பூச்சியைப் போல, நாம் (101:4) பூமியைச் சார்ந்தவர்களாக இருக்கமாட்டோம்.

 

வானவர்கள் படை சூழ (89:22), நம்முடைய பிரபஞ்சத்திற்கு கடவுள் வருகின்ற போது இந்த பூமியானது அவருடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும் (39:69). நம்முடைய பிரபஞ்சமானது சாத்தானின் தற்காலிக இராஜ்ஜியமாக இருப்பதனால், கடவுளின் பௌதீக வருகையை அதனால் தாங்கிக் கொள்ள இயலாது (7:143). சர்வ வல்லமையுடையவர் நெருங்கி வர, நட்சத்திரங்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதிக் கொள்ளும் (77:8, 81:2), மேலும் பூமி நம்முடைய கால்களுக்குக் கீழே வெடித்து நொறுங்கும் (69:14, 89:21). இந்தப் பயங்கர நிகழ்வுகள் நம்பிக்கையாளர்களை வருத்தமுறச் செய்யாது (21:103).

உயர்வான சுவனம்
சர்வ வல்லமையுடைய கடவுளின் வருகையைத் தொடர்ந்து, அனைத்து மனிதர்களும் ஜின்களும் தங்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அளவிற்கேற்ப தாமாகவே வரிசையாக இருப்பர். கடவுளை மட்டும் வழிபட்டு, மறுவுலகின் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி அதன்மூலமாக தங்களுடைய ஆன்மாக்களை ஊட்டம் பெறச்செய்தவர்கள் கடவுளின் அருகிலிருக்க போதுமான பலமுடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் மிக உயர்ந்த அந்தஸ்தை கொண்டிருப்பார்கள் (பின் இணைப்பு 5 ஐப் பார்க்கவும்).
கீழான சுவனம்
தங்களுடைய ஆன்மாக்களின் வளர்ச்சியில் குறைந்த அளவே முன்னேறியவர்களும் அதேபோன்று நாற்பது வயதிற்கு முன்பு மரணித்தவர்களும் கீழான சுவனத்திற்கு சென்று சேருவார்கள். அவர்கள் தங்களுடைய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கேற்ப எந்த அளவிற்கு கடவுளுக்கு அருகில் இருக்க முடியுமோ அந்த அளவிற்கு அருகே அவர்கள் செல்வார்கள்.
ஆன்மா தூய்மையடையும் இடம்
கீழான சுவனத்திற்குள் நுழைவதற்குப் போதுமான அளவு ஊட்டம் அளித்திராத, ஆனால் நரகத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்குப் போதுமான அளவு மட்டுமே, தங்கள் ஆன்மாக்களுக்கு ஊட்டம் அளித்திருந்த மக்கள் அவ்விடத்தில் இருப்பார்கள். அவர்கள் நரகத்திலும் இல்லை, சுவனத்திலும் இல்லை.அவர்கள் தங்களை கீழான சுவனத்தில் அனுமதிக்கும்படி கடவுளிடம் இறைஞ்சிப் பிராத்திப்பார்கள் (7:46-50). கடவுள் அவர்களின் மீது கருணை கொண்டு மேலும் அந்த ஆன்மா தூய்மையடையும் இடத்தை கீழான சுவனத்துடன் இணைத்து விடுவார்.
நரகம்
தங்களுடைய பலஹீனத்தால் கடவுளிடமிருந்து விலகி ஓடுபவர்கள் தங்குவதற்காக, ஒரு புதிய, எட்டாவது பிரபஞ்சம் படைக்கப்படும். அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களை ஊட்டப்படுத்தவும், மேலும் முன்னேற்றவும் தவறியவர்கள் (69:17). கடவுள் ஒரு நபரைக் கூட நரகத்தில் போடுவதில்லை; அவர்கள் தங்களுடைய சொந்த விருப்பப்படியே அதற்குச் செல்கின்றனர். (பின் இணைப்பு 5)
**********************************************