குர்ஆன் அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டது ஏன்?

       உண்மையான நம்பிக்கையாளர்கள் அவர்களுடைய தாய்மொழி ஒரு பொருட்டல்லாது குர்ஆனை அணுகிவிட இயலும், என்பதை 41:44ல் இருந்து நாம் கற்றுக் கொள்கின்றோம். மாறாக, நம்ப மறுப்பவர்கள், அவர்கள் அரபி மொழியில் பேராசிரியர்களாக இருந்த போதிலும் கூட, குர்ஆனை அடைந்திட அனுமதிக்கப்பட மாட்டார்கள் (17:45, 18:57, 41:44, & 56:79).

      உலகில் உள்ள மொழிகளில் அரபி மொழி மிகத்திறன் வாய்ந்த மொழியாகும். முக்கியமாக சட்டங்களை சரியாக விளக்கிடும் சமயங்களில். குர்ஆன் சட்டப்புத்தகமாதலால், அத்தகைய சட்டங்களை தெளிவாக விளக்கிட வேண்டியது மிக முக்கியமானதாக இருந்தது.

      கடவுள் அவருடைய இறுதி வேதத்திற்காக அரபி மொழியை தேர்ந்தெடுத்து இருக்கின்றார், ஏனென்றால் அந்த நோக்கத்திற்கு அது மிகப்பொருத்தமான மொழி எனும் வெளிப்படையான காரணமேயாகும். அரபி மொழி அதன் திறனிலும், பிழையின்மையிலும் தனித்தன்மை வாய்ந்தது. உதாரணத்திற்கு, ஆங்கிலத்தில் “அவர்கள்” எனும் வார்த்தையானது அந்த “அவர்கள்” ஆண்களா அல்லது பெண்களா என்பதை உங்களுக்கு விளக்கிடாது. அரபியில் “அவர்கள்” என ஆண்களைக் குறிப்பிடுவதற்கு “ஹும்” எனவும், அவர்கள் என பெண்களை குறிப்பிடுவதற்கு “ஹுன்ன” எனவும் உள்ளது. அதில் இரு ஆண்களை “அவர்கள்” எனக் குறிப்பிடுவதற்கு “ஹுமா” எனும் வார்த்தையும், இரு பெண்களை “அவர்கள்” எனக் குறிப்பிடுவதற்கு, “ஹாத்தான்” எனும் வார்த்தையும் கூட உள்ளது. இந்த விசேஷமான அம்சம் உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் இல்லை. நான் மொழி பெயர்ப்பு செய்த போது அரபி மொழியின் இத்தகைய திறனை மெச்சினேன், உதாரணத்திற்கு, 2:228. விவாகரத்தான பெண், அவள் கர்ப்பமடைந்து இருப்பதை அறிந்தால், மேலும் கணவன் சமாதானம் செய்து கொள்ள விரும்பினால் - குழந்தையின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து அவள் கணவனை விவாகரத்து செய்திடும் விசயத்தில் தன்னுடைய சொந்த விருப்பங்களை விட்டுக் கொடுத்திட வேண்டுமென இந்த வசனம் கட்டளையிடுகின்றது. இந்த சட்டத்தை விளக்குவதில் அரபி மொழியின் திறன் மிகச்சிறப்பான உதவியாக இருந்துள்ளது. 2:228ல் நாம் பார்த்தது போல் இத்தகைய ஒரு சில வார்த்தைகளில், எவருடைய விருப்பம் ஒதுக்கப்பட வேண்டியது என்பதை சுட்டிக்காட்டிட வேறு எந்த மொழியாலும் கிட்டத் தட்ட முடிந்தே இருக்காது.

      உதாரணத்திற்கு, 28:23ல் வரும் “காலத்தா” எனும் வார்த்தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திடும் போது: அந்த இரண்டு பெண்கள் சொன்னார்கள் என நான்கு வார்த்தைகளாக மொழிபெயர்க்கப்படுகின்றது. அரபி மொழியின் திறன் இத்தகையதே.**********************************************