English    Tamil    Arabic

Result For

Aad (see also Hood)

rebel against Hood

Hud

[7:65] To 'Ad we sent their brother Hud. He said, "O my people, worship GOD; you have no other god beside Him. Would you then observe righteousness?"

ஹூத்

[7:65] ஆதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம் அவர், “ என்னுடைய சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுவீர்களாக; அவரைத் தவிர உங்களுக்கு வேறு எந்த தெய்வமும் இல்லை இனியேனும் நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப்பீர்களா?” என்று கூறினார்

۞وَإِلَىٰ عَادٍ أَخَاهُمۡ هُودٗاۚ قَالَ يَٰقَوۡمِ ٱعۡبُدُواْ ٱللَّهَ مَا لَكُم مِّنۡ إِلَٰهٍ غَيۡرُهُۥٓۚ أَفَلَا تَتَّقُونَ [7:65]

[7:66] The leaders who disbelieved among his people said, "We see that you are behaving foolishly, and we think that you are a liar."

[7:66] அவருடைய சமூகத்தாருக்கிடையில் இருந்த நம்ப மறுத்தவர்களான தலைவர்கள், “நீர் முட்டாள்தனமாக நடந்து கொண்டிப்பதை நாங்கள் காண்கின்றோம், மேலும் நீர் ஒரு பொய்யராக இருக்கின்றீர் என்றே நாங்கள் எண்ணுகின்றோம்,” என்று கூறினார்கள்

قَالَ ٱلۡمَلَأُ ٱلَّذِينَ كَفَرُواْ مِن قَوۡمِهِۦٓ إِنَّا لَنَرَىٰكَ فِي سَفَاهَةٖ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ ٱلۡكَٰذِبِينَ [7:66]

[7:67] He said, "O my people, there is no foolishness in me; I am a messenger from the Lord of the universe.

[7:67] அவர் கூறினார், “என்னுடைய சமூகத்தாரே, என்னிடம் எந்த முட்டாள்தனமும் இல்லை; நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடம் இருந்து வந்த ஒரு தூதராக இருக்கின்றேன்

قَالَ يَٰقَوۡمِ لَيۡسَ بِي سَفَاهَةٞ وَلَٰكِنِّي رَسُولٞ مِّن رَّبِّ ٱلۡعَٰلَمِينَ [7:67]

[7:68]"I deliver to you my Lord's messages, and I am honestly advising you.

[7:68] “என்னுடைய இரட்சகரின் செய்திகளை நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன், மேலும் நான் உங்களுக்கு நேர்மையாக அறிவுரை கூறிக் கொண்டு இருக்கின்றேன்

أُبَلِّغُكُمۡ رِسَٰلَٰتِ رَبِّي وَأَنَا۠ لَكُمۡ نَاصِحٌ أَمِينٌ [7:68]

[7:69] "Is it too much of a wonder that a message should come to you from your Lord, through a man like you, to warn you? Recall that He made you inheritors after the people of Noah, and multiplied your number. Remember GOD's blessings, that you may succeed."

[7:69] “உங்களை எச்சரிப்பதற்கு, உங்களைப் போன்ற ஒரு மனிதர் மூலமாக உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வருவது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக இருக்கின்றதா? அவர் நோவாவின் சமூகத்தாருக்குப் பின்னர் உங்களை வாரிசுகளாக ஆக்கியதையும்,மேலும் உங்களுடைய எண்ணிக்கையைப் பெருக்கியதையும் நினைவு கூர்வீர்களாக நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, கடவுள்-உடைய அருட்கொடைகளை நினைவில் கொள்வீர்களாக”

أَوَعَجِبۡتُمۡ أَن جَآءَكُمۡ ذِكۡرٞ مِّن رَّبِّكُمۡ عَلَىٰ رَجُلٖ مِّنكُمۡ لِيُنذِرَكُمۡۚ وَٱذۡكُرُوٓاْ إِذۡ جَعَلَكُمۡ خُلَفَآءَ مِنۢ بَعۡدِ قَوۡمِ نُوحٖ وَزَادَكُمۡ فِي ٱلۡخَلۡقِ بَسۡطَةٗۖ فَٱذۡكُرُوٓاْ ءَالَآءَ ٱللَّهِ لَعَلَّكُمۡ تُفۡلِحُونَ [7:69]

Following the Parents Blindly: A Human Tragedy

[7:70] They said, "Did you come to make us worship GOD alone, and abandon what our parents used to worship? We challenge you to bring the doom you threaten us with, if you are truthful."

பெற்றோர்களைக் கண்மூடித்தனமாக பின்பற்றுதல்: ஒரு மனிதனுக்குரிய சோகம்

[7:70] அவர்கள்,“ எங்களை கடவுள்-ஐ மட்டும் வழிபடுகின்றவர்களாக ஆக்குவதற்கும், மேலும் எங்களுடைய பெற்றோர்கள் வழிபட்டுக் கொண்டிருந்ததை கைவிடும்படி செய்வதற்கும் நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எங்களை அச்சுறுத்துகின்ற அந்த அழிவைக் கொண்டு வருமாறு உம்மிடம் நாங்கள் சவால் விடுகின்றோம்,” என்று கூறினார்கள்

قَالُوٓاْ أَجِئۡتَنَا لِنَعۡبُدَ ٱللَّهَ وَحۡدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعۡبُدُ ءَابَآؤُنَا فَأۡتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ [7:70]

[7:71] He said, "You have incurred condemnation and wrath from your Lord. Do you argue with me in defense of innovations you have fabricated? you and your parents?which were never authorized by GOD? Therefore, wait and I will wait along with you."

[7:71] அவர், “நீங்கள் உங்களுடைய இரட்சகரிடமிருந்து தண்டித்தலுக்கும் மேலும் கடும்கோபத்திற்கும் உள்ளாகிவிட்டீர்கள் கடவுள்-ஆல் ஒரு போதும் அங்கீகரிக்கப்படாத நீங்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருக்கின்ற-நீங்கள் மற்றும் உங்களுடைய பெற்றோர்கள்-புதுமைகளைக் காப்பாற்றுவதற்காக என்னுடன் நீங்கள் வாதிடுகின்றீர்களா? ஆகையால், காத்திருங்கள் மேலும் நானும் உங்களுடன் சேர்ந்து காத்திருப்பேன்,” என்று கூறினார்

قَالَ قَدۡ وَقَعَ عَلَيۡكُم مِّن رَّبِّكُمۡ رِجۡسٞ وَغَضَبٌۖ أَتُجَٰدِلُونَنِي فِيٓ أَسۡمَآءٖ سَمَّيۡتُمُوهَآ أَنتُمۡ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلۡطَٰنٖۚ فَٱنتَظِرُوٓاْ إِنِّي مَعَكُم مِّنَ ٱلۡمُنتَظِرِينَ [7:71]

[7:72] We then saved him and those with him, by mercy from us, and we annihilated those who rejected our revelations and refused to be believers.

[7:72] பின்னர் நாம் அவரையும் மேலும் அவருடன் இருந்தவர்களையும், நம்மிடமிருந்து கருணையால் காப்பாற்றினோம், மேலும் எவர்கள் நம்முடைய வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து மேலும் நம்பிக்கையாளர்களாக இருக்க மறுத்தார்களோ அவர்களை நாம் முற்றிலுமாக அழித்தோம்

فَأَنجَيۡنَٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحۡمَةٖ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَاۖ وَمَا كَانُواْ مُؤۡمِنِينَ [7:72]

Quran The Final Testament 2010 - 2019 © ICS Chennai . All rights reserved