குர்-ஆனின் திறவுகோல்

சூரா 1 : திறவு கோல் (அல்-பாத்திஹாஹ்)

1. கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்*.
2. புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.
3. மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
4. தீர்ப்பு நாளின் அதிபதி.
5. உம்மை மட்டுமே நாங்கள் வழிபடுகின்றோம்; உம்மிடம் மட்டுமே நாங்கள் உதவி கேட்கின்றோம்.
6. சரியான பாதையில் எங்களை வழி நடத்துவீராக;
7. நீர் எவர்களுக்கு அருள்புரிந்தீரோ அவர்களுடைய பாதையில்; கோபத்திற்குள்ளானோருடையதல்ல, அன்றியும் வழி தவறியவர்களுடையதுமல்ல.

      நம்முடைய அறைவனாகிய அல்லாஹ் (கடவுள்) எல்லா மக்களையும் குர்-ஆனை படித்து அதைப் புதிந்து கொள்ள அனுமதிக்கவில்லை. காரணம் குர்-ஆன் ஒரு சாமானியமான புத்தகம் அல்ல. இது இவ்வுலகிற்கு இறைச் செய்திகளை தாங்கிய இறைப்புத்தகம்.

      இந்த குர்-ஆன் கண்ணியம் மிக்கது (50:1) இந்த குர்-ஆன் மகத்தானது (15:87) இந்த குர்-ஆன் சங்கையானது விவரிக்கப்பட்டது ( 56:77, 6:114 )       மிகவும் பிரத்யேகமான மக்கள் மட்டுமே குர்ஆனுடைய செய்திகளை உணர்ந்து அதன் பயனைப் பெற அனுமதிக்கப் படுகின்றனர்.

      குர்ஆனை ஏற்றுக் கொண்டவராக நாம் ஆவதற்கு உள்ள வரட்புகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இப்போது “குர்-ஆனின் திறவுகோல்” பற்றி அறிந்து கோள்வேவாம் இந்த திறவுகோல் இல்லாமல் ஒரு மனிதன் குர்ஆனின் ஒரு வசனத்தையோ அல்லது ஒரு வார்த்தையையோ கூட நிச்சயமாக உணர்ந்து, புரிந்து அதன் பயனைப் பெற்றுக் கொள்ளவே முடியாது.

      அரபி மொழியைத் தாய் மொழியாக கொண்டவர்பளும் மேலும் அரபு மொழியின் மீது அதிகாரமும் உரிமையும் பெற்ற அறிஞர்களும் கூட குர்ஆனை புரிந்து கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டு உள்ளனர். குர்ஆன் அல்லாத மற்ற புத்தகங்களை புரிந்து கொள்ள இயலவில்லை. காரணம் இறைவன் காமே இந்த குர்ஆனை புரிந்து கொள்வதை விட்டும் அவர்களை தடுத்துள்ளனர்.

      நாம் குர்ஆனை அணுகுவதை அல்லாஹ்வுடைய மறைவான சேனைகள் கட்டுப் படுத்துகிறார்கள். எவர்கள் வசம் ‘குர்-ஆனின் திறவுகோல்’ அருக்கிறதோ அவர்கள் மட்டுமே குர்ஆனை அணுகுவதற்கு அறிந்து, புரிந்து பயனடைவதற்கு அனுமதிக்கப் படுகிறார்கள்.

குர்-ஆனின் திறவுகோல் என்றால் என்ன?

      குர்-ஆனின் திறவுகோல் என்பது குர்ஆனை நம்புவது. குர்ஆன் முழுமையானது, குர்ஆன் நிறைவானது, குர்ஆன் முழு விளக்கமானது. மேலும் மார்க்க ஆதாரம் குர்ஆன் மட்டுமே என்று உறுதியாக நம்புவது ( 619, 38, 114 ) இதுவே குர்ஆனின் திறவுகோலாகும்.

      மேலும் மனிதர்களில் எவர்கள் குர்ஆன் அல்லாக வேறு எதையும் மார்க்க ஆதாரமாகக் கொள்கிறார்களோ, உதாரணமாக நபி அவர்கள் சொன்னதாகவும், செய்ததாகவும் போய்யாக அவர்கள் மீது இட்டுக்கட்டிய பல செய்திகளையும் மார்க்க ஆதாவமாகக் கொண்டு செயல் படுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக ஒரு போதும் குர்ஆனை அணுகவும், புரிந்து அதன் பயனை பெற்றுக் கொள்ளவும் முடியாது. இதை அல்லாஹீதஆலா குர்ஆனில் சூரா 18ல் வசனம் 57ல் தேளிவாக குறிப்பிடுகிறார்.

      குர்ஆனைப் பொறுத்த மட்டில், குர்ஆனை அனுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் “மொழி” என்பது சம்பந்தமில்லாத ஒன்றாகும். ஒரு மனிதன் அரபி மொழியில் ஒரு “வார்த்தை” கூட தெரியாத நிலையில் இருந்தாலும் அவரிடம் இந்த ‘குர்-ஆனின் திறவுகோல்’ இருந்தால் அம்மனிதர் குர்ஆனை புரிந்து கொள்வது உருதி. இதை அல்லாஹ் குர்ஆனில் (41:44) ல் குறிப்பிடுகிறார்.

      “வேதத்தின் ஒரு பகுதியைப் பெற்றவர்கள், எவ்வாறு வழிகேட்டை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர் என்ப தையும் மேலும் நீங்கள் பாதையில் இருந்து வழிதவற வேண்டும் என்று விரும் புவதையும் நீர் கவனித் திருக்கின்றீரா?” (41:44)**********************************************